logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நீட் எதிர்ப்பு தி.க. இருசக்கர வாகனப் பரப்புரை குழுவினருக்கு வரவேற்பு. கிருட்டினகிரி மாவட்டம் வருகை தந்த "நீட் எதிர்ப்பு தி.க. இருசக்கர வாகனப் பரப்புரை குழுவினருக்கு மாவட்ட திராவிடர் கழகம் வரவேற்பு. கிருட்டினகிரி மாவட்டத்திற்கு வருகை தந்த "நீட்" எதிர்ப்பு இருசக்கர வாகனப் பரப்புரை பயணக்குழுவினரை கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி தலைமையில் மத்தூர் சிவம்பட்டி எல்லையில் மாவட்ட கழக நிர்வாகிகளுடன் பயணக்குழுவினரை வரவேற்றனர். ஓய்வறிய உழைப்பாளி தந்தை பெரியாரின் வாழ்நாள் மாணாக்கர் வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் ( 93 வயது இளைஞர்) மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ஆணைப்படி "நீட்" தேர்வையும், EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை சார்பில் மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரை பிரச்சாரம் தமிழ்நாடு, புதுச்சேரி தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணக்குழுவினர் திராவிட மாணவர் கழக துணைச் செயலாளர் ச.மணிமொழி தலைமையில், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பெ.செல்லதுரை ஒருங்கிணைப்பிலும், மாநில மாணவரணி துணைச் செயலாளர் வெ.இளஞ்செழியன், பிரச்சார சொற்பொழிவாளர் திராவிட மாணவர் கழக துணை செயலாளர் இளமாறன், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.செயராமன் ஆகியோர் ஒருங்கிணைப்பில் 25- இருசக்கர வாகனங்களில் பிரச்சாரக் குழுவினர் பங்கேற்றனர். கடந்த 22-ந்தேதி திருவண்ணாமலையில் தொடங்கிய பேரணி வேலூர், திருப்பத்தூர், கிருட்டினகிரி, தருமபுரி, சேலம், ஆத்தூரில் 25/08/2026 - நிறைவுபெறுகிறது. நிகழ்வில் மாவட்ட கழகச் செயலாளர் செ.பொன்முடி, மாநில ப.க.துணைப்பொதுச் செயலாளர் அண்ணா சரவணன், மாவட்ட துணைத் தலைவர் தி.கதிரவன், மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி, மாநில மகளிரணி துணைச் செயலாளர் மு. இந்திரா காந்தி, மாவட்ட தொழிலாளரணி தலைவர் சி.வெங்கடாசலம், ஓசூர் மாவட்டத் தலைவர் சு.வனவேந்தன், மாவட்ட இளைஞரணி செயலாளர் நா. சிலம்பரசன், மாவட்ட மாணவரணி தலைவர் இர.அஜய்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முருகேசன், இல. ஆறுமுகம், ஒன்றியத் தலைவர்கள் மத்தூர் சா.தனஞ்செயன், ஊற்றங்கரை அண்ணா அப்பாசாமி, கிருட்டினகிரி த.மாது, ஒன்றியச் செயலாளர்கள் வி.திருமாறன், செ.சிவராஜ், பெ.செல்வேந்திரன், மாவட்ட ப.க.துணைச்செயலாளர் மா.சிவசங்கர், மாவட்ட துணைத் தலைவர்கள் மு.வேடியப்பன், அ.வெங்கடாசலம், தொழிலாளரணி செ.ப.மூர்த்தி, மகளிரணி நிர்வாகிகள் முருகம்மாள், சிவசக்தி,பூ. இராசேந்திரபாபு, சி.இராசா, சிலம்பரசன், சரவணன் உள்பட கழக மாவட்ட, ஒன்றிய, நகர கிளைகழக பொறுப்பாளர்களும், தோழர்களும் திரளாக பங்கேற்று வரவேற்றனர். பயணக்குழுவினர் மத்தூர் பேருந்து நிலையம் பெரியார் சிலையருகிலும், காவேரிப்பட்டணம் பேருந்து நிலையத்திலும் தொடர்ந்து பையூர் பெரியார் சிலை அருகிலும் மூன்று மய்யங்களில் நீட் தேர்வின் பாதிப்புகளை விளக்கி தலைமை கழக சொற்பொழிவாளர் மு.இளமாறன் உரையாற்றினர். பிரச்சார பயண குழுவினரை கழக நிர்வாகிகள் சிறப்பான வகையில் வரவேற்று வழியனுப்பி வைத்தனர்.

