வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல், திருவள்ளுவர் தின விழா..! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந் நிகழ்விற்கு, கல்லூரி முதல்வர் ருக்மணி தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் மு.ரமணன், செயலாளர் பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த விழாவில் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் பாரம்பரிய உடைகளை அணிந்து கல்லூரி வளாகத்தில் பொங்கப் பானையில் படையிலிட்டு சூரிய பகவானுக்கு வழிபாடு நடத்தினர். மேலும் மாணவிகள் பங்கேற்ற பாரம்பரிய விளையாட்டுக்களான கோலாட்டம், கும்மி ஆட்டம், சிலம்பம், கயிறு இழுத்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில்,பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.
வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல், திருவள்ளுவர் தின விழா..! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந் நிகழ்விற்கு, கல்லூரி முதல்வர் ருக்மணி தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் மு.ரமணன், செயலாளர் பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த விழாவில் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் பாரம்பரிய உடைகளை அணிந்து கல்லூரி வளாகத்தில் பொங்கப் பானையில் படையிலிட்டு சூரிய பகவானுக்கு வழிபாடு நடத்தினர். மேலும் மாணவிகள் பங்கேற்ற பாரம்பரிய விளையாட்டுக்களான கோலாட்டம், கும்மி ஆட்டம், சிலம்பம், கயிறு இழுத்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில்,பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.
- திருவண்ணாமலை மாவட்டம்: ஜமுனாமரத்தூர் ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் குளிர் காலமாகும். ஆண்டில் சில மாதங்களில் பகல் அதிகமாகவும் இரவு நேரம் குறைவாகவும் இருக்கும். சில மாதங்களில் பகல் நேரம் குறைவாகவும் இரவு நேரம் அதிகமாகவும் இருக்கும். வழக்கத்திற்கு மாறாக 2025 இந்த ஆண்டு நவம்பர் குளிர்காலம் தொடங்கி கடந்த இரண்டு நாட்களாக கடும் குளிர் வாட்டிவந்த நிலையில் 10/01/2026 ஜனவரி மாதம் சனிக்கிழமை தொடங்கிய மழை, கடந்த மூன்று தினங்களாக இரவும் பகலும் விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருவதால். ஜவ்வாது மலை சுற்றியுள்ள மலை கிராம மக்கள் கடும் குளிரிலும் மழையை பாராமல். பொங்கலுக்கு தேவையான பொருட்கள் வாங்கி சென்றனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதி வண்டிகளை 260 மாணவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் வழங்கினார். இதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர் மிதிவண்டி ஓட்டி மகிழ்ந்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சன் பிரான்டு ஆறுமுகம், மாமன்ற உறுப்பினர் பிரவீன் குமார், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.1
- தர்மபுரி அரசு மருத்துவமனையில் காசநோய் மருத்துவப் பயனாளர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் தர்மபுரி எம்எல்ஏ எஸ்பி வெங்கடேஸ்வரன் வழங்கினார்1
- ஒகேனக்கல் காவேரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழியும் பருவமழையின் அளவைப் பொறுத்து நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக காணப்படுகிறது. நேற்று 700 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று (ஜன.12) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளதாக, மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.1
- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கிழக்கு மற்றும் மேற்கு நகர திமுக சார்பில் நகர அளவிலான திராவிட பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் நேற்றும் இன்றும்நடைபெற்றது. வாலிபால் மற்றும் கபடி போட்டிகள் நடைபெற்றது. இதில் கபடி போட்டிகளில் பத்துக்கும் மேற்பட்ட அணிகளும் வாலிபால் போட்டியில் 15க்கும் மேற்பட்ட அணிகளும் பங்கேற்று விளையாடினார்கள் இறுதி வாலிபால் போட்டியை திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் சேலம் கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சேலம் ஏ வி எஸ் கல்லூரியின் முதல்வர் சீனிவாசன்திருச்செங்கோடு மேற்கு நகர திமுக பொறுப்பாளர் முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன் கிழக்கு நகர திமுக பொறுப்பாளர் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.இந்தப் போட்டிகளில்நகர அளவிலான விளையாட்டு வீரர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.கபடி பிரிவில் முதலிடம் பிடித்த எஸ்.பி. என் A அணிக்கு 5 ஆயிரம் ரொக்கப் பரிசு கோப்பை, 2ம் இடம் பிடித்த எஸ்.பி. என் B அணிக்கு 4ஆயிரம் மற்றும் கோப்பை 3ம் இடம் பிடித்த அன்னைத் தமிழ் அணிக்கு 3 ஆயிரம் மற்றும் கோப்பை பரிசாக வழங்கப் பட்டது. இதே போல் வாலிபால் பிரிவில் முதல் பரிசு பெற்ற மாணிக் பிரண்ட்ஸ் அணிக்கு5000 ரொக்கப் பரிசு மற்றும் கோப்பை இரண்டாம் பரிசு பெற்ற சந்துரு பிரண்ட்ஸ் அணிக்கு 3000 ரொக்க பரிசு மற்றும் கோப்பை மூன்றாம் இடம் பிடித்த பி.ஆர்.சி அணிக்கு ரூ 3000 ரொக்க பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது1
- *மணப்பாறையில் திமுகவின் திராவிட பொங்கல் விழா.* *சமத்துவ பொங்கல் வைத்து மாநில அளவிலான கபாடி போட்டி துவக்கம்.* திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே புதிய காலனியில் உள்ள கலைஞர் விளையாட்டு அரங்கில் தெற்கு ஒன்றிய திமுகவின் சார்பில் திராவிட பொங்கல் விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கபாடி போட்டி துவங்கியது. முன்னதாக விழா அரங்கம் முன்பாக புதுப்பானையில் பொங்கல் வைத்து பொங்கல் விழாவை கொண்டாடினர். அதனைத்தொடர்ந்து ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமையில் நடைபெற்ற கபாடி போட்டியை திமுக திருச்சி தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் லீலாவேலு, முன்னாள் ஒன்றிய சேர்மன் அமிர்தவள்ளி ஆகியோர் முதல் போட்டியில் களமிறங்கிய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து போட்டியை துவக்கிவைத்தனர். போட்டியில் திருச்சி, திண்டுக்கல், சென்னை, கரூர், புதுக்கோட்டை, மதுரை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 25 அணிகள் பங்கேற்றுள்ளன. வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.30 ஆயிரம், தலா ரூ.20 ஆயிரம் மூன்றாம் நான்காம் பரிசாக வழங்கப்பட உள்ளது. போட்டியை திமுக வினர் மற்றும் கபாடி ரசிகர்கள் கண்டுகளித்து வருகின்றனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1