logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

சின்ன மணல்மேடு பகுதியில் நடைபெற்ற தீமிதி திருவிழா அமைதியாக கண்டுகளித்த பொதுமக்கள் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே அமைந்துள்ள சின்ன மணல்மேடு பகுதியில் எழுந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் 20 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன

19 hrs ago
user_தாமோதரன் மாவட்ட செய்தியாள
தாமோதரன் மாவட்ட செய்தியாள
காட்டுமன்னார்கோயில், கடலூர், தமிழ்நாடு•
19 hrs ago

சின்ன மணல்மேடு பகுதியில் நடைபெற்ற தீமிதி திருவிழா அமைதியாக கண்டுகளித்த பொதுமக்கள் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே அமைந்துள்ள சின்ன மணல்மேடு பகுதியில் எழுந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் 20 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன

More news from தமிழ்நாடு and nearby areas
  • கும்பகோணத்தில் திடீரென மழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி தஞ்சை மாவட்ட கும்பகோணத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வெயிலின் கொடுமை அதிகளவு தாக்கி வருவதால் பகல் நேரங்களில் அனல் காற்றுடன் வீசுவது பொதுமக்கள் குழந்தைகள் கடும் அவதி அடைந்தனர் இந்த நிலையில் இன்று மாலை நான்கு மணி அளவில் மேகமூட்டத்துடன் குளிர் காற்று வீச தொடங்கியது அதனைத் தொடர்ந்து ஒரு அரை மணி நேரத்திற்கு மேலாக நல்ல மழை பெய்தது இதனால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மலை வெள்ளத்தால் மற்றும் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் குழந்தைகள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர்
    1
    கும்பகோணத்தில் திடீரென மழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி

தஞ்சை மாவட்ட கும்பகோணத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வெயிலின் கொடுமை அதிகளவு தாக்கி வருவதால் பகல் நேரங்களில் அனல் காற்றுடன் வீசுவது பொதுமக்கள் குழந்தைகள் கடும் அவதி அடைந்தனர் இந்த நிலையில் இன்று மாலை நான்கு மணி அளவில் மேகமூட்டத்துடன் குளிர் காற்று வீச தொடங்கியது அதனைத் தொடர்ந்து ஒரு அரை மணி நேரத்திற்கு மேலாக நல்ல மழை பெய்தது இதனால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மலை வெள்ளத்தால் மற்றும் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் குழந்தைகள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர்
    user_A. Mathankumar
    A. Mathankumar
    Local News Reporter கும்பகோணம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    3 hrs ago
  • திருக்குவளை பேருந்து நிலையம் அருகே பராமரிப்பு இன்று இருக்கும் கழிவறை கட்டிடம் பயணிகள் பொதுமக்கள் அவதி நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை ஊராட்சியில் பேருந்து நிலையம் அருகே உள்ள கழிப்பறை கட்டிடம் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது இதனால் பயணிகள் மற்றும் கழிப்பறை உபயோகிப்பவர்கள் நோய் தொற்று பரவ வாய்ப்புள்ளது அது மட்டுமின்றி கழிப்பறை உடைந்துள்ள நிலையில் கால்களில் குத்து அபாயம் உள்ளது இதனை உடனே சரி செய்ய வேண்டுமென நாகை மாவட்ட ஆட்சியருக்கு சமூக ஆர்வலர்கள், பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
    1
    திருக்குவளை பேருந்து நிலையம் அருகே பராமரிப்பு இன்று இருக்கும் கழிவறை கட்டிடம் பயணிகள் பொதுமக்கள் அவதி  
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை ஊராட்சியில் பேருந்து நிலையம் அருகே உள்ள கழிப்பறை கட்டிடம் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது இதனால் பயணிகள் மற்றும் கழிப்பறை உபயோகிப்பவர்கள் நோய் தொற்று பரவ வாய்ப்புள்ளது அது மட்டுமின்றி கழிப்பறை உடைந்துள்ள நிலையில் கால்களில் குத்து அபாயம் உள்ளது இதனை உடனே சரி செய்ய வேண்டுமென நாகை மாவட்ட ஆட்சியருக்கு சமூக ஆர்வலர்கள், பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
    user_Mahendran
    Mahendran
    திருக்குவளை, நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    15 hrs ago
  • திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு; வறட்சி நிவாரணம் மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க கோரிக்கை! எல்நினோ தாக்கம் காரணமாக திருச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியை எதிர்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு விவசாய சங்க மாநிலப் பொருளாளர் அயிலை சிவசூரியன் தலைமையில், விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நேரில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் வறண்டு பாலைவனம் போல் காட்சியளிப்பதால், காவிரி கிளை கால்வாய்களிலுள்ள குறுவை சாகுபடிப் பயிர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. வறட்சி பாதிப்புகளை ஆய்வு செய்ய தனி குழுக்கள் அமைத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய அரசு இழப்பீடு வழங்க வேண்டும். சம்பா சாகுபடியை தொடங்க முடியுமா என்ற அச்சத்தில் உள்ள விவசாயிகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும். வாழை, கரும்பு, வெற்றிலை கொடிக்கால், மலர் செடிகள் மற்றும் கோரை உள்ளிட்ட ஆண்டுப் பயிர்களையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை தேவை. திருச்சி மாநகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் குடிநீர் தேவையை உடனடி நிவர்த்தி செய்யும் வகையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். புதிய வேலைவாய்ப்புத் திட்ட விதிமுறைகளால் கிராமப்புறங்களில் 10 முதல் 15 தொழிலாளர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுவதால், பெரும்பாலான கூலித் தொழிலாளர் குடும்பங்கள் வருமானமின்றி சிரமப்பட்டு வருகின்றன. எனவே, அட்டை வைத்துள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயக் கூலித் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10,000 அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும். கடும் வறட்சியால் பசுந்தீவனம் கிடைப்பது அரிதாகி, கால்நடைகளுக்குத் தீவனத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, கால்நடைகளைப் பாதுகாக்க அரசு குறைந்த விலையில் தீவனங்களை வழங்க வேண்டும். வரவிருக்கும் வடகிழக்க பருவமழை காலத்தில் கிடைக்கும் மழைநீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தவிர்க்க வேண்டும். இதற்காக, மாவட்டத்திலுள்ள அனைத்து ஏரி, குளங்களைத் தூர்வாரி ஆழப்படுத்துவதுடன், வரத்து மற்றும் வடிகால் கால்வாய்களைச் சீரமைக்கும் பணிகளை முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும். கடுமையான வறட்சியை எதிர்கொள்ளும் வகையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் பங்கேற்கும் சிறப்பு ஆய்வுக் கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
    1
    திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு; வறட்சி நிவாரணம் மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க கோரிக்கை!
எல்நினோ தாக்கம் காரணமாக திருச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியை எதிர்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு விவசாய சங்க மாநிலப் பொருளாளர் அயிலை சிவசூரியன் தலைமையில், விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நேரில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் வறண்டு பாலைவனம் போல் காட்சியளிப்பதால், காவிரி கிளை கால்வாய்களிலுள்ள குறுவை சாகுபடிப் பயிர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. வறட்சி பாதிப்புகளை ஆய்வு செய்ய தனி குழுக்கள் அமைத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய அரசு இழப்பீடு வழங்க வேண்டும். 