15 hrs ago
user_செல்வம்
செல்வம்
பத்திரிகையாளர் Krishnagiri, Tamil Nadu•
15 hrs ago
25bcfbd9-f2e1-404d-8a22-06bed33467cb

நீட் எதிர்ப்பு தி.க. இருசக்கர வாகனப் பரப்புரை குழுவினருக்கு வரவேற்பு. கிருட்டினகிரி மாவட்டம் வருகை தந்த "நீட் எதிர்ப்பு தி.க. இருசக்கர வாகனப் பரப்புரை குழுவினருக்கு மாவட்ட திராவிடர் கழகம் வரவேற்பு. கிருட்டினகிரி மாவட்டத்திற்கு வருகை தந்த "நீட்" எதிர்ப்பு இருசக்கர வாகனப் பரப்புரை பயணக்குழுவினரை கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி தலைமையில் மத்தூர் சிவம்பட்டி எல்லையில் மாவட்ட கழக நிர்வாகிகளுடன் பயணக்குழுவினரை வரவேற்றனர். ஓய்வறிய உழைப்பாளி தந்தை பெரியாரின் வாழ்நாள் மாணாக்கர் வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் ( 93 வயது இளைஞர்) மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ஆணைப்படி "நீட்" தேர்வையும், EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை சார்பில் மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரை பிரச்சாரம் தமிழ்நாடு, புதுச்சேரி தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணக்குழுவினர் திராவிட மாணவர் கழக துணைச் செயலாளர் ச.மணிமொழி தலைமையில், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பெ.செல்லதுரை ஒருங்கிணைப்பிலும், மாநில மாணவரணி துணைச் செயலாளர் வெ.இளஞ்செழியன், பிரச்சார சொற்பொழிவாளர் திராவிட மாணவர் கழக துணை செயலாளர் இளமாறன், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.செயராமன் ஆகியோர் ஒருங்கிணைப்பில் 25- இருசக்கர வாகனங்களில் பிரச்சாரக் குழுவினர் பங்கேற்றனர். கடந்த 22-ந்தேதி திருவண்ணாமலையில் தொடங்கிய பேரணி வேலூர், திருப்பத்தூர், கிருட்டினகிரி, தருமபுரி, சேலம், ஆத்தூரில் 25/08/2026 - நிறைவுபெறுகிறது. நிகழ்வில் மாவட்ட கழகச் செயலாளர் செ.பொன்முடி, மாநில ப.க.துணைப்பொதுச் செயலாளர் அண்ணா சரவணன், மாவட்ட துணைத் தலைவர் தி.கதிரவன், மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி, மாநில மகளிரணி துணைச் செயலாளர் மு. இந்திரா காந்தி, மாவட்ட தொழிலாளரணி தலைவர் சி.வெங்கடாசலம், ஓசூர் மாவட்டத் தலைவர் சு.வனவேந்தன், மாவட்ட இளைஞரணி செயலாளர் நா. சிலம்பரசன், மாவட்ட மாணவரணி தலைவர் இர.அஜய்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முருகேசன், இல. ஆறுமுகம், ஒன்றியத் தலைவர்கள் மத்தூர் சா.தனஞ்செயன், ஊற்றங்கரை அண்ணா அப்பாசாமி, கிருட்டினகிரி த.மாது, ஒன்றியச் செயலாளர்கள் வி.திருமாறன், செ.சிவராஜ், பெ.செல்வேந்திரன், மாவட்ட ப.க.துணைச்செயலாளர் மா.சிவசங்கர், மாவட்ட துணைத் தலைவர்கள் மு.வேடியப்பன், அ.வெங்கடாசலம், தொழிலாளரணி செ.ப.மூர்த்தி, மகளிரணி நிர்வாகிகள் முருகம்மாள், சிவசக்தி,பூ. இராசேந்திரபாபு, சி.இராசா, சிலம்பரசன், சரவணன் உள்பட கழக மாவட்ட, ஒன்றிய, நகர கிளைகழக பொறுப்பாளர்களும், தோழர்களும் திரளாக பங்கேற்று வரவேற்றனர். பயணக்குழுவினர் மத்தூர் பேருந்து நிலையம் பெரியார் சிலையருகிலும், காவேரிப்பட்டணம் பேருந்து நிலையத்திலும் தொடர்ந்து பையூர் பெரியார் சிலை அருகிலும் மூன்று மய்யங்களில் நீட் தேர்வின் பாதிப்புகளை விளக்கி தலைமை கழக சொற்பொழிவாளர் மு.இளமாறன் உரையாற்றினர். பிரச்சார பயண குழுவினரை கழக நிர்வாகிகள் சிறப்பான வகையில் வரவேற்று வழியனுப்பி வைத்தனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குடிமக்கள்  நுகர்வோர் மன்றம் சார்பில் நுகர்வோர்  விழிப்புணர்வு கூட்டம். காவேரிப்பட்டணம்அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி  குடிமக்கள்  நுகர்வோர் மன்றம் சார்பில் நுகர்வோர்  விழிப்புணர்வு நடைப்பெற்றது, பள்ளியின் தலைமை ஆசிரியர் வேந்தன் தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக சமுக நுகர்வேர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர்  டாக்டர் சந்திரமோகன் கலந்துகொண்டார்.
