பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் பாபநாசம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் சார்பில் திராவிட பொங்கல் நிகழ்ச்சியாக உள் விளையாட்டு அரங்கத்தில் இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. முன்னதாக அனைவரையும் வடக்கு ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன் வரவேற்று பேசினார் .மாவட்ட துணை செயலாளர் அய்யா ராசு, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், அய்யம்பேட்டை பேரூராட்சி தலைவர் புனிதவதி குமார்,விவசாய மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் சிவகுமார் ,அவை தலைவர் ராஜேந்திரன், துணை செயலாளர் சரவணன், பொருளாளர் கணேசன், மாவட்ட பிரதிநிதிகள் முருகேசன்,ஹாஜா மைதீன், கண்ணையன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் .சிறப்பு விருந்தினராக மாவட்ட பொறுப்பாளரும், கும்பகோணம் எம் எல் ஏவுமான அன்பழகன் தலைமையேற்று இறகு பந்து போட்டியை துவக்கி வைத்தார். தஞ்சை மாவட்டத்தில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட போட்டி வீரர்கள் பங்கு பெற்றுவிளையாடினர். வெற்றி பெற்ற அனைவருக்கும் சுழல் கோப்பை மற்றும் ரொக்கப் பரிசு பாபநாசம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் வழங்கப்பட்டது. முடிவில் ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் இளையராஜா நன்றி கூறினார் .

- நாகை மாவட்டம் கீழையூர் கடைவீதியில் இந்திய கமயூனிஸ்ட் கட்சி சார்பில் மறைந்த தியாகி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜி முருகையன் அவர்களின் 47 வது நினைவு தினம் அனுசரிப்பு2
- நாகையில் பொங்கல் தொகுப்பு பரிசு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன் மாவை சட்டமன்ற உறுப்பினர் ஷா நவாஸ் ஆகியோரால் இன்று வழங்கப்பட்டது1
- ஆலங்குடி: மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய அமைச்சர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு கலை கல்லூரி மாணவர்களுக்கு இன்று மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான சிவ.வீ. மெய்யநாதன் கலந்து கொண்டு கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கி சிற்பித்தார். இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் தங்கமணி, ரவி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- ஆத்தூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி1
- Post by Gaurav Mohore4
- *மணப்பாறை அருகே புத்தாநத்தத்தில் கடை அடைப்பு போராட்டம்* திருச்சி மாவட்டம், மணப்பாறை மணப்பாறை அருகே புத்தாநத்தம்அருகே புத்தாநத்தம் ஊராட்சியை புத்தாநத்தம் மற்றும் இடையபட்டி என இரண்டு ஊராட்சியாக பிரித்து அரசாணை வெளியிட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி மெய்யம்பட்டி, பாறைப்பட்டி, இடையபட்டி, வெள்ளையகவுண்டம்பட்டி, கணவாய்ப்பட்டி, கருஞ்சோலைப்பட்டி உள்ளிட்ட 18 கிராமங்களைச்சேர்ந்த பொதுமக்கள் கடந்த சில தினங்களுக்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து நேற்று புத்தாநத்தத்தில் ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 100 க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஆட்டோ மற்றும் மினி சரக்கு வேன்களும் ஓடவில்லை. ஆனால் ஊராட்சியை பிரிப்பதற்கு புத்தாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மட்டும் ஆதரவு தெரிவிக்கின்றனர். இதனால் ஊராட்சியை பிரிக்க ஆதரவு தெரிவிக்கும் ஒரு தரப்பினர் கடைகளை வழக்கம்போல் திறந்து வைத்துள்ளனர. எதிர்ப்பு தெரிவிக்கும் 18 கிராமமக்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊராட்சி பிரிப்பதால் பொருளாதார ரீதியாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும் எனவே ஊராட்சியை பிரிக்கும் அரசாணையை ரத்து செய்யவேண்டும். ஊராட்சியை இரண்டாக பிரிக்காமல் பேரூராட்சியாக தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சியை இரண்டாக பிரிக்கும் ஆணையை ரத்து செய்யாவிட்டால் கருப்புக்கொடி போராட்டம் நடத்துவோம் எனவும், வரவுள்ள சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராமத்தினர் தெரிவித்துள்ளனர். கடையடைப்பு போர்ட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.1
- திண்டுக்கல் சோலைஹால் பகுதியில் உள்ள மீன் கடைகளை அகற்றி மேட்டுப்பட்டி சாலைகள் உள்ள குலசாலையில் மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது1
- புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி பேட்டி! புதுகை மன்னர் கல்லூரியில் இன்று தமிழக அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அதில், "நான் நீதிமன்ற அவமதிப்பு செய்யவில்லை, திருப்பரங்குன்றத்தில் பிரச்சனைக்குரிய இடத்தில் ஏற்கெனவே தீபம் ஏற்றப்பட்டுள்ளதா என்பதை தான் நீதிமன்றத்தில் கேட்டோம். நீதிபதிகள் பேய் கதை சொல்லும்போது அமைச்சர் சொல்லக் கூடாதா?, அமித்ஷா அடிக்கடி தமிழகம் வருவது அவருக்குத்தான் ஏமாற்றம்? என்றார்.1