Shuru
Apke Nagar Ki App…
கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பு கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கேப்டன் அவர்களின் 74 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் கேப்டன் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சுமார் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி தேசிய முற்போக்கு திராவிட கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
Quzantony
கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பு கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கேப்டன் அவர்களின் 74 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் கேப்டன் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சுமார் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி தேசிய முற்போக்கு திராவிட கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் மாற்று திறனாளிகள் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் மாற்றுத்திறனாளிகளின் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கயத்தாறு ஒன்றிய மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர் காந்திராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜெபஸ்டின்ராஜ், மாவட்ட துணைச் செயலாளர் எம். சாலமுன்ராஜ், மாவட்ட குழு உறுப்பினர் சரோஜா, கோவில்பட்டி நகர செயலாளர் குருநாதன், நகர குழு உறுப்பினர்கள் திருப்பதி, செல்வராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையாவது மாதந்தோறும் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூபாய் 6000 ஆக உயர்த்தக் கோரியும், மாற்றுத்திறனாளிகள் உதவி த்தொகைக்காக வழங்கப்பட்ட அனைத்து மனுக்களையும் உடனடியாக பரிசீலனை செய்து உடனடியாக உதவித்தொகை வழங்கும்படியும், தமிழக அரசு அறிவித்துள்ள வெற்றி வீடு திட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாற்றுத்திறனாளிகள் கண்டன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.4
- கயத்தாறில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது* தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தினை மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றிய செயலாளர் காந்திராஜ் தலைமையில் கயத்தாறு பஜாரில் வைத்து நடைபெற்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சாலமன் ராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் தமிழகத்தில் ஏற்கனவே வழங்கப்படும் 1500 ரூபாய்க்கு பதிலாக ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களைப் போலவே மாதந்தோறும் 6 ஆயிரம் வழங்க வலியுறுத்தியும். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உதவித்தொகை விண்ணப்பித்து காத்திருக்கும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை உடனடியாக வழங்கவும். மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் மகளிர் மட்டும் திருநங்கை இலவசமாக பயணிக்கும் வெற்றி பயணத் திட்டத்தில் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் திட்டத்தில் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் தமிழக அரசே கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர்2
- RR AARI WORK, Aari Work, Aari Embroidery, Aari Blouse, RR AARI WORK1
- ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் தேமுதிக தலைவர் கேப்டனின் பிறந்த நாளையொட்டி கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம் மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 74 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுதும் தேமுதிகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் பேருந்து நிலைய வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் உருவப் படத்திற்கு, தூத்துக்குடி மாநகர மாவட்ட செயலாளர் தயாளலிங்கம் தலைமையில் தேமுதிக கட்சியினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர் . மறைந்த தேமுதிக நிர்வாகிகளான ஒன்றிய துணை செயலாளர் பிச்சைமணி, துப்பாஸ்பட்டி கிளை செயலாளர் மாரி ராஜா, மணியாச்சி கிளை செயலாளர் பெருமாள்சாமி ஆகியோரின் குடும்பத்தினருக்கு தல பத்தாயிரம் ரூபாய் நிதி உதவியும் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி பருப்பு எண்ணெய் உள்ளிட்ட மளிகை சாமான்களும் வழங்கப்பட்டது மேலும் மேலமடம் தேமுதிக நிர்வாகி மாடசாமி என்பவருக்கு ரூபாய் பதினோராயிரம் மதிப்பிலான இஸ்திரி பெட்டியும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், , மாவட்ட துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட தொழிற்சங்க தலைவர் வல்லரசு துரை, முருகன், ஒன்றிய அவை தலைவர் முத்துக்குமார், ஒன்றிய பொருளாளர் திருமணி முருகன், ஒன்றிய துணைச் செயலாளர் செல்வம் ,ஜெகன், முத்துவேல், கிழக்கு ஒன்றிய பொருளாளர் ஜெயகிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாலமுருகன், ஒன்றிய துணைச் செயலாளர் பழனி முருகன், மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்1
- வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரதோஷ வழிபாடு வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி வழிபாட்டிற்காக ஆகஸ்ட் 25 முதல் 28- ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. முதல் நாளான செவ்வாய்க்கிழமை ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தாணிப்பாறை வழியாக காலை 6 முதல் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர் சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் பிற்பகல் 4 மணிக்கு மேல் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சதுரகிரி மலையில் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.1
- அருப்புக்கோட்டை காந்திநகரில் தேமுதிக நிறுவன தலைவர் மறைந்த விஜயகாந்த் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு அவர்கள் ரசிகர்கள் ஏழை மக்களுக்கு முட்டை பிரியாணி மற்றும் சேது ராஜபுரம் கிராமத்தில் உள்ள அன்னை முதியோர் இல்லத்தில் சிக்கன் பிரியாணியுடன் அன்னதானமும் புதிய ஆடைகள் வழங்கியதோடு இனிப்புகள் வழங்கி பிறந்த நாளை கொண்டாடினார் தேமுதிக நிறுவன தலைவர் மறைந்த விஜயகாந்த் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்திநகர் பகுதியில் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு கார், வேன் மெக்கானிக்குகளாக வேலை செய்து வரும் அவரது ரசிகர்கள் ஒன்று சேர்ந்து ஏழை மக்களுக்கு முட்டை பிரியாணி அன்னதானமாக வழங்கினர். முன்னதாக காந்திநகர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அவரது திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அங்கிருந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தாங்களாக முன்வந்து விஜயகாந்த் திருவுருவப்படத்தை தொட்டு வணங்கி மரியாதை செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பொதுமக்களுக்கும், பேருந்து பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கி விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. விஜயகாந்த் ரசிகர்கள் ஒன்று கூடி அனைவருக்கும் முட்டை பிரியாணி அன்னதானமாக வழங்கியதை பொதுமக்கள் வரிசையில் நின்று வாங்கி சென்றனர். இதில் விஜயகாந்த் ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அருப்புக்கோட்டை காந்திநகரில் உள்ள பொன்னுச்சாமி - விஜயலட்சுமி தனியார் குடும்பத்தினரும் சேது ராஜபுரம் கிராமத்தில் உள்ள அன்னை முதியோர் இல்லத்திலும் ஆதரவற்ற முதியோர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கியதோடு புதிய ஆடைகளும் வழங்கினர் முதியோர்கள் தெய்வதிரு கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பிரார்த்தனை செய்து வழிபாடு செய்தனர்1
- தூத்துக்குடியில் ஆகஸ்டு 27 இல் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது *சென்னை சில்க்ஸ் மற்றும் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து நடத்தக்கூடிய மாபெரும் புத்தக கண்காட்சி வரும் 27ம் தேதி தூத்துக்குடியில் நடைபெறுகிறது தூத்துக்குடியில் வரும் 27ஆம் தேதி புத்தக் கண்காட்சி தொடங்கி அடுத்த மாதம் 6ம் தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற உள்ளது. 25 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 10 லட்சம் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது. தமிழ், ஆங்கிலம், இலக்கியம், அறிவியல், பொது அறிவு, போட்டி தேர்வு உள்ளிட்ட அனைத்து புத்தகங்களும் இந்த கண்காட்சியில் இடம்பெற உள்ளது. கண்காட்சியின் நோக்கம் மாணவர்களுக்கு வாசிப்பு திறன் புத்தகம் படிப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளோம். வரும் 27 ஆம் தேதி காலை புத்தக கண்காட்சி துவக்க விழா நடைபெறுகிறது. மாநகராட்சி ஆணையர் பிரியங்கா தலைமையில், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி இந்த புத்தக கண்காட்சியை திறந்து வைக்க உள்ளார். மாணவ மாணவிகளுக்காக தினசரி கட்டுரை போட்டி திருக்குறள் போட்டி ஓவியப்பட்டி கதை எழுத போட்டி என பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் சங்கம் இதுவரை 200க்கும் மேற்பட்ட கண்காட்சிகளை நடத்தி உள்ளது என தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் சங்கத்தின் சார்பில் ராஜபாண்டி மற்றும் ரவிவர்மன் ஆகியோர் தெரிவித்தார்.1
- தூத்துக்குடி பள்ளியில் இடை நின்ற மாணவர்களை சேர்க்க ஆலோசனை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து இன்று பள்ளி கல்வித்துறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் விஜூ மகாஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பள்ளி கல்வித்துறையினர் உள்ளிட்ட அரசு துறையினர் ஒன்றிணைந்து மாவட்டத்தில் பள்ளிகளில் இடை நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கப்பட்டது1