ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குழுவினர் திடீர் சோதனை *ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குழுவினர் திடீர் சோதனை* தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தேனி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மற்றும் குற்ற தடுப்புத்துறை அதிகாரிகள் 8 பேர் கொண்ட குழுவினர் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள ஊராட்சி ஆணையாளர் அறை, பொறியாளர் குழுவினரின் அறை மற்றும் பணியாளர்களின் அறை உள்ளிட்ட பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.தொடர்ச்சியாக லஞ்சப்பண பரிமாற்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகரித்து வந்ததாக குற்றச்சாட்டு வந்ததன் அடிப்படையில் இந்த திடீர் சோதனை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளனர் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் கிராம ஊராட்சி ஆணையாளர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் குழுவினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருமே பணியில் இருக்கும் போது திடீரென்று நடைபெற்று வரும் இந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனை சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சோதனையில் பணம் ஏதும் பொருட்கள் கைப்பற்ற படுகிறதா என்பது சோதனை முடிவில் தெரியவரும்.
ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குழுவினர் திடீர் சோதனை *ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குழுவினர் திடீர் சோதனை* தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தேனி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மற்றும் குற்ற தடுப்புத்துறை அதிகாரிகள் 8 பேர் கொண்ட குழுவினர் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள ஊராட்சி ஆணையாளர் அறை, பொறியாளர் குழுவினரின் அறை மற்றும் பணியாளர்களின் அறை உள்ளிட்ட பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.தொடர்ச்சியாக லஞ்சப்பண பரிமாற்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகரித்து வந்ததாக குற்றச்சாட்டு வந்ததன் அடிப்படையில் இந்த திடீர் சோதனை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளனர் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் கிராம ஊராட்சி ஆணையாளர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் குழுவினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருமே பணியில் இருக்கும் போது திடீரென்று நடைபெற்று வரும் இந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனை சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சோதனையில் பணம் ஏதும் பொருட்கள் கைப்பற்ற படுகிறதா என்பது சோதனை முடிவில் தெரியவரும்.
- தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு மின்விளக்கு பழுதடைந்துள்ளதால் அவளியாக செல்லும் வாகன ஓட்டிகள் நோயாளிகள் சிரமம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது தேனி மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதியில் இருந்து நாள்தோறும் ஏராளமான இரவு பகல் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர் இந்நிலையில் இரவு நேரங்களில் மருத்துவமனை முன்பு உள்ள உயர்மின் கோபுர விளக்கு பல மாதங்களுக்கு முன்பு பழுதடைந்து இதுவரை சரி செய்யாமல் அரசு மருத்துவமனை முன்பு இருள் சூழ்ந்து காணப்படுகிறது இதனால் அவளியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாலும் மேலும் இரவு நேரங்களில் வரும் நோயாளிகள் இருளில் அச்சத்துடன் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர் இதனால் மின்விளக்கு சரி செய்யுமாறு பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என நோயாளிகள் மற்றும் சமூக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர் தற்போது தமிழக வெற்றிக்கழக அரசு மக்களுக்கான ஆட்சியை செய்து வருவோம் என தெரிவிக்கும் நிலையில் இது போன்ற மக்கள் அலட்சியப் போக்கையும் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரத்தில் உள்ள எம்எல்ஏக்கள் மெத்தனப் போக்கில் தங்கள் சொந்த வேலைகளை மட்டுமே செய்து வருவதாகவும் மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்தாத எம்எல்ஏக்கள் அரசு அதிகாரிகள் அலட்சியத்துடன் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்1
- ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 4 நாள் குட்டி யானை - மக்களின் நெஞ்சை உருக்கிய மீட்பு! மேற்கு வங்கத்தில் தீஸ்தா ஆற்றின் சீறிப்பாயும் வெள்ளத்தில் தத்தளித்த 4 நாளேயான பச்சிளம் குட்டி யானை, உயிருக்குப் போராடிய அந்தப் பிஞ்சின் அவஸ்தை கண்டு கரையில் நிற்க முடியாமல், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் படகை எடுத்து ஆற்றில் விரைந்தனர் இரக்க உள்ளம் கொண்ட உள்ளூர் மீனவர்கள். தைரியத்தோடும், தாய்மை உணர்வோடும் அந்தப் பிஞ்சு உயிரை மீட்டெடுத்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மருத்துவ சிகிச்சைக்குப் பின், கண்ணீரோடு காத்திருந்த தாய் யானையிடம் குட்டி ஒப்படைக்கப்பட்டது. தன் குட்டியைக் கண்டதும் தாய் யானை ஓடிவந்து துதிக்கையால் அணைத்து, பாசத்தோடு பாலூட்டிய காட்சி காண்போர் நெகிழ்ந்தனர்1
- சென்னையில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்டத்தை தொடங்கினார் நடிகர் ஜோசப் விஜய் பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளி மதிய உணவு திட்டத்தை, இன்று சென்னையில் நடிகர் ஜோசப் விஜய் அவர்கள் மீண்டும் தொடங்கி வைத்துள்ளார். ஏழை எளிய மாணவர்களின் கல்வி மற்றும் பசிப்பிணியைப் போக்கும் நோக்கில் இந்தச் சிறப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது1
- விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆவின் நிறுவனத்தில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆய்வு. தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் பள்ளிகள், மருத்துவமனைகள், அம்மா உணவகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வுகள் நடத்தி குறைகளை தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை சாலையில் அமைந்துள்ள ஆவின் நிறுவனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆய்வு மேற்கொண்டார். இதில் விவசாயிகளிடமிருந்து பெறக்கூடிய பால் எவ்வாறு தரம் பிரிக்கப்படுகிறது, மேலும் பால் எவ்வாறு பதப்படுத்தப்படுகிறது,ஆவின் மூலம் தயாரிக்கப்படக் கூடிய உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். மாவட்டம் முழுவதும் உள்ள ஆவின் நிலையங்களுக்கு தலைமை இடமான ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாகவும் இதனால் தினமும் 12000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாகவும் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக நீரை விலைக்கு வாங்கும் சூழ்நிலை உள்ளதால் ஆவின் நிலையத்திற்குள் நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை வைத்த நிலையில் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரியை அலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக புதிதாக போர்வெல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் உலகப் புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் நெய் ,பட்டர் உள்ளிட்டஆவின் பொருட்கள் தரமானதாக மக்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் எந்த ஒரு உதவியும் என்றாலும் செய்து தர தயாராக உள்ளதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.1
- Post by Eswarikumar ஈஸ்வரி ஈஷா ஈஷா செல்லப் பெயர் ஈஷா1
- தென்காசி மாவட்டம் பொட்டல் புதூர் பள்ளிவாசல் பத்தாம் இரவு கொடியேற்றம் நிகழ்ச்சி இன்று நடந்தது அதனை முன்னிட்டு மேளதாளம் முழங்க ஊர்வலம் நடந்தது தொடர்ந்து சிறப்பு தொழுகை நடைபெற்றது இதில் திரளானோர் கலந்து கொண்டனர்1
