Shuru
Apke Nagar Ki App…
தேவகோட்டை தேனம்மை ஊரணி ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் கோயிலில் ஆவணி மாத உற்சவ திருவிழா, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தேனம்மை ஊரணி ஸ்ரீ தர்ம முனீஸ்வரர், மகா காளியம்மன் கோயிலில் 61 ஆம் ஆண்டு ஆவணி மாத உற்சவ பெருவிழா நடைபெற்று வருகிறது. 6ம் நாள் விழாவான செவ்வாய்க்கிழமை நேற்று இரவு பூச் சொரிதல் மற்றும் சாமி திருவீதி உலா நடைபெற்றது.. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ அம்மையப்பரின் அறக்கட்டளையின் சார்பாக நிறுவனர் ராகவா வாசுதேவன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் 300 க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் அம்மையப்பர் அறக்கட்டளையின் செயலாளர் முத்துக்குமார், உறுப்பினர்கள் நேசமணி, விமல், மணி, மற்றும் திருக்கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Devakottaigani news
தேவகோட்டை தேனம்மை ஊரணி ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் கோயிலில் ஆவணி மாத உற்சவ திருவிழா, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தேனம்மை ஊரணி ஸ்ரீ தர்ம முனீஸ்வரர், மகா காளியம்மன் கோயிலில் 61 ஆம் ஆண்டு ஆவணி மாத உற்சவ பெருவிழா நடைபெற்று வருகிறது. 6ம் நாள் விழாவான செவ்வாய்க்கிழமை நேற்று இரவு பூச் சொரிதல் மற்றும் சாமி திருவீதி உலா நடைபெற்றது.. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ அம்மையப்பரின் அறக்கட்டளையின் சார்பாக நிறுவனர் ராகவா வாசுதேவன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் 300 க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் அம்மையப்பர் அறக்கட்டளையின் செயலாளர் முத்துக்குமார், உறுப்பினர்கள் நேசமணி, விமல், மணி, மற்றும் திருக்கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- கொல்லங்குடியில் கோவில் திருவிழா முன்னிட்டு களைகட்டிய மாட்டு வண்டி பந்தயம், சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடியில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கொல்லங்குடியில் இருந்து முதல் வலையம்பட்டி வரை நடைபெற்ற இந்தப் போட்டி, பெரிய மாடு மற்றும் சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 38 ஜோடி மாடுகள் பங்கேற்றன. மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 7 கிலோமீட்டர் பந்தய எல்லையாக நிர்ணயிக்கப்பட்ட பெரிய மாடு பிரிவில் 11 ஜோடிகளும், 5 கிலோமீட்டர் பந்தய எல்லையாக நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 27 ஜோடிகளும் கலந்து கொண்டு சீறிப் பாய்ந்தன. பந்தயத்தில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாடுகளின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அழகாபுரி, மேப்பல், நரிக்கோட்டை, காளையார்கோவில், விட்டனேரி, கொல்லங்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று, ஆர்வத்துடன் மாட்டு வண்டி பந்தயத்தை கண்டுகளித்தனர்.1
- டாஸ்மாக் கடைகள் விடுமுறை: மதுபான கடைகளில் குவிந்த மது பிரியர்கள். தமிழகத்தில் மிலாடி நபியை முன்னிட்டு நாளை (ஆக.26) டாஸ்மார்க் கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டு கடைகள் அடைக்கப்படும் என்று தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து இன்று (ஆக.25) இரவில் மதுரை நகரில் பல்வேறு பகுதிகளில் டாஸ்மார்க் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பல டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று தங்களுக்கு வேண்டிய மது பாட்டில்களை வாங்கி சென்றார்கள்.1
- புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் பெரிய அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாபெரும் குதிரை வண்டி பந்தயம் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் பெரிய அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா இரண்டாம் ஆண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 21 ஜோடி குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. இறுதியில் வெற்றி பெற்ற குதிரை வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்க பணம் மற்றும் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது.1
- அடையாள அட்டை வாங்க ஒரே நேரத்தில் குவிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்ததால் வட்டார வளர்ச்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது புதுக்கோட்டை. விதவை அடையாள அட்டை வாங்க ஒரே நேரத்தில் குவிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்ததால் வட்டார வளர்ச்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது புதுக்கோட்டை திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறையில் விதவைகளுக்கு உதவித்தொகை வழங்க விண்ணப்பம் பெறப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அடையாள அட்டை இருந்தால்தான் தமிழக அரசின் உதவித்தொகை வழங்கப்படும் மற்றும் அரசின் உதவிகளை பெறுவதற்கு அடையாள அட்டை கட்டாயம் என்று