Shuru
Apke Nagar Ki App…
அம்பாசமுத்திரம் அருகே விக்கிரமசிங்கபுரத்தில் அஇஅதிமுக கட்சி நகர அலுவலகம் திறப்பு. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரத்தில் நகர அதிமுக அலுவலகத்தை நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் மருதூர் இராமசுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார், தொடர்ந்து அம்பாசமுத்திரம் சட்ட மன்ற தொகுதியில் அதிமுக கட்சியை பலப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Jil jolly Club
அம்பாசமுத்திரம் அருகே விக்கிரமசிங்கபுரத்தில் அஇஅதிமுக கட்சி நகர அலுவலகம் திறப்பு. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரத்தில் நகர அதிமுக அலுவலகத்தை நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் மருதூர் இராமசுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார், தொடர்ந்து அம்பாசமுத்திரம் சட்ட மன்ற தொகுதியில் அதிமுக கட்சியை பலப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- தென்காசி மாவட்டம் குற்றாலம் இன்றைய நிலவரம் மிதமான மழை இதமான காற்று லேசான வெயில் அனைத்து அருவிகளிலும் சீராக விழும் தண்ணீர் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள்1
- புதுக்கோட்டை அருகே வீட்டில் 3½ பவுன் நகை திருட்டு – சிசிடிவி காட்சி வைரல்1
- அணுக்கனிம சுரங்க அனுமதி நீட்டிப்பு ரத்து செய்யப்படுமா ?ஆஸ்டின் எம்எல்ஏ கேள்வி தமிழக சட்டமன்றத்தில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆஸ்டின் பேசுகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அணு கனிம சுரங்கம் அமைப்பது தொடர்பான அனுமதியை திமுக அரசு நிறுத்தி வைத்திருந்தது ஆனால் தற்போது புதிதாக பதவி ஏற்று உள்ள அரசு ஓர் ஆண்டு காலத்திற்கு அந்த அனுமதியை நீட்டித்து வழங்கி உள்ளது.இந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.இந்த அனுமதி ரத்து செய்யப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் மக்களுக்கு எதிரான எந்த திட்டங்களையும் இந்த அரசு செயல்படுத்தாது என்று கூறினார்.1
- இருதயத்தில் உள்ள இரத்த அடைப்பை மாற்ற இந்த பொருட்களை பயன்படுத்துங்கள்1
- த.வெ.க சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா. தமிழக வெற்றி கழக ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றி கழகம் சார்பில் 100 நாட்கள் நிறைவடைந்ததை கொண்டாடி வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று தமிழக வெற்றி கழகம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு ஏராளமான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு சமபந்தி விருந்து அளிக்கப்பட்டது. இதில் சமபந்தி விருந்தில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தூய்மை பணியாளர்களோடு சேர்ந்து சமபந்தி விருந்தில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வானது த.வெ.க நிர்வாகி பால்ராஜ் முன்னிலையில் த.வெ.க கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன் நலத்திட்டங்களை வழங்கினார். தூய்மை பணியாளர்கள் அனைவரும் சமபந்தி விருந்து அளித்த த.வெ.க வினரை பாராட்டி வாழ்த்தி சென்றனர்.1
- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய மணியை ஆவணித் திருவிழாவிற்கு ஒலிக்க வைக்க வேண்டும். பக்தர்கள் கோரிக்கை. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய மணியை ஆவணித் திருவிழாவிற்கு ஒலிக்க வைக்க வேண்டும். பக்தர்கள் கோரிக்கை. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் சுமார் 137 அடி உயரமும், 9 நிலைகள் கொண்ட கோவில் ராஜகோபுரம் உள்ளது. இந்த ராஜகோபுரத்தில் கி.பி.18 ஆம் நூற்றாண்டில் வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய மணி உள்ளது. அந்த காலத்தில் நாள்தோறும் 12 மணிக்கு நடைபெறும் உச்சிக்கால பூஜை முடிந்து கோபுர மணி ஒலிக்கப்படும். இந்த கோபுர மணி ஒலிக்கப்பட்ட பின்னரே வீரபாண்டிய கட்டபொம்மன் மதிய உணவை உண்டதாக கூறப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த மணி கோபுரத்தின் உச்சியில் உள்ள 9வது நிலையில் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த வருடம் 300 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வந்த பெருந்திட்ட வளாக பணிகளில் இந்த மணியும் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை இந்த மணி ஒலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய ஆலய மணியை வருகின்ற ஆவணித்திருவிழா நாட்களில் தினமும் ஒலிக்க வைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேரிடர் மீட்பு ஆலோசனை கூட்டம் கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வைத்து இன்று வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மீட்பு துறை சார்பில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேரிடர் மீட்பு பணிகள் சம்பந்தமாக எடுக்கப்பட்டு வரும் திட்டப் பணிகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.1
- *தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பொய்கை ஊராட்சி கோலாண்டனூர் 7,வது வார்டு ஊராட்சி அலுவலகத்திற்கு கீழ்புரம் ஒரு வருடத்திற்கு முன் போடப்பட்ட புதிய சிமிண்ட் சாலையில் வாறுகாலில் அமைக்காததால் வீடுகளில் உபயோகப்படுத்தும் கழிவுநீரை பைப்பு மூலம் பொது தெரிவில் விடுவதனால் சாலை பழுதாகுவதோடு சாக்கடை நீர் தேங்கி கொசுக்கள், மற்றும் புளுக்கள் உற்பத்தியாகி டெங்கு போன்ற விசக்காய்சல் பரவி வருவதாகவும் மேலும் இரு சக்கர வாகனத்தில் வருபவர்க்கு விபத்து ஏற்படுவதும் வாடிக்கையாகி விட்ட நிலையில் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை எடுக்காததால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1