சம்பா சாகுபடியை தொடங்க முடியுமா என்ற அச்சத்தில் உள்ள விவசாயிகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும். வாழை, கரும்பு, வெற்றிலை கொடிக்கால், மலர் செடிகள் மற்றும் கோரை உள்ளிட்ட ஆண்டுப் பயிர்களையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை தேவை.
திருச்சி மாநகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  பொதுமக்களின் குடிநீர் தேவையை உடனடி நிவர்த்தி செய்யும் வகையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
புதிய வேலைவாய்ப்புத் திட்ட விதிமுறைகளால் கிராமப்புறங்களில் 10 முதல் 15 தொழிலாளர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுவதால், பெரும்பாலான கூலித் தொழிலாளர் குடும்பங்கள் வருமானமின்றி சிரமப்பட்டு வருகின்றன. எனவே, அட்டை வைத்துள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயக் கூலித் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10,000 அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும்.
கடும் வறட்சியால் பசுந்தீவனம் கிடைப்பது அரிதாகி, கால்நடைகளுக்குத் தீவனத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, கால்நடைகளைப் பாதுகாக்க அரசு குறைந்த விலையில் தீவனங்களை வழங்க வேண்டும்.
வரவிருக்கும் வடகிழக்க பருவமழை காலத்தில் கிடைக்கும் மழைநீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தவிர்க்க வேண்டும். இதற்காக, மாவட்டத்திலுள்ள அனைத்து ஏரி, குளங்களைத் தூர்வாரி ஆழப்படுத்துவதுடன், வரத்து மற்றும் வடிகால் கால்வாய்களைச் சீரமைக்கும் பணிகளை முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும்.
கடுமையான வறட்சியை எதிர்கொள்ளும் வகையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் பங்கேற்கும் சிறப்பு ஆய்வுக் கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
    user_Msd
    Msd
    திருச்சிராப்பள்ளி கிழக்கு, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • திருமயம் மலைக்கோட்டை முன்பு அடைந்திருக்கும் ஸ்ரீ பிடாரி அம்மன் கோவிலில் 22 ஆம் ஆண்டு ஆடி திருவிழா புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மலைக்கோட்டை முன்பு அடைந்திருக்கும் ஸ்ரீ பிடாரி அம்மன் கோவிலில் 22 ஆம் ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு,பிடாரி அம்மனுக்கு யாகசாலை பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் தீபாதாரணையும் நடைபெற்றது.இதில் திருமயம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிடாரியம்மனை வழிபாடு செய்தனர்.தொடர்ந்து கோவில் வளாகத்தின் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது
    1
    திருமயம் மலைக்கோட்டை முன்பு அடைந்திருக்கும் ஸ்ரீ பிடாரி அம்மன் கோவிலில் 22 ஆம் ஆண்டு ஆடி திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மலைக்கோட்டை முன்பு அடைந்திருக்கும் ஸ்ரீ பிடாரி அம்மன் கோவிலில் 22 ஆம் ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு,பிடாரி அம்மனுக்கு யாகசாலை பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் தீபாதாரணையும் நடைபெற்றது.இதில் திருமயம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிடாரியம்மனை வழிபாடு செய்தனர்.தொடர்ந்து கோவில் வளாகத்தின் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது
    user_Mayilvaganan
    Mayilvaganan
    திருமயம், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    12 hrs ago
  • திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க் தலைமையில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் வீட்டுமனைப் பட்டா வேண்டி மாற்றுத்திறனாளிகள் அளித்த மனுவின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகளை வழங்கினார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க் தலைமையில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் வீட்டுமனைப் பட்டா வேண்டி மாற்றுத்திறனாளிகள் அளித்த மனுவின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகளை வழங்கினார்.
    1
    திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க் தலைமையில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் வீட்டுமனைப் பட்டா வேண்டி மாற்றுத்திறனாளிகள் அளித்த மனுவின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகளை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க் தலைமையில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் வீட்டுமனைப் பட்டா வேண்டி மாற்றுத்திறனாளிகள் அளித்த மனுவின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகளை வழங்கினார்.
    user_Agarva manickam
    Agarva manickam
    போளூர், திருவண்ணாமலை, தமிழ்நாடு•
    19 hrs ago
  • சேலம் செந்தாரப்பட்டி பேரூராட்சியில் உள்ள மதுபான கடை அகற்ற வேண்டி போராட்டம் சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகாவிற்கு உட்பட்ட செந்தாரப்பட்டி பேரூராட்சியில் ஒன்னாவது வார்டு பகுதியில் அரசு மதுபானம் கடை இயங்கி வருகிறது இந்த மதுபான கடையை பொதுமக்களுக்கு இடைஞ்சலாக உள்ளதால் உடனடியாக மதுபான கடை அகற்ற வேண்டும் என போராட்டம் நடைபெற்றது இதனை அடுத்து அதிகாரிகள் ஒரு மாதம் அவகாசம் கேட்டதனால் போராட்டம் கைவிடப்பட்டது.
    1
    சேலம் செந்தாரப்பட்டி பேரூராட்சியில் உள்ள மதுபான கடை அகற்ற வேண்டி போராட்டம் 
சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகாவிற்கு உட்பட்ட செந்தாரப்பட்டி பேரூராட்சியில் ஒன்னாவது வார்டு பகுதியில் அரசு மதுபானம் கடை இயங்கி வருகிறது இந்த மதுபான கடையை பொதுமக்களுக்கு இடைஞ்சலாக உள்ளதால் உடனடியாக மதுபான கடை அகற்ற வேண்டும் என போராட்டம் நடைபெற்றது இதனை அடுத்து அதிகாரிகள் ஒரு மாதம் அவகாசம் கேட்டதனால் போராட்டம் கைவிடப்பட்டது.
    user_Selva
    Selva
    ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    18 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.