திண்டுக்கல் அருகே பழிக்கு பழியாக கணவன் - மனைவியை இரு வெவ்வேறு இடங்களில் வெட்டி படுகொலை - 8 பேர் கைது ஒரு மணி நேரத்தில் குற்றவாளிகளை தட்டி தூக்கிய மாவட்ட எஸ்.பி.பிரதீப் திண்டுக்கல் யாகப்பன்பட்டியை சேர்ந்த சேசுராஜ்(41) இவர் கடந்த 2024-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரான மாயாண்டிஜோசப் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி. இந்நிலையில் நேற்று நத்தம் ரோடு R.M.T.C.காலனி அருகே சேசுராஜ் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம கும்பல் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. அதே நேரத்தில் சேசுராஜின் 2-வது மனைவி தீபிகா(35) யாகப்பன்பட்டியில் வீட்டின் வாசலில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மாவட்ட எஸ்.பி.பிரதீப் நேரடி நடவடிக்கையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் போலீசார் இது தொடர்பாக ஞானராஜ், தர்மர், அருள், ஜான்பீட்டர் (எ) காற்று உள்ளிட்ட 8 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
திண்டுக்கல் அருகே பழிக்கு பழியாக கணவன் - மனைவியை இரு வெவ்வேறு இடங்களில் வெட்டி படுகொலை - 8 பேர் கைது ஒரு மணி நேரத்தில் குற்றவாளிகளை தட்டி தூக்கிய மாவட்ட எஸ்.பி.பிரதீப் திண்டுக்கல் யாகப்பன்பட்டியை சேர்ந்த சேசுராஜ்(41) இவர் கடந்த 2024-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரான மாயாண்டிஜோசப் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி. இந்நிலையில் நேற்று நத்தம் ரோடு R.M.T.C.காலனி அருகே சேசுராஜ் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம கும்பல் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. அதே நேரத்தில் சேசுராஜின் 2-வது மனைவி தீபிகா(35) யாகப்பன்பட்டியில் வீட்டின் வாசலில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மாவட்ட எஸ்.பி.பிரதீப் நேரடி நடவடிக்கையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் போலீசார் இது தொடர்பாக ஞானராஜ், தர்மர், அருள், ஜான்பீட்டர் (எ) காற்று உள்ளிட்ட 8 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
- நிலக்கோட்டை: பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை வரலாறு காணாத உயர்வு - மல்லிகை கிலோ ரூ.10000க்கு விற்பனை திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் தைப்பொங்கல் பண்டிகை, தை அமாவாசை, சுபமுகூர்த்த நாட்கள் வருவதையொட்டி மற்றும் பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைவால் மல்லிகை கிலோ ரூ.10,000, முல்லை ரூ.3000, ஜாதிப்பூ ரூ.2500க்கு, கனகாம்பரம் ரூ.2000 என அனைத்து பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து விற்பனையாகி வருகிறது விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்1
- பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை-திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.1
- தேனி வாசவி மஹாலில் வாசவி கிளப், வாசவீ கிளப் வனிதா பதவியேற்பு விழா நடந்தது தேனி பெரியகுளம் சாலையில் உள்ள வாசவி மஹாலில் தேனியில் செயல்பட்டு வரும் வாசவி கிளப் மற்றும் வாசவி கிளப் வனிதா புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு தலைவர்கள் சரவணன், ஷர்மிளா தலைமை வகிக்க, செயலாளர் பால நடராஜன், பொருளாளர்கள் ஹிந்ரஜீத் மற்றும் வைஷ்ணவி உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க, சிறப்பு அழைப்பாளராக இன்டர்நேஷனல் மல்டிபிள் துணை தலைவர் லால்பகதூர் சாஸ்திரி, கேபினட் செயலாளர் லட்சுமி பாலகிருஷ்ணன், கேபினட் பொருளாளர் ஸ்ரீபிரியா சத்யநாராயணன், மாவட்டத் துணை ஆளுநர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பிக்க மாவட்ட ஆளுநர் ஸ்ரீமதிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதன் அடிப்படையில் வாசவி கிளப் புதிய தலைவராக சீனிவாசன் செயலாளராக மணிகண்டன் பொருளாளராக வாசகன் உள்ளிட்டோரும் வாசவி கிளப் வனிதா தலைவராக தன்யா பார்வதி செயலாளராக சௌமியா பொருளாளராக சப்னா உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளாக பதவியேற்று கொண்டனர் இதனை தொடர்ந்து தேவாரம் இமேஜ் ஹோமிற்க்கு போர்வைகள், ஏழை எளிய மற்றும் ஊனமுற்றவர்களுக்கு 5 கிலோ அரிசி பைகள் வழங்கப்பட்டது முன்னதாக வடபுதுபட்டியில் செயல்பட்டு வரும் அன்பு இல்லத்தில் உள்ளவர்களுக்கு காலை உணவும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் தேனி அல்லிநகரம் ஆரிய வைசிய மகாசபை தலைவர் ராமச்சந்திரன் மற்றும் அபெக்ஸ் நண்பர்கள் என ஏராளமான வாழ்த்துரை வழங்கினர். புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் முன்னாள் தலைவர் சரவணன் வரவேற்புரை ஆற்றினார் இந்த நிகழ்வில் IPC அலுவலர்களாக சேகர் ராம்குமார் ராஜா மாவட்ட உதவி செய்தி தொடர்பாளர் சுவாதி ஸ்ரீ சரவணகுமார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீவித்யா பாலாஜி மண்டல தலைவர் நாகராஜன் வட்டாரத் தலைவர்கள் சரவணன், நாகலாவன்யா மண்டல செயலாளர் வெங்கட்ராமன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அவர்களது குடும்பத்தினர் பயனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக வாசவி கிளப் வனிதா முன்னாள் தலைவர் சர்மிளா அனைவருக்கும் நன்றி கூறினார்1
