logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

காரியாபட்டி செவல்பட்டியில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷ வழிபாடு. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி செவல்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்றது. பிரதோஷத்தை முன்னிட்டு சிவபெருமான் மற்றும் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதன்படி பால், தயிர், திருமஞ்சனம், விபூதி, சந்தனம், மஞ்சள், இளநீர், தேன், திருநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிவபெருமான் மற்றும் நந்தி பெருமான் வண்ண மலர்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த வழிபாட்டில் கோவில் அர்ச்சகர் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடத்தினார். இந்த பிரதோஷ வழிபாட்டில் செவல்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்து பக்தி பரவசத்தில் வழிபட்டனர். வழிபாடு நிறைவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

2 hrs ago
user_குமார்
குமார்
காரியாபட்டி, விருதுநகர், தமிழ்நாடு•
2 hrs ago

காரியாபட்டி செவல்பட்டியில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷ வழிபாடு. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி செவல்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்றது. பிரதோஷத்தை முன்னிட்டு சிவபெருமான் மற்றும் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதன்படி பால், தயிர், திருமஞ்சனம், விபூதி, சந்தனம், மஞ்சள், இளநீர், தேன், திருநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிவபெருமான் மற்றும் நந்தி பெருமான் வண்ண மலர்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த வழிபாட்டில் கோவில் அர்ச்சகர் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடத்தினார். இந்த பிரதோஷ வழிபாட்டில் செவல்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்து பக்தி பரவசத்தில் வழிபட்டனர். வழிபாடு நிறைவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • மதுரை அருகே வாகன சோதனை: ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.2.40 லட்சம் பறிமுதல் மதுரை, மார்ச் 16 – தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், மதுரை மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் கருமாத்தூர் மற்றும் மேலூர் அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மேலூர் அருகே நடைபெற்ற சோதனையில், குமார் என்பவர் கொண்டு வந்திருந்த ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாதது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.2.40 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிக அளவில் பணம் எடுத்துச் செல்லும்போது அதற்கான உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
    3
    மதுரை அருகே வாகன சோதனை: ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.2.40 லட்சம் பறிமுதல்
மதுரை, மார்ச் 16 –
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், மதுரை மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் கருமாத்தூர் மற்றும் மேலூர் அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மேலூர் அருகே நடைபெற்ற சோதனையில், குமார் என்பவர் கொண்டு வந்திருந்த ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாதது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.2.40 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிக அளவில் பணம் எடுத்துச் செல்லும்போது அதற்கான உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
    user_Ponmaran Thekkathir Reporter
    Ponmaran Thekkathir Reporter
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    10 hrs ago
  • தேர்தல் நடைமுறைஅமல் -பொதுமக்கள் மனுக்கள் வாங்க மனுப் பெட்டி ரெடி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுவதுவழக்கம். இந்நிலையில் 2026 ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் இனிவரும் காலங்களில் தேர்தல் விதிமுறை உள்ளவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உள்ள மனு பெட்டியில் தங்கள் மனுக்களை வழங்குவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வைக்கப்பட்டுள்ளன
    1
    தேர்தல் நடைமுறைஅமல் -பொதுமக்கள் மனுக்கள் வாங்க மனுப் பெட்டி ரெடி
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுவதுவழக்கம். இந்நிலையில் 2026 ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் இனிவரும் காலங்களில் தேர்தல்  விதிமுறை உள்ளவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உள்ள மனு பெட்டியில் தங்கள் மனுக்களை வழங்குவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வைக்கப்பட்டுள்ளன
    user_CPS
    CPS
    Local News Reporter ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • பெரியகுளம் மற்றும் அதை சுட்டு வட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை முதலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மாலை பெரியகுளம் வடுகபட்டி லட்சுமிபுரம் புதுப்பட்டி சோத்துப்பாறை முருகமலை உள்ளிட்ட பகுதிகளில் திடீரென மழை பெய்துள்ளது. இதனால் குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
