தேனி மாவட்டம் போடி அருகே திறந்தவெளி கிணற்றில் விழுந்து கர்ப்பிணி பசுமாடு உயிரிழப்பு கிணற்றை மூட பொதுமக்கள் கோரிக்கை தேனி மாவட்டம் போடி அருகே உள்ள அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சன்னாசிபுரம் செட் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தென்னந்தோப்புகளும் விவசாய நிலங்களும் நிறைந்த இப்பகுதியில் வசிக்கும் கண்ணன் என்பவர், பசு மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இன்று மாலை மேய்ச்சலுக்குச் சென்ற தனது பசு மாட்டை வீட்டிற்கு அழைத்து வர கண்ணன் முயன்றுள்ளார். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள சேதுராமன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில், சாலையோரமாக அமைக்கப்பட்டிருந்த கிணற்றுக்குள் பசுமாடு எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்தது. சுமார் 30 அடி ஆழமும் 6 அடி அகலமும் கொண்ட இந்த போர்வெல் கிணறு பாதியிலேயே கைவிடப்பட்ட ஒன்றாகும். இதன் வாய் பகுதி பலவீனமான தகரத்தைக் கொண்டு மூடப்பட்டிருந்ததால், அதை கவனிக்காமல் கால் வைத்த பசுமாடு தகரம் உடைந்து கிணற்றுக்குள் விழுந்து உயிருக்குக் போராடியுள்ளது. உடனடியாக மாட்டின் உரிமையாளர் கண்ணன் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், எக்ஸ்கவேட்டர் (JCB) இயந்திரத்தின் உதவியுடன் கிணற்றுக்குள் இருந்த பசு மாட்டை மீட்க முயன்றனர். ஆனால், மீட்புப் பணிக்கு முன்பே பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. மிக்க சிரமத்திற்கு இடையே கிணற்றிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்ட பசுமாட்டின் வயிற்றில் இருந்த கன்றும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் கன்று ஈனவிருந்த பசுவும் அதன் கன்றும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த கிணற்றில் தகரம் மட்டுமே மூடப்பட்டிருந்ததால், பலமுறை கால்நடைகள் விழுந்து மீட்கப்பட்டதாகக் கூறும் அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், அசம்பாவிதங்கள் தொடராமல் இருக்கச் சாலையோரத்தில் உள்ள இந்த ஆபத்தான கிணற்றை உடனடியாக நிரந்தரமாக உயரமான தடுப்பு சுவர் உயரமாக அமைத்து இது போன்ற அசம்பாவிதம் மீண்டும் ஏற்படாதவாறு வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திற்குச் தீவிரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- ஒன்றிய அரசு புதிதாக கொண்டு வந்த ஆன்லைன் பண பரிமாற்றத்திற்கான கட்டனத்தை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 15 தீர்மானங்களை வணிகர் சங்க பேரமைப்பு செயற்குழு கூட்டத்தில் தீர்மானம். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தேனி மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. பழனிச்செட்டிபட்டியில் உள்ள தனியார் விடுதியில் மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வருசநாடு மேகமலை பகுதி மக்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும். ஃபோன் பே, G pay போன்ற ஆன்லைன் பண பரிவர்த்தனைக்கு ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும், தேனி நகர் பகுதியில் கிடப்பில் உள்ள இரயில்வே மேம்பால பணிகளை நிறைவேற்ற வேண்டும், வரும் உள்ளாட்சி தேர்தலில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக போட்டியிட உள்ளதாகவும் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தேனி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேனி, போடி, கம்பம், பெரியகுளம், ஆண்டிபட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 200 க்கு மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டனர்.1
- ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குழுவினர் திடீர் சோதனை *ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குழுவினர் திடீர் சோதனை* தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தேனி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மற்றும் குற்ற தடுப்புத்துறை அதிகாரிகள் 8 பேர் கொண்ட குழுவினர் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள ஊராட்சி ஆணையாளர் அறை, பொறியாளர் குழுவினரின் அறை மற்றும் பணியாளர்களின் அறை உள்ளிட்ட பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.தொடர்ச்சியாக லஞ்சப்பண பரிமாற்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகரித்து வந்ததாக குற்றச்சாட்டு வந்ததன் அடிப்படையில் இந்த திடீர் சோதனை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளனர் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் கிராம ஊராட்சி ஆணையாளர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் குழுவினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருமே பணியில் இருக்கும் போது திடீரென்று நடைபெற்று வரும் இந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனை சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சோதனையில் பணம் ஏதும் பொருட்கள் கைப்பற்ற படுகிறதா என்பது சோதனை முடிவில் தெரியவரும்.1
- சித்தையன் கோட்டையில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அன்னதானம் என்னும் கந்தூரி விழா நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தையன் கோட்டையில் மறைந்த முன்னாள் இஸ்லாமிய பெரியார் முஹையதீன் ஆண்டவர் அவர்களை நினைவு கூறும் விதமாக பகுதிவாழ் இஸ்லாமிய பொதுமக்கள் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் அன்னதானம் வழங்கி சந்தனக்கூடு என்னும் உரூஸ்விழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதனைத் தொடர்ந்து புதன்கிழமை நாளை இரவு சந்தனக்கூடு என்னும் உரூஸ் விழா நடைபெற இருப்பதை தொடர்ந்து இன்று விழா கமிட்டியாளர்கள் மற்றும் ஜமாத் தலைவர்கள் ஒருங்கிணைந்து சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதானம் என்னும் கந்தூரி விழா நடைபெற்றது. இதில் சுமார் 5000 திற்கும் மேற்பட்ட அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டு தாங்கள் கொண்டு வந்த பாத்திரங்களில் விழா கமிட்டியாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவுகளை மன மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.1
