ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா செப்பு தேரோட்டம் கோலாகலம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வடபெருங்கோயிலுடையோன் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில் புதன்கிழமை காலை செப்பு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மூலவர் வடபத்ரசாயி(பெரிய பெருமாள்) அவதரித்த புரட்டாசி பிரம்மோற்சவ விழா கடந்த 15 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவ விழாவில் தினசரி இரவு பெரிய பெருமாள் சந்திரபிரபை, அனுமன், யானை, தங்க சேஷ வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் 5-ம் நாள் விழாவான செப்டம்பர் 19 -ம் தேதி கருட சேவையும், 20 -ம் தேதி மாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் திருக்கல்யாணமும், 21-ம் தேதி சயன சேவையும் நடைபெற்றது. 9-ம் நாளான புதன்கிழமை காலை பெரிய பெருமாள் அவதரித்த திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு செப்பு தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக ஶ்ரீ தேவி பூதேவி சமேத பெரிய பெருமாளுக்கு விஷேச திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின் சர்வ அலங்காரத்தில் பெரிய பெருமாள் ஶ்ரீதேவி பூதேவி சமேதரராக செப்புத் தேரில் எழுந்தருள நான்கு ரத வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது. வைணவ ஆச்சார்யர்கள் திருப்பல்லாண்டு பாடியபடி ஊர்வலமாக முன் செல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா செப்பு தேரோட்டம் கோலாகலம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வடபெருங்கோயிலுடையோன் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில் புதன்கிழமை காலை செப்பு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மூலவர் வடபத்ரசாயி(பெரிய பெருமாள்) அவதரித்த புரட்டாசி பிரம்மோற்சவ விழா கடந்த 15 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவ விழாவில் தினசரி இரவு பெரிய பெருமாள் சந்திரபிரபை, அனுமன், யானை, தங்க சேஷ வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் 5-ம் நாள் விழாவான செப்டம்பர் 19 -ம் தேதி கருட சேவையும், 20 -ம் தேதி மாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் திருக்கல்யாணமும், 21-ம் தேதி சயன சேவையும் நடைபெற்றது. 9-ம் நாளான புதன்கிழமை காலை பெரிய பெருமாள் அவதரித்த திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு செப்பு தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக ஶ்ரீ தேவி பூதேவி சமேத பெரிய பெருமாளுக்கு விஷேச திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின் சர்வ அலங்காரத்தில் பெரிய பெருமாள் ஶ்ரீதேவி பூதேவி சமேதரராக செப்புத் தேரில் எழுந்தருள நான்கு ரத வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது. வைணவ ஆச்சார்யர்கள் திருப்பல்லாண்டு பாடியபடி ஊர்வலமாக முன் செல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
- காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை அரசு பள்ளிகளில் தொடங்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்திய சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் *ஸ்ரீவில்லிபுத்தூரில் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை அரசு பள்ளிகளில் தொடங்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்திய சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக்.* தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காமராஜரின் காலை உணவு திட்டத்தை விரிவாக்க விழாவை முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லி அருகே உள்ளூர் பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் திரு வி கா மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் காலை உணவு விரிவாக்க விழாவை சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொடங்கி வைத்தார். மாணவ மாணவிகளுக்கு உணவு பரிமாறிய சட்டமன்ற உறுப்பினர் பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இதில் வட்டாட்சியர் , நகராட்சி ஆணையாளர் முன்னிட்டு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.1
- தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து சர்வேர்கள் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து சர்வேர்கள் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வரின் தனிப்பிரிவு மனுவை சின்னமனூர் சர்வேயர் ஜெகநாதன் உதவியாளர் ஜெயமணியுடன் அளவீடு செய்ய சென்ற போது 2 பேரையும் K Kகுளம் அண்ணாமலை நகரில் குடியிருக்கும் செல்வராஜ் ரஞ்சித் சந்திரன் ஆகியோர் அளவீடு செய்ய விடாமல் தாக்கியதால் காடைமடைந்து தேனி க.விலக்கு GHல்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் நடந்த சம்பவம் குறித்து சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது தேனி மாவட்ட நில அளவை துறைஅலுவலர் சங்கத் தலைவர் கா கணேஷ் குமார் தலைமையிலும். தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிணைப்பு சங்கத் தலைவர் வேல்முருகன் முன்னிலையும் தமிழ்நாடு நில அளவை வரைவாளர் சங்கத் தலைவர் அதியமான் மற்றும் தமிழ்நாடு நில அளவைத் துறை புல உதவியாளர் சங்கத் தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர்கள் மற்றும் நில அளவையாளர்கள் உதவியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் சின்னமனூர் நில அளவையாளர் ஜெகன்நாதன் தாக்கிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டுமெனவும். அவர்களை குண்டத் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும் அவ்வாறு கை செயல்படவில்லை என்றால் வருவாய்த் துறை மற்றும் அலுவலர் சங்கம் சார்பாக மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்போம் தமிழ்நாடு நில அளவைத் துறை அலுவலர் சங்கத் மாவட்டத் தலைவர் கணேஷ் குமார் தெரிவித்தார்1
- தேனி மாவட்டம் போடி அருகே திறந்தவெளி கிணற்றில் விழுந்து கர்ப்பிணி பசுமாடு உயிரிழப்பு கிணற்றை மூட பொதுமக்கள் கோரிக்கை தேனி மாவட்டம் போடி அருகே உள்ள அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சன்னாசிபுரம் செட் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தென்னந்தோப்புகளும் விவசாய நிலங்களும் நிறைந்த இப்பகுதியில் வசிக்கும் கண்ணன் என்பவர், பசு மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இன்று மாலை மேய்ச்சலுக்குச் சென்ற தனது பசு மாட்டை வீட்டிற்கு அழைத்து வர கண்ணன் முயன்றுள்ளார். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள சேதுராமன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில், சாலையோரமாக அமைக்கப்பட்டிருந்த கிணற்றுக்குள் பசுமாடு எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்தது. சுமார் 30 அடி ஆழமும் 6 அடி அகலமும் கொண்ட இந்த போர்வெல் கிணறு பாதியிலேயே கைவிடப்பட்ட ஒன்றாகும். இதன் வாய் பகுதி பலவீனமான தகரத்தைக் கொண்டு மூடப்பட்டிருந்ததால், அதை கவனிக்காமல் கால் வைத்த பசுமாடு தகரம் உடைந்து கிணற்றுக்குள் விழுந்து உயிருக்குக் போராடியுள்ளது. உடனடியாக மாட்டின் உரிமையாளர் கண்ணன் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், எக்ஸ்கவேட்டர் (JCB) இயந்திரத்தின் உதவியுடன் கிணற்றுக்குள் இருந்த பசு மாட்டை மீட்க முயன்றனர். ஆனால், மீட்புப் பணிக்கு முன்பே பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. மிக்க சிரமத்திற்கு இடையே கிணற்றிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்ட பசுமாட்டின் வயிற்றில் இருந்த கன்றும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் கன்று ஈனவிருந்த பசுவும் அதன் கன்றும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த கிணற்றில் தகரம் மட்டுமே மூடப்பட்டிருந்ததால், பலமுறை கால்நடைகள் விழுந்து மீட்கப்பட்டதாகக் கூறும் அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், அசம்பாவிதங்கள் தொடராமல் இருக்கச் சாலையோரத்தில் உள்ள இந்த ஆபத்தான கிணற்றை உடனடியாக நிரந்தரமாக உயரமான தடுப்பு சுவர் உயரமாக அமைத்து இது போன்ற அசம்பாவிதம் மீண்டும் ஏற்படாதவாறு வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திற்குச் தீவிரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் சுரைக்காய்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தமிழக அரசு காமராஜர் காலை உணவு திட்டம் தொடக்கம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் சுரைக்காய்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தமிழக அரசு புதியதாக உருவாக்கிய 6 வகுப்பு முதல் 8 வகுப்பு வரை உள்ள 37 மாணவ மாணவிகளுக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டது.இதனை பள்ளி தலைமை ஆசிரியர் முருகேஸ்வரி, மற்றும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய சாலை ஆய்வாளர் வீரலட்சுமி ஊராட்சி செயலாளர் பாலமுருகன் ஆகியோர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை உணவை கொடுத்து தொடங்கி வைத்தார்கள். காலை உணவு திட்ட சரண்யா, உதவி சமையலர் சசிகலா ஆகியோர் இவர்களுடன் இணைந்து செயல்பட்டனர்.4
