logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

பாலக்கோடு அருகே  சின்னாறு அணையிலிருந்து விவசாய பாசனத்திற்கு 140 நாட்களுக்கு வினாடி 400கன அடி தண்ணீரை மாவட்ட ஆட்சியர் சதீஷ் திறந்து வைத்தார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி கிராமத்தில் உள்ள சின்னாறு அணை நிரம்பியது. தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையேற்று அணையிலிருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் விவசாய பாசனத்திற்காக வலது புறகால்வாய் வழியாக வினாடிக்கு 400 கன அடி தண்ணீரை திறந்து வைத்து, மலர் தூவினார். இதில் பழைய ஆயக்கட்டு ஐந்து ஏரிகளுக்கும், புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு 140 நாட்களுக்கு திறக்கப்படும். இதன் மூலம் பஞ்சப்பள்ளி, பெரியானூர், போடிகுட்டப்பள்ளி, அத்திமுட்லு மாரண்டஅள்ளி, கொலசனஅள்ளி, பி.செட்டிஅள்ளி, ஜெர்த்தலாவ், பாலக்கோடு, குஜ்ஜரஅள்ளி, எர்ரனஅள்ளி, பேளாரஅள்ளி, சாமனூர் ஆகிய கிராமங்களில் உள்ள பழைய ஆயக்கட்டு பரப்பு 2626 ஏக்கர் மற்றும் புதிய ஆயக்கட்டு பரப்பு 1874 ஏக்கர் மொத்தம் 4500ஏக்கர் நிலம் பாசனவசதி பெறுகின்றன. மேலும் தண்ணீரை கிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சதீஷ் அறிவுறுத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன், பாரளுமன்ற உறுப்பினர் மணி மற்றும் பொதுபணித்துறை அதிகாரிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

1 day ago
user_Periyasamy
Periyasamy
Journalist Dharmapuri, Tamil Nadu•
1 day ago

பாலக்கோடு அருகே  சின்னாறு அணையிலிருந்து விவசாய பாசனத்திற்கு 140 நாட்களுக்கு வினாடி 400கன அடி தண்ணீரை மாவட்ட ஆட்சியர் சதீஷ் திறந்து வைத்தார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி கிராமத்தில் உள்ள சின்னாறு அணை நிரம்பியது. தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையேற்று அணையிலிருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் விவசாய பாசனத்திற்காக வலது புறகால்வாய் வழியாக வினாடிக்கு 400 கன அடி தண்ணீரை திறந்து வைத்து, மலர் தூவினார். இதில் பழைய ஆயக்கட்டு ஐந்து ஏரிகளுக்கும், புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு 140 நாட்களுக்கு திறக்கப்படும். இதன் மூலம் பஞ்சப்பள்ளி, பெரியானூர், போடிகுட்டப்பள்ளி, அத்திமுட்லு மாரண்டஅள்ளி, கொலசனஅள்ளி, பி.செட்டிஅள்ளி, ஜெர்த்தலாவ், பாலக்கோடு, குஜ்ஜரஅள்ளி, எர்ரனஅள்ளி, பேளாரஅள்ளி, சாமனூர் ஆகிய கிராமங்களில் உள்ள பழைய ஆயக்கட்டு பரப்பு 2626 ஏக்கர் மற்றும் புதிய ஆயக்கட்டு பரப்பு 1874 ஏக்கர் மொத்தம் 4500ஏக்கர் நிலம் பாசனவசதி பெறுகின்றன. மேலும் தண்ணீரை கிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சதீஷ் அறிவுறுத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன், பாரளுமன்ற உறுப்பினர் மணி மற்றும் பொதுபணித்துறை அதிகாரிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

More news from Tamil Nadu and nearby areas
  • தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசத்தி விநாயகர் ஆலயத்தில் சங்கடகர சதுர்த்தி விழா நடைபெற்றது இதில் விநாயகருக்கு 12 பொருட்களைக் கொண்டு பால் தயிர் இளநீர் தண்ணீர் தேன் பஞ்சாமிர்தம் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது
    1
    தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசத்தி விநாயகர் ஆலயத்தில் சங்கடகர சதுர்த்தி விழா நடைபெற்றது இதில் விநாயகருக்கு 12 பொருட்களைக் கொண்டு பால் தயிர் இளநீர் தண்ணீர் தேன் பஞ்சாமிர்தம் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது
    user_Periyasamy
    Periyasamy
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    3 hrs ago
  • தர்மபுரி நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ.76 லட்சம் மதிப்புள்ள திட்டப் பணிகளுக்கு நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தர்மபுரி நகராட்சி கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். நகராட்சி துணைத் தலைவர் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் சேகர் வரவேற்றார். வருவாய் ஆய்வாளர் மாதையன் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து பேசினார். கூட்டத்தில் தர்மபுரி நகராட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 4 பணி ஆய்வாளர்கள், 2 உதவி பொறியாளர்கள், 2 வரைபட வரைவாளர்கள், 2 பொதுப்பணி மேற்பார்வையாளர்கள் ஆகியோர் நகராட்சி கவுன்சிலர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். ஒவ்வொரு வார்டுக்கு யார் யார் பணி மேற்பார்வையாளர்கள் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது. மேலும் தர்மபுரி நகராட்சிக்கு புதியதாக நியமிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலர் எம்.