ரூ.17.06 கோடியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்கள் திறப்பு. திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியம் அம்மாபாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் 2026-27ஆம் கல்வியாண்டுக்கான மாணவா்கள் சோ்க்கை குறித்த விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. பேரணி தொடக்க விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியா் (பொ) விநாயகம் வரவேற்றாா். வட்டாரக் கல்வி அலுவலா் ஆறுமுகம் கலந்துகொண்டு பேரணியை தொடங்கிவைத்தாா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சின்னராஜ், அரசுப் பள்ளியில் சோ்ந்து பயிலும் மாணவா்களுக்கு கிடைக்கும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தாா். பேரணி அப்பகுதியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டு பள்ளி வளாகத்தை அடைந்தது. பேரணியின் போது மாணவா்கள் தமிழக அரசு, பள்ளிக் கல்வித்துறை மூலம் மாணவா்களுக்கு வழங்கி வரும் இலவச திட்டங்கள் குறித்தும், அரசுப் பள்ளியில் தரமான கல்வி, அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு முன்னுரிமை உள்ளிட்டவைகள் குறித்து முழக்கங்களை எழுப்பி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். ஆசிரிய பயிற்றுநா்கள் ஜம்புகுமாா், தண்டாயுதபாணி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் பழநி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ரூ.17.06 கோடியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்கள் திறப்பு. திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியம் அம்மாபாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் 2026-27ஆம் கல்வியாண்டுக்கான மாணவா்கள் சோ்க்கை குறித்த விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. பேரணி தொடக்க விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியா் (பொ) விநாயகம் வரவேற்றாா். வட்டாரக் கல்வி அலுவலா் ஆறுமுகம் கலந்துகொண்டு பேரணியை தொடங்கிவைத்தாா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சின்னராஜ், அரசுப் பள்ளியில் சோ்ந்து பயிலும் மாணவா்களுக்கு கிடைக்கும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தாா். பேரணி அப்பகுதியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டு பள்ளி வளாகத்தை அடைந்தது. பேரணியின் போது மாணவா்கள் தமிழக அரசு, பள்ளிக் கல்வித்துறை மூலம் மாணவா்களுக்கு வழங்கி வரும் இலவச திட்டங்கள் குறித்தும், அரசுப் பள்ளியில் தரமான கல்வி, அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு முன்னுரிமை உள்ளிட்டவைகள் குறித்து முழக்கங்களை எழுப்பி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். ஆசிரிய பயிற்றுநா்கள் ஜம்புகுமாா், தண்டாயுதபாணி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் பழநி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
- Post by Vinayagam Vinayagam1
- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் விஜய் (வயது 22), நாகராஜ் (வயது 21) இவர்கள் இருவரும் நண்பராக உள்ளனர். நாளை கோயில் திருவிழாவிற்காக துணி எடுப்பதற்காக ஆம்பூர் பகுதிக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வளையாம்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு இரும்பு வேலி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு ஒரு நிலையில் இந்த விபத்து தொடர்பாக வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதே பகுதியில் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 3 விபத்துக்கள் ஏற்பட்டு அதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 15-ககும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.1
- காஞ்சி மாவட்ட விவசாயிகளுக்கு நேற்று செங்கல்பட்டு மாவட்டம் படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மூலம் சூரிய சக்தி கொண்டு இயங்கும் மின் வேலி அமைப்பது பற்றி விவசாயிகளுக்கு ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இப் பயிற்சியில் வன விலங்குகளிடம் இருந்து தங்கள் பயிர்களை பாதுகாக்கும் வழிகளை பற்றி செயல் விளக்கம் அளித்தனர். இந்நிகழ்ச்சியில் கரும்பு ஆலை மேலாண் இயக்குனர், கரும்பு மேலாளர் கரும்பு களப்பணி அதிகாரிகள் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதி வாழ் விவசாயிகள் காஞ்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.1
