logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

பக்கா பாலிடிக்ஸ் பகுதிக்கு.... காங்கிரஸ் கொடி ஒன்று கூட இல்லை.. வீணா போனவன் வைஸ் சேர்மனாய் இருந்தும், கொடி கட்டவில்லை எடப்பாடியில் நடந்த திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகி M.P.S.மணி குமுறல்.... சேலம் மாவட்டம் எடப்பாடியில் திமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீர்கள் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சேலம் எம்பி செல்வகணபதி ஆகியோர் தலைமையில் நடந்தது... இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயற்குழு உறுப்பினர் M.P.S.மணி, பேசுகையில்,சேலம் மாவட்டம் எடப்பாடியின் நகராட்சி சேர்மன் ஆக முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் பலர் இருந்துள்ளனர்... வாழப்பாடி ராமமூர்த்தியை தோற்கடிக்க செய்தவர் எம்பி செல்வகணபதி, அவர் தனது தேர்தல் வித்தையை எடப்பாடி,சங்ககிரி,மேட்டூர் தொகுதிகளில் இப்போது காட்ட வேண்டும்... காங்கிரஸில் பல தியாகங்கள் செய்துள்ளோம். நான் செல்வகணபதிக்கு செல்ல பிள்ளை. கடந்த காலங்களில் காங்கிரஸ் கொடி கட்டவில்லை என சண்டை போட்டுள்ளேன். நான் மாவட்ட தலைவராக இருக்கும்போது 15 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு திருப்பூரில் இருந்து கொடி வாங்கி வந்து கட்டினேன். ஆனால் இன்று ஒரு கொடி கூட கட்டவில்லை. வீணாய் போன காங்கிரசைச் சேர்ந்த எடப்பாடி நகராட்சி துணை சேர்மனாய் இருந்தும் கொடி கட்டப்படவில்லை. கொடி கட்ட வேண்டுகோளாக விடுகிறேன். ஒரு உற்சாகப்படுத்தும் வகையில் கொடியை கட்டி இருக்கலாம். அங்கு 5 கொடி கொடுத்தால் எங்களுக்கு ஒரு கொடி கொடுங்கள். அப்பதான் கட்சியையும் கூட்டணியும் ஒருங்கிணைக்க முடியும். இந்த தொகுதியை நாங்கள் ஜெயித்துக் கொடுக்கிறோம். ஒரு காலத்தில் எடப்பாடி காங்கிரசின் முனிசிபாலிட்டியாக இருந்தது. எனவே மீண்டும் அந்த பதவியை எங்களுக்கு தர வேண்டும். நான் 50 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்து விட்டேன். இன்னும் ஒரு பஞ்சாயத்துக்கு கூட மெம்பராக இல்லை. மேடையிலேயே காங்கிரஸ் உதவி சேர்மனை காங்கிரஸ் நிர்வாகி வறுத்தெடுத்த இந்த நிகழ்வு கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது...

