Shuru
Apke Nagar Ki App…
சென்னையில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்டத்தை தொடங்கினார் நடிகர் ஜோசப் விஜய் பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளி மதிய உணவு திட்டத்தை, இன்று சென்னையில் நடிகர் ஜோசப் விஜய் அவர்கள் மீண்டும் தொடங்கி வைத்துள்ளார். ஏழை எளிய மாணவர்களின் கல்வி மற்றும் பசிப்பிணியைப் போக்கும் நோக்கில் இந்தச் சிறப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது
ALAKESHWARAN
சென்னையில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்டத்தை தொடங்கினார் நடிகர் ஜோசப் விஜய் பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளி மதிய உணவு திட்டத்தை, இன்று சென்னையில் நடிகர் ஜோசப் விஜய் அவர்கள் மீண்டும் தொடங்கி வைத்துள்ளார். ஏழை எளிய மாணவர்களின் கல்வி மற்றும் பசிப்பிணியைப் போக்கும் நோக்கில் இந்தச் சிறப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது
- N-KIPSRAமதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடுநண்பரே நீங்கள் எல்லாம் தயவுசெய்து இந்த தொழிலை விட்டு விலகி விடுங்கள் உங்களுக்கு எந்தத் திட்டம் என்ன என்பது ஒரு விவரமும் தெரியவில்லை உங்களுக்கு தமிழாவது தெரியுமா16 hrs ago
More news from தமிழ்நாடு and nearby areas
- சென்னையில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்டத்தை தொடங்கினார் நடிகர் ஜோசப் விஜய் பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளி மதிய உணவு திட்டத்தை, இன்று சென்னையில் நடிகர் ஜோசப் விஜய் அவர்கள் மீண்டும் தொடங்கி வைத்துள்ளார். ஏழை எளிய மாணவர்களின் கல்வி மற்றும் பசிப்பிணியைப் போக்கும் நோக்கில் இந்தச் சிறப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது1
- சித்தையன் கோட்டையில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அன்னதானம் என்னும் கந்தூரி விழா நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தையன் கோட்டையில் மறைந்த முன்னாள் இஸ்லாமிய பெரியார் முஹையதீன் ஆண்டவர் அவர்களை நினைவு கூறும் விதமாக பகுதிவாழ் இஸ்லாமிய பொதுமக்கள் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் அன்னதானம் வழங்கி சந்தனக்கூடு என்னும் உரூஸ்விழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதனைத் தொடர்ந்து புதன்கிழமை நாளை இரவு சந்தனக்கூடு என்னும் உரூஸ் விழா நடைபெற இருப்பதை தொடர்ந்து இன்று விழா கமிட்டியாளர்கள் மற்றும் ஜமாத் தலைவர்கள் ஒருங்கிணைந்து சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதானம் என்னும் கந்தூரி விழா நடைபெற்றது. இதில் சுமார் 5000 திற்கும் மேற்பட்ட அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டு தாங்கள் கொண்டு வந்த பாத்திரங்களில் விழா கமிட்டியாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவுகளை மன மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.1
- ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 4 நாள் குட்டி யானை - மக்களின் நெஞ்சை உருக்கிய மீட்பு! மேற்கு வங்கத்தில் தீஸ்தா ஆற்றின் சீறிப்பாயும் வெள்ளத்தில் தத்தளித்த 4 நாளேயான பச்சிளம் குட்டி யானை, உயிருக்குப் போராடிய அந்தப் பிஞ்சின் அவஸ்தை கண்டு கரையில் நிற்க முடியாமல், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் படகை எடுத்து ஆற்றில் விரைந்தனர் இரக்க உள்ளம் கொண்ட உள்ளூர் மீனவர்கள். தைரியத்தோடும், தாய்மை உணர்வோடும் அந்தப் பிஞ்சு உயிரை மீட்டெடுத்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மருத்துவ சிகிச்சைக்குப் பின், கண்ணீரோடு காத்திருந்த தாய் யானையிடம் குட்டி ஒப்படைக்கப்பட்டது. தன் குட்டியைக் கண்டதும் தாய் யானை ஓடிவந்து துதிக்கையால் அணைத்து, பாசத்தோடு பாலூட்டிய காட்சி காண்போர் நெகிழ்ந்தனர்1
- விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆவின் நிறுவனத்தில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆய்வு. தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் பள்ளிகள், மருத்துவமனைகள், அம்மா உணவகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வுகள் நடத்தி குறைகளை தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை சாலையில் அமைந்துள்ள ஆவின் நிறுவனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆய்வு மேற்கொண்டார். இதில் விவசாயிகளிடமிருந்து பெறக்கூடிய பால் எவ்வாறு தரம் பிரிக்கப்படுகிறது, மேலும் பால் எவ்வாறு பதப்படுத்தப்படுகிறது,ஆவின் மூலம் தயாரிக்கப்படக் கூடிய உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். மாவட்டம் முழுவதும் உள்ள ஆவின் நிலையங்களுக்கு தலைமை இடமான ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாகவும் இதனால் தினமும் 12000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாகவும் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக நீரை விலைக்கு வாங்கும் சூழ்நிலை உள்ளதால் ஆவின் நிலையத்திற்குள் நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை வைத்த நிலையில் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரியை அலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக புதிதாக போர்வெல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் உலகப் புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் நெய் ,பட்டர் உள்ளிட்டஆவின் பொருட்கள் தரமானதாக மக்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் எந்த ஒரு உதவியும் என்றாலும் செய்து தர தயாராக உள்ளதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.1
