Shuru
Apke Nagar Ki App…
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் மெயின் ரோட்டில் மெயின் மின்கம்பிகள் செடிகள் மற்றும் மரக்கிளைகள் அதிகமாக வளர்ந்துள்ளன. இதனால் மின்கம்பிகள் அறுந்து விழும் அபாயம் உள்ளதால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உடனடியாக இந்த செடிகள் மற்றும் கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Naga Rajan
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் மெயின் ரோட்டில் மெயின் மின்கம்பிகள் செடிகள் மற்றும் மரக்கிளைகள் அதிகமாக வளர்ந்துள்ளன. இதனால் மின்கம்பிகள் அறுந்து விழும் அபாயம் உள்ளதால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உடனடியாக இந்த செடிகள் மற்றும் கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
More news from புதுச்சேரி and nearby areas
- 1600 bitr1
- ஒகேனக்கல் காவேரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து சரிவு கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழியும் பருவமழையின் அளவைப் பொறுத்து நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக காணப்படுகிறது. இந்நிலையில், நேற்று 2000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று (ஜன.08) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1200 கனஅடியாக குறைந்துள்ளது என மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.1
- தருமபுரியில் சட்ட மன்ற ஆய்வுக் கூட்டம் 50 உறுதி மொழிகள் நிறைவேற்றப்பட்டதாக பெருமிதம் தருமபுரி மாவட்டத்தில் இன்று தமிழ்நாடு சட்டமன்ற குழு ஆய்வுக் கூட்டம் குழு தலைவர் சட்டமன்றப் பேரவை, அரசு உறுதிமொழிக் குழுத் தலைவர்,பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையில் நடந்தது,1
- பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் பாபநாசம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் சார்பில் திராவிட பொங்கல் நிகழ்ச்சியாக உள் விளையாட்டு அரங்கத்தில் இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. முன்னதாக அனைவரையும் வடக்கு ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன் வரவேற்று பேசினார் .மாவட்ட துணை செயலாளர் அய்யா ராசு, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், அய்யம்பேட்டை பேரூராட்சி தலைவர் புனிதவதி குமார்,விவசாய மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் சிவகுமார் ,அவை தலைவர் ராஜேந்திரன், துணை செயலாளர் சரவணன், பொருளாளர் கணேசன், மாவட்ட பிரதிநிதிகள் முருகேசன்,ஹாஜா மைதீன், கண்ணையன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் .சிறப்பு விருந்தினராக மாவட்ட பொறுப்பாளரும், கும்பகோணம் எம் எல் ஏவுமான அன்பழகன் தலைமையேற்று இறகு பந்து போட்டியை துவக்கி வைத்தார். தஞ்சை மாவட்டத்தில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட போட்டி வீரர்கள் பங்கு பெற்றுவிளையாடினர். வெற்றி பெற்ற அனைவருக்கும் சுழல் கோப்பை மற்றும் ரொக்கப் பரிசு பாபநாசம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் வழங்கப்பட்டது. முடிவில் ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் இளையராஜா நன்றி கூறினார் .1
- சென்னை கே கே நகர் மேற்கு2
- *மணப்பாறை அருகே புத்தாநத்தத்தில் கடை அடைப்பு போராட்டம்* திருச்சி மாவட்டம், மணப்பாறை மணப்பாறை அருகே புத்தாநத்தம்அருகே புத்தாநத்தம் ஊராட்சியை புத்தாநத்தம் மற்றும் இடையபட்டி என இரண்டு ஊராட்சியாக பிரித்து அரசாணை வெளியிட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி மெய்யம்பட்டி, பாறைப்பட்டி, இடையபட்டி, வெள்ளையகவுண்டம்பட்டி, கணவாய்ப்பட்டி, கருஞ்சோலைப்பட்டி உள்ளிட்ட 18 கிராமங்களைச்சேர்ந்த பொதுமக்கள் கடந்த சில தினங்களுக்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து நேற்று புத்தாநத்தத்தில் ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 100 க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஆட்டோ மற்றும் மினி சரக்கு வேன்களும் ஓடவில்லை. ஆனால் ஊராட்சியை பிரிப்பதற்கு புத்தாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மட்டும் ஆதரவு தெரிவிக்கின்றனர். இதனால் ஊராட்சியை பிரிக்க ஆதரவு தெரிவிக்கும் ஒரு தரப்பினர் கடைகளை வழக்கம்போல் திறந்து வைத்துள்ளனர. எதிர்ப்பு தெரிவிக்கும் 18 கிராமமக்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊராட்சி பிரிப்பதால் பொருளாதார ரீதியாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும் எனவே ஊராட்சியை பிரிக்கும் அரசாணையை ரத்து செய்யவேண்டும். ஊராட்சியை இரண்டாக பிரிக்காமல் பேரூராட்சியாக தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சியை இரண்டாக பிரிக்கும் ஆணையை ரத்து செய்யாவிட்டால் கருப்புக்கொடி போராட்டம் நடத்துவோம் எனவும், வரவுள்ள சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராமத்தினர் தெரிவித்துள்ளனர். கடையடைப்பு போர்ட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- 650 bitr 21
- வார சந்தையில் 46 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை புளுதியூரில் கால்நடை வாரச் சந்தை, வாரம்தோறும் புதன்கிழமை நடக்கும், அந்த வகையில் நேற்று பல மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் கால்நடைகளை விற்க வாங்க வந்திருந்தனர். ஆடுகள் ரூ.6000 - ரூ.15,500 வரை 23 லட்சத்திற்கும், மாடுகள் ரூ.8,000 - 48,000 வரை 20 லட்சத்திற்கும், நாட்டுக்கோழிகள் ரூ.350 - 1,200 வரை என 3 லட்சம் என மொத்தமாக, 46 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.1