14 hrs ago
user_Srianand
Srianand
பத்திரிகையாளர் Edappadi, Salem•
14 hrs ago

பக்கா பாலிடிக்ஸ் பகுதிக்கு.... காங்கிரஸ் கொடி ஒன்று கூட இல்லை.. வீணா போனவன் வைஸ் சேர்மனாய் இருந்தும், கொடி கட்டவில்லை எடப்பாடியில் நடந்த திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகி M.P.S.மணி குமுறல்.... சேலம் மாவட்டம் எடப்பாடியில் திமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீர்கள் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சேலம் எம்பி செல்வகணபதி ஆகியோர் தலைமையில் நடந்தது... இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயற்குழு உறுப்பினர் M.P.S.மணி, பேசுகையில்,சேலம் மாவட்டம் எடப்பாடியின் நகராட்சி சேர்மன் ஆக முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் பலர் இருந்துள்ளனர்... வாழப்பாடி ராமமூர்த்தியை தோற்கடிக்க செய்தவர் எம்பி செல்வகணபதி, அவர் தனது தேர்தல் வித்தையை எடப்பாடி,சங்ககிரி,மேட்டூர் தொகுதிகளில் இப்போது காட்ட வேண்டும்... காங்கிரஸில் பல தியாகங்கள் செய்துள்ளோம். நான் செல்வகணபதிக்கு செல்ல பிள்ளை. கடந்த காலங்களில் காங்கிரஸ் கொடி கட்டவில்லை என சண்டை போட்டுள்ளேன். நான் மாவட்ட தலைவராக இருக்கும்போது 15 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு திருப்பூரில் இருந்து கொடி வாங்கி வந்து கட்டினேன். ஆனால் இன்று ஒரு கொடி கூட கட்டவில்லை. வீணாய் போன காங்கிரசைச் சேர்ந்த எடப்பாடி நகராட்சி துணை சேர்மனாய் இருந்தும் கொடி கட்டப்படவில்லை. கொடி கட்ட வேண்டுகோளாக விடுகிறேன். ஒரு உற்சாகப்படுத்தும் வகையில் கொடியை கட்டி இருக்கலாம். அங்கு 5 கொடி கொடுத்தால் எங்களுக்கு ஒரு கொடி கொடுங்கள். அப்பதான் கட்சியையும் கூட்டணியும் ஒருங்கிணைக்க முடியும். இந்த தொகுதியை நாங்கள் ஜெயித்துக் கொடுக்கிறோம். ஒரு காலத்தில் எடப்பாடி காங்கிரசின் முனிசிபாலிட்டியாக இருந்தது. எனவே மீண்டும் அந்த பதவியை எங்களுக்கு தர வேண்டும். நான் 50 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்து விட்டேன். இன்னும் ஒரு பஞ்சாயத்துக்கு கூட மெம்பராக இல்லை. மேடையிலேயே காங்கிரஸ் உதவி சேர்மனை காங்கிரஸ் நிர்வாகி வறுத்தெடுத்த இந்த நிகழ்வு கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது...

More news from Salem and nearby areas
  • தேவூர் அருகே நல்லங்கியூர் முத்துமாரியம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கை குழந்தைகளுடனும், பல்வேறு அலகுகள் குத்தியும் தீ மிதித்து நேர்த்த்திக்கடன் செலுத்தினார்... சேலம் மாவட்டம் தேவூர் அருகே நல்லங்கியூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பொங்கல் விழா கடந்த15 நாட்களுக்கு முன்பு கம்பம் நடுதல் செய்து பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.இதனையடுத்து தினந்தோறும் சிறப்பு வழிபாட்டு பூஜை சிறப்பு அலங்காரம் சன்னதியில் தண்ணீர் ஊற்றுதல் பச்சை பூஜை பூவோடு எடுத்தல் செய்து திரளான மக்கள் விரதம் இருந்து வந்தனர்.இதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் கல்வடங்கம் காவேரி ஆற்றங்கரைக்கு சென்று புனித நீராடி அம்மன் அலங்காரம் செய்து தீர்த்த குடம் எடுத்தும் மயில் அலகு ,வேல் அலகு ,எலுமிச்சை அலகு, மற்றும் இரண்டு பேரும் ஒரே வேல் அலகு குத்தியவாறு திருவீதி உலாவாக கல்வடங்கம் அங்காளம்மன் கோவில் சன்னதியில் புறப்பட்டு கொட்டாயூர் வழியாக நல்லங்கியூர் முத்துமாரியம்மன் கோவில் சன்னதி வந்தடைந்தனர்... இதனையடுத்து கோவில் சன்னதி முன்பு அமைக்கப்பட்டுள்ள குண்டத்தில் திரளான மக்கள் நீண்ட வரிசையில் நின்று தீ மிதித்தனர். பின்னர் வழிபட்டு பூஜை பொங்கல் வைத்தல் மாவிளக்கு தட்டம் எடுத்தல் கிடா வெட்டுதல் பெரிய பூஜை நடைபெற்றது இதில் நல்லங்கியூர், வட்ராம்பாளையம்,கொட்டாயூர், ரெட்டி பாளையம்,மேட்டாங்காடு,சோழக்கவுண்டனூர், மேட்டுப்பாளையம், காவேரி பட்டி,வெள்ளாளபாளையம், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான மக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்... விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா குமார் தலைமையில் ஊர் கவுண்டர்கள் கொத்துக்காரர்கள் கோவில பூசாரிகள், இளைஞர்கள் உப்பட கிராம மக்கள் திரளாகக் கலந்து கொண்டு செய்திருந்தனர்..