- தேனி மாவட்டம் வருசநாடு மேகமலை வெள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஆறு மாதம் நீரின்றி வறண்டு கிடந்த மூல வைகையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு. மழை வெள்ளம் குறைந்த நிலையில் வருஷநாடு பகுதியில் சிறுவர்கள் 5 மாதம் வரண்டு கிடந்த ஆற்றில் நீர்வரத்து தொடங்கியதால் உற்சாக குளியல் இட்டு மகிழ்ந்த வீடியோ காட்சிகள்* தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த ஓரிரு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மலை அடிவாரப் பகுதிகளான வருஷநாடு மேகமலை வெள்ளிமலை பகுதிகளில் கடந்த இரண்டு நாட்கள் பெய்த கனமழை காரணமாக கடந்த 5 மாதமாக வைகை ஆற்றின் முக்கிய நீர் பிடிப்பாக விளங்கும் மூல வைகை ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. தற்பொழுது மழை குறைந்து இப்பகுதியில் நீர்வரத்து குறைந்துள்ளதால் தங்கம்மாள்புரம் பகுதியில் உள்ள மூல வைகை ஆற்றுப்பகுதியில் உள்ளூர் கிராமத்து சிறுவர்கள் உற்சாக குளியல் இட்டு மகிழ்ந்தனர். ஆறு மாத காலமாக முற்றிலும் நீரின்றி வெறும் மணல் மட்டுமே கிடந்த மூல வைகை ஆற்றில் தற்போது மழை காரணமாக நீர்வரத்து தொடங்கிய நிலையில் உள்ளூர் சிறுவர்கள் ஆரவாரமாக மகிழ்ச்சியுடன் உற்சாக குளியல் இட்டு மகிழ்ந்தனர். இதனை இருந்து சிறுவர்கள் வேடிக்கை பார்க்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.1
- *தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் குழுவினர் திடீர் சோதனை* தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தேனி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மற்றும் குற்ற தடுப்புத்துறை அதிகாரிகள் 8 பேர் கொண்ட குழுவினர் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள ஊராட்சி ஆணையாளர் அறை, பொறியாளர் குழுவினரின் அறை மற்றும் பணியாளர்களின் அறை உள்ளிட்ட பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. தொடர்ச்சியாக லஞ்சப்பண பரிமாற்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகரித்து வந்ததாக குற்றச்சாட்டு வந்ததன் அடிப்படையில் இந்த திடீர் சோதனை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளனர். ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் கிராம ஊராட்சி ஆணையாளர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் குழுவினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருமே பணியில் இருக்கும் போது திடீரென்று நடைபெற்று வரும் இந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினரின் சோதனை சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோதனையில் பணம் ஏதும் பொருட்கள் கைப்பற்ற படுகிறதா என்பது சோதனை முடிவில் தெரியவரும்.1
- ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குழுவினர் திடீர் சோதனை *ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குழுவினர் திடீர் சோதனை* தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தேனி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மற்றும் குற்ற தடுப்புத்துறை அதிகாரிகள் 8 பேர் கொண்ட குழுவினர் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள ஊராட்சி ஆணையாளர் அறை, பொறியாளர் குழுவினரின் அறை மற்றும் பணியாளர்களின் அறை உள்ளிட்ட பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.தொடர்ச்சியாக லஞ்சப்பண பரிமாற்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகரித்து வந்ததாக குற்றச்சாட்டு வந்ததன் அடிப்படையில் இந்த திடீர் சோதனை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளனர் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் கிராம ஊராட்சி ஆணையாளர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் குழுவினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருமே பணியில் இருக்கும் போது திடீரென்று நடைபெற்று வரும் இந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனை சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சோதனையில் பணம் ஏதும் பொருட்கள் கைப்பற்ற படுகிறதா என்பது சோதனை முடிவில் தெரியவரும்.1
- தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு மின்விளக்கு பழுதடைந்துள்ளதால் அவளியாக செல்லும் வாகன ஓட்டிகள் நோயாளிகள் சிரமம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது தேனி மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதியில் இருந்து நாள்தோறும் ஏராளமான இரவு பகல் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர் இந்நிலையில் இரவு நேரங்களில் மருத்துவமனை முன்பு உள்ள உயர்மின் கோபுர விளக்கு பல மாதங்களுக்கு முன்பு பழுதடைந்து இதுவரை சரி செய்யாமல் அரசு மருத்துவமனை முன்பு இருள் சூழ்ந்து காணப்படுகிறது இதனால் அவளியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாலும் மேலும் இரவு நேரங்களில் வரும் நோயாளிகள் இருளில் அச்சத்துடன் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர் இதனால் மின்விளக்கு சரி செய்யுமாறு பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என நோயாளிகள் மற்றும் சமூக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர் தற்போது தமிழக வெற்றிக்கழக அரசு மக்களுக்கான ஆட்சியை செய்து வருவோம் என தெரிவிக்கும் நிலையில் இது போன்ற மக்கள் அலட்சியப் போக்கையும் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரத்தில் உள்ள எம்எல்ஏக்கள் மெத்தனப் போக்கில் தங்கள் சொந்த வேலைகளை மட்டுமே செய்து வருவதாகவும் மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்தாத எம்எல்ஏக்கள் அரசு அதிகாரிகள் அலட்சியத்துடன் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்1