Shuru
Apke Nagar Ki App…
அக்ஷய திருதியை 2026 - தமிழகத்தில் சுமார் 25,000 கிலோ தங்க நகைகள் விற்பனை கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் ஒரே அளவில் தங்கம் விற்பனையாகி இருந்தாலும், மதிப்பின் அடிப்படையில், கடந்த ஆண்டை விட கூடுதலாக 13,000 கோடி ரூபாய்க்கு விற்பனை
Natarajan Pitchaimani
அக்ஷய திருதியை 2026 - தமிழகத்தில் சுமார் 25,000 கிலோ தங்க நகைகள் விற்பனை கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் ஒரே அளவில் தங்கம் விற்பனையாகி இருந்தாலும், மதிப்பின் அடிப்படையில், கடந்த ஆண்டை விட கூடுதலாக 13,000 கோடி ரூபாய்க்கு விற்பனை
More news from தமிழ்நாடு and nearby areas
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்தில் 20/04/2026 இன்று தீ தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு ஆத்தூர் நிலைய அலுவலர் சு.கணேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு ஆத்தூர் சடையாண்டி கோயில் அருகில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா வாட்டர் கம்பெனியில் போலி ஒத்திகை பயிற்சி நடத்தி பணியாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு சார்ந்த துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.1
- 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் சசிகலா மற்றும் மருத்துவர் அய்யா ராமதாஸ், ஸ்ரீ காந்திமதி அறிவித்த 120 தொகுதிகளில் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டி இன்று பாரதிய இந்து மக்கள் கட்சி சார்பில் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில், வே. மலைக்கோட்டை தர்மா தலைமையில் பால்குடம் எடுத்து, மாவிளக்கு இட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது.1
- *நான் என்றுமே அதிகாரத்தை கைப்பற்ற நினைத்தவன் இல்லை. இந்த நான்கு ஆண்டுகளாக நான் பட்ட அவமானமும் வேதனையும் எல்லோருக்குமே நன்றி தெரியும். அவையெல்லாம் கடந்து வந்து இன்று மீண்டும் நான்காவது முறையாக உங்களிடம் வாக்கு சேகரிக்க வந்துள்ளேன் என்று கூறி சமுதாய மக்களிடையே வாக்கு சேகரித்த போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம். தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்று நிறைவு கட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் இன்று சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் சமுதாய சங்கங்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். போடிநாயக்கனூர் அனைத்து செட்டியார் பேரவை சங்கத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பொழுது அவர் தான் போடிநாயக்கனூருக்கு 15 ஆண்டுகளாக செய்த பணிகளை கூறி வாக்கு சேகரித்தார். நான் என்றுமே அதிகாரத்தை கைப்பற்ற நினைத்ததில்லை மேலும் நான் கடந்த நான்கு ஆண்டுகளாக நான் பட்ட அவமானங்களும் வேதனைகளும் எல்லோரும் அறிவார்கள். அனைத்தையும் கடந்து வந்து இன்று திமுக ஸ்டாலின் அவர்களின் ஆதரவோடு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறேன் தாங்கள் எனக்கு வாக்குகள் வழங்க வேண்டும் என்று கூறினார். மேலும் போடிநாயக்கனூரில் கடந்த 1957 ஆம் ஆண்டு முதன்முதலாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தொடர்ந்து இரண்டு முறை எம்எல்ஏவாக பதவி வகித்தவரும் தமிழக கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள போடி மெட்டு மலைச்சாலையை உருவாக்கி தந்த வருமான சுப்புராஜிற்கு மதுரை மையப்பகுதியில் சிலையை அமைத்து தரவும் நம் தேச பிதா உத்தமர் மகாத்மா காந்திக்கு போடிநாயக்கனூரில் சிலை இல்லாத நிலையில் அவருக்கும் சிலை அமைத்து தரவும் உரிய ஏற்பாடுகள் செய்வேன் என்றும் உறுதியளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.1
- Post by G.thangarasu1
- தமிழகமெங்கும் வரும் (ஏப்ரல் 23ந்தேதி) சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பொதுமக்கள் எந்த வித அச்சமின்றி 100% வாக்களிக்க வேண்டும். இதனையடுத்து இன்று மாலையுடன் முடிவடையும் நிலையில் பிரச்சாரத்தை மாற்று வழிகளில் செய்தல் மற்றும் வாக்களிக்க பணம் பட்டுவாடா செய்தல்,பொருட்கள், மதுபானம் வழங்குதல் உள்ளிட்ட தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் போன்ற செயல்கள் நடப்பது தெரிய வந்தால் 1950, 8939146100, 100 ஆகிய எண்களில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என திருச்சி மாவட்டத்தில் உள்ள காவல் துறை சார்பில் தெரிவித்துள்ளனர்.1
- மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட துவரங்குச்சியில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் மனித நேயம் கட்சி வேட்பாளர் அப்துல் சமது அவர்களை ஆதரித்து செல்வகுமார் இன்று துவரங்குறிச்சி பூதநாயகம் கோவில் அருகில் உள்ள நாடக மேடையில் பேசும்போது பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் முத்தரைய சமுதாயத்தை அசிங்கப்படுத்திய ஏளனமாக பார்த்தார்கள் தமிழக முதல்வர் நல்லாட்சி நாயகன் சமூகநீதியுடன் பார்த்தார் இந்த நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு கடந்து கூட அரசியலில் புறந்தள்ள பட்டு ஒதுக்கப்பட்டு முத்தரையர் சமுதாயத்தில் சட்டமன்ற உறுப்பினராக வாய்ப்பு தந்த தாய் உள்ளம் கொண்ட முதல்வர் தான் நம்ம முதல்வர் என்று செல்வகுமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்1
- மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று மாலை முதல் சுவாமியும் அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் நான்கு மாசி வீதி உலா வருவது வழக்கம். அதன் அடிப்படையில் இன்று இரவு நடைபெறும் வீதியுலாவை காண்பதற்காக நகரின் பல்வேறு பகுதியில் இருந்து பெண்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சாரை சாரையாக நான்ஞமாசி வீதிகளை நோக்கி வந்த வண்ணமே உள்ளனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அய்யலூரில் இன்று அதிமுக வேட்பாளர் பரமசிவத்திற்கு பொதுமக்கள் பேராதரவு கொடுத்து அவரை வரவேற்று மாலை அணிவித்து மலர்கள் தூவி சிறப்பு செய்தனர். இந்நிகழ்வில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் டிசி ராஜமோகன் தலைமையில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.1