Shuru
Apke Nagar Ki App…
செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை குடை உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் எடுத்துச் செல்ல பொது மக்களுக்கு அறிவிப்பு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்திற்குட்பட்ட செங்கம் தலைவன் நாயக்கன் பேட்டை முன்னுர் மங்கலம் கொட்டாவூர் மேல் வணக்கம் பாடி மேல் பகுதியில் செம சமுத்திரம் மேல் பள்ளிப்பட்டு மேல் ரவந்தவாடி நீப்புத்துறை மேல் சங்கம் அக்கறை பாளையம் அந்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது எனவே பொதுமக்கள் மழையில் தங்களை பாதுகாத்துக் கொள்ள குடை உள்ளிட்ட கவசங்களை எடுத்துச் செல்ல பேரிடர் மீட்பு குழுவின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
கலாம் எக்ஸ்பிரஸ் நியூஸ்
செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை குடை உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் எடுத்துச் செல்ல பொது மக்களுக்கு அறிவிப்பு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்திற்குட்பட்ட செங்கம் தலைவன் நாயக்கன் பேட்டை முன்னுர் மங்கலம் கொட்டாவூர் மேல் வணக்கம் பாடி மேல் பகுதியில் செம சமுத்திரம் மேல் பள்ளிப்பட்டு மேல் ரவந்தவாடி நீப்புத்துறை மேல் சங்கம் அக்கறை பாளையம் அந்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது எனவே பொதுமக்கள் மழையில் தங்களை பாதுகாத்துக் கொள்ள குடை உள்ளிட்ட கவசங்களை எடுத்துச் செல்ல பேரிடர் மீட்பு குழுவின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
More news from தமிழ்நாடு and nearby areas
- செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை குடை உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் எடுத்துச் செல்ல பொது மக்களுக்கு அறிவிப்பு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்திற்குட்பட்ட செங்கம் தலைவன் நாயக்கன் பேட்டை முன்னுர் மங்கலம் கொட்டாவூர் மேல் வணக்கம் பாடி மேல் பகுதியில் செம சமுத்திரம் மேல் பள்ளிப்பட்டு மேல் ரவந்தவாடி நீப்புத்துறை மேல் சங்கம் அக்கறை பாளையம் அந்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது எனவே பொதுமக்கள் மழையில் தங்களை பாதுகாத்துக் கொள்ள குடை உள்ளிட்ட கவசங்களை எடுத்துச் செல்ல பேரிடர் மீட்பு குழுவின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது2
- பெட்ரோல் பங்கில் மேனேஜரின் ரூம் கண்ணாடியை உடைத்து 1.90 லட்சம் கொள்ளை! மர்ம நபர்கள் கைவரிசை! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கோணப்பட்டு பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் நாட்றம்பள்ளி அடுத்த திரியாலம் பகுதியில் ஈசார் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு பங்கு ஊழியர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது அந்த மர்ம நபர்கள் பங்க் மேனேஜர் நரசிம்மன் என்பவரின் ரூம் கண்ணாடியை உடைத்து உள்ளே கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை ஆட்டைய போட்டுச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அறிந்த மேனேஜர் நரசிம்மன் இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து திருட்டு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் பெட்ரோல் பங்கில் பணம் இருப்பதை அறிந்து மேனேஜரின் கண்ணாடியை உடைத்து ஒரு லட்சத்து 90 ஆயிரம் பணத்தை திருடி சென்ற சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.1
- திருப்பத்தூர் அருகே தொடர் கன மழை காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து ஓடும் நீரால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு நீர்வீழ்ச்சியில் அலைமோதி கொண்டு குளிக்கும் பொதுமக்கள்* *திருப்பத்தூர் அருகே தொடர் கன மழை காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து ஓடும் நீரால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு நீர்வீழ்ச்சியில் அலைமோதி கொண்டு குளிக்கும் பொதுமக்கள்* திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் திருப்பத்தூர் அடுத்த ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் நீர் அதிகரித்து நீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. மேலும் இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் அலைமோதிக்கொண்டு நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். மேலும் இந்த ஜலக்காம்பாறை நீர்வீழ்ச்சிக்கு திருப்பத்தூர் மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்து, தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து நீர்வீழ்ச்சியில் குளித்துவிட்டு அங்கிருக்கும் முருகப்பெருமானை வணங்கி செல்வது வழக்கம் மேலும் சிறுவர்களின் பொழுது போக்கிற்காக அங்கு சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெயிலின் தாக்கம் அதிகரித்து நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்று குறைந்தே காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீர்வீழ்ச்சியில் நீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது.இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மேலும் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நாளுக்கு நாள் சுற்றுலாப் பயணிகளின் வருகை இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.1
- புத்த குமார் என்பவரின் இல்லத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் செட்டியப்பனூர் அடுத்த துறை ஏரி பகுதியில் வசிக்கும் புத்த குமார் என்பவரின் இல்லத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தென்னிந்திய சாக்கிய பௌத்த சங்க தலைவர் புத்தபிக்கு ஜெயாசீலர் அவர்கள் பஞ்சசீல கொடியினை ஏற்றி வைத்து மழைக்கால புதிய ஆடையை தானமாக பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து 1)புத்தர் ஐந்து சீடருக்கு தீட்சை வழங்கியது 2)அசோக சக்கரவர்த்தி பௌத்த பயிற்சி மேற்கொண்டது 3) அண்ணல் அம்பேத்கர் பௌத்தம் தழுவியது உள்ளிட்ட விழாவினை சிறப்பிக்கும் வகையில் அசோகர் ஆயுதங்களுக்கு பூஜை செய்த தினத்தினை ஆயுத பூஜை என்றும் அவர் பௌத்த மதம் மாறியதை அசோக விஜயதசமி விழா என்றும் சிறப்பிக்கும் வகையிலேயே ஆண்டு தோறும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழா சிறப்பாக நடைபெற்று வருவதாக அவர் கூறினார் புத்தரின் தம்மம் பற்றியும் அம்பேத்கர் சட்டம் இயற்றிய விதம் பற்றியும் பௌத்த முறைகளை சிடருக்கு எடுத்துரைத்தார்1
- கோளப்பன் ஏரி, கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் முழுமையாக நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஒன்றியத்தில் உள்ள கோளப்பன் ஏரி, கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் முழுமையாக நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் மழைப்பொழிவு தாமதமானதை அடுத்து, ஜமுனாமரத்தூர் உள்ளாட்சித் துறையினர் ஏரியைத் தூர்வாரி அகலப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர். கோளப்பன் ஏரிக்குச் செல்லும் முக்கிய வாய்க்கால்கள் மற்றும் உபரிநீர் வெளியேறும் வாய்க்கால்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டதால், தற்போதைய கனமழையின் காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து இந்த நிலையை எட்டியுள்ளது. இந்தச் செய்தி குறித்த முக்கியத் தகவல்கள்: • இடம்: கோளப்பன் ஏரி, ஜமுனாமரத்தூர், ஜவ்வாது மலை ஒன்றியம், திருவண்ணாமலை மாவட்டம். • முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மழை தாமதமான காலத்தில் உள்ளாட்சித் துறையினரால் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு அகலப்படுத்தப்பட்டன. • தற்போதைய நிலை: தூர்வாரப்பட்டதால் தங்குதடையின்றி நீர் வந்து சேர்ந்து ஏரி நிரம்பியதுடன், உபரிநீரும் பாதுகாப்பாக வெளியேறி வருகிறது. உள்ளாட்சித் துறையின் இந்த முன்கூட்டிய தூர்வாரும் பணியால், மழைநீர் வீணாகாமல் ஏரிக்குச் சென்றடைந்ததுடன் அப்பகுதி மக்களுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.1
- *திருப்பத்தூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல்!* *பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது* திருப்பத்தூர் மாவட்டம். திருப்பத்தூரில் உள்ள ஆட்சியர் அலுவலகம் அருகே, திருப்பத்தூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியின்படி கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், எனவும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் நோக்கில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,் தமிழக விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலாளர் முல்லை தலைமையில் போராட்டம் நடைப்பெற்றது, இந்த போராட்டத்தில், திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்ட நிலையில், திடீரென போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், அவர்களை காவல்துறையினர் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.1