- தேனி பங்களா மேட்டில் தமிழர் தேசம் கட்சி சார்பில் வருசநாடு மலை கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிராக மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது தேனி மாவட்ட தமிழர் தேசம் கட்சி மற்றும் தென் மண்டலம் சார்பில் தேனி மதுரை சாலை பங்களா மேட்டில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நிறுவனர் செல்வகுமார் தலைமையேற்று சிறப்புரை ஆற்றினார் ஆர்ப்பாட்டத்தில் வீர முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் நடராஜன் பூசாரி தமிழர் தேசம் கட்சி மாநில அமைப்பு செயலாளர் மகேஸ்வரன் மற்றும் பூமி அம்பலம் மற்றும் மாநில மருத்துவர் அணி செயலாளர் அன்பு எழில் தமிழர் தேச இளைஞர் பேரவை நிர்வாக மாநில செயலாளர் செல்லப்பாண்டி தேனி மேற்கு மாவட்ட செயலாளர் தங்கத்துரை கிழக்கு மாவட்ட செயலாளர் கருப்பையா மற்றும் மாவட்ட பொறுப்பாளர் மாரிமுத்து மாவட்ட மகளிர் அணி வாழ வந்தால் மாவட்ட இளைஞரணி முருகன் கடமலை மயிலை ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன் ஆண்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் அழகுமுத்து போடி ஒன்றிய செயலாளர் குஞ்சன் மற்றும் வருசநாடு மேகமலை உள்ளிட்ட 102 கிராம மக்கள் என ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் வருசநாடு கடமலை மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட 102 மலை கிராம மக்களைச் சேர்ந்த மூத்த குடிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் ஸ்ரீவல்லிபுத்தூர் மேகமலை புலிகள் வன காப்பகம் என்ற பெயரில் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் உச்சநீதிமன்றமும் வனத்துறையும் ஈடுபட்டு வருகிறது இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடந்தது மேலும் இந்த மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீவல்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக எல்லையை மறு வரையறை செய்து வனத்துறையிடமிருந்து வன மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது1
- தேனி. தவெக ஆட்சியில் அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லையா, சின்னமனூர் டவுன் சர்வேயர் மீது தவெக நகர இணைச் செயலாளர் நிர்வாகி உட்பட 3 பேர் கஞ்சா, மது போதையில் தாக்குதல் , வழக்கு பதிவு செய்யாத காவல்துறை கண்டித்து சர்வேயர்கள் கண்டன ஆர்ப்பாட்டம், தேனி மாவட்டம் சின்னமனூரில் நில அளவை பணிக்கு சென்ற அரசு டவுன் சர்வேயர் மீது தமிழக வெற்றிக் கழக( தவெக )நகர இணைச் செயலாளர் உள்பட ந உட்பட 3 பேர் கஞ்சா மற்றும் மது போதையில் கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் காவல்துறை வழக்கு பதிவு செய்யாததை கண்டித்து தேனி மாவட்ட நில அளவையர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா, சின்னமனூர் நகராட்சி டவுன் சர்வேயர் ஜெகன் குமார் மற்றும் அவரது உதவியாளர் இருவரும் நேற்று மதியம் சுமார் 3 மணி அளவில் சின்னமனூரில் ஆதிலால் லாட்ஜ் பின்புறம் உள்ள அண்ணாமலை நகர் பகுதியில் வழக்கமான நில அளவை பணிக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் சந்திரன், செல்வராஜ் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் இணை செயலாளர் ரஞ்சித் குமார் உள்பட மூன்று பேர் சேர்ந்து, நில அளவை பணியை தடுத்து நிறுத்தி, சர்வேயர் ஜெகன் குமாரை கஞ்சா மற்றும் மது போதையில் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் சர்வேயர் ஜெகன் குமார் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர் இந்த சம்பவம் தொடர்பாக சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், இதுவரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தவெக ஆட்சியில் ஆளும் கட்சி நிர்வாகி சம்பந்தப்பட்டிருப்பதால் காவல்துறை நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும், அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளதாகவும் அரசு ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக காவல்துறையின் இந்த மெத்தன போக்கை கண்டித்து தேனி மாவட்டம் முழுவதும் உள்ள நில அளவையர்கள், ஊழியர்கள் ஒன்று சேர்ந்து இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், சர்வேயர் ஜெகன் குமாரை தாக்கிய 3 பேர் மீதும் உடனடியாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். பணியில் இருந்த அரசு ஊழியரை தாக்கியவர்கள் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் பிரிவில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அரசு அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.1
- தென்காசி மாவட்டம் செங்கோட்டை வாஞ்சிநாதன் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது இவ்விழாவிற்கு முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் நூலகர் ராமசாமி, மற்றும் சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்1