கே. பெருமாள் மற்ற கவுன்சிலர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். தர்மபுரி நகரில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் தார் சாலை மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணி, பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி, கழிவுநீர் முறையாக வெளியேற வசதியாக சிறு பாலங்கள் அமைப்பது, நகராட்சி பள்ளிக்கூடங்கள் சீரமைக்கும் பணி மற்றும் குடிநீர் திட்ட பணிகள் ரூ.76 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல் என்பது உள்ளிட்ட மொத்தம் 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் வருவாய் அலுவலர் பிரகாஷ், சுகாதார அலுவலர் ராஜரத்தினம், நகர் நல அலுவலர் லட்சியவர்ணா, நகரமைப்பு அலுவலர் ஜெயவர்மன், துப்புரவு ஆய்வாளர்கள் சுசீந்திரன், ரமணசரண், கோவிந்தராஜன் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்
    1
    தர்மபுரி நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ.76 லட்சம் மதிப்புள்ள திட்டப் பணிகளுக்கு நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தர்மபுரி நகராட்சி கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். நகராட்சி துணைத் தலைவர் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தார்.  ஆணையாளர் சேகர் வரவேற்றார். வருவாய் ஆய்வாளர் மாதையன் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து பேசினார்.
கூட்டத்தில் தர்மபுரி நகராட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 4 பணி ஆய்வாளர்கள், 2 உதவி பொறியாளர்கள், 2 வரைபட வரைவாளர்கள், 2 பொதுப்பணி மேற்பார்வையாளர்கள் ஆகியோர் நகராட்சி கவுன்சிலர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். ஒவ்வொரு வார்டுக்கு யார் யார் பணி மேற்பார்வையாளர்கள் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது. மேலும் தர்மபுரி நகராட்சிக்கு புதியதாக நியமிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலர் எம்.கே. பெருமாள் மற்ற கவுன்சிலர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.
தர்மபுரி நகரில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் தார் சாலை மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணி, பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி, கழிவுநீர் முறையாக வெளியேற வசதியாக சிறு பாலங்கள் அமைப்பது, நகராட்சி பள்ளிக்கூடங்கள் சீரமைக்கும் பணி மற்றும் குடிநீர் திட்ட பணிகள் ரூ.76 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல் என்பது உள்ளிட்ட மொத்தம் 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் வருவாய் அலுவலர் பிரகாஷ், சுகாதார அலுவலர் ராஜரத்தினம், நகர் நல அலுவலர் லட்சியவர்ணா, நகரமைப்பு அலுவலர் ஜெயவர்மன், துப்புரவு ஆய்வாளர்கள் சுசீந்திரன், ரமணசரண், கோவிந்தராஜன் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்
    user_Raja
    Raja
    செய்தியாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • மேற்கு திமுக மாவட்ட கழக சார்பில் திராவிட பொங்கல் விழா நடைபெறுகிறது இவ்விழாவில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது
    1
    மேற்கு திமுக மாவட்ட கழக சார்பில் திராவிட பொங்கல் விழா நடைபெறுகிறது இவ்விழாவில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது
    user_G Krishnan
    G Krishnan
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    15 hrs ago
  • கிருஷ்ணகிரி அருகே உள்ளஹெக்பஞ்சத்தன் தர்காவில்அனைத்து சமுதாய மக்களுக்கு  நலத்திட்டஉதவி வழங்கும் விழா.
    1
    கிருஷ்ணகிரி அருகே உள்ளஹெக்பஞ்சத்தன் தர்காவில்அனைத்து சமுதாய மக்களுக்கு  நலத்திட்டஉதவி வழங்கும் விழா.
    user_FAYAZ
    FAYAZ
    Krishnagiri, Tamil Nadu•
    1 hr ago
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் என்கிற பெயரை மாற்றி நிதியை குறைத்து 100 நாள் வேலைத்திட்டத்தில் புதிய சட்டத்தை நிறைவேற்றி இருக்கும் பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சட்ட நகலை கிழித்தெறியும் போராட்டம் இன்று 6.1.2026 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் வெண்ணந்தூர் ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்றது.
