Shuru
Apke Nagar Ki App…
RAJESH RAjesh
More news from Tamil Nadu and nearby areas
- நாகப்பட்டினம் மாவட்டம் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாகை தொகுதிக்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாத்திமா பர்கானா போட்டி இடுவதை சிக்கல் அருள்மிகு சிங்கார வேலர் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்து விட்டு நாகை கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதால் மேளதாளம் முழங்க புறப்பட்டார். நாம் தமிழர் கட்சி உறுப்பினர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.3
- நாகப்பட்டினம் சட்ட மன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் விஜயராகவன் வேட்பு மனு தாக்கல் நாகப்பட்டினம் சட்ட மன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் விஜயராகவன், பொதுமக்களின் பிரச்சனைகளை முன்வைத்து வித்தியாசமான முறையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.நாகப்பட்டினம் அருகே குருவாடியை சேர்ந்த சமூக சேவகரான விஜயராகவன், கடந்த முறை பாராளுமன்றத் தேர்தலிலும் சுயேட்சையாக போட்டியிட்டவர். இம்முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் மீனவர்களின் பிரச்சனைகளை வாக்காளர்களிடம் எடுத்துரைக்கும் விதமாக, மினிவேன் வாகனத்தில் கட்டுமரத்தின் மீது சிலிண்டர் வைத்து அதற்கு மாலை அணிவித்து, சலங்கை வலையை கழுத்தில் அணிந்து வாஞ்சூர் ரவுண்டானாவில் இருந்து பேரணியாக புறப்பட்டார்.சுமார் 7 கிலோமீட்டர் தூரம் பேரணியாக வந்து, நாகப்பட்டினம் ஆர்டிஓ அலுவலகத்தை அடைந்தார். தேர்தல் நடத்தை விதிமுறையின்படி, 100 மீட்டர் சுற்றளவில் போலீசார் வாகனத்தை நிறுத்தி, எந்தவித பொருட்களையும் உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்காமல் கட்டுப்பாடு விதித்தனர்.இதன்பின்னர், தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கரநாராயணிடம் விஜயராகவன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.1
- Post by Sri ram1
- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மறை மாவட்டம் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் புனித செபஸ்தியார் ஆண்டு உயிர்ப்பு ஞாயிறு பண்டிகைக்கு அடுத்து வரும் திங்கள் செவ்வாய் புதன் கிழமைகளில் மூன்று நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு வருகின்ற ஆறு ஏழு எட்டு தேதிகளில் நடைபெற இருப்பதையொட்டி ஆலய வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டது. முன்னதாக இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகின்றனர். கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் முக்கிய நாளாக கருதப்படும் குருத்தோலை ஞாயிறு ஒட்டி கொடி மற்றும் குறித்தோலை பவனி கீழ வீதியில் உள்ள மக்கள் மன்றத்திலிருந்து பங்குதந்தை மரியபிரான்சிஸ் தலைமையில் தொடங்கி கிறிஸ்தவர்கள் குருத்தோலை கையில் ஏந்தி பாடல்கள் பாடியவாறு ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை வந்து அடைந்தனர். அதனைத் தொடர்ந்து குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலியும் கூட்டு பிரார்த்தனையும் நடைபெற்றது. இதில் அருட் சகோதரர்கள் அருட் சகோதரிகள், அன்பியங்கள், பங்குஇறைமக்கள், பங்கு கிளை கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.1
- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற முதல் வேட்பாளராக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நதியா தமிழ்செல்வன் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடக்கவிருக்கிறது. இந்த சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. தமிழகத்தில் களம் காணும் திமுக கூட்டணி, அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி, நாதக, தவெக ஆகிய கட்சிகள் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டனர். தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நதியா தமிழ்செல்வன் போட்டியிடுகிறார். இவர் கந்தர்வக்கோட்டை வெள்ளை முனியன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து மேள தாள முழக்கத்தோடு ஊர்வலமாக புறப்பட்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முதல் வேட்பாளராக வேட்புமனுவை தாக்கல் செய்தார்.1
- *விழுப்புரம் மாவட்ட காவல்துறை* *விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு* *விற்பனைக்காக இரு சக்கர வாகனத்தில் புதுச்சேரியில் இருந்து மதுபானம் வாங்கி வந்தவர் கைது* புதுச்சேரியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் மதுபானங்கள் எடுத்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் .ஆனந்தி, உதவி ஆய்வாளர் .லியோ சார்லஸ் மற்றும் காவலர்கள் தலைமையில் V.அகரம்பாட்டை மெயின் ரோட்டில் வாகன தணிக்கை செய்ததில் அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அதில் புதுச்சேரி மதுபானங்கள் இருந்ததை கண்டறிந்து எதிரியை நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் விழுப்புரம் ஒருகோடி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ராஜாமணி என்பவரின் மகன் ரவிச்சந்திரன் (41) என்பது தெரிவந்ததை அடுத்து குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்2
- அறந்தாங்கி தொகுதியில் பாஜக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி அறந்தை தொகுதிக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு அனைத்து காவி சொந்தங்களும் பாஜக கூட்டணி அறந்தைதொகுதியை பாஜக கைப்பற்றும்.. வெற்றிவேல் வீரவேல்10
- Post by K.S. PERIYASAMY1