ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இதுவரை 4 லட்சத்து 97ஆயிரத்து 743 வீடுகளில் விபரங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இதுவரை 4 லட்சத்து 97ஆயிரத்து 743 வீடுகளில் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. அலுவலர்கள் இதுவரை வராமல் இருப்பது உள்ளிட்ட குறைகளை தெரிவிக்க நகராட்சி, பேரூராட்சி, தாலுகா வாரியாக 20 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஆக.,1 முதல் 30 வரை டிஜிட்டல் முறையில் நடக்கிறது. 2150 கணக்கெடுப்பாளர்கள், 437 மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அடையாள அட்டையுடன் வீடுகள் தோறும் நேரில் சென்று வீட்டு அமைப்பு குடும்ப உறுப்பினர்கள் அடிப்பை வசதிகள் உள்ளிட்ட விபரங்களை சேகரிக்கின்றனர். இதுவரை 4 லட்சத்து 97ஆயிரத்து 743 வீடுகளில் வசிக்கும் 13 லட்சத்து 33 ஆயிரத்து 713 பேரின் விபரங்கள் டிஜிட்டல்முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இப்பணியை கண்காணிக்கும் வகையில் ஒவ்வொரு பொறுப்பு அலுவலகத்திற்கும் கண்காணிப்பு அலுவலர், கணிப்பாய்வு அலுவலர், பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கலெக்டர் சிவகுரு பிரபாகரன், கூடுதல் கலெக்டர் திவ்யான் ஷீநிகம், மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன் தலைமையில் தினமும் காணொலி ஆய்வுக் கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து கலெக்டர் கூறியிருப்பதாவது: பொதுமக்கள் எவ்வித தயக்கமின்றி கணக்கெடுப்பு அலுவலர்களிடம் தங்களது வீடு குடும்ப உறுப்பினர்கள், அடிப்படை வசதிகள் குறித்த சரியான தகவல்களை வழங்க வேண்டும். எதிர்காலத் திட்டமிடல் கொள்கை வகுப்பு நலத்திட்டங்களை உருவாக்குதல் மற்றும் மாவட்டத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தல் உள்ளிட்டவற்றுக்கு இக்கணக்கெடுப்பு தரவுகள் முக்கிய ஆதாரமாக அமையும். இப்பணி தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்கள் அளிக்க கலெக்டர் அலுவலகம், 20 பொறுப்பு அலுவலகங்களிலும் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு, மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர்கள் இதுவரை வராமல் இருப்பது தெரிய வந்தால் உதவி மைய அலைபேசி எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றார்.

- திருவாடானையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை ஏற்பட்டது மக்கள் மகிழ்ச்சி ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தாங்க முடியாத வெப்பம் மற்றும் புழுக்கத்தால் மக்கள் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டனர். வெளியில் செல்ல முடியாமல், அன்றாடப் பணிகளைச் செய்வதிலும் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். மேலும் இரவு நேரங்களில் வெட்கை அதிக அளவில் இருந்தது இந்த நிலையில், தற்போது அரை மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வருகிறது. வெப்பத்தின் தாக்கமும் குறைந்தது இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து, மழையை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.1
- கொல்லங்குடியில் கோவில் திருவிழா முன்னிட்டு களைகட்டிய மாட்டு வண்டி பந்தயம், சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடியில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கொல்லங்குடியில் இருந்து முதல் வலையம்பட்டி வரை நடைபெற்ற இந்தப் போட்டி, பெரிய மாடு மற்றும் சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 38 ஜோடி மாடுகள் பங்கேற்றன. மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 7 கிலோமீட்டர் பந்தய எல்லையாக நிர்ணயிக்கப்பட்ட பெரிய மாடு பிரிவில் 11 ஜோடிகளும், 5 கிலோமீட்டர் பந்தய எல்லையாக நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 27 ஜோடிகளும் கலந்து கொண்டு சீறிப் பாய்ந்தன. பந்தயத்தில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாடுகளின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அழகாபுரி, மேப்பல், நரிக்கோட்டை, காளையார்கோவில், விட்டனேரி, கொல்லங்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று, ஆர்வத்துடன் மாட்டு வண்டி பந்தயத்தை கண்டுகளித்தனர்.1
- காரியாபட்டி பகுதிகளில் தீவிர வாகன சோதனை – 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்; ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்துத் துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். விருதுநகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மாணிக்கம் மற்றும் காரியாபட்டி காவல் சார்பு ஆய்வாளர் வீரணன் தலைமையில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் காரியாபட்டி பகுதிகளில் முக்கிய சாலைகள் மற்றும் வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது வாகனங்களின் RC, FC, காப்பீடு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது முறையான ஆவணங்கள் இன்றியும், போக்குவரத்து விதிமுறைகளை மீறியும் இயக்கப்பட்ட செப்டிக் டேங்க் வாகனம், தண்ணீர் வாகனம், டாடா ஏசி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து விதிமுறைகளை மீறிய வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து காரியாபட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், விதிமீறல் செய்த வாகனங்களுக்கு சுமார் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களுக்கான அனைத்து ஆவணங்களையும் முறையாக வைத்திருப்பதுடன், செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்துடன் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். மேலும், சாலை பாதுகாப்பை கருத்தில் கொண்டு காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து வாகன சோதனைகள் நடத்தப்படும் என்றும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர். தீவிர வாகன சோதனை காரணமாக காரியாபட்டி பகுதியில் வாகன ஓட்டிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.1
- சாத்தூர் அருகே கிணற்றுக்குள் விழுந்த புள்ளி மானை மீட்ட தீயணைப்புத் துறையினர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னத்தம்பியாபுரம் கிராமத்தில் அருகே உள்ள காட்டு பகுதியில் புள்ளி மான்கள் இருக்கின்றன இந்த நிலையில் ஆண் புள்ளிமான் ஒன்று காட்டுப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த நிலையில் புள்ளி மானை தெரு நாய்கள் விரட்டியதில் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள கிணற்றுக்குள் புள்ளிமான் தவறி விழுந்து உள்ளது. இந்த நிலையில் புள்ளிமான் கிணற்றுக்குள் தவறி விழுந்ததை பார்த்த பொதுமக்கள் சாத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் விழுந்த புள்ளி மானை போராடி மீட்டனர். மேலும் கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட புள்ளி மானை தீயணைப்பு துறை துறையினர் மீண்டும் காட்டுப் பகுதியில் விட்டனர்.1
- குப்பைத் தொட்டியைப் பயன் படுத்தாத மக்கள் மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் வெள்ளலூர் ஊராட்ச்சியைச் சேர்ந்த கட்டைச் சோலைப்பட்டி என்ற கிராமத்தில் குப்பைத்தொட்டி இருந்தும் அதைப் பயன் படுத்தாமல் அந்த கிராம மக்கள் குப்பைத் தொட்டி அருகிழே யே குப்பையை கொட்டு கின்றனர்1
- புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் பெரிய அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாபெரும் குதிரை வண்டி பந்தயம் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் பெரிய அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா இரண்டாம் ஆண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 21 ஜோடி குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. இறுதியில் வெற்றி பெற்ற குதிரை வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்க பணம் மற்றும் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது.1
- தேவகோட்டை தேனம்மை ஊரணி ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் கோயிலில் ஆவணி மாத உற்சவ திருவிழா, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தேனம்மை ஊரணி ஸ்ரீ தர்ம முனீஸ்வரர், மகா காளியம்மன் கோயிலில் 61 ஆம் ஆண்டு ஆவணி மாத உற்சவ பெருவிழா நடைபெற்று வருகிறது. 6ம் நாள் விழாவான செவ்வாய்க்கிழமை நேற்று இரவு பூச் சொரிதல் மற்றும் சாமி திருவீதி உலா நடைபெற்றது.. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ அம்மையப்பரின் அறக்கட்டளையின் சார்பாக நிறுவனர் ராகவா வாசுதேவன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் 300 க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் அம்மையப்பர் அறக்கட்டளையின் செயலாளர் முத்துக்குமார், உறுப்பினர்கள் நேசமணி, விமல், மணி, மற்றும் திருக்கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- फ़िरोज़ाबाद में बंजारा समाज पर धारदार हथियारों से हमला, बाल-बाल बची जान पीड़ितों ने थाना एका में दी तहरीर कार्रवाई की मांग फ़िरोज़ाबाद जनपद के एका थाना एका थाना के क्षेत्र के हरी सिंह पुर गाँव में बंजारा समाज की महिलाओं एवं लोगों पर दबंगों द्वारा धारदार हथियारों से जानलेवा हमला करने का मामला सामने आया है जहां बंजारा समाज को दबाने वाली बात सामने आयी है घटना का एक वीडियो भी सोशल मीडिया पर वायरल हो रहा है, जिसमें महिलाएं और बच्चे सड़क पर भागते हुए दिखाई दे रहे हैं पीड़ितों के अनुसार दिनांक 22 अगस्त 2026 को दोपहर के समय गाँव के ही कुछ लोग लाठी-डंडा और धारदार हथियार लेकर उनके घरों पर आ गए और गाली-गलौज करते हुए हमला कर दिया अचानक हुए इस हमले से पूरे गाँव में अफरा-तफरी मच गई। महिलाओं और बच्चों ने भाग कर किसी तरह अपनी जान बचाई पीड़ित गांव वालो का आरोप है कि वे गरीब बंजारा समाज से हैं इसलिए उन्हें आए दिन डराया-धमकाया जाता है। इस घटना के बाद से पूरा समाज दहशत में है ग्रामीणों ने बताया कि बड़ी मुश्किल से उन लोगों ने कर मामला शांत कराया गया इस संबंध में पीड़ित गाँव के लोगों ने थाना एका पुलिस को लिखित तहरीर दी है और आरोपियों के खिलाफ सख्त कार्रवाई व सुरक्षा की मांग की है लिखे हुए आरोपी बार बार गांव पर चढ़ाई करते हुए जान से मारने की धमकी दे रहे हैं पुलिस द्वारा मामले की जांच ही नहीं की जा रही है। थाना प्रभारी एका से बात करने पर बताया कि तहरीर मिलने पर जाँच कर उचित कार्रवाई की जाएगी2