    1
    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் என்கிற பெயரை மாற்றி நிதியை குறைத்து 100 நாள் வேலைத்திட்டத்தில் புதிய சட்டத்தை நிறைவேற்றி இருக்கும் பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சட்ட நகலை கிழித்தெறியும் போராட்டம் இன்று 6.1.2026 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் வெண்ணந்தூர் ஒன்றிய அலுவலகம் முன்பு  நடைபெற்றது.
    user_DHINESH KUMAR
    DHINESH KUMAR
    Architect ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    22 hrs ago
  • திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செலம்ப கவுண்டம் பாளையம்பகுதியில் விநாயகா மெட்ரிகுலேஷன் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து 30 பேர் பயணித்த நிலையில் ஐந்து பேருக்கு லேசான காயம்சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரணை* விநாயகா மெட்ரிகுலேஷன் பள்ளி வாகனம் சாலையில் சாய்ந்தது. எலச்சிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செலம்பகவுண்டம்பாளையம் அருகில் TN 01 Y 3448 என்ற எண் கொண்ட விநாயகா மெட்ரிகுலேஷன் பள்ளி வாகனம் செலம்பகவுண்டம்பாளையம் அருகில் வரும்போது வாகனத்தில் பட்டைஎதிர்பாராத விதமாக எதிர்பாராத விதமாகஉடைந்து போனதால் வண்டி ரோட்டிலேயே வலது புறமாக சாய்ந்து விட்டது. நல்வாய்ப்பாக பின் பகுதியில் எந்த வாகனமும் வராததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. வழக்கமாக வரும் என்று வாகனம் பழுதானதால் மாற்று வாகனமாக வந்த வாகனம் பட்டை உடைந்து விபத்துக்குள்ளானது. வாகனத்தில் 30 பள்ளி குழந்தைகள் சென்றதில் 5 ஐந்து பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு வையப்பமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று உடனே வீடு திரும்பினார்கள்.சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
    1
    திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செலம்ப கவுண்டம் பாளையம்பகுதியில் விநாயகா மெட்ரிகுலேஷன் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து 30 பேர் பயணித்த நிலையில் ஐந்து பேருக்கு லேசான காயம்சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரணை*
விநாயகா மெட்ரிகுலேஷன் பள்ளி வாகனம் சாலையில் சாய்ந்தது.
எலச்சிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செலம்பகவுண்டம்பாளையம் அருகில் TN 01 Y 3448 என்ற எண் கொண்ட விநாயகா மெட்ரிகுலேஷன் பள்ளி வாகனம் செலம்பகவுண்டம்பாளையம் அருகில் வரும்போது வாகனத்தில் பட்டைஎதிர்பாராத விதமாக எதிர்பாராத விதமாகஉடைந்து போனதால்  வண்டி ரோட்டிலேயே வலது புறமாக சாய்ந்து விட்டது. நல்வாய்ப்பாக பின் பகுதியில் எந்த வாகனமும் வராததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. வழக்கமாக வரும் என்று வாகனம் பழுதானதால் மாற்று வாகனமாக வந்த வாகனம் பட்டை உடைந்து விபத்துக்குள்ளானது. வாகனத்தில் 30 பள்ளி குழந்தைகள் சென்றதில் 5 ஐந்து பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு வையப்பமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று உடனே வீடு திரும்பினார்கள்.சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
    user_Balaji studio
    Balaji studio
    Video Creator திருச்செங்கோடு, நாமக்கல், தமிழ்நாடு•
    17 hrs ago
  • பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பேசும்போது கரூர் துயரச் சம்பவத்திற்கு செந்தில் பாலாஜி முக்கிய காரணம் என கூறியது குறித்து கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இடம் செய்தியாளர்கள் கேட்ட போது ஏழு மணி நேரம் கால தாமதமாக வந்தது யார்? விளக்கு அணைத்தது யார்? இந்த வழக்கு சிபிஐ விசாரித்து வருவதால் விரைவில் இதற்கான விடை கிடைக்கும் என கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மாணவ, மாணவர்களுக்கான மணிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளரிடம் தெரிவித்தார்.
    1
    பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பேசும்போது கரூர் துயரச் சம்பவத்திற்கு செந்தில் பாலாஜி முக்கிய காரணம் என கூறியது குறித்து கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இடம் செய்தியாளர்கள் கேட்ட போது ஏழு மணி நேரம் கால தாமதமாக வந்தது யார்? விளக்கு அணைத்தது யார்? இந்த வழக்கு சிபிஐ விசாரித்து வருவதால் விரைவில் இதற்கான விடை கிடைக்கும் என கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மாணவ, மாணவர்களுக்கான மணிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளரிடம் தெரிவித்தார்.
    user_கரூர் செய்தி
    கரூர் செய்தி
    Journalist கரூர், கரூர், தமிழ்நாடு•
    12 hrs ago
  • தர்மபுரி நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ.76 லட்சம் மதிப்புள்ள திட்டப் பணிகளுக்கு நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது
    1
    தர்மபுரி நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ.76 லட்சம் மதிப்புள்ள திட்டப் பணிகளுக்கு நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது
    user_Periyasamy
    Periyasamy
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    13 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.