Shuru
Apke Nagar Ki App…
தேனி மாவட்டத்திலுள்ள அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்: தேனி மாவட்டத்திலுள்ள அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்: தேனி மாவட்ட அணைகளின் (செப்-16) நீர்மட்டம்: வைகை அணை: 41.08 (71) அடி, வரத்து: 608 க.அடி, திறப்பு: 86 க.அடி, பெரியாறு அணை: 119.10 (142) அடி, வரத்து: 442 க.அடி, திறப்பு: 622 க.அடி, மஞ்சளார் அணை: 26.10 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 56.25, (126.28) அடி, வரத்து: 12 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 26.25 (52.55) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை.
Theni Godwin
தேனி மாவட்டத்திலுள்ள அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்: தேனி மாவட்டத்திலுள்ள அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்: தேனி மாவட்ட அணைகளின் (செப்-16) நீர்மட்டம்: வைகை அணை: 41.08 (71) அடி, வரத்து: 608 க.அடி, திறப்பு: 86 க.அடி, பெரியாறு அணை: 119.10 (142) அடி, வரத்து: 442 க.அடி, திறப்பு: 622 க.அடி, மஞ்சளார் அணை: 26.10 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 56.25, (126.28) அடி, வரத்து: 12 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 26.25 (52.55) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை.
More news from தமிழ்நாடு and nearby areas
- இந்து எழுச்சி முன்னணி 11ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் தேனியில் விமர்சியாக நடந்தது தேனியில் செயல்பட்டு வரும் இந்து எழுச்சி முன்னணி அமைப்பு சார்பில் 11ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது இந்த ஊர்வலத்திற்கு நிறுவனத் தலைவர் பொன் ரவி வழிகாட்டிட மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமை வகிக்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் முன்னிலையில் 11ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது இந்த ஊர்வலத்தில் செண்டா மேளம் முழங்க அரிசி கொம்பன் யானை முன் நின்று வழிநடத்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் முளைப்பாரி சுமந்தும், 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்கள் ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது போலீசாரால் அனுமதி வழங்கப்பட்டிருந்த அரண்மனை புதூர் முல்லை ஆற்றில் கரைக்க இந்த ஊர்வலமானது அல்லிநகரம் சாலை பிள்ளையார் கோவிலில் தொடங்கி பெரியகுளம் சாலை நேரு சிலை மதுரை சாலை வழியாக அரண்மனை புதூர் முல்லை ஆற்று பாலம் வந்தடைந்து அங்கு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு நகர் முழுவதும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் திருமேனிகள் முல்லை ஆற்றில் கரைக்கப்பட்டது இந்த ஊர்வலத்திற்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலெக்ஸாண்டர் ஜெரால்டு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்1
- வருசநாடு அருகே உள்ள தங்கம்மாள்புரம் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வழங்கவில்லை என குற்றம் சாட்டி அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வருசநாடு சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட தங்கம்மாள்புரம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலிகுடங்களுடன் வருசநாடு சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு சென்ற பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் இரண்டுபுறமும் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது கூட்டுகுடிநீர் திட்டத்திலிருந்து தங்கம்மாள்புரம் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்கான மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு வரும் குடிநீரை புதிதாக கடைகள் வணிக நிறுவனங்களுக்கு இணைப்பு கொடுத்து முழுவதுமாக எடுத்து கொள்வதால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடியிருப்புகளுக்கு குடிநீரே வழங்கப்படவில்லை என்றும் இதை கேட்டால் குடிநீர் எடுத்து விடும் குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்களும், ஊராட்சி பணியாளர்களும் அலட்சியமாக பதில் கூறுவதாகவும் குற்றம் சாட்டி தொடர்ச்சியாக மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த கடமலைக்குண்டு காவல்துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர் குடிநீர் கேட்டு நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தால் கடமலைகுண்டு- வருசநாடு சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது1
- *தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தங்கம்மாள்புரம் பகுதியில் ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டி, பெண்கள் உள்ளிட்ட கிராமமக்கள் காலிகுடங்களுடன் வருசநாடு சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம்* தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட தங்கம்மாள்புரம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை என்றும், குடிநீர் கேட்டால் ஊராட்சி செயலர், குடிநீர் எடுத்துவிடும் நபர் உள்ளிட்டோர் அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் புதிதாக கடைகள் வணிக நிறுவனங்களுக்கு குடிநீர் இணைப்புகளை கொடுத்து மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு வரும் குடிநீரை அப்படியே கடைகள் வணிக நிறுவனங்களுக்கு வழங்குவதால் வீடுகளுக்கு குடிநீரே வருவதில்லை என்றும் குற்றம்சாட்டி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலிகுடங்களுடன் வருசநாடு சாலையில் அமர்ந்து உடனடியாக குடிநீர் வழங்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடமலைகுண்டு - வருசநாடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதால் இரண்டு புறமும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட பேருந்துகள் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.1