    1
    பெரியகுளம் மற்றும் அதை சுட்டு வட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை முதலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மாலை பெரியகுளம் வடுகபட்டி லட்சுமிபுரம் புதுப்பட்டி சோத்துப்பாறை முருகமலை உள்ளிட்ட பகுதிகளில் திடீரென மழை பெய்துள்ளது. இதனால் குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • Post by Natarajan Pitchaimani
    1
    Post by Natarajan Pitchaimani
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    11 hrs ago
  • Post by மா.கணேஷ்
    1
    Post by மா.கணேஷ்
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Photographer ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    1 hr ago
  • திண்டுக்கல் பாரதிபுரம், 4 ரோடு சந்திப்பில் திண்டுக்கல் மாவட்ட சந்தானம் ரசிகர் மன்றம் சார்பாக நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சந்தானம் வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட தலைவர் ஹேமநாதன், துணைத்தலைவர் குழந்தைராஜ், ஒருங்கிணைப்பாளர் சங்கர் மற்றும் நகர பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
    1
    திண்டுக்கல் பாரதிபுரம், 4 ரோடு சந்திப்பில் திண்டுக்கல் மாவட்ட சந்தானம் ரசிகர் மன்றம் சார்பாக நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சந்தானம் வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட தலைவர் ஹேமநாதன், துணைத்தலைவர் குழந்தைராஜ், ஒருங்கிணைப்பாளர் சங்கர் மற்றும் நகர பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    7 hrs ago
  • தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுவிடுகின்றனர் அதன் ஒரு பகுதியாக மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் குன்னூர் டோல்கேட்டில் தேர்தல் பறக்கும் படை வாகனத்தில் வந்த பறக்கும் படை அலுவலர் ராஜாராம் தலைமையில் இரண்டு உதவி அலுவலர்கள் ஒரு வீடியோ பதிவாளர் மற்றும் காவல் துறையினர் உள்ளிட்ட அணியினருடன் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தேனியில் இருந்து மதுரை செல்லும் இருசக்கர வாகனம் கார் சரக்கு வாகனம் கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி காருக்குள்ளாகவும் காரின் பின்புற டிக்கியிலும் காரில் உள்ளவர்களின் பைகளிலும் தேர்தல் விதிமுறைப்படி ஐம்பதாயிரம் மேற்பட்ட ரொக்க பணம் மேலும் 10,000 மேற்பட்ட பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர் . இதேபோன்று ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளின் மூன்று அணிகளாக பறக்கும் படையினர் தீவிர சோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் உடனடியாக தேர்தல் விதிகள் அமலுக்கு வந்து இன்று பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    1
    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுவிடுகின்றனர் அதன் ஒரு பகுதியாக
மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் குன்னூர் டோல்கேட்டில் தேர்தல் பறக்கும் படை வாகனத்தில் வந்த  பறக்கும் படை அலுவலர் ராஜாராம் தலைமையில்  இரண்டு  உதவி அலுவலர்கள் ஒரு வீடியோ பதிவாளர் மற்றும் காவல் துறையினர் உள்ளிட்ட அணியினருடன் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தேனியில் இருந்து மதுரை செல்லும் இருசக்கர வாகனம் கார்  சரக்கு வாகனம் கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி காருக்குள்ளாகவும் காரின் பின்புற டிக்கியிலும் காரில் உள்ளவர்களின்  பைகளிலும்  தேர்தல் விதிமுறைப்படி  ஐம்பதாயிரம் மேற்பட்ட ரொக்க பணம் மேலும் 10,000 மேற்பட்ட பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர் .
இதேபோன்று ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளின் மூன்று அணிகளாக பறக்கும் படையினர் தீவிர சோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று மாலை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் உடனடியாக  தேர்தல் விதிகள் அமலுக்கு வந்து  இன்று பறக்கும் படையினர் சோதனையில்  ஈடுபட்டு வருகின்றனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 க்கான அறிவிப்பை வெளியிட்டது தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சரவணன் நேற்று பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்பு குழு வாகனங்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இக்குழுவினர் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
    1
    இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 க்கான அறிவிப்பை வெளியிட்டது தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சரவணன் நேற்று பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்பு குழு வாகனங்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இக்குழுவினர் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    12 hrs ago
  • உங்கள் கருத்துசொல்லவும் #publicintrest #publicresponse #familyvlog #legal_illegal #maatramworld
    1
    உங்கள் கருத்துசொல்லவும் #publicintrest #publicresponse #familyvlog #legal_illegal #maatramworld
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    8 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.