திருவாடானை தாலுகா வெள்ளையாபுரம் ஊராட்சி வில்லாரேந்தல் முதல் வீதி குண்டும் குழியுமாக சேதமடைந்து இருப்பதால் மக்கள் சிரமப்படும் அவலநிலை! ஆக.26. திருவாடானை வெள்ளையாபுரம் ஊராட்சி வில்லாரேந்தல் பகுதி வீதிக்கு செல்லும் பழுதடைந்த சாலையால் போக்குவரத்துக்கு சிரமப்படும் பகுதி மக்கள்! இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா வெள்ளையாபுரம் ஊராட்சி உட்பட்ட கிராமம் வில்லாரேந்தல். இப்பகுதியானது வெள்ளையாபுரம் மெயின்ரோட்டிலிருந்து (பாலத்தின் அருகே ) நாவலூர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ளது. வில்லாரேந்தல் முதல் தெருவில் தான் இந்த அவல நிலை. பல மாதங்களுக்கு முன்பு ஜல் ஜீவன் திட்டத்திற்காக பல லட்சத்தில் போடப்பட்ட பேவர் பிளாக் சாலை முற்றிலும் பெயர்க்கப்பட்டு சாலை முழுவதும் சேதமடைந்துள்ளது. மேலும் குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு பயன் பாடற்ற நிலையில் யாருமே கண்டுகொள்ளாத நிலையில் இருந்து வருகிறது. எனவே அப்பகுதி மக்களின் அவலநிலை அறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர். ஈட்டி வளவன் மாவட்ட செய்தியாளர் திருவாடானை
திருவாடானை தாலுகா வெள்ளையாபுரம் ஊராட்சி வில்லாரேந்தல் முதல் வீதி குண்டும் குழியுமாக சேதமடைந்து இருப்பதால் மக்கள் சிரமப்படும் அவலநிலை! ஆக.26. திருவாடானை வெள்ளையாபுரம் ஊராட்சி வில்லாரேந்தல் பகுதி வீதிக்கு செல்லும் பழுதடைந்த சாலையால் போக்குவரத்துக்கு சிரமப்படும் பகுதி மக்கள்! இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா வெள்ளையாபுரம் ஊராட்சி உட்பட்ட கிராமம் வில்லாரேந்தல். இப்பகுதியானது வெள்ளையாபுரம் மெயின்ரோட்டிலிருந்து (பாலத்தின் அருகே ) நாவலூர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ளது. வில்லாரேந்தல் முதல்
தெருவில் தான் இந்த அவல நிலை. பல மாதங்களுக்கு முன்பு ஜல் ஜீவன் திட்டத்திற்காக பல லட்சத்தில் போடப்பட்ட பேவர் பிளாக் சாலை முற்றிலும் பெயர்க்கப்பட்டு சாலை முழுவதும் சேதமடைந்துள்ளது. மேலும் குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு பயன் பாடற்ற நிலையில் யாருமே கண்டுகொள்ளாத நிலையில் இருந்து வருகிறது. எனவே அப்பகுதி மக்களின் அவலநிலை அறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர். ஈட்டி வளவன் மாவட்ட செய்தியாளர் திருவாடானை
- கொல்லங்குடியில் கோவில் திருவிழா முன்னிட்டு களைகட்டிய மாட்டு வண்டி பந்தயம், சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடியில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கொல்லங்குடியில் இருந்து முதல் வலையம்பட்டி வரை நடைபெற்ற இந்தப் போட்டி, பெரிய மாடு மற்றும் சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 38 ஜோடி மாடுகள் பங்கேற்றன. மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 7 கிலோமீட்டர் பந்தய எல்லையாக நிர்ணயிக்கப்பட்ட பெரிய மாடு பிரிவில் 11 ஜோடிகளும், 5 கிலோமீட்டர் பந்தய எல்லையாக நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 27 ஜோடிகளும் கலந்து கொண்டு சீறிப் பாய்ந்தன. பந்தயத்தில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாடுகளின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அழகாபுரி, மேப்பல், நரிக்கோட்டை, காளையார்கோவில், விட்டனேரி, கொல்லங்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று, ஆர்வத்துடன் மாட்டு வண்டி பந்தயத்தை கண்டுகளித்தனர்.1
- புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் பெரிய அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாபெரும் குதிரை வண்டி பந்தயம் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் பெரிய அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா இரண்டாம் ஆண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 21 ஜோடி குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. இறுதியில் வெற்றி பெற்ற குதிரை வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்க பணம் மற்றும் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது.1
- சிங்கம்புணரி அருகே பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள சுற்றுப்புற கிராமங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த சூறைக்காற்று, இடிமின்னலுடன் கனமழை பெய்தது. மார்ச் முதல் ஆறு மாதங்களாக கடுமையான வெப்பத்தால் வாடிய மக்களுக்கு இன்று மாலை திடீர் மழை நிவாரணம் அளித்தது. கோழிக்குடிபட்டி, ஆறுகுடிபட்டி, சூரக்குடி, அய்யாபட்டி, கரடிபட்டி, வையாபுரிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர் மழையால் நகர் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.1
- குப்பைத் தொட்டியைப் பயன் படுத்தாத மக்கள் மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் வெள்ளலூர் ஊராட்ச்சியைச் சேர்ந்த கட்டைச் சோலைப்பட்டி என்ற கிராமத்தில் குப்பைத்தொட்டி இருந்தும் அதைப் பயன் படுத்தாமல் அந்த கிராம மக்கள் குப்பைத் தொட்டி அருகிழே யே குப்பையை கொட்டு கின்றனர்1