வதந்தி பரவியதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குவிந்து விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர் தமிழக முதல்வரின் வெற்றி பயணம் திட்டத்திற்கு 60 வயதுக்குட்பட்ட விதவைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் அந்த அட்டையால் அவர்களுக்கு உதவித்தொகை மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்படும் என்ற அறிவிப்பால் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மனு கொடுக்க வந்திருந்தனர் இந்நிலையில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களும் விண்ணப்பங்கள் வழங்க வருகை தந்ததால் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பெரிதும் பரபரப்பாக காணப்பட்டது1
- RR AARI WORK, Aari Work, Aari Embroidery, Aari Blouse, RR AARI WORK1
- தேவகோட்டை தேனம்மை ஊரணி ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் கோயிலில் ஆவணி மாத உற்சவ திருவிழா, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தேனம்மை ஊரணி ஸ்ரீ தர்ம முனீஸ்வரர், மகா காளியம்மன் கோயிலில் 61 ஆம் ஆண்டு ஆவணி மாத உற்சவ பெருவிழா நடைபெற்று வருகிறது. 6ம் நாள் விழாவான செவ்வாய்க்கிழமை நேற்று இரவு பூச் சொரிதல் மற்றும் சாமி திருவீதி உலா நடைபெற்றது.. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ அம்மையப்பரின் அறக்கட்டளையின் சார்பாக நிறுவனர் ராகவா வாசுதேவன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் 300 க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் அம்மையப்பர் அறக்கட்டளையின் செயலாளர் முத்துக்குமார், உறுப்பினர்கள் நேசமணி, விமல், மணி, மற்றும் திருக்கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- फ़िरोज़ाबाद में बंजारा समाज पर धारदार हथियारों से हमला, बाल-बाल बची जान पीड़ितों ने थाना एका में दी तहरीर कार्रवाई की मांग फ़िरोज़ाबाद जनपद के एका थाना एका थाना के क्षेत्र के हरी सिंह पुर गाँव में बंजारा समाज की महिलाओं एवं लोगों पर दबंगों द्वारा धारदार हथियारों से जानलेवा हमला करने का मामला सामने आया है जहां बंजारा समाज को दबाने वाली बात सामने आयी है घटना का एक वीडियो भी सोशल मीडिया पर वायरल हो रहा है, जिसमें महिलाएं और बच्चे सड़क पर भागते हुए दिखाई दे रहे हैं पीड़ितों के अनुसार दिनांक 22 अगस्त 2026 को दोपहर के समय गाँव के ही कुछ लोग लाठी-डंडा और धारदार हथियार लेकर उनके घरों पर आ गए और गाली-गलौज करते हुए हमला कर दिया अचानक हुए इस हमले से पूरे गाँव में अफरा-तफरी मच गई। महिलाओं और बच्चों ने भाग कर किसी तरह अपनी जान बचाई पीड़ित गांव वालो का आरोप है कि वे गरीब बंजारा समाज से हैं इसलिए उन्हें आए दिन डराया-धमकाया जाता है। इस घटना के बाद से पूरा समाज दहशत में है ग्रामीणों ने बताया कि बड़ी मुश्किल से उन लोगों ने कर मामला शांत कराया गया इस संबंध में पीड़ित गाँव के लोगों ने थाना एका पुलिस को लिखित तहरीर दी है और आरोपियों के खिलाफ सख्त कार्रवाई व सुरक्षा की मांग की है लिखे हुए आरोपी बार बार गांव पर चढ़ाई करते हुए जान से मारने की धमकी दे रहे हैं पुलिस द्वारा मामले की जांच ही नहीं की जा रही है। थाना प्रभारी एका से बात करने पर बताया कि तहरीर मिलने पर जाँच कर उचित कार्रवाई की जाएगी2
- விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீடு புகுந்து தந்தை மகனை வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.... ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட பிரிவை சேர்ந்தோர் வீடு புகுந்து வெட்டிய கும்பல் வசிக்கும் பகுதிக்குச் சென்று 15 இருசக்கர வாகனங்கள் 3 ஆட்டோக்களை அடித்து நொறுக்கியதால் பதட்டம்... போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரம் கிராமம், மங்கம்மாள் கோயில் தெருவை சேர்ந்த கணேச பாண்டி (49), மற்றும் அவரது மகன் கௌதம் (20) இருவரும் நேற்று நள்ளிரவு வழக்கம் போல் வீட்டில் தூக்கிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அருகில் வசிக்கும் மற்றொரு பிரிவை சேர்ந்த ஒரு கும்பல் வீடு புகுந்து தந்தை கணேச பாண்டி மற்றும் மகன் கௌதமை வெட்டி விட்டு தப்பி ஓடி உள்ளனர். இதில் இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை கண்டு ஆத்திரமடைந்த கணேசபாண்டி மற்றும் அவரது உறவினர் தரப்பைச் சேர்ந்த ஒரு பிரிவினர் வீடு புகுந்து அறிவாளால் வெட்டிய கும்பல் வசித்த பகுதிக்கு சென்று அங்கிருந்த 15 ற்கும் இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 ஆட்டோக்களை அடித்து நொறுக்கினர். இதனால் இப்பகுதியில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படும் பதட்டமான சூழல் நிலவுவதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் திருமண ஊர்வலம் நடந்த போது இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டு சமாதான கூட்டம் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்ட நிலையில், அதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.1