    1
    தேவூர் அருகே நல்லங்கியூர் முத்துமாரியம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கை குழந்தைகளுடனும், பல்வேறு அலகுகள் குத்தியும் தீ மிதித்து நேர்த்த்திக்கடன் செலுத்தினார்...
சேலம் மாவட்டம் தேவூர் அருகே நல்லங்கியூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பொங்கல் விழா கடந்த15 நாட்களுக்கு முன்பு கம்பம் நடுதல் செய்து பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.இதனையடுத்து தினந்தோறும் சிறப்பு வழிபாட்டு பூஜை சிறப்பு அலங்காரம் சன்னதியில் தண்ணீர் ஊற்றுதல் பச்சை பூஜை பூவோடு எடுத்தல் செய்து திரளான மக்கள் விரதம் இருந்து வந்தனர்.இதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் கல்வடங்கம் காவேரி ஆற்றங்கரைக்கு சென்று புனித நீராடி அம்மன் அலங்காரம் செய்து  தீர்த்த குடம் எடுத்தும் மயில் அலகு ,வேல் அலகு ,எலுமிச்சை அலகு, மற்றும் இரண்டு பேரும் ஒரே வேல் அலகு குத்தியவாறு  திருவீதி உலாவாக கல்வடங்கம் அங்காளம்மன் கோவில் சன்னதியில் புறப்பட்டு கொட்டாயூர் வழியாக நல்லங்கியூர் முத்துமாரியம்மன் கோவில் சன்னதி வந்தடைந்தனர்...
இதனையடுத்து கோவில் சன்னதி முன்பு அமைக்கப்பட்டுள்ள குண்டத்தில் திரளான மக்கள் நீண்ட வரிசையில் நின்று  தீ மிதித்தனர். பின்னர் வழிபட்டு பூஜை பொங்கல் வைத்தல் மாவிளக்கு தட்டம் எடுத்தல் கிடா வெட்டுதல் பெரிய பூஜை நடைபெற்றது இதில் நல்லங்கியூர், வட்ராம்பாளையம்,கொட்டாயூர், ரெட்டி பாளையம்,மேட்டாங்காடு,சோழக்கவுண்டனூர், மேட்டுப்பாளையம், காவேரி பட்டி,வெள்ளாளபாளையம், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான மக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்...
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா குமார் தலைமையில் ஊர் கவுண்டர்கள் கொத்துக்காரர்கள் கோவில பூசாரிகள், இளைஞர்கள் உப்பட கிராம மக்கள் திரளாகக் கலந்து கொண்டு செய்திருந்தனர்..