- அடையாள அட்டை வாங்க ஒரே நேரத்தில் குவிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்ததால் வட்டார வளர்ச்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது புதுக்கோட்டை. விதவை அடையாள அட்டை வாங்க ஒரே நேரத்தில் குவிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்ததால் வட்டார வளர்ச்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது புதுக்கோட்டை திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறையில் விதவைகளுக்கு உதவித்தொகை வழங்க விண்ணப்பம் பெறப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அடையாள அட்டை இருந்தால்தான் தமிழக அரசின் உதவித்தொகை வழங்கப்படும் மற்றும் அரசின் உதவிகளை பெறுவதற்கு அடையாள அட்டை கட்டாயம் என்று வதந்தி பரவியதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குவிந்து விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர் தமிழக முதல்வரின் வெற்றி பயணம் திட்டத்திற்கு 60 வயதுக்குட்பட்ட விதவைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் அந்த அட்டையால் அவர்களுக்கு உதவித்தொகை மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்படும் என்ற அறிவிப்பால் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மனு கொடுக்க வந்திருந்தனர் இந்நிலையில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களும் விண்ணப்பங்கள் வழங்க வருகை தந்ததால் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பெரிதும் பரபரப்பாக காணப்பட்டது1
- காரியாபட்டி பகுதிகளில் தீவிர வாகன சோதனை – 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்; ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்துத் துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். விருதுநகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மாணிக்கம் மற்றும் காரியாபட்டி காவல் சார்பு ஆய்வாளர் வீரணன் தலைமையில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் காரியாபட்டி பகுதிகளில் முக்கிய சாலைகள் மற்றும் வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது வாகனங்களின் RC, FC, காப்பீடு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது முறையான ஆவணங்கள் இன்றியும், போக்குவரத்து விதிமுறைகளை மீறியும் இயக்கப்பட்ட செப்டிக் டேங்க் வாகனம், தண்ணீர் வாகனம், டாடா ஏசி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து விதிமுறைகளை மீறிய வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து காரியாபட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், விதிமீறல் செய்த வாகனங்களுக்கு சுமார் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களுக்கான அனைத்து ஆவணங்களையும் முறையாக வைத்திருப்பதுடன், செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்துடன் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். மேலும், சாலை பாதுகாப்பை கருத்தில் கொண்டு காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து வாகன சோதனைகள் நடத்தப்படும் என்றும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர். தீவிர வாகன சோதனை காரணமாக காரியாபட்டி பகுதியில் வாகன ஓட்டிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.1
- தேவகோட்டை தேனம்மை ஊரணி ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் கோயிலில் ஆவணி மாத உற்சவ திருவிழா, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தேனம்மை ஊரணி ஸ்ரீ தர்ம முனீஸ்வரர், மகா காளியம்மன் கோயிலில் 61 ஆம் ஆண்டு ஆவணி மாத உற்சவ பெருவிழா நடைபெற்று வருகிறது. 6ம் நாள் விழாவான செவ்வாய்க்கிழமை நேற்று இரவு பூச் சொரிதல் மற்றும் சாமி திருவீதி உலா நடைபெற்றது.. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ அம்மையப்பரின் அறக்கட்டளையின் சார்பாக நிறுவனர் ராகவா வாசுதேவன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் 300 க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் அம்மையப்பர் அறக்கட்டளையின் செயலாளர் முத்துக்குமார், உறுப்பினர்கள் நேசமணி, விமல், மணி, மற்றும் திருக்கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- फ़िरोज़ाबाद में बंजारा समाज पर धारदार हथियारों से हमला, बाल-बाल बची जान पीड़ितों ने थाना एका में दी तहरीर कार्रवाई की मांग फ़िरोज़ाबाद जनपद के एका थाना एका थाना के क्षेत्र के हरी सिंह पुर गाँव में बंजारा समाज की महिलाओं एवं लोगों पर दबंगों द्वारा धारदार हथियारों से जानलेवा हमला करने का मामला सामने आया है जहां बंजारा समाज को दबाने वाली बात सामने आयी है घटना का एक वीडियो भी सोशल मीडिया पर वायरल हो रहा है, जिसमें महिलाएं और बच्चे सड़क पर भागते हुए दिखाई दे रहे हैं पीड़ितों के अनुसार दिनांक 22 अगस्त 2026 को दोपहर के समय गाँव के ही कुछ लोग लाठी-डंडा और धारदार हथियार लेकर उनके घरों पर आ गए और गाली-गलौज करते हुए हमला कर दिया अचानक हुए इस हमले से पूरे गाँव में अफरा-तफरी मच गई। महिलाओं और बच्चों ने भाग कर किसी तरह अपनी जान बचाई पीड़ित गांव वालो का आरोप है कि वे गरीब बंजारा समाज से हैं इसलिए उन्हें आए दिन डराया-धमकाया जाता है। इस घटना के बाद से पूरा समाज दहशत में है ग्रामीणों ने बताया कि बड़ी मुश्किल से उन लोगों ने कर मामला शांत कराया गया इस संबंध में पीड़ित गाँव के लोगों ने थाना एका पुलिस को लिखित तहरीर दी है और आरोपियों के खिलाफ सख्त कार्रवाई व सुरक्षा की मांग की है लिखे हुए आरोपी बार बार गांव पर चढ़ाई करते हुए जान से मारने की धमकी दे रहे हैं पुलिस द्वारा मामले की जांच ही नहीं की जा रही है। थाना प्रभारी एका से बात करने पर बताया कि तहरीर मिलने पर जाँच कर उचित कार्रवाई की जाएगी2