- திண்டுக்கல் ஓஎம்ஆர் பட்டியில் மாநகராட்சி சார்பில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது1
- ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 4 நாள் குட்டி யானை - மக்களின் நெஞ்சை உருக்கிய மீட்பு! மேற்கு வங்கத்தில் தீஸ்தா ஆற்றின் சீறிப்பாயும் வெள்ளத்தில் தத்தளித்த 4 நாளேயான பச்சிளம் குட்டி யானை, உயிருக்குப் போராடிய அந்தப் பிஞ்சின் அவஸ்தை கண்டு கரையில் நிற்க முடியாமல், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் படகை எடுத்து ஆற்றில் விரைந்தனர் இரக்க உள்ளம் கொண்ட உள்ளூர் மீனவர்கள். தைரியத்தோடும், தாய்மை உணர்வோடும் அந்தப் பிஞ்சு உயிரை மீட்டெடுத்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மருத்துவ சிகிச்சைக்குப் பின், கண்ணீரோடு காத்திருந்த தாய் யானையிடம் குட்டி ஒப்படைக்கப்பட்டது. தன் குட்டியைக் கண்டதும் தாய் யானை ஓடிவந்து துதிக்கையால் அணைத்து, பாசத்தோடு பாலூட்டிய காட்சி காண்போர் நெகிழ்ந்தனர்1
- சென்னையில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்டத்தை தொடங்கினார் நடிகர் ஜோசப் விஜய் பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளி மதிய உணவு திட்டத்தை, இன்று சென்னையில் நடிகர் ஜோசப் விஜய் அவர்கள் மீண்டும் தொடங்கி வைத்துள்ளார். ஏழை எளிய மாணவர்களின் கல்வி மற்றும் பசிப்பிணியைப் போக்கும் நோக்கில் இந்தச் சிறப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது1
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா செப்பு தேரோட்டம் கோலாகலம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வடபெருங்கோயிலுடையோன் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில் புதன்கிழமை காலை செப்பு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மூலவர் வடபத்ரசாயி(பெரிய பெருமாள்) அவதரித்த புரட்டாசி பிரம்மோற்சவ விழா கடந்த 15 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவ விழாவில் தினசரி இரவு பெரிய பெருமாள் சந்திரபிரபை, அனுமன், யானை, தங்க சேஷ வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் 5-ம் நாள் விழாவான செப்டம்பர் 19 -ம் தேதி கருட சேவையும், 20 -ம் தேதி மாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் திருக்கல்யாணமும், 21-ம் தேதி சயன சேவையும் நடைபெற்றது. 9-ம் நாளான புதன்கிழமை காலை பெரிய பெருமாள் அவதரித்த திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு செப்பு தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக ஶ்ரீ தேவி பூதேவி சமேத பெரிய பெருமாளுக்கு விஷேச திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின் சர்வ அலங்காரத்தில் பெரிய பெருமாள் ஶ்ரீதேவி பூதேவி சமேதரராக செப்புத் தேரில் எழுந்தருள நான்கு ரத வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது. வைணவ ஆச்சார்யர்கள் திருப்பல்லாண்டு பாடியபடி ஊர்வலமாக முன் செல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.1
- தேனி மாவட்டம் போடி அருகே திறந்தவெளி கிணற்றில் விழுந்து கர்ப்பிணி பசுமாடு உயிரிழப்பு கிணற்றை மூட பொதுமக்கள் கோரிக்கை தேனி மாவட்டம் போடி அருகே உள்ள அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சன்னாசிபுரம் செட் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தென்னந்தோப்புகளும் விவசாய நிலங்களும் நிறைந்த இப்பகுதியில் வசிக்கும் கண்ணன் என்பவர், பசு மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இன்று மாலை மேய்ச்சலுக்குச் சென்ற தனது பசு மாட்டை வீட்டிற்கு அழைத்து வர கண்ணன் முயன்றுள்ளார். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள சேதுராமன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில், சாலையோரமாக அமைக்கப்பட்டிருந்த கிணற்றுக்குள் பசுமாடு எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்தது. சுமார் 30 அடி ஆழமும் 6 அடி அகலமும் கொண்ட இந்த போர்வெல் கிணறு பாதியிலேயே கைவிடப்பட்ட ஒன்றாகும். இதன் வாய் பகுதி பலவீனமான தகரத்தைக் கொண்டு மூடப்பட்டிருந்ததால், அதை கவனிக்காமல் கால் வைத்த பசுமாடு தகரம் உடைந்து கிணற்றுக்குள் விழுந்து உயிருக்குக் போராடியுள்ளது. உடனடியாக மாட்டின் உரிமையாளர் கண்ணன் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், எக்ஸ்கவேட்டர் (JCB) இயந்திரத்தின் உதவியுடன் கிணற்றுக்குள் இருந்த பசு மாட்டை மீட்க முயன்றனர். ஆனால், மீட்புப் பணிக்கு முன்பே பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. மிக்க சிரமத்திற்கு இடையே கிணற்றிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்ட பசுமாட்டின் வயிற்றில் இருந்த கன்றும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் கன்று ஈனவிருந்த பசுவும் அதன் கன்றும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த கிணற்றில் தகரம் மட்டுமே மூடப்பட்டிருந்ததால், பலமுறை கால்நடைகள் விழுந்து மீட்கப்பட்டதாகக் கூறும் அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், அசம்பாவிதங்கள் தொடராமல் இருக்கச் சாலையோரத்தில் உள்ள இந்த ஆபத்தான கிணற்றை உடனடியாக நிரந்தரமாக உயரமான தடுப்பு சுவர் உயரமாக அமைத்து இது போன்ற அசம்பாவிதம் மீண்டும் ஏற்படாதவாறு வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திற்குச் தீவிரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.1