புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் அருகே பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி மற்றும் வெண்புள்ளி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வுகள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றன. கல்லூரி முதல்வர் முனைவர் ம.துரை அவர்கள் இந்நிகழ்வுகளுக்குத் தலைமையேற்று தொடங்கி வைத்தார். கல்லூரி போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் த.செந்தில்குமார், கல்லூரி முதல்வர் சார்பில் போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை வாசித்தார். தொடர்ந்து, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மு.பழனித்துரை வெண்புள்ளி விழிப்புணர்வு உறுதிமொழியை வாசிக்க, அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில், கல்லூரியின் கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் து.சண்முகசுந்தரம், நிருவாகவியல் துறைத்தலைவர் முனைவர் மு.அன்பழகன், வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் கு.சீனிவாசன், வரலாற்றுத்துறைத்தலைவர் முனைவர் ரா.பிரகதாம்பாள், வேதியியல் துறைத்தலைவர் து.சிற்றரசு உள்ளிட்ட பேராசிரியர்கள், கண்காணிப்பாளர் பா.மகாராஜன் உள்ளிட்ட அலுவலகப் பணியாளர்கள், மற்றும் மாணவ, மாணவியர் அனைவரும் பங்கேற்று உறுதிமொழிகளை ஏற்றுக்கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் அருகே பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி மற்றும் வெண்புள்ளி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வுகள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றன. கல்லூரி முதல்வர் முனைவர் ம.துரை அவர்கள் இந்நிகழ்வுகளுக்குத் தலைமையேற்று தொடங்கி வைத்தார். கல்லூரி போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் த.செந்தில்குமார், கல்லூரி முதல்வர் சார்பில் போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை வாசித்தார். தொடர்ந்து, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மு.பழனித்துரை வெண்புள்ளி விழிப்புணர்வு உறுதிமொழியை வாசிக்க, அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில், கல்லூரியின் கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் து.சண்முகசுந்தரம், நிருவாகவியல் துறைத்தலைவர் முனைவர் மு.அன்பழகன், வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் கு.சீனிவாசன், வரலாற்றுத்துறைத்தலைவர் முனைவர் ரா.பிரகதாம்பாள், வேதியியல் துறைத்தலைவர் து.சிற்றரசு உள்ளிட்ட பேராசிரியர்கள், கண்காணிப்பாளர் பா.மகாராஜன் உள்ளிட்ட அலுவலகப் பணியாளர்கள், மற்றும் மாணவ, மாணவியர் அனைவரும் பங்கேற்று உறுதிமொழிகளை ஏற்றுக்கொண்டனர்.
- புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் அருகே பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி மற்றும் வெண்புள்ளி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வுகள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றன. கல்லூரி முதல்வர் முனைவர் ம.துரை அவர்கள் இந்நிகழ்வுகளுக்குத் தலைமையேற்று தொடங்கி வைத்தார். கல்லூரி போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் த.செந்தில்குமார், கல்லூரி முதல்வர் சார்பில் போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை வாசித்தார். தொடர்ந்து, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மு.பழனித்துரை வெண்புள்ளி விழிப்புணர்வு உறுதிமொழியை வாசிக்க, அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில், கல்லூரியின் கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் து.சண்முகசுந்தரம், நிருவாகவியல் துறைத்தலைவர் முனைவர் மு.அன்பழகன், வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் கு.சீனிவாசன், வரலாற்றுத்துறைத்தலைவர் முனைவர் ரா.பிரகதாம்பாள், வேதியியல் துறைத்தலைவர் து.சிற்றரசு உள்ளிட்ட பேராசிரியர்கள், கண்காணிப்பாளர் பா.மகாராஜன் உள்ளிட்ட அலுவலகப் பணியாளர்கள், மற்றும் மாணவ, மாணவியர் அனைவரும் பங்கேற்று உறுதிமொழிகளை ஏற்றுக்கொண்டனர்.1
- திருவாடானை அருகேயுள்ள சின்ன கீரமங்கலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகாலிங்க மூர்த்தி சுவாமி ஆலயத்தில் பூக்குழி இறங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.1
- புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள தொட்டியப்பட்டியைச் சேர்ந்த ரெங்கன் என்பவரது மகன் ராதாகிருஷ்ணன் (22), தனியார் பைனான்ஸ் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அடகு வைத்த நகைகளை மீண்டும் மீட்க முடியாமல் போனதால், அதே பைனான்ஸ் கம்பெனியில் பணிபுரியும் ஒரு பெண் அந்த நகைகளை மீட்டதாகக் கூறப்படுகிறது. ராதாகிருஷ்ணன் அந்தப் பெண்ணிடம் நகைகளைக் கேட்டபோது, அவர் திருப்பித் தர மறுத்ததாகத் தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ராதாகிருஷ்ணன், தற்கொலை செய்வதற்கு முன்பு, நகைகளைத் தராததால் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்துகொள்வதாக தனது டைரியில் எழுதி வைத்துள்ளார். இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணனின் உறவினர்கள், அவரது தற்கொலைக்குக் காரணமானவர்களைக் கைது செய்யக்கோரி, புதுக்கோட்டை விராலிமலை சாலையில் இலுப்பூர் அருகே உள்ள மேட்டுச்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தால் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இலுப்பூர் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.1