    user_Srianand
    Srianand
    பத்திரிகையாளர் Edappadi, Salem•
    11 hrs ago
  • தமிழகத்தில் வருகின்றார் 2026 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழக முழுவதும் அதிமுக திமுக தவெக நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தீவிர கூட்டணிகள் அமைத்து வேட்பாளர்களை அறிமுகம் செய்து வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார் இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது ஈரோடு மேற்கு முத்துசாமி மொடக்குறிச்சி மதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் பெருந்துறை தோப்பு வெங்கடாஜலம் பவானி கே ஏ சேகர் என்கின்ற சந்திரசேகர் அந்தியூர் சிவபாலன் கோபிசெட்டிபாளையம் நல்லசிவம் பவானிசாகர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுந்தரம் உள்ளிட்டவர்களுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அதேபோல் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாததால் அவர்களுக்கு கை சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்
    1
    தமிழகத்தில் வருகின்றார் 2026 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழக முழுவதும் அதிமுக திமுக தவெக நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தீவிர கூட்டணிகள் அமைத்து வேட்பாளர்களை அறிமுகம் செய்து வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார் இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது ஈரோடு மேற்கு முத்துசாமி மொடக்குறிச்சி மதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் பெருந்துறை தோப்பு வெங்கடாஜலம் பவானி கே ஏ சேகர் என்கின்ற சந்திரசேகர் அந்தியூர் சிவபாலன் கோபிசெட்டிபாளையம் நல்லசிவம் பவானிசாகர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுந்தரம் உள்ளிட்டவர்களுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அதேபோல் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாததால் அவர்களுக்கு கை சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்
    user_கீதா
    கீதா
    ஈரோடு, ஈரோடு, தமிழ்நாடு•
    6 hrs ago
  • தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் மாநில தலைவர் கார்வேந்தன் தலைமையில், இன்று சேலத்தில் உள்ள அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து, வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு தமிழகம் முழுவதும் தங்களது ஆதரவை தெரிவித்து, அதிமுகவின் வெற்றிக்காக பாடுபட போவதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து கடிதம் அளித்துள்ளதாகவும், மேலும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை என்ற பெயரை தனியரசு என்பவர் தவறாக பயன்படுத்தி வருவதால் அவர் மீது எட்டு கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கார்வேந்தன் தெரிவித்தார்.
    1
    தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் மாநில தலைவர் கார்வேந்தன் தலைமையில், இன்று சேலத்தில் உள்ள அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து, வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு தமிழகம் முழுவதும் தங்களது ஆதரவை தெரிவித்து, அதிமுகவின் வெற்றிக்காக பாடுபட போவதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து கடிதம் அளித்துள்ளதாகவும், மேலும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை என்ற பெயரை தனியரசு என்பவர் தவறாக பயன்படுத்தி வருவதால் அவர் மீது எட்டு கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கார்வேந்தன் தெரிவித்தார்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    13 hrs ago
  • நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் கொண்டமநாயக்கன்பட்டி கிராமம் சர்வே எண் 1 மற்றும் சர்வே எண் 39 இல் அமைந்துள்ள அரசு அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவு கனிம வளங்கள் திருடப்படுவதால் குவாரியை சுற்றி உள்ள பொது மக்களுக்கு பல நலக்குறைவுகள் ஏற்படுவதும் காற்று மாசு ஏற்பட்டு விவசாயத்தை அழித்து உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து சுகாதார சீர்கேடு இயங்கும் கல்குவாரிகளை அரசு உடனடியாக நிறுத்த வேண்டுமாய் ஊர் பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி தேர்தலை புறக்கணிக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது
    1
    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் கொண்டமநாயக்கன்பட்டி கிராமம் சர்வே எண் 1 மற்றும் சர்வே எண் 39 இல் அமைந்துள்ள அரசு அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவு கனிம வளங்கள் திருடப்படுவதால் குவாரியை சுற்றி உள்ள பொது மக்களுக்கு பல நலக்குறைவுகள் ஏற்படுவதும் காற்று மாசு ஏற்பட்டு விவசாயத்தை அழித்து உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து சுகாதார சீர்கேடு இயங்கும் கல்குவாரிகளை அரசு உடனடியாக நிறுத்த வேண்டுமாய் ஊர் பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி தேர்தலை புறக்கணிக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது
    user_DHINESH KUMAR
    DHINESH KUMAR
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    5 hrs ago
  • பாப்பிரெட்டிபட்டி திமுக வேட்பாளர் P.பழநியப்பன் தேர்தல் அலுவலர் கோவிந்தன் அவர்களிடம் இன்று வேட்பு மனுதாக்கல்செய்தார் பாப்பிரெட்டிபட்டி திமுக வேட்பாளரும் முன்னால் அமைச்சர் திரு.P.பழநியப் பன் பாப்பிரெட்டிபட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் தேர்தல் அவவலர் திரு, கோவிந்தன் அவர்களிடம் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் இந்நிகழ்வில் காங்கிரல் மாவட்ட தலைவர் கோ.சிற்றரசு, தேமுதிக மாவட்ட செயலாளர் குமார் VCK சென்னகிருஷ்ணன் மதிமுக மாவட்ட செயலாளர் ராம்தாஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்
    1
    பாப்பிரெட்டிபட்டி திமுக வேட்பாளர் P.பழநியப்பன் தேர்தல் அலுவலர் கோவிந்தன் அவர்களிடம் இன்று வேட்பு மனுதாக்கல்செய்தார்
பாப்பிரெட்டிபட்டி திமுக
வேட்பாளரும் முன்னால் அமைச்சர் திரு.P.பழநியப்
பன் பாப்பிரெட்டிபட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் தேர்தல் அவவலர் திரு, கோவிந்தன் அவர்களிடம் இன்று  தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் இந்நிகழ்வில் காங்கிரல் மாவட்ட தலைவர் கோ.சிற்றரசு, தேமுதிக மாவட்ட செயலாளர் குமார் VCK சென்னகிருஷ்ணன் மதிமுக மாவட்ட செயலாளர் ராம்தாஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • சேலம் மாவட்டம் ஆத்தூர் அதிமுக வேட்பாளர் ஜெய சங்கரன் இன்று காலை முதலே வாக்கு சேகரிக்க தொடங்கினார் ஆத்தூர் நகரை எட்டாவது வார்டு பகுதியில் பொதுமக்களிடம் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை அழைத்துக்கொண்டு ஒவ்வொரு வீடாக சென்று வாக்கு கேட்டார் மேலும் ஒவ்வொரு வீட்டிற்கும் பிரிட்ஜ் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.
    1
    சேலம் மாவட்டம் ஆத்தூர் அதிமுக வேட்பாளர் ஜெய சங்கரன் இன்று காலை முதலே வாக்கு சேகரிக்க தொடங்கினார் ஆத்தூர் நகரை எட்டாவது வார்டு பகுதியில் பொதுமக்களிடம் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை அழைத்துக்கொண்டு ஒவ்வொரு வீடாக சென்று வாக்கு கேட்டார் மேலும் ஒவ்வொரு வீட்டிற்கும் பிரிட்ஜ் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.
    user_Selva
    Selva
    ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    17 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அதிமுக மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் இன்று (02-04-2026) வேடசந்தூர் தாசில்தார் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் குஜிலியம்பாறை வேடசந்தூர் வடமதுரை ஒன்றியங்களைச் சேர்ந்த செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அதிமுக மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் இன்று (02-04-2026) வேடசந்தூர் தாசில்தார் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் குஜிலியம்பாறை வேடசந்தூர் வடமதுரை ஒன்றியங்களைச் சேர்ந்த செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    user_Farmers joint Liability Group
    Farmers joint Liability Group
    Farmer குஜிலியம்பாறை, திண்டுக்கல், தமிழ்நாடு•
    12 hrs ago