- கிருஷ்ணகிரி கனவா பட்டி அருகாமையில் இருந்து மலை மீது இருந்து இயற்கை எழில் மிகு கிருஷ்ணகிரி கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சி கிருஷ்ணகிரி நகரப் பகுதியில் இருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் மலை மீது இருந்து இன்று காலை மேகம் காணப்படுகிறது கிருஷ்ணகிரி நகரம் முழுவதும் மாவட்டம் முழுவதும் மேகமாக இருப்பது மூன்று நாட்களாக தொடர் மலை காரணமாக மழை சுற்றி உள்ள மலையில் உள்ள மரங்கள் கொடி செடி அனைத்தும் ஒரு மாதமாக தொடர்ந்து கடும் வெயில் காணப்பட்டது அனைத்து மரங்களும் காய்ந்து சொல் ஏற்பட்டது தற்போது மூன்று நாட்கள் தொடர்ந்து மழை பெய்தால் அனைத்து செடிகளும் மரங்களும் பச்சை நிறத்தில் கண்ணுக்கு எட்டி வரை காணப்படுகிறது மலை மீது இருந்து கிருஷ்ணகிரி நகரத்தை பார்ப்பதற்கு கண்ணுக்கு எட்டி வரை தென்னை மரம் மாமரம் மழை அருகாமையில் உள்ள பல்வேறு விதமான செடிகள் அனைத்தும் கண் கவரும் வகையில் பசுமையான காணப்படுகிறது தொடர் மழை காரணமாக மேட்டுப்பகுதியில் அனைத்தும் செடிகள் பசுமையா காணப்படுகிறது என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் கனவா பட்டி அருகாமையில் உள்ள மலை மீது கிருஷ்ணகிரி நகரை பார்ப்பதற்கு கண்ணுக்கு எட்டி வரை பசுமையாகவும் நகரம் முழுவதும் கண்ணுக்கு மகிழ்ச்சியான காணப்படுகிறது மனதில் எவ்வித கடினம் இருந்தால் கூட மலை மீது சுற்றிப் பார்ப்பதற்கு கண்ணுக்கு எட்டி வரை சுற்றும் மலையாக காணப்படுகிறது மேலும் சாலை அமைந்துள்ள ஏழு கனவா பட்டி அருகாமையில் இருந்து அவதானப்பட்டிஏரி படகு இல்லம் கண்ணுக்கு எட்டிய வரை பசுமையா காணப்படுகிறது அம்மாளை மீது கண்ணுக்கு எட்டிய வரை சுற்றி அனைத்து மலைகளும் கண்ணுக்கு எட்டி வரை பசுமையாகவும் மனதில் எவ்வித கடினம் இருந்தால் கூட பார்த்து மகிழ்ந்து மனதிற்கு இதமாக உள்ளது இதமான காற்று அருகாமையில் முருகன் கோயில் காணப்படுகிறது சாலை இருபுறமும் பசுமையா காணப்படுகிறது மல்லிப்பூ தோட்டங்கள் குண்டு மல்லி பூத்தோட்டங்கள் கண்ணுக்கு எட்டி வரை பூக்கள் காணப்படுகிறது இதனால் விவசாயிகளும் பூ வியாபாரிகளும் உற்பத்தியாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் நவராத்திரி விழா நேற்று நிறைவு பெற்றது இருப்பினும் விழா காலங்களில் பூக்கள் விலை அதிகமாக உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் மலை மீது இருந்து பெங்களூர் சேலம் தேசிய நெடுஞ்சாலை பார்ப்பதற்கு கண் சாலையில் செல்லும் வாகனம் அனைத்தும் காணப்படுகிறது மலைமிருந்து போக்குவரத்தை பார்ப்பதற்கு கண்ணுக்கு மனசுக்கும் விதமாக உள்ளதாக அங்கு விழுந்த பொதுமக்களும் பார்வையாளர்களும் தெரிவித்தனர்2
- நாட்றம்பள்ளி அருகே நள்ளிரவு பெட்ரோல் பங்க் அலுவலக கண்ணாடியை உடைத்து ரூபாய் இரண்டு லட்சத்து ஆராயிரம் பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்மநபர்கள் நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை *நாட்றம்பள்ளி அருகே நள்ளிரவு பெட்ரோல் பங்க் அலுவலக கண்ணாடியை உடைத்து ரூபாய் இரண்டு லட்சத்து ஆராயிரம் பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்மநபர்கள் நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை* திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சோமநாயக்கன்பட்டி பகுதியில் நாட்றம்பள்ளியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் ஸ்ரீ சத்திய நாராயணி ஏஜென்சி என்ற பெயரில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான ESSAR பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு பெட்ரோல் பங்கில் பணி முடித்துவிட்டு பெட்ரோல்பங்கை வழக்கம் போல மூடிவிட்டு வாட்ச்மேன் சிதம்பரம் மற்றும் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் ஊழியர் சதீஷ்குமார் ஆகிய இரண்டு பேரும் பெட்ரோல் பங்க் அலுவலகத்தில் தூங்கி கொண்டிருந்துள்ளனர். அப்போது நள்ளிரவு அங்கு வந்த மர்மநபர்கள் பெட்ரோல் பங்க் அலுவலகத்தின் கண்ணாடியை உடைத்து உள்ளே சென்று ரூபாய் 206000 பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர் உடனடியாக இதுகுறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் சண்முகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் சண்முகம் இது தொடர்பாக நாட்றம்பள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாட்றம்பள்ளி போலீசார் இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்ங்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறனர். மேலும் நள்ளிரவில் பெட்ரோல் பங்கில் அலுவலக கண்ணாடியை உடைத்து ரூபாய் 206000 பணத்தை மரமநபர்கள் கொள்ளை அடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.1