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம் செப்.20- ல் திருக்கல்யாணம், 23-ம் தேதி செப்பு தேரோட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள வட பத்திர சன்னதியில் பெரிய பெருமாள் அவதார திருவிழாவான புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் செப்டம்பர் 20-ம் தேதி திருக்கல்யாணமும், 23-ம் தேதி செப்பு தேரோட்டமும் நடைபெறுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசயனர் (பெரிய பெருமாள்) அவதார உற்சவமான புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஶ்ரீதேவி பூதேவி சமேதராக பெரிய பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதன்பின் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, காலை 11 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தினசரி காலை மண்டபங்களில் எழுந்தருளும் ஸ்ரீதேவி ஸ்ரீதேவி சமேத பெரிய பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனமும், மாலை வீதி உலாவும் நடைபெறுகிறது. பிரமோற்சவ விழாவில் செப்டம்பர் 19-ம் தேதி தங்க கருட சேவையும், 20-ம் தேதி மாலை 4 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரியபெருமாள் திருக்கல்யாணமும், 21-ம் தேதி சயன சேவையும் நடைபெறுகிறது. பெரிய பெருமாள் அவதரித்த பெரிய திருவோண நட்சத்திரத்தில் செப்டம்பர் 23- ம் தேதி காலை 7 மணிக்கு செப்பு தேரோட்டம் நடைபெற உள்ளது.இதில் மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அறி, நகராட்சி ஆணையாளர் குமார்,வட்டாட்சியர் அறிவானந்தம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கோயில் செயல் அலுவலர் சக்கரையம்மாள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.1
- விநாயகர் சதுர்த்தி அன்று வலம் வந்த ஒற்றைக் காட்டு யானை (எஸ்டேட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு) திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே உள்ள சேம்பிலியூத்து என்ற மலை கிராமத்தில் உள்ள எஸ்டேட்டில் நேற்று விநாயகர் சதுர்த்தி அன்று வலம் வந்த ஒற்றைக் காட்டு யானை. (எஸ்டேட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு)1
- ஒட்டன்சத்திரம் 2 வது வார்டு பெரியாஞ் செட்டி பட்டியில் கண் திருஸ்டி கணபதியை இளைஞர் அணி சார்பாக வழிபாடு செய்தனர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட 2 வது வார்டு, பெரியாஞ்செட்டிபட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கண்திருஷ்டி கணபதியை சிறப்பு வழிபாடு செய்தனர். இக்கண்திருஸ்டி கணபதி இராஜகணபதியாய் சிம்மாசனத்தில் அமர்ந்து கம்பீரமாய் கண்திருஷ்டி களை நீக்குவதை தம் பணியாய் வைத்திருப்பது போல் சிலை அமைந்திருந்தது. இன்று கணபதிக்கு சிறப்புபூஜைகள் செய்து வழிபாடு செய்தனர். அதன் பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் இருந்து கண்திருஷ்டி கணபதியை தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு விழா கமிட்டியாரின் சார்பாக கொழுக்கட்டை, சுண்டல், தக்காளி சாதம், அவல் பிரசாதமாக வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பி.கண்ணன் ,நா.மதன்குமார், ப.முருகானந்தம் ,விஷ்ணு,சரவணன்,தமிழரசன்,அருண்குமார்,பிரவீன்,ஆ.இ.ஹரிகிருஷ்ணன், ஆ.ஹரிகிருஸ்ணன் தலைமையிலான விழாக்கமிட்டியார்கள் சிறப்பாக செய்திருந்தனர்.2
- ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சயனர் புரட்டாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ வடபத்ரசயனர் திருக்கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. மகாலட்சுமியின் அம்சமான ஸ்ரீ ஆண்டாள் மானிட பெண்ணாக அவதரித்து பாமாலை பாடி பின் பூமாலை சுற்றி ஸ்ரீரங்கநாதரை அடைந்தார் என்பது ஐதீகம்.ஆண்டாள் தினமும் தான் சூடி கலைந்த மாலையை ஸ்ரீரங்கநாதரின் அம்சமான ஸ்ரீ வடபத்ரசயனருக்குத்தான் சாற்றி வந்துள்ளார். இந்த வடபத்ர சயனருக்கான புரட்டாசி பிரமோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று துவங்கும் உற்சவம் 12 நாட்கள் நடைபெறும்.ஐந்தாம் திருநாள் தங்க கருட சேவையும், ஒன்பதாம் திருநாள்(23.09.26) செப்பு திருத்தேரோட்டமும் நடைபெற உள்ள நிலையில் தினந்தோறும் பூதேவி ஸ்ரீதேவி சமேத வடபத்ரசயனர் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பர். கொடியேற்ற நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.1
- பெரியகுளத்தில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை பெரியகுளம் MLA தொடங்கி வைத்தார் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பெரியகுளத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்தது வராக நதியில் கரைப்பதற்கு போலீசாரால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது இதனைத் தொடர்ந்து பெரியகுளம் நகர் முழுவதும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தநூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் திருமேனிகளை ஊர்வலமாக எடுத்து வந்து வராக நதியில் கரைக்கப்பட்டது முன்னதாக இந்த ஊர்வலத்தை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் தொடங்கி வைத்தார் நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் உள்ளிட்ட இந்து முன்னணி மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர்கள் கலந்து கொண்டனர்1