  • சங்ககிரி அருகே ஒருக்காமலை வரதராஜ பெருமாள் கோவிலில் உண்டியல் பணம் கையாடல்:அறநிலையத்துறை அதிகாரி மீது சிசிடிவி காட்சி ஆதாரத்துடன் செயல் அலுவலர் போலீசில் புகார் அளித்துள்ளார்... சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஒருக்காமலையில் பிரசித்தி பெற்ற வரதராஜபெருமாள் திருக்கோவில் உள்ளது... இக்கோவிலுக்கு சொந்தமான உண்டியல் கடந்த 17ம்தேதி அறநிலையத்துறை சேலம் மண்டல இணை ஆணையர் உத்தரவின்படி, சேலம் சுகனேஸ்வரர் திருக்கோவில் உதவி ஆணையர் அம்சா மற்றும் எடப்பாடி இந்து அறநிலைத்துறை சரக ஆய்வாளர் கார்த்திகா ஆகியோர் முன்னிலையில் திறந்து அன்னதான மண்டபத்திற்கு மேல் உள்ள மண்டபத்தில் கணக்கிடப்பட்டது... அப்போது உண்டியல் காணிக்கையாக ரூ 12 லட்சத்து 38 ஆயிரத்து 44 இருந்தது.அந்த பணம் கோயில் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டு ரசீது பெறப்பட்டது.இந்நிலையில் கோவில் உண்டியல் திறப்பு நிகழ்ச்சியின்போது பணத்தை திருடியதாக திருத்தொண்டர்கள் அறக்கட்டளையின் அறங்காவலர் அல்லிக்குட்டை இராதாகிருஷ்ணன் சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு தகவல் தெரிவித்துள்ளார்... இது குறித்து நாமக்கல் நரசிம்ம பெருமாள் திருக்கோவில் செயல் அலுவலரிடம் புகார் வந்ததையொட்டி, நேற்று (1ந்தேதி) உண்டியல் திறப்பு நடைபெற்ற அன்னதான மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.அப்போது உண்டியல் திறப்பு நிகழ்வுக்கு கண்காணிப்பு அதிகாரியாக வந்த அம்சா, உண்டியல் பணத்தை கையாடல் செய்தது கேமரா பதிவுகள் மூலம் தெரிய வந்தது... இது குறித்து சங்ககிரி வரதராஜ பெருமாள் திருக்கோயில் செயல் அலுவலர் மாலா நேற்று சங்ககிரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் சங்ககிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்... சங்ககிரி அருகே வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஒருக்காமலை வரதராஜ பெருமாள் கோவில் பணத்தை பாதுகாக்கும் அதிகாரியே பணத்தை களவாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
    1
    சங்ககிரி அருகே ஒருக்காமலை வரதராஜ பெருமாள் கோவிலில் உண்டியல் பணம் கையாடல்:அறநிலையத்துறை அதிகாரி மீது  சிசிடிவி காட்சி ஆதாரத்துடன் செயல் அலுவலர் போலீசில் புகார் அளித்துள்ளார்...
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஒருக்காமலையில் பிரசித்தி பெற்ற வரதராஜபெருமாள் திருக்கோவில் உள்ளது...
இக்கோவிலுக்கு சொந்தமான உண்டியல் கடந்த 17ம்தேதி அறநிலையத்துறை சேலம் மண்டல இணை ஆணையர் உத்தரவின்படி, சேலம் சுகனேஸ்வரர் திருக்கோவில் உதவி ஆணையர் அம்சா மற்றும் எடப்பாடி இந்து அறநிலைத்துறை சரக ஆய்வாளர் கார்த்திகா ஆகியோர் முன்னிலையில் திறந்து அன்னதான மண்டபத்திற்கு மேல் உள்ள மண்டபத்தில் கணக்கிடப்பட்டது...
அப்போது உண்டியல் காணிக்கையாக ரூ 12 லட்சத்து 38 ஆயிரத்து 44 இருந்தது.அந்த பணம் கோயில் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டு ரசீது பெறப்பட்டது.இந்நிலையில் கோவில் உண்டியல் திறப்பு நிகழ்ச்சியின்போது பணத்தை திருடியதாக திருத்தொண்டர்கள் அறக்கட்டளையின் அறங்காவலர் அல்லிக்குட்டை  இராதாகிருஷ்ணன் சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு தகவல் தெரிவித்துள்ளார்...
இது குறித்து நாமக்கல் நரசிம்ம பெருமாள் திருக்கோவில் செயல் அலுவலரிடம் புகார் வந்ததையொட்டி, நேற்று (1ந்தேதி) உண்டியல் திறப்பு நடைபெற்ற அன்னதான மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.அப்போது உண்டியல் திறப்பு நிகழ்வுக்கு கண்காணிப்பு அதிகாரியாக வந்த அம்சா, உண்டியல் பணத்தை கையாடல் செய்தது கேமரா பதிவுகள் மூலம் தெரிய வந்தது...
இது குறித்து சங்ககிரி வரதராஜ பெருமாள் திருக்கோயில் செயல் அலுவலர் மாலா நேற்று சங்ககிரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். அதன்  பேரில் சங்ககிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்...
சங்ககிரி அருகே வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஒருக்காமலை வரதராஜ பெருமாள் கோவில் பணத்தை பாதுகாக்கும் அதிகாரியே பணத்தை களவாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
    user_Srianand
    Srianand
    பத்திரிகையாளர் Edappadi, Salem•
    12 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.