- ---------- காஞ்சிபுரம் மாநகராட்சி ஓரிக்கை பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மேல்நிலைப்பள்ளியில் இன்று 10ம் வகுப்பு தேர்வு எழுதும் அப்பள்ளி மாணவ மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு முன்னதாக இறை வணக்கம் செலுத்தினர்.பின் பள்ளி மாணவிகள் பள்ளியின் தாளாளர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றும்,பள்ளி மாணவர்கள் தாளாளரை கட்டி அனைத்தும்,காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற பின் தேர்வு எழுத தேர்வு அறைக்கு சென்றனர்.பள்ளி தாளாரோ எவ்வித அச்சமும்,பயமுமின்றி தேர்வை நல்ல படியாக எழுத வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். பள்ளி மாணவர்களின் இந்த வினோத செயல் பள்ளி தாளாரரின் மீது வைத்துள்ள அன்பையும்,தனக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் குருவிற்கு உரிய மரியாதை செய்யும் விதமாக பார்க்கப்படுகிறது.1
- கிருஷ்ணகிரி மாவட்டம் பெலவர்த்தி பஞ்சாயத்து கோட்டூர் கிராமத்தில் 20ஆம்ஆண்டு மாபெரும் கன்று விடும் விழாவில் 250 கன்றுகள் பங்கேற்பு,1
- ஊத்தங்கரையில் மகளிர் தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா வழிகாட்டி அறக்கட்டளை தலைவர் ஆடிட்டர் லோகநாதன் ஏற்பாட்டில் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ் செல்வம் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அசோக்குமார் கலந்துகொண்டு துரை ரீதியாக சாதனை புரிந்த மகளிருக்கு விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து கழக மகளிர்களுக்கு புடவைகளும் அசைவ விருந்துகளும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சுந்தரவடிவேல், மாவட்ட துணை செயலாளர் சாகுல் அமீது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ், நகரக் கழக செயலாளர் சிக்னல் ஆறுமுகம், முன்னாள் நகர கழக செயலாளர் சிவானந்தம், ஒன்றிய கழக செயலாளர்கள் வேடி, வேங்கன், நரேஷ் குமார், சக்கரவர்த்தி, முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் தேவேந்திரன், நகர மாணவரணி செயலாளர் சம்பத் என்கிற கணேசன், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் சக்திவேல், மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமான அதிமுக கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.1
- கோடை காலம் தொடங்கியதால் ஓசூர், அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட வனப்பகுதிகளில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் கூட்டமாகவும் ஒற்றை யானையாகவும் ஒகேனக்கல் - பென்னாகரம் வனப்பகுதியில் உணவிற்காகவும் தண்ணீருக்காகவும் வனப் பகுதிகளில் முகமிட்டுள்ளன. ஒகேனக்கல் பென்னாகரம் வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ள யானைகள் ஒகேனக்கல் சின்னாறு பகுதிகளில் தண்ணீர் குடிப்பதற்காக தினந்தோறும் வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ள பென்னாகரம் ஒகேனக்கல் செல்லக்கூடிய பிரதான சாலையை கடந்து சென்று தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் சாலையை கடந்து வனப்பகுதிக்கு செல்கின்றன. அவ்வாறு சாலையை கடக்கும் யானைகளை அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அதிக ஒலி எழுப்பியும் வாகனங்களில் அதிகம் சத்தம் எழுப்பியும் தொந்தரவு செய்வதுடன் செல்பி மற்றும் வீடியோ எடுத்து யானையை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றன இதனை தடுக்கும் விதமாக ஒகேனக்கல் வனத்துறை சார்பில் தர்மபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் முத்தரவின் பெயரில் பென்னாகரம் வனச்சரக அலுவலர் சிவகுமார் அறிவுறுத்தலின்படியும் தினம் தோறும் பென்னாகரம் - ஒகேனக்கல் மனசாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருக்கினர்க்னர். இந்த நிலையில் இன்று வழக்கம் போல் ஒகேனக்கல் வனவர்கள் மகேஸ்வரி,சுவாதி ஆகியோர் தலைமையிலான வனத்துறை பணியாளர்கள் ஒன்றிணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் முண்டச் பள்ளம் பகுதியில் யானை தண்ணீர் அருந்துவதற்காக சாலையை கடந்துள்ளது இவனை கண்டால் ரவுண்டு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வனத்துறையினர் யானை சாலையை கடந்து செல்லும் வரை இரு புறமும் சாலைகளில் சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி யானை சாலையை கடக்கும் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் யானை சாலையை கடந்த பின்பு சாலையில் இருபுறமும் நிறுத்தப்பட்ட வாகனங்களை விரைவாக அப்புறப்படுத்தினர். சாலையை கடந்த யானையை வீடியோ எடுத்தும் அதிக சத்தம் எழுப்பியும் தொந்தரவு செய்த இரண்டு வாகன ஓட்டிகளை எச்சரித்து அபராதம் விதிக்கப்பட்டது. இதில் வனக்காப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி ,காளிமுத்து, சுஜாதா,மற்றும் வன காவலர்கள் மோகன,அனிதா ஆகியோர் ரோந்து பாதுகாப்பு பணியில் உடன் இருந்தனர்1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1