Shuru
Apke Nagar Ki App…
திண்டுக்கல் ஓஎம்ஆர் பட்டியில் மாநகராட்சி சார்பில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
RAJA news
திண்டுக்கல் ஓஎம்ஆர் பட்டியில் மாநகராட்சி சார்பில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
More news from Dindigul and nearby areas
- திண்டுக்கல் ஓஎம்ஆர் பட்டியில் மாநகராட்சி சார்பில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது1
- சித்தையன் கோட்டையில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அன்னதானம் என்னும் கந்தூரி விழா நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தையன் கோட்டையில் மறைந்த முன்னாள் இஸ்லாமிய பெரியார் முஹையதீன் ஆண்டவர் அவர்களை நினைவு கூறும் விதமாக பகுதிவாழ் இஸ்லாமிய பொதுமக்கள் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் அன்னதானம் வழங்கி சந்தனக்கூடு என்னும் உரூஸ்விழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதனைத் தொடர்ந்து புதன்கிழமை நாளை இரவு சந்தனக்கூடு என்னும் உரூஸ் விழா நடைபெற இருப்பதை தொடர்ந்து இன்று விழா கமிட்டியாளர்கள் மற்றும் ஜமாத் தலைவர்கள் ஒருங்கிணைந்து சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதானம் என்னும் கந்தூரி விழா நடைபெற்றது. இதில் சுமார் 5000 திற்கும் மேற்பட்ட அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டு தாங்கள் கொண்டு வந்த பாத்திரங்களில் விழா கமிட்டியாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவுகளை மன மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.1
- ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 4 நாள் குட்டி யானை - மக்களின் நெஞ்சை உருக்கிய மீட்பு! மேற்கு வங்கத்தில் தீஸ்தா ஆற்றின் சீறிப்பாயும் வெள்ளத்தில் தத்தளித்த 4 நாளேயான பச்சிளம் குட்டி யானை, உயிருக்குப் போராடிய அந்தப் பிஞ்சின் அவஸ்தை கண்டு கரையில் நிற்க முடியாமல், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் படகை எடுத்து ஆற்றில் விரைந்தனர் இரக்க உள்ளம் கொண்ட உள்ளூர் மீனவர்கள். தைரியத்தோடும், தாய்மை உணர்வோடும் அந்தப் பிஞ்சு உயிரை மீட்டெடுத்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மருத்துவ சிகிச்சைக்குப் பின், கண்ணீரோடு காத்திருந்த தாய் யானையிடம் குட்டி ஒப்படைக்கப்பட்டது. தன் குட்டியைக் கண்டதும் தாய் யானை ஓடிவந்து துதிக்கையால் அணைத்து, பாசத்தோடு பாலூட்டிய காட்சி காண்போர் நெகிழ்ந்தனர்1
- ஒன்றிய அரசு புதிதாக கொண்டு வந்த ஆன்லைன் பண பரிமாற்றத்திற்கான கட்டனத்தை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 15 தீர்மானங்களை வணிகர் சங்க பேரமைப்பு செயற்குழு கூட்டத்தில் தீர்மானம். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தேனி மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. பழனிச்செட்டிபட்டியில் உள்ள தனியார் விடுதியில் மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வருசநாடு மேகமலை பகுதி மக்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும். ஃபோன் பே, G pay போன்ற ஆன்லைன் பண பரிவர்த்தனைக்கு ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும், தேனி நகர் பகுதியில் கிடப்பில் உள்ள இரயில்வே மேம்பால பணிகளை நிறைவேற்ற வேண்டும், வரும் உள்ளாட்சி தேர்தலில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக போட்டியிட உள்ளதாகவும் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தேனி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேனி, போடி, கம்பம், பெரியகுளம், ஆண்டிபட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 200 க்கு மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டனர்.1