- புதுக்கோட்டை மாவட்டம் பேராவூரணியில் இருந்து தேங்காய் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி நள்ளிரவில் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த நொச்சிமேடு என்ற இடத்தில் வந்தபோது, லாரியை அதன் டிரைவர் திருப்ப முயன்றார். அப்போது, பின்னால் மன்னார் குடியில் இருந்து கம்பம் நோக்கி சென்ற அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி சேதமடைத்துடன் இடிபாடுகளுக்குள் பஸ் டிரைவர் சிக்கி கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் லாரி சாலையில் கவிழ்ந்து அதிலிருந்த தேங்காயும் சாலையில் சிதறிக் கிடந்தது. இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.1
- மகனை படுகொலை செய்த வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனையும் தாய்க்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பு. தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள செங்கல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அபிமன்னன் மனைவி ராஜா மணி தம்பதியருக்கு அஜித்குமார் (வயது 27) என்ற மகன் இருந்து வந்துள்ளார். அஜித் குமார் எந்த வேலைக்கும் போகாத நிலையில் நாள்தோறும் வீட்டிற்கு வந்து தாய் தந்தையுடன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், தந்தை இல்லாத நேரத்தில் தாயிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த தாய், தந்தை இருவரும் சேர்ந்து மகன் அஜித்குமாரை கயிற்றால் கழுத்தை இருக்கியதோடு அறிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர். இக்கொலை சம்பவம் தொடர்பாக வீரபாண்டி காவல் நிலையத்தில் தாய், தந்தை இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று வழக்கு விசாரணை முடிவு பெற்று மகனை கொலை செய்த குற்றத்திற்காக தாய், தந்தை இருவருக்கும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் முதல் குற்றவாளியான தந்தை அபிமன்னனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் மூன்று மாத கால சிறை தண்டனையும், இரண்டாவது குற்றவாளியான தாய் ராஜாமணிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்ததோடு பத்தாயிரம் ரூபாய் அபராதம், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாத கால சிறை தண்டனையும் விதித்ததோடு, தண்டனையை ஏக காலத்திற்கு அனுபவிக்க வேண்டும் என மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சொர்ணம் ஜே. நடராஜன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.1
- "ஆண்டிபட்டியார் இராஜஹரிகாந்த் மக்கள் முன்னேற்ற இயக்க"த்தின் நிறுவனர்/ தலைவர் இராஜஹரிகாந்த், ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தாமதப்படுத்தியதை கண்டித்து பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பார்கள் அதுபோல ஜனநாயகன் படத்திற்கு ஏற்பட்டிருக்க கூடிய அநீதி வன்மையாக கண்டிக்கத்தக்கது விஜய் என்ற ஒரு தனி நபர் மீது உள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அந்தப் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் தாமதப்படுத்துவது வந்து மிகப்பெரிய அநீதி கமலஹாசன் அவர்களும் நான் ஏற்றுக்கொண்ட எனது தலைவர் ஐயா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் இதுவரை இந்த தணிக்கை சான்றிதழ் விஷயமாகவோ ஜனநாயகம் படத்திற்கு ஏற்பட்டுள்ள தடை காரணமாக பேசாமல் மௌனமாக இருப்பது மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது என அவர் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.1
- கரூர் மாவட்ட திமுக செயலாளர் வி. செந்தில் பாலாஜி ஆணைக்கிணங்க, நாளை மறுநாள்(11/01/29) நடைபெறும் திமுக திராவிட பொங்கல் சமத்துவ விளையாட்டு போட்டி நடைபெறும் இடமான தமிழ் நகரில் விளையாட்டு மைதானத்தை இன்று தாந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கர் தலைமையில் பணியாட்கள் மற்றும் பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.1
- பழனி: திருவள்ளுவர் அரசு உதவிபெறு நடுநிலைப் பள்ளியில் அறுபது ஆண்டுகளுக்கு முன்னாள் பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகள் சந்திப்பு பழனியில் திருவள்ளுவர் அரசு உதவிபெறு நடுநிலைப் பள்ளி கடந்த 75 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1965 ஆம் ஆண்டு முதல் 1973 ஆம் ஆண்டு வரை ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்ற முன்னாள் மாணவ மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 60 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவ மாணவியரும் இந்நாள் தாத்தா பாட்டிகளும் தங்களின் பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர்.1