Shuru
Apke Nagar Ki App…
ஒருநூறாம்வயல் அருகே காட்டு தீ கன்னியாகுமரி மாவட்டம் ஒருநூறாம்வயல் அருகே பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியான வண்ணாத்திப்பாறை மலை பகுதியில் இன்று(பிப்.16) மதியம் கடும் வெப்பம் காரணமாக திடீரென காட்டு தீ ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த தினம் இம்மலையின் அருகாமை உள்ள கிளாமலையில் ஏற்பட்டு மரங்கள் மற்றும் புல் வெளிகள் எரிந்து சாம்பலானது குறிப்பிடத்தக்கது
Arukani Members South
ஒருநூறாம்வயல் அருகே காட்டு தீ கன்னியாகுமரி மாவட்டம் ஒருநூறாம்வயல் அருகே பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியான வண்ணாத்திப்பாறை மலை பகுதியில் இன்று(பிப்.16) மதியம் கடும் வெப்பம் காரணமாக திடீரென காட்டு தீ ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த தினம் இம்மலையின் அருகாமை உள்ள கிளாமலையில் ஏற்பட்டு மரங்கள் மற்றும் புல் வெளிகள் எரிந்து சாம்பலானது குறிப்பிடத்தக்கது
More news from தமிழ்நாடு and nearby areas
- கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரம் தாலுகா அழகப்பபுரம் பஞ்சாயத்து வேலை என்ற பெயரில் பொதுப் பாதைகளில் சரல் மணல்களை அடித்து வைத்து பொது மக்களுக்கு இடையூறுதலாக செயல்பட்டு வருகிறார்கள் இது சம்பந்தமாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கூறுகையில் பொதுமக்கள் செல்லக்கூடிய பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறுதலாகவும் பள்ளிக் குழந்தைகள் அந்த வழி சாலையாக செல்வதற்கு கூட அச்சப்படுகிறார்கள் இது முழுக்க முழுக்க அழகப்பபுரம் பஞ்சாயத்து அலுவலகம் பொறுப்பு ஏற்க வேண்டும்.இதனால்தான் அசம்பாவிதங்கள் விபத்துக்கள் ஏற்படுகிறது என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.8
- சுரண்டையில் இருந்து மதுரைக்கும் மதுரையில் இருந்து சுரண்டைக்கும் கூடுதல் அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- Post by N balu Nbalu1
- தூத்துக்குடி மாநகராட்சி 5வது வார்டு வட்டக்கோவில் அருகே கடந்த 50 ஆண்டுகளாக இருந்த எம்ஜிஆர் பயணிகள் நிழற்குடையை மாநகராட்சி அதிரிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தியதாக முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மாநகராட்சிக்கு சொந்தமான இந்த இடத்தில் கடந்த 1965ல் எம்ஜிஆர் மன்றம் என்று ஆரம்பிக்கப்பட்டு எம்ஜிஆர் பஸ் ஸ்டாப் ஆக மாற்றப்பட்டது. இதன் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தை தனி நபர்கள் பத்திரம் போட முயற்சித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தேன். இந்த நிலையில் இங்கிருந்த பேருந்து நிறுத்தத்தையும், அருகில் இருந்த காமராஜர் சிலையையும் மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தியுள்ளது. இந்த பகுதி திமுக கவுன்சிலர் புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் பயணிகள் நிழற்குடையை இடித்துள்ளனர். இதுகுறித்து முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதிமுக சார்பில போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.1
- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சத்துணவு -அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒப்பாரி வைத்தல் போராட்டம் காத்திருப்பு போராட்டம் சாலை மறியல் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து இன்று சாப்பிடும் தட்டை கொண்டு கரண்டியை கொண்டும் தாளம் அடித்து வித்தியாசமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் கால முறை ஊதியம்,வழங்க வேண்டும் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்1
- மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளாகத்தில் இன்று (பிப்.17) தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம், தமிழ்நாடு பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் துணை செவிலியர் பணியிடங்களை ஒப்படைப்பு செய்யக்கூடாது, தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி மருந்து வழங்கக்கூடாது ,பெண் ஊழியர் என்பதால் பாரபட்சம் காட்டக்கூடாது, தற்காலிக செவிலியர்களை தடுப்பூசி பணியில் ஈடுபடுத்தக் கூடாது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி சுமார் 200க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.1
- பெரியகுளத்தில் புது பஸ் நிலையம் அருகில் உள்ள மதுபான பார் கடை மூலம் மத கலவரம் ஏற்படும் அபாயம்; மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ன பொதுமக்கள் கோரிக்கை. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் புது பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மதுபானகடை பார் என்பது பொதுமக்களுக்கு மிக பெரிய இடையூறு தர கூடியது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகும் என கடந்த இரண்டு வருடங்களாக போராட்டம் நடத்த பட்ட நிலையில் பொய்யான காரணங்களைக் கூறி நீதிமன்றம் மூலம் அந்த மதுபான கடை திறக்கப்பட்டது. அந்த கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மதுரை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த மதுபான கடை மூலம் தினம் தினம் பிரச்சினை அரங்கேறி வருகிறது. இன்று இரவு மதுபான பாரில் மது அருந்தி விட்டு சிலர் அந்த பகுதியில் உள்ள பெண்கள் இடத்தில் மிக அசிங்கம் பேசி அத்து மீறி உள்ளனர். இதை தட்டி கேட்டவர்களை மத ரீதியாக பேசியதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். இதையடுத்து அந்த பகுதி மக்கள் நூற்றுக்கணக்கான பேர் பெரியகுளம் காவல் நிலையத்தில் குவிந்து புகார் அளித்து உள்ளனர். தமிழ் நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ் நாடு காவல் துறை தேனி மாவட்டம் ஆட்சியர் மற்றும் தேனி மாவட்டம் காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் மத கலவரத்தை தூண்டும் விதமாக செயல் படும் மதுபான பாரை பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக மூட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்ன பொதுமக்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.1
- சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கம் சார்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு மருதூர் மேல காலில்லிருந்து இருந்து வரும் அதிகப்படியான தண்ணீர் அய்யனார் குளத்துப்பட்டியில் இருந்து நிறைந்து வரும் தண்ணீர் தூது குழி அருகே அவுட்லெட் ஷட்டர் மூலம் ஆற்றுக்கே மீண்டும் தண்ணீர் போகும் வகையில் நீர்வழிப்பாதை அமைத்திருந்தார்கள் இந்த தண்ணீர் மீண்டும் ஆற்றுக்கே செல்லாமல் இருக்க 2012ல் தூதுகுழி TO கருமேனி ஆறு என்று ஒரு திட்டம் இருக்கிறது அந்தத் திட்டம் 2012ல் கைவிடப்பட்டுள்ளது அதை ஆய்வு செய்து மீண்டும் அந்தத் திட்டத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும் என்று பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இந்த மனுவை உடனடியாக விவசாயிகளின் உற்ற தோழர் நமது மாவட்ட ஆட்சித் தலைவர் திருநெல்வேலி பிளானிங் செக்ஷனுக்கு பார்வர்ட் செய்து அப்படி ஒரு பிளான் இருக்கிறதா அது கிடப்பில் போடப்பட்டிருக்கிறதா என்ற ஆய்வு செய்து பதில் அனுப்பவும் என்று திருநெல்வேலி பிளானிங் செக்ஷனுக்கு அனுப்பி உள்ளார் கலெக்டர் உத்தரவின் பேரில் திருநெல்வேலி பிளானிங் செக்ஷனில் இருந்து EE மகேஸ்வரி மேடம் AE விசாலாட்சி மற்றும் அதிகாரிகளும் தூதுக்குழிஅருகே ஆய்வு செய்ய சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கத்தினரையும் அழைத்திருந்தனர். அந்த இடத்தில் ஆய்வு செய்த பொழுது மழைக்காலத்தில் இந்த அவுட்லெட் ஷட்டர் மூலம் வீணாக ஆற்றுக்கே செல்லும் தண்ணீரை ஆயிரம் கன அடி தண்ணீராக 2012ல் பாளையம் ஓடைTO கருமேனி ஆறு திட்டம் என்றும் சப் டிவிசன் 2,DNPR லிஸ்டில் இருப்பதை கண்டுபிடித்து அதில் இருக்கிறது என்பதை கண்டுபிடித்தனர். ஆனால் அது 2012ல் தண்ணீர் இல்லை என்று டிராப் செய்யப்பட்டுள்ளது. அதனை அடுத்து சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கத்தினர் பிளானிங் செக்ஷன் அதிகாரிகளிடம் இந்த வருடமே பத்து நாட்களுக்கு மேல் வீணாக கடலுக்கு தண்ணீர் சென்றிருக்கும் இதை தடுக்க உடனடியாக இந்த பாளையம்ஓடைTO கருமேனியாரு திட்டம் 2012ல் கிடப்பில் கிடப்பதையும் இந்தத் திட்டம் வந்தால் மழை மறைவு பகுதியான வரட்சியில் கோரபிடியில் இருக்கும் சாத்தான்குளம் உடன்குடி திசையன்விளை பகுதியில் நிலத்தடிநீரில் மிகவும் பின்தங்கியுள்ள இந்த பகுதிகள் மிகவும் மேன்மை அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. என்று அதிகாரியிடம் கூறி ஆதலால் இந்த திட்டத்திற்கு கண்டிப்பாக உயிர் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். உடனடியாக செயல்பட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு சாத்தான்குளம் தென்பதி விவசாய சங்கத்தினர் சார்பாகவும் சாத்தான்குளம் உடன்குடி திசையன்விளை பகுதி மக்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் . இவண், சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்க தலைவர் A. லூர்துமணி சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்க துணை தலைவர் M. ரவிச்சந்திரன் சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்க செயலாளர் பெரியசாமி சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்க செயற்குழு உறுப்பினர்கள் நரையன்குடியிருப்பு சரவண பாண்டி, அண்ண கணேசன்.1