    1
    காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குடிமக்கள் 
நுகர்வோர் மன்றம் சார்பில் நுகர்வோர்  விழிப்புணர்வு கூட்டம்.


காவேரிப்பட்டணம்அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 
குடிமக்கள் 
நுகர்வோர் மன்றம் சார்பில் நுகர்வோர்  விழிப்புணர்வு
நடைப்பெற்றது, பள்ளியின் தலைமை ஆசிரியர் வேந்தன் தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக
சமுக நுகர்வேர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் 
டாக்டர் சந்திரமோகன் கலந்துகொண்டார்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    1 hr ago
  • பாலக்கோடு அருகே கெயில் குழாயிலிருந்து வெளியேறிய நச்சுநீர் – விவசாய நிலத்தில் கலந்ததால் பசுமாடு உயிரிழப்பு தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கெயில் குழாயை சுத்தம் செய்யும் பணியின்போது ஆயில் கலந்த நச்சுநீர் விவசாய நிலத்தில் விடப்பட்டதால் நச்சு நீர் கலந்த புல் மற்றும் பயிர்களை மேய்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், ஒரு பசுமாடு உயிரிழந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை முதல் ஓசூர் வரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில், சுமார் 74 கிலோமீட்டர் தொலைவிற்கு கொச்சி முதல் பெங்களூரு வரை செல்லும் கெயில் எரிவாயு குழாய் அமைக்கும் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த குழாய்களில் அவ்வப்போது பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், பாலக்கோடு அருகே உள்ள ரெட்டியூர் கிராமப் பகுதியில் கெயில் குழாயை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது குழாயில் இருந்து வெளியேறிய ஆயில் கலந்த கழிவுநீர் அதிக அளவில் விவசாய நிலப்பகுதியில் விடப்பட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் விவசாய நிலத்தில் தேங்கியிருந்த தண்ணீரிலும், அப்பகுதியில் வளர்ந்திருந்த புல் மற்றும் பயிர்களிலும் நச்சுத்தன்மை கலந்ததாக கூறப்படுகிறது. இதனை அறியாமல் அப்பகுதியில் மேய்ச்சலுக்குச் சென்ற பசுமாடுகள், அந்த நிலத்தில் இருந்த புல் மற்றும் பயிர்களை மேய்ந்துள்ளன. இதையடுத்து ஐந்துக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு வாந்தி, சோர்வு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டு தொடர்ந்து உடல் நிலை மோசமடைந்த நிலையில், ஒரு பசுமாடு உயிரிழந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள விவசாயிகள், கெயில் குழாய் சுத்தம் செய்யும் பணியின்போது வெளியேற்றப்படும் கழிவுநீரை விவசாய நிலங்களிலும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் பயன்படுத்தும் பகுதிகளிலும் விடாமல், பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், உயிரிழந்த பசுமாட்டிற்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், பாதிக்கப்பட்டுள்ள மற்ற கால்நடைகளுக்கு உடனடியாக கால்நடை மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். கெயில் குழாய் சுத்தம் செய்யும் பணியின்போது வெளியேற்றப்பட்டதாக கூறப்படும் ஆயில் கலந்த கழிவுநீரால் விவசாய நிலமும், கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, கழிவுநீர் விவசாய நிலத்தில் கலந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
    1
    பாலக்கோடு அருகே கெயில் குழாயிலிருந்து வெளியேறிய நச்சுநீர் – விவசாய நிலத்தில் கலந்ததால் பசுமாடு உயிரிழப்பு
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கெயில் குழாயை சுத்தம் செய்யும் பணியின்போது ஆயில் கலந்த நச்சுநீர் விவசாய நிலத்தில் விடப்பட்டதால்  நச்சு நீர் கலந்த புல் மற்றும் பயிர்களை மேய்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், ஒரு பசுமாடு உயிரிழந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை முதல் ஓசூர் வரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில், சுமார் 74 கிலோமீட்டர் தொலைவிற்கு கொச்சி முதல் பெங்களூரு வரை செல்லும் கெயில் எரிவாயு குழாய் அமைக்கும் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த குழாய்களில் அவ்வப்போது பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், பாலக்கோடு அருகே உள்ள ரெட்டியூர் கிராமப் பகுதியில் கெயில் குழாயை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது குழாயில் இருந்து வெளியேறிய ஆயில் கலந்த கழிவுநீர் அதிக அளவில் விவசாய நிலப்பகுதியில் விடப்பட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால் விவசாய நிலத்தில் தேங்கியிருந்த தண்ணீரிலும், அப்பகுதியில் வளர்ந்திருந்த புல் மற்றும் பயிர்களிலும் நச்சுத்தன்மை கலந்ததாக கூறப்படுகிறது.
இதனை அறியாமல் அப்பகுதியில் மேய்ச்சலுக்குச் சென்ற பசுமாடுகள், அந்த நிலத்தில் இருந்த புல் மற்றும் பயிர்களை மேய்ந்துள்ளன.
இதையடுத்து ஐந்துக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு வாந்தி, சோர்வு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டு தொடர்ந்து உடல் நிலை மோசமடைந்த நிலையில், ஒரு பசுமாடு உயிரிழந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்துள்ள விவசாயிகள், கெயில் குழாய் சுத்தம் செய்யும் பணியின்போது வெளியேற்றப்படும் கழிவுநீரை விவசாய நிலங்களிலும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் பயன்படுத்தும் பகுதிகளிலும் விடாமல், பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், உயிரிழந்த பசுமாட்டிற்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், பாதிக்கப்பட்டுள்ள மற்ற கால்நடைகளுக்கு உடனடியாக கால்நடை மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கெயில் குழாய் சுத்தம் செய்யும் பணியின்போது வெளியேற்றப்பட்டதாக கூறப்படும் ஆயில் கலந்த கழிவுநீரால் விவசாய நிலமும், கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, கழிவுநீர் விவசாய நிலத்தில் கலந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
    user_SURENDIRAVARMA. C
    SURENDIRAVARMA. C
    Local News Reporter Palakkodu, Dharmapuri•
    3 hrs ago
  • பாலக்கோட்டில் கேப்டன் விஜயகாந்த் 74வது பிறந்தநாள் விழா பாலக்கோட்டில் கேப்டன் விஜயகாந்த் 74வது பிறந்தநாள் விழா தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில், தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் 74வது பிறந்தநாள் விழா கட்சி சார்பில் சிறப்பாக நடைபெற்றது. பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தேமுதிக தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் விஜயசங்கர் தலைமை வகித்தார். நகர செயலாளர் முருகன் வரவேற்றார். மாவட்ட இளைஞரணி செயலாளர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் ரத்தினம், மத்திய ஒன்றிய செயலாளர் முயற்சி முருகேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் ஞானவேல், தெற்கு ஒன்றிய செயலாளர் முனுசாமி, ஒன்றிய பொருளாளர் ரங்கன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். விழாவில், பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்தின் திருவுருவப் படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அவைத்தலைவர் கிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் இந்திராணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை கொண்டாடினர்.
    1
    பாலக்கோட்டில் கேப்டன் விஜயகாந்த் 74வது பிறந்தநாள் விழா
பாலக்கோட்டில் கேப்டன் விஜயகாந்த் 74வது பிறந்தநாள் விழா
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில், தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் 74வது பிறந்தநாள் விழா கட்சி சார்பில் சிறப்பாக நடைபெற்றது.
பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தேமுதிக தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் விஜயசங்கர் தலைமை வகித்தார். நகர செயலாளர் முருகன் வரவேற்றார்.
மாவட்ட இளைஞரணி செயலாளர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் ரத்தினம், மத்திய ஒன்றிய செயலாளர் முயற்சி முருகேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் ஞானவேல், தெற்கு ஒன்றிய செயலாளர் முனுசாமி, ஒன்றிய பொருளாளர் ரங்கன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்தின் திருவுருவப் படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அவைத்தலைவர் கிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் இந்திராணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை கொண்டாடினர்.
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • தருமபுரியில் கேப்டன் விஜயகாந்தின் 74வது பிறந்தநாள் விழா: கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கிய தேமுதிகவினர் தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் மறைந்த தேமுதிக தலைவர் மற்றும் கேப்டன் விஜயகாந்தின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தேமுதிக மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், விஜயகாந்தின் 74வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டது. பின்னர் கேக் துண்டுகள் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டன. விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவுகளை போற்றும் வகையிலும், பொதுமக்களுடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் தேமுதிக அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன், நகர செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். மேலும், 50-க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் பங்கேற்று கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி விஜயகாந்தின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினர்.
    1
    தருமபுரியில் கேப்டன் விஜயகாந்தின் 74வது பிறந்தநாள் விழா:  கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கிய தேமுதிகவினர்
தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் மறைந்த தேமுதிக தலைவர் மற்றும் கேப்டன் விஜயகாந்தின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தேமுதிக மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், விஜயகாந்தின் 74வது பிறந்தநாளை குறிக்கும் வகையில்  பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டது. பின்னர் கேக் துண்டுகள் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டன.
விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவுகளை போற்றும் வகையிலும், பொதுமக்களுடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் தேமுதிக அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன், நகர செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். மேலும், 50-க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் பங்கேற்று கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி விஜயகாந்தின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினர்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • தமிழ்நாடு மக்கள் இயக்கம் அனைத்து தொழிற்சங்கங்களில் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..! தமிழ்நாடு மக்கள் இயக்கம் அனைத்து தொழிற்சங்கங்களில் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..! தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மக்கள் இயக்கம் அனைத்து தொழிற்சங்கங்களில் சார்பில் மாணவர்கள் இளைஞர்கள் பெண்கள் தொழிலாளர்கள் விவசாயிகள் விவசாய தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும், ஜனநாயக உரிமைகள் மற்றும் ஜனநாயக நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும், வேலையின்மை மற்றும் ஒப்பந்த தொழிலாளர் சுரண்டல் வேண்டாம், நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு மக்கள் இயக்கம் தொழிற்சங்கங்களில் அனைத்து அமைப்பினர் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    1
    தமிழ்நாடு மக்கள் இயக்கம் அனைத்து தொழிற்சங்கங்களில் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!
தமிழ்நாடு மக்கள் இயக்கம் அனைத்து தொழிற்சங்கங்களில் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!
தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மக்கள் இயக்கம் அனைத்து தொழிற்சங்கங்களில் சார்பில் மாணவர்கள் இளைஞர்கள் பெண்கள் தொழிலாளர்கள் விவசாயிகள் விவசாய தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும், ஜனநாயக உரிமைகள் மற்றும் ஜனநாயக நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும், வேலையின்மை மற்றும் ஒப்பந்த தொழிலாளர் சுரண்டல் வேண்டாம், நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு மக்கள் இயக்கம் தொழிற்சங்கங்களில் அனைத்து அமைப்பினர் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    user_DPI EXPRESS NEWS
    DPI EXPRESS NEWS
    Psychologist Dharmapuri, Tamil Nadu•
    13 hrs ago
  • ஆலங்காயம் அருகில் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் பங்கேற்பு திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒன்றே குலம் தலைவர் சங்கீதா பாரி மற்றும் ஒன்றிய குழு துணை தலைவர் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பல்வேறு மன்ற உறுப்பினர்கள் தங்கள் பிரச்சினைகளை மன்றத்தில் எடுத்துரைத்தனர் இதில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு வருகின்றனர்.
    1
    ஆலங்காயம் அருகில் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் பங்கேற்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒன்றே குலம் தலைவர் சங்கீதா பாரி மற்றும் ஒன்றிய குழு துணை தலைவர் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பல்வேறு மன்ற உறுப்பினர்கள் தங்கள் பிரச்சினைகளை மன்றத்தில் எடுத்துரைத்தனர் இதில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு வருகின்றனர்.
    user_Gopi
    Gopi
    Local Politician வாணியம்பாடி, திருப்பத்தூர், தமிழ்நாடு•
    23 hrs ago
  • காவேரிப்பட்டணம்கிழக்கு ஒன்றிய தேமுதிக சார்பில்  தேமுதிக நிறுவனத் தலைவர் மறைந்தவிஜயகாந்தின் பிறந்த நாள்விழா காவேரிப்பட்டணம் பனந்தோப்பு அருகில்  கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய தேமுதிக செயலாளர் அதிரடி பிரபு தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது
    1
    காவேரிப்பட்டணம்கிழக்கு ஒன்றிய தேமுதிக சார்பில்  தேமுதிக நிறுவனத் தலைவர் மறைந்தவிஜயகாந்தின் பிறந்த நாள்விழா


காவேரிப்பட்டணம் பனந்தோப்பு அருகில்  கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய தேமுதிக செயலாளர் அதிரடி பிரபு தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • ஊத்தங்கரை அருகே அனுமதி பெறாத செங்கல் சூளை. லோடு ஏற்றும்போது செங்கல் சரிந்து விழுந்து ஒருவர் உயிரிலப்பு. ஊத்தங்கரை அருகே அனுமதி பெறாத செங்கல் சூளை. லோடு ஏற்றும்போது செங்கல் சரிந்து விழுந்து ஒருவர் பலி. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சென்னப்பநாய்க்கனூர் அருகே கலைஞர் நகரைச் சேர்ந்த நாகலிங்கம் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளை இயங்கி வருகிறது, இந்த செங்கல் சூளை அனுமதி பெறாமல் நடைபெறுவது மட்டுமின்றி இரவு நேரங்களில் சூளைக்கு தேவையான செம்மண்னை இரவு நேரங்களில் அனுமதியின்றி திருடுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை டிராக்டரில் செங்கல் லோடு ஏற்றிக்கொண்டிருக்கும் போது திப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் மீது செங்கல் சரிந்து விழுந்தது, அருகில் இருந்தவர் சேகரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஆனால் மருத்துவர் இறந்துவிட்டதாக தெரிவித்தாக கூறப்படுகிறது. இதுபோன்று ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதி பெறாத பாதுகாப்பின்றி செயல்படும் செங்கல் சூலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    ஊத்தங்கரை அருகே அனுமதி பெறாத செங்கல் சூளை.
லோடு ஏற்றும்போது செங்கல் சரிந்து விழுந்து ஒருவர் உயிரிலப்பு.
ஊத்தங்கரை அருகே அனுமதி பெறாத செங்கல் சூளை.
லோடு ஏற்றும்போது செங்கல் சரிந்து விழுந்து ஒருவர் பலி.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சென்னப்பநாய்க்கனூர் அருகே கலைஞர் நகரைச் சேர்ந்த நாகலிங்கம் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளை இயங்கி வருகிறது, இந்த செங்கல் சூளை அனுமதி பெறாமல் நடைபெறுவது மட்டுமின்றி இரவு நேரங்களில் சூளைக்கு தேவையான செம்மண்னை இரவு நேரங்களில் அனுமதியின்றி  திருடுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில்  செவ்வாய்க்கிழமை காலை டிராக்டரில் செங்கல் லோடு ஏற்றிக்கொண்டிருக்கும் போது திப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் மீது செங்கல் சரிந்து விழுந்தது, அருகில் இருந்தவர் சேகரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஆனால் மருத்துவர் இறந்துவிட்டதாக தெரிவித்தாக கூறப்படுகிறது. இதுபோன்று ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் 
அனுமதி பெறாத பாதுகாப்பின்றி செயல்படும் செங்கல் சூலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_செல்வம்
    செல்வம்
    பத்திரிகையாளர் Krishnagiri, Tamil Nadu•
    15 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.