- தென்காசி மாவட்டம் பொட்டல் புதூர் பள்ளிவாசல் பத்தாம் இரவு கொடியேற்றம் நிகழ்ச்சி இன்று நடந்தது அதனை முன்னிட்டு மேளதாளம் முழங்க ஊர்வலம் நடந்தது தொடர்ந்து சிறப்பு தொழுகை நடைபெற்றது இதில் திரளானோர் கலந்து கொண்டனர்1
- தேனி பங்களா மேட்டில் தமிழர் தேசம் கட்சி சார்பில் வருசநாடு மலை கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிராக மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது தேனி மாவட்ட தமிழர் தேசம் கட்சி மற்றும் தென் மண்டலம் சார்பில் தேனி மதுரை சாலை பங்களா மேட்டில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நிறுவனர் செல்வகுமார் தலைமையேற்று சிறப்புரை ஆற்றினார் ஆர்ப்பாட்டத்தில் வீர முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் நடராஜன் பூசாரி தமிழர் தேசம் கட்சி மாநில அமைப்பு செயலாளர் மகேஸ்வரன் மற்றும் பூமி அம்பலம் மற்றும் மாநில மருத்துவர் அணி செயலாளர் அன்பு எழில் தமிழர் தேச இளைஞர் பேரவை நிர்வாக மாநில செயலாளர் செல்லப்பாண்டி தேனி மேற்கு மாவட்ட செயலாளர் தங்கத்துரை கிழக்கு மாவட்ட செயலாளர் கருப்பையா மற்றும் மாவட்ட பொறுப்பாளர் மாரிமுத்து மாவட்ட மகளிர் அணி வாழ வந்தால் மாவட்ட இளைஞரணி முருகன் கடமலை மயிலை ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன் ஆண்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் அழகுமுத்து போடி ஒன்றிய செயலாளர் குஞ்சன் மற்றும் வருசநாடு மேகமலை உள்ளிட்ட 102 கிராம மக்கள் என ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் வருசநாடு கடமலை மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட 102 மலை கிராம மக்களைச் சேர்ந்த மூத்த குடிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் ஸ்ரீவல்லிபுத்தூர் மேகமலை புலிகள் வன காப்பகம் என்ற பெயரில் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் உச்சநீதிமன்றமும் வனத்துறையும் ஈடுபட்டு வருகிறது இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடந்தது மேலும் இந்த மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீவல்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக எல்லையை மறு வரையறை செய்து வனத்துறையிடமிருந்து வன மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது1
- *தேனி புதிய பேருந்து நிலையம் அருகே மதுபோதையில் பெண்களுக்குத் தொல்லை ஆபாசமாக பேசி அத்துமீறிய நபருக்கு பொதுமக்கள் தர்ம அடி* தேனி மாவட்டம் தேனி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மதுபான பார் பகுதியில், மது குடித்துவிட்டு அவ்வழியாக செல்லும் பெண்களிடம் ஆபாசமாகப் பேசி, செல்போன்களை பறிக்க முயன்ற நபரை பொதுமக்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி புதிய பேருந்து நிலையப் பகுதியில் அதிக அளவிலான மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் இயங்கி வருகின்றன. இதனால், தினசரி வேலைக்குச் செல்லும் பெண்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அசௌகரியத்திற்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட நபரைத் தடுத்து நிறுத்த முயன்றபோதிலும், அவர் அதிக மதுபோதையில் இருந்ததால் அவரை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் திணறியுள்ளனர். மேலும், இதுபோன்று அப்பகுதியில் தொடர்ந்து மது பிரியர்களின் செயல்களால் அந்த வழியாக செல்லும் பொது மக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது எனவே, புதிய பேருந்து நிலையப் பகுதியில் செயல்படும் பார்களைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல் துறை உரிய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.1
- தென்காசி மாவட்டம் செங்கோட்டை வாஞ்சிநாதன் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது இவ்விழாவிற்கு முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் நூலகர் ராமசாமி, மற்றும் சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்1
- தூத்துக்குடி வேலவன் ஜுவல்லர்ஸ் நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டியதாக வேலவன் ஜுவல்லர்ஸ் நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து தென்பாகம் காவல்துறையினர் பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆசைப்படுத்தினர் நீதிமன்றத்தில் வரும் அக்டோபர் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு இந்த நிலையில் அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி அவரது ஆதரவாளர்கள் நீதிமன்றம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது போலீசார் தடியடி அடித்து கூட்டத்தை கலைத்தனர்1