Shuru
Apke Nagar Ki App…
நாகையில் பொங்கல் தொகுப்பு பரிசு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன் மாவை சட்டமன்ற உறுப்பினர் ஷா நவாஸ் ஆகியோரால் இன்று வழங்கப்பட்டது
Chakravarthy
நாகையில் பொங்கல் தொகுப்பு பரிசு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன் மாவை சட்டமன்ற உறுப்பினர் ஷா நவாஸ் ஆகியோரால் இன்று வழங்கப்பட்டது
More news from தமிழ்நாடு and nearby areas
- சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள பூவந்தி பகுதியில் சாலையோரமாக செல்லும் குடிநீர் குழாய் உடைந்து, சுத்தமான குடிநீர் தொடர்ந்து வீணாகி வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக பழுதை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- திண்டுக்கல் சோலைஹால் பகுதியில் உள்ள மீன் கடைகளை அகற்றி மேட்டுப்பட்டி சாலைகள் உள்ள குலசாலையில் மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது1
- ஸ்ரீபெரும்புதூர். வெங்காடு ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வெங்காடு ஊராட்சியில் அடங்கிய வெங்காடு மற்றும் இரும்பேடு நியாய விலை கடைகளில் தமிழ்நாடு அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.3000 ரொக்கம் ஆகியவைகளை வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஸ்ரீபெரும்புதூர் கூட்டுறவு வங்கி தலைவரும், முன்னாள் வெங்காடு ஊராட்சி மன்ற தலைவரும்,ஏரி நீர் பாசன சங்கத் தலைவருமான வெங்காடு பி.உலகநாதன் கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்திரன்,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அஸ்வினி வினோத் எத்திராஜன் முருகன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கௌரி ராதாகிருஷ்ணன்,கிராம நாட்டான்மைதாரர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.1
- காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள கோவிலில் உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் சசிகுமார் ஏற்பாட்டில் உத்திரமேரூர் பேரூர் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் கோலப்போட்டி நடைபெற்றது . இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பலவிதமான கோலங்கள் வரைந்து காட்டினர் . கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் பரிசுகளை வழங்கினார்.1
- பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை-திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.1
- தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தர்மபுரி எம்எல்ஏ ஆதரவு தெரிவித்து பேச்சு தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நல சங்கம் சார்பில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். . செயலாளர் சிவலிங்கம் பொருளாளர் பிரதீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தங்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணித் திறன் மதிப்பீடு என்ற பெயரில் பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட்டு 15 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மகளிர் பணியாளர்களுக்கு 12 மாத கால மகப்பேறு விடுப்பு வழக்க வேண்டும். பணியின் போது உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும். அனைத்து நிலை பணியாளர்களுக்கும் மருத்துவ காப்பீடு விபத்து காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த கவனிக்கப் ஆர்ப்பாட்டத்திற்கு தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து பேசினார்.1
- தூய்மை பணியை துவக்கி வைத்த அமைச்சர் மெய்யநாதன் திருவேங்கைவாசல் அருகே சிப்காட்டில் "சிப்காட் போகி"தூய்மை பணியினை (ஜன.9) அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், எம்எல்ஏ முத்துராஜா, மாவட்ட ஆட்சியர் அருணா, ஆகியோர் கொடி அசைத்து பணியினை துவக்கி வைத்தனர். பின்னர் ஜேசிபி கொண்டும் தூய்மை பணியாளர்கள் கொண்டு சிப்காட்டில் 421 ஏக்கர் பரப்பளவில் உள்ள செடி கொடிகள் அகற்றப்படும் என சிப்காட் திட்ட அலுவலர் கணேசன் தெரிவித்தார்1
- சிவகங்கை ஜஸ்டின் பள்ளியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட் சார்பில், காரைக்குடி மண்டல பயிற்சி மையத்தில் சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 2026 ஜனவரி 1 முதல் ஜனவரி 31 வரை நடைபெறும் இந்த சாலைப் பாதுகாப்பு மாத விழாவின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடத்தப்பட்டது.1
- ஸ்ரீபெரும்புதூர். கீரநல்லூர் ஊராட்சியில் பொங்கல் பரிசு தொப்பினை வழங்கிய ஸ்ரீபெரும்புதூர் எம்.எம்.ஏ செல்வப்பெருந்தகை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் கீரநல்லூர் ஊராட்சியில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உட்பட்ட நியாய விலை கடையில்,பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய சேர்மன் எஸ்.டி.கருணாநிதி தலைமையிலும்,கீரநல்லூர் ஊராட்சிமன்ற தலைவர் கே.என்.அன்பரசு, துணைச் சேர்மன் மாலதி போஸ்கோ,மாவட்ட கவுன்சிலர் சோகண்டி பால்ராஜ்,மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் குன்னம் முருகன்,தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயலாளர் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ கு.செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் கூடிய ரூபாய் 3000 ரொக்கம் ஆகியவைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் வட்டார தலைவர் நிக்கோலஸ்,மாநில காங்கிரஸ் இளைஞர் அணி அனீஸ் ராஜ்குமார், திமுக இளைஞரணி சிலம்பரசன், உள்ளாட்சி பிரதிநிதிகள்,நியாய விலை கடை ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.4