நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் மெத்தனப் பூக்கள் போக்குவரத்து நெரிசல் பொதுமக்கள் மாணவர்கள் அவதி பெரியகுளம் தண்டுபாளையத்திலிருந்து ஆடு பாலம் வரை உள்ள கடைவீதி சாலையில் இருபுறங்களும் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்களை நிறுத்தி வைத்துள்ளதால் காலை மற்றும் மாலை நேரங்களில் அவளியாக செல்லும் பள்ளி வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது அதேபோல் ஆம்புலன்ஸ் செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது இதனால் இருபுறங்களும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி இருசக்கர வாகனங்கள் நிறுத்தாமல் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் தெரிவித்துள்ளனர் மேலும் தொடர்ந்து பெரியகுளம் பகுதியில் உள்ள காவல்துறையினர் முறையாக தங்கள் பணிகளை மேற்கொள்ளாமல் மெத்தனப்போக்கில் பணிகளை மேற்கொண்டு வருவதாலும் இது போன்ற காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி வாகனங்கள் செல்வதிலும் மற்றும் பள்ளியின் அருகே சட்டவிரோத செயல்களும் அதிக அளவில் நடைபெற்று வருவதை கண்டும் காணாமல் இருக்கும் பெரியகுளம் காவல்துறையினாரா பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்
நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் மெத்தனப் பூக்கள் போக்குவரத்து நெரிசல் பொதுமக்கள் மாணவர்கள் அவதி பெரியகுளம் தண்டுபாளையத்திலிருந்து ஆடு பாலம் வரை உள்ள கடைவீதி சாலையில் இருபுறங்களும் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்களை நிறுத்தி வைத்துள்ளதால் காலை மற்றும் மாலை நேரங்களில் அவளியாக செல்லும் பள்ளி வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது அதேபோல் ஆம்புலன்ஸ் செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது இதனால் இருபுறங்களும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி இருசக்கர வாகனங்கள் நிறுத்தாமல் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் தெரிவித்துள்ளனர் மேலும் தொடர்ந்து பெரியகுளம் பகுதியில் உள்ள காவல்துறையினர் முறையாக தங்கள் பணிகளை மேற்கொள்ளாமல் மெத்தனப்போக்கில் பணிகளை மேற்கொண்டு வருவதாலும் இது போன்ற காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி வாகனங்கள் செல்வதிலும் மற்றும் பள்ளியின் அருகே சட்டவிரோத செயல்களும் அதிக அளவில் நடைபெற்று வருவதை கண்டும் காணாமல் இருக்கும் பெரியகுளம் காவல்துறையினாரா பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்
- மகனை படுகொலை செய்த வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனையும் தாய்க்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பு. தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள செங்கல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அபிமன்னன் மனைவி ராஜா மணி தம்பதியருக்கு அஜித்குமார் (வயது 27) என்ற மகன் இருந்து வந்துள்ளார். அஜித் குமார் எந்த வேலைக்கும் போகாத நிலையில் நாள்தோறும் வீட்டிற்கு வந்து தாய் தந்தையுடன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், தந்தை இல்லாத நேரத்தில் தாயிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த தாய், தந்தை இருவரும் சேர்ந்து மகன் அஜித்குமாரை கயிற்றால் கழுத்தை இருக்கியதோடு அறிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர். இக்கொலை சம்பவம் தொடர்பாக வீரபாண்டி காவல் நிலையத்தில் தாய், தந்தை இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று வழக்கு விசாரணை முடிவு பெற்று மகனை கொலை செய்த குற்றத்திற்காக தாய், தந்தை இருவருக்கும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் முதல் குற்றவாளியான தந்தை அபிமன்னனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் மூன்று மாத கால சிறை தண்டனையும், இரண்டாவது குற்றவாளியான தாய் ராஜாமணிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்ததோடு பத்தாயிரம் ரூபாய் அபராதம், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாத கால சிறை தண்டனையும் விதித்ததோடு, தண்டனையை ஏக காலத்திற்கு அனுபவிக்க வேண்டும் என மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சொர்ணம் ஜே. நடராஜன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.1