- கரூர் மாவட்ட ஆட்சியர் காலை உணவு திட்டத்தை தொடங்கினார். கரூர் மாவட்டத்துக்கு இன்று செப்டம்பர் : 22 காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், 21,487 கரூர் மாவட்ட மாணவ, மாணவியர் பயன் பெறுவர். தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆட்சியில், 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்பட்டு, காமராஜர் காலை உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை, முதல்வர் ஜோசப் விஜய் காணொளி காட்சியின் மூலமாக தொடங்கி வைத்தார் இதன்படி கரூர் மாநகராட்சியில், 30 பள்ளிகளில், 2,936 மாணவர்கள், குளித்தலை நகராட்சியில், 6 பள்ளிகளில், 805 பேர், பள்ளப்பட்டி நகராட்சியில், 9 பள்ளிகளில், 1,439 பேர், புகழூர் நகராட்சியில், 7 பள்ளிகளில், 407 பேர் உள்ளனர். கரூர் ஊராட்சி ஒன்றியத்தில், 19 பள்ளிகளில், 919 மாணவர், தான்தோன்றிமலையில், 26 பள்ளிகளில், 1,871 பேர், அரவக்குறிச்சியில், 16 பள்ளிகளில், 818 பேர், க.பரமத்தியில், 28 பள்ளிகளில், 915 பேர், குளித்தலையில், 28 பள்ளிகளில், 3,047 பேர், கிருஷ்ணராயபுரத்தில், 18 பள்ளிகளில், 1,853 பேர், கடவூரில், 34 பள்ளிகளில், 2,962 பேர் உள்பட மொத்தம், 310 பள்ளிகளில் பயிலும், 21,487 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் இருந்தனர் இந்த நிகழ்ச்சியில் காலை உணவு திட்டத்தை மாணவ மாணவியருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்கள் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் முத்துக்குமரன். கரூர் கிருஷ்ணாபுரம் சட்டமன்ற உறுப்பினர் சத்யா அரசுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்1
- ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குழுவினர் திடீர் சோதனை *ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குழுவினர் திடீர் சோதனை* தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தேனி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மற்றும் குற்ற தடுப்புத்துறை அதிகாரிகள் 8 பேர் கொண்ட குழுவினர் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள ஊராட்சி ஆணையாளர் அறை, பொறியாளர் குழுவினரின் அறை மற்றும் பணியாளர்களின் அறை உள்ளிட்ட பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.தொடர்ச்சியாக லஞ்சப்பண பரிமாற்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகரித்து வந்ததாக குற்றச்சாட்டு வந்ததன் அடிப்படையில் இந்த திடீர் சோதனை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளனர் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் கிராம ஊராட்சி ஆணையாளர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் குழுவினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருமே பணியில் இருக்கும் போது திடீரென்று நடைபெற்று வரும் இந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனை சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சோதனையில் பணம் ஏதும் பொருட்கள் கைப்பற்ற படுகிறதா என்பது சோதனை முடிவில் தெரியவரும்.1
- காதலித்து கலப்பு திருமணம், விட்டுச்சென்ற காதலன், காதலன் மற்றும் அவர்களின் பெற்றோரை கைது செய்ய வலியுறுத்தி பெண் புகார். கரூர் மாவட்டம் குளித்தலை தாலுக்கா காக்கையம் பட்டியை சேர்ந்தவர் முத்துலட்சுமி இவர் காணப்பட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக்ல் படித்து வந்தபோது அதே கல்லூரியில் படித்து வந்த கார்த்திக் என்பவர் உடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் இருப்பினும் கார்த்திக் முத்துலட்சுமியை சென்னைக்கு சென்று திருமணம் செய்து ஒரு வருடம் இருவரும் வசித்து வந்துள்ளனர். மேலும் முத்துலட்சுமி கர்ப்பமாக இருந்துள்ள நிலையில் கார்த்திக்கின் பெற்றோர்கள் தொடர்பு கொண்டு முத்துலட்சுமியின் கருவை கலைத்துவிட்டு எங்களுடன் வந்துவிடு என கூறியுள்ளனர். கார்த்தி முத்துலட்சுமி கருவை கலைத்துவிட்டு தனியாக விட்டுவிட்டு பெற்றவுடன் சென்று விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துலட்சுமி கார்த்திக்கை தொடர்பு கொண்ட போது கார்த்திக்கின் பெற்றோர் கொலை மிரட்டல் கொடுத்துள்ளனர். அவரின் தாய் தந்தையின் மீது குளித்தலை மகளிர் காவல் நிலையத்தில் முத்துலட்சுமி புகார் கொடுத்ததன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் மீது எஸ்சிஎஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மூவர் மீதும் FIR பதிவு செய்தும் இன்னும் கைது செய்யபடததால் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் புகார் மனு அளித்தார்.1
- திண்டுக்கல் முத்தலம்பட்டி ஐயங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள குளங்கள் தற்போது பெய்த மழையில் நிறைந்துள்ளது குளங்கள் இருந்து வெளியேறும் நீர் செல்ல போதிய கழிவுநீர் வடிகால் இல்லாததால் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி1