திமுக கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க முதல்-அமைச்சர் விஜய் திட்டம். தமிழகத்தில் ஆட்சி அமைக்க விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்துக்கு, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்டு கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆகியவை ஆதரவு அளித்துள்ளன. ஆட்சி அமைக்க தேவையான 118 என்ற எண்ணிக்கைக்கும் அதிகமான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்ததால் த.வெ.க. தலைவர் விஜய்யை, முதல்-அமைச்சராக நியமித்து கவர்னர் அர்லேகர் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அதன்படி, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் பெண்கள் பாதுகாப்பு, போதை பொருள் தடுப்பு, 200 யூனிட் இலவச மின்சாரம் ஆகிய 3 முக்கிய கோப்புகளில் விஜய் கையெழுத்திட்டார். இதைத்தொடர்ந்து, தலைமை செயலகத்துக்கு சென்று பல்வேறு கோப்புகளில் கையெழுத்திட்டு அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், மாலை 3.30 மணியளவில் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் விஜய் மரியாதை செலுத்தினார். அப்போது முதல்-அமைச்சர் விஜய்க்கு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெரியார் சிலையை பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிலையில், முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, முதல்-அமைச்சர் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டசபை கூட்டம் முடிந்ததும் அங்கிருந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு விஜய் செல்ல இருக்கிறார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை முதல்-அமைச்சர் விஜய் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அண்ணாநகர் இல்லத்தில் சந்திக்க உள்ளார். இதைபோல மூத்த அரசியல் கட்சித் தலைவர்களையும் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க முதல்-அமைச்சர் விஜய் திட்டம். தமிழகத்தில் ஆட்சி அமைக்க விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்துக்கு, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்டு கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆகியவை ஆதரவு அளித்துள்ளன. ஆட்சி அமைக்க தேவையான 118 என்ற எண்ணிக்கைக்கும் அதிகமான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்ததால் த.வெ.க. தலைவர் விஜய்யை, முதல்-அமைச்சராக நியமித்து கவர்னர் அர்லேகர் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அதன்படி, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் பெண்கள் பாதுகாப்பு, போதை பொருள் தடுப்பு, 200 யூனிட் இலவச மின்சாரம் ஆகிய 3 முக்கிய கோப்புகளில் விஜய் கையெழுத்திட்டார். இதைத்தொடர்ந்து, தலைமை செயலகத்துக்கு சென்று
பல்வேறு கோப்புகளில் கையெழுத்திட்டு அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், மாலை 3.30 மணியளவில் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் விஜய் மரியாதை செலுத்தினார். அப்போது முதல்-அமைச்சர் விஜய்க்கு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெரியார் சிலையை பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிலையில், முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, முதல்-அமைச்சர் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டசபை கூட்டம் முடிந்ததும் அங்கிருந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு விஜய் செல்ல இருக்கிறார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை முதல்-அமைச்சர் விஜய் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அண்ணாநகர் இல்லத்தில் சந்திக்க உள்ளார். இதைபோல மூத்த அரசியல் கட்சித் தலைவர்களையும் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
- திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகள் தொடர்பான மனுக்களை அளித்தனர். குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சாரம், நில பிரச்சனைகள், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ஏராளமான மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மனுக்களை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர். மேலும், பொதுமக்களின் கோரிக்கைகள் விரைவாக பரிசீலனை செய்து தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.1
- தமிழக வெற்றி கழகத் தலைவர் ஜோசப் விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்றதையடுத்து, மாநிலம் முழுவதும் அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடினர். கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில் திரண்ட தொண்டர்கள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.1
- இன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் தவெக கட்சியினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியிலும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் 'விஜய் தலைமையில் புதிய மாற்றம் ஏற்படும்' எனக்கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.1
- தருமபுரி சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 340 ஆடுகள் விற்பனைக்கு வந்தன. சிறிய குட்டிகள் ₹2000 முதல் பெரிய ஆடுகள் ₹24,000 வரை விற்பனையாகி, மொத்தமாக ₹43 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.1
- तमिलनाडु की राजनीति में एक नया अध्याय शुरू हो गया जब Vijay ने मुख्यमंत्री पद की शपथ ली। विधानसभा में विजय जोसेफ़ थलापति का अंदाज़ सबसे अलग नजर आया। उन्होंने पूरे आत्मविश्वास और गंभीरता के साथ ईश्वर के नाम पर संविधान के प्रति निष्ठा की शपथ ली। शपथ लेते हुए विजय ने कहा कि वह भारत की संप्रभुता और अखंडता को अक्षुण्ण रखेंगे और मुख्यमंत्री पद के कर्तव्यों का श्रद्धापूर्वक निर्वाह करेंगे। उनके शपथ ग्रहण का वीडियो और तस्वीरें सोशल मीडिया पर तेजी से वायरल हो रही हैं। समर्थक इसे तमिलनाडु की राजनीति में “नए दौर की शुरुआत” बता रहे हैं।1
- ஸ்பானிய டிவியில் இருந்து ஹாலிவுட் நட்சத்திரமாக உயர்ந்த ஆனா டி அர்மாஸ், தனது பன்முகத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். 'ஜான் விக்' போன்ற அதிரடிப் படங்களிலும், ஆஸ்கர் பரிந்துரை பெற்ற நாடகங்களிலும் ஜொலித்துள்ளார். இவர் தற்போது கலாச்சார ஐகானாகவும், முன்னணி பிராண்டுகளின் உலகளாவிய தூதுவராகவும் திகழ்கிறார்.1
- இரவு இன்னிசை இரவு வணக்கம்..............................1
- தர்மபுரி பாரதிபுரம் போக்குவரத்து அலுவலகம் முன்பு தமிழக வெற்றி கழக போக்குவரத்து தொழிலாளர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அவர்கள் இவ்வாறு செய்தனர்.1