- தேனி அருகே தாடிச்சேரியில் திமுக சார்பில் மாபெரும் கபடி போட்டி: தங்கம் தமிழ்செல்வன் எம்.பி தொடங்கி வைத்தார்! தேனி அருகே தாடிச்சேரியில் திமுகவின் தேனி வடக்கு மாவட்டம் தேனி வடக்கு ஒன்றியம் சார்பாக திராவிட பொங்கல் சமூக நீதிக்கான திருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது இந்த கபடி போட்டியில் தாடிச்சேரி, சிவலிங்க நாயக்கன்பட்டி ,கோட்டூர் சீலையம்பட்டி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கபடி அணியினர் பங்கேற்றனர்.இந்த விழாவின் இரண்டாம் நாள் கபடி போட்டியினை தேனி பாராளுமன்ற உறுப்பினரும் திமுகவின் தேனி வடக்கு மாவட்ட செயலாளருமாகிய தங்க தமிழ்ச்செல்வன் பங்கேற்று கபடி போட்டிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து விளையாடிய கபடி வீரர்கள் ஆடுகளத்தில் சிறப்பான முறையில் விளையாடினார்கள் இந்தப் போட்டியில் சிறப்பான முறையில் மூன்றாம் இடம் பிடித்த கபடி அணியினருக்கு ரூபாய் 15,000 மற்றும் சுழல் கோப்பையும் இரண்டாம் இடம் பிடித்த கபடி அணியினருக்கு 20,000 மற்றும் சுழல் கோப்பையும், முதல் இடம் பிடித்த கபடி அணியினருக்கு ரூபாய் 25000 மற்றும் சுழல் கோப்பையும் தேனி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சக்கரவர்த்தி வழங்கி சிறப்பித்தார்.மேலும் இந்த நிகழ்வில் தேனி வடக்கு ஒன்றிய விவசாய அமைப்பாளர் ரவி, கிளை செயலாளர்கள் தவசி, பாக்கியம், தேனி வடக்கு ஒன்றிய மீனவர் அணி அமைப்பாளர் போத்திராஜ் ,தேனி வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முருக ஜெகதீஸ் ,ஆதிதிராவிட நல குழு அணி அமைப்பாளர் பால்ராஜ் ,தேனி வடக்கு ஒன்றிய விளையாட்டு மேம்பட்டிய அணி துணை அமைப்பாளர் தமிழரசன் ,திமுக பிரதிநிதிகள் சூரத் தேவன், ராஜவேல் சுரேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள்,விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும் இந்த விழாவிற்கு வருகை புரிந்த பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு தேனீ வடக்கு ஒன்றியம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது1
- "ஆண்டிபட்டியார் இராஜஹரிகாந்த் மக்கள் முன்னேற்ற இயக்க"த்தின் நிறுவனர்/ தலைவர் இராஜஹரிகாந்த், ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தாமதப்படுத்தியதை கண்டித்து பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பார்கள் அதுபோல ஜனநாயகன் படத்திற்கு ஏற்பட்டிருக்க கூடிய அநீதி வன்மையாக கண்டிக்கத்தக்கது விஜய் என்ற ஒரு தனி நபர் மீது உள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அந்தப் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் தாமதப்படுத்துவது வந்து மிகப்பெரிய அநீதி கமலஹாசன் அவர்களும் நான் ஏற்றுக்கொண்ட எனது தலைவர் ஐயா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் இதுவரை இந்த தணிக்கை சான்றிதழ் விஷயமாகவோ ஜனநாயகம் படத்திற்கு ஏற்பட்டுள்ள தடை காரணமாக பேசாமல் மௌனமாக இருப்பது மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது என அவர் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.1
- பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை-திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.1
- நிலக்கோட்டை: பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை வரலாறு காணாத உயர்வு - மல்லிகை கிலோ ரூ.10000க்கு விற்பனை திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் தைப்பொங்கல் பண்டிகை, தை அமாவாசை, சுபமுகூர்த்த நாட்கள் வருவதையொட்டி மற்றும் பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைவால் மல்லிகை கிலோ ரூ.10,000, முல்லை ரூ.3000, ஜாதிப்பூ ரூ.2500க்கு, கனகாம்பரம் ரூ.2000 என அனைத்து பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து விற்பனையாகி வருகிறது விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்1
- கரூர் மாவட்ட திமுக செயலாளர் வி. செந்தில் பாலாஜி ஆணைக்கிணங்க, நாளை மறுநாள்(11/01/29) நடைபெறும் திமுக திராவிட பொங்கல் சமத்துவ விளையாட்டு போட்டி நடைபெறும் இடமான தமிழ் நகரில் விளையாட்டு மைதானத்தை இன்று தாந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கர் தலைமையில் பணியாட்கள் மற்றும் பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.1
- சிவகங்கை மாவட்டத்தில், மானாமதுரை ரயில்வே காலனி நியாயவிலை கடையில், தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு அரசு வழங்கும் பொங்கல் தொகுப்புகள் நேற்று (08.01.2026) பொதுமக்களிடம் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் 2026 ஆம் ஆண்டு துணைப் பதிவாளர் தினேஷ்குமார் பொங்கல் தொகுப்புகளை வழங்கினார். உடன் விற்பனையாளர் கோபாலகிருஷ்ணன் இருந்தார்.1
- விஜய் நடித்து வெளியாகி உள்ள ஜனநாயகம் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் பெரியகுளம் பவளம் தியேட்டர் முன்பு விஜய் கட் அவுட் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டுள்ளனர்1