2000 பேருக்கு கேஸ் அடுப்பு வழங்கிய நகர மன்ற துணை தலைவர் . ஆத்தூர்,ஜன.12 சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 13வது வார்டில் இன்று அந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் ஆத்தூர் நகர மன்ற துணைத் தலைவர் கவிதா ஸ்ரீராம் தலைமையில் கேஸ் அடுப்பு வழங்கப்பட்டது திராவிட பொங்கல் திருநாளில் பொதுமக்கள் ஒவ்வொருவரும் வீட்டில் கேஸ் அடுப்பில் பொங்கல் வைத்து சீரும் சிறப்புமாக திராவிட பொங்கல் கொண்டாட வேண்டும் என்று 2000 பேருக்கு கேஸ் அடுப்பு வழங்கப்பட்டது .அருகில் சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஆத்தூர் ஆர்.வி. ஸ்ரீராம் மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் உடன் இருந்தனர் கேஸ் அடுப்பு வாங்கிக்கொண்டு பொதுமக்கள் கவிதா ஸ்ரீராம் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதிக்கு நன்றி தெரிவித்தும் பொங்கல் திருநாளில் ரேஷன் கார்டுக்கு 3000 ரூபாய் வழங்கியதற்கு நன்றி தெரிவித்து வருகிற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆத்தூர் சட்டமன்றத்தில் திமுக 20 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று தெரிவித்தனர்.
2000 பேருக்கு கேஸ் அடுப்பு வழங்கிய நகர மன்ற துணை தலைவர் . ஆத்தூர்,ஜன.12 சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 13வது வார்டில் இன்று அந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் ஆத்தூர் நகர மன்ற துணைத் தலைவர் கவிதா ஸ்ரீராம் தலைமையில் கேஸ் அடுப்பு வழங்கப்பட்டது திராவிட பொங்கல் திருநாளில் பொதுமக்கள் ஒவ்வொருவரும் வீட்டில் கேஸ் அடுப்பில் பொங்கல் வைத்து சீரும் சிறப்புமாக திராவிட பொங்கல் கொண்டாட வேண்டும் என்று 2000 பேருக்கு கேஸ் அடுப்பு வழங்கப்பட்டது
.அருகில் சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஆத்தூர் ஆர்