திருவெறும்பூர் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் பூசத்துரை பகுதியில் உரிய ஆவணம் இல்லாமல் நெல் போட்ட பணத்தை எடுத்து வந்த விவசாயிடமிருந்து ரூ2,50,000 ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது அதனைத் தொடர்ந்து வாக்காளர்களுக்கு பணம் அன்பளிப்பு பொருட்கள் வழங்குவதை தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்துவதற்காக ஆங்காங்கே கண்காணிப்பு குழுக்களை அமைத்து ரூபாய் 50,000 க்கு மேல் உரிய ஆவணம் இன்றி ரொக்கத்தை எடுத்துச் செல்பவர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்வதோடு பரிசுப் பொருட்களையும் எடுத்துச் சென்றால் அவற்றை பறிமுதல் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் பூசத்துறை பகுதியில் எப் எஸ்டி தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில்ஈடுபட்ட பொழுது அந்த வழியாக வந்த காரை பரிசோதிக்கப்படுது திருச்சி சஞ்சீவி நகர் பொன்மணி நகர் விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்த சத்யா (47) என்ற பெண்மணி தான் விவசாயம் செய்து அதில் நெல் மூட்டைகளை விலைக்கு போட்டதில் கிடைத்த ரூ 2,லட்சத்து 50 ஆயிரம் எடுத்து வந்துள்ளார். அதற்கு உரிய ஆவணம் இல்லை எனக் கூறி அதனை தேர்தல் பறக்கும்படை அதிகாரி நாகலட்சுமி தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்து திருவெறும்பூர் தாசில்தாரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான கார்த்திகேயனிடம் ஒப்படைத்தனர்.

- Post by பெரியசாமி2
- குடுமியான்மலை அகிலாண்டேஸ்வாரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலையில் 7-ம் நூற்றாண்டை சேர்ந்த பிரசித்தி பெற்ற குடவரைக்கோவிலான அகிலாண்டேஸ்வாரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவிலில் இந்த ஆண்டுக்காண பங்குனி உத்திரம் திருவிழா கடந்த 23-.ந்தேதி தொடங்கியது. அதனைதொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு நாளும் மண்டகபடி தாரர்கள் சார்பில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சிகாகிரீஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்பாளை, தேரில் எழுந்தருள செய்தனர். இதையடுத்து குதிரை ஆட்டம், மேளதாளம் முழங்க திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக அசைந்தாடி வந்தது ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் கூடி நின்று தேங்காய், பூ, பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் தேர் நிலையை வந்தடைந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் குடுமியான்மலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு நீர்மோர், பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்எல்ஏ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை இலுப்பூர் துணை கண்காணிப்பாளர் திவ்யா தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் வையம்பட்டியை சேர்ந்த கதிரவன் வேட்பாளராக தவெக தலைவர் விஜய் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து விஜயை சந்தித்து விட்டு மணப்பாறைக்கு ரயிலில் வருகை புரிந்தார். அப்போது மணப்பாறை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த தவெக நிர்வாகிகள் பெரும் திரளாக ரயில் நிலையத்தில் ஒன்று கூடி வேட்பாளர் கதிரவனுக்கு வரவேற்பு அளித்தனர்.1
- Post by Sri ram1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்து 30 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று நத்தம் விஸ்வநாதன் காலடியில் சமர்ப்பிப்போம் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் ஆத்தூர் அதிமுக வேட்பாளர் விஸ்வநாதன் சூளுரை1
- ஆத்தூர் தொகுதியில் 1 லட்சத்து 30 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று நத்தம் விஸ்வநாதன் காலடியில் சமர்ப்பிப்போம் என அதிமுக வேட்பாளர் விஸ்வநாதன் சூளுரை1
- வேடசந்தூர் திண்டுக்கல் டு கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கல்வார்பட்டி சோதனை சாவடி அருகில் இரவு சரக்கு வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து யூடேன்னில் இருந்து சுமார் 100 அடிக்கு சாலையின் நடுவே தடுப்பிற்காக வைக்கப்பட்ட அலுமினிய தகடுகளை சேதப்படுத்தி நின்றது விபத்து சம்பந்தமாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்1
- விராலிமலை தொகுதியில் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்ய தயாரான மத்திய அரசு வழக்கறிஞர் மீது பா.ஜ.க வினர் தாக்குதலுக்கு உள்ளான வழக்கறிஞர் சண்முகசுந்தரம் பரபரப்பு பேட்டி1