- சிங்கம்புணரி அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ சூலக்கரை காளியம்மன் கோவிலின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முதல் நாளான புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு யாகசாலையில் அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை மற்றும் மகா கணபதி ஹோமம் தொடங்கின. அன்று மாலையில் மகா தீபாராதனையும் நடத்தப்பட்டது. விழாவின் முக்கிய நாளான வியாழக்கிழமை காலை 6 மணி முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, புனித கலச ஊர்வலம், கோபுர அபிஷேகம் மற்றும் மூலவர் அபிஷேகம் ஆகியவை பக்தர்களின் பங்கேற்புடன் கோலாகலமாக நடந்தேறின. இவ்விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த மகா கும்பாபிஷேக விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கருப்பூர் குலாலர் பங்காளிகள் மற்றும் கிராம மக்கள் இணைந்து செய்திருந்தனர்.1
- சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், தேவகோட்டை கிருஷ்ணராஜபுரம் மேற்கு தெருவில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன் மற்றும் ஸ்ரீ ஜெகன்முத்துமாரி ஆகிய தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த மஹா கும்பாபிஷேக விழாவின் ஒரு பகுதியாக, முதல் மற்றும் இரண்டாம் கால யாகபூஜைகள் சிறப்பாக நடத்தப்பட்டன. இந்த பூஜைகளில் கோ பூஜை, லெட்சுமி பூஜை, பிம்பசுத்தி, ரக்ஷாபந்தனம், ஸ்பர்சாகுதி மற்றும் நாடிசந்தானம் போன்ற சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அனைத்து பூஜைகளும் நிறைவடைந்த பின்னர், கடம் புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. கடம் புறப்பாட்டிற்குப் பிறகு, மஹாகும்பாபிஷேகமும், அதைத் தொடர்ந்து மஹா அபிஷேகமும் பக்தர்களின் முன்னிலையில் நடத்தப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.1
- தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்தின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் சார்பில் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் அமைந்துள்ள காவேரி தாய் பிறப்பிடமான தலைக்காவிரியில் சிறப்பு யாகபூஜை மற்றும் குங்கும பூஜை நடத்தப்பட்டது. காவேரி தாய் பிறப்பிடமான தலைக்காவிரியில் மழை வளம் வேண்டி இந்தப் பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பூஜைகளில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஏனாதி சி. மதன் மற்றும் நிர்வாகி ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை விராலிமலை சாலையில் நகராட்சி பணியாளர்களால் குப்பைகள் கொட்டப்படுவதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் மருத்துவமனை நோயாளிகள் என அனைவரும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குப்பைகள் தேங்குவதால் துர்நாற்றம் பரவுவதோடு, பன்றிகள் மற்றும் நாய்களின் தொல்லை அதிகரித்து, வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சாலையைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. சுமார் 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியின் மாணவ, மாணவிகளும் பெற்றோர்களும் அப்பகுதியை கடக்கும்போது மூக்கைப் பிடித்துக்கொண்டு செல்லும் அவலநிலை உள்ளது. மேலும், சாலையின் எதிர்புறத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் உள் நோயாளிகளும் இந்த துர்நாற்றத்தால் கடுமையான சிரமத்துடன் சிகிச்சை பெறும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த துர்நாற்றத்தினால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் நிலவுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த அவலநிலைக்கு உடனடியாக தீர்வு காண, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், மனைவிக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட தெற்கு செய்யானேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள கொன்னையூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் புனராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. தேவகோட்டை அருகே உள்ள தெற்கு செய்யானேந்தல் கிராமத்தில் நடைபெற்ற இந்த கும்பாபிஷேக நிகழ்வு பக்தர்களிடையே பெரும் ஈர்ப்பைப் பெற்றது. இந்த விழாவின் முதல் மற்றும் இரண்டாம் கால யாக பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் கோ பூஜை, நாடி சந்தானம் ஸ்பரிஷகுதி மூல மந்திர ஹோமம், மஹா பூர்ணாகுதி, தீபாராதனை, யாத்ரதானம் கட்டி புறப்பாடு போன்ற பல்வேறு சடங்குகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, கலசத்திற்கு மஹா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், தீபாராதனை மற்றும் மகா பூஜை ஆகியவை நிறைவடைந்தன. விழாவின் நிறைவாக, திருமறை, திருமுறை, பாராயணம் ஆகியவை வாசிக்கப்பட்டன. இந்த மங்களகரமான நிகழ்வில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு இறைவனின் தரிசனம் பெற்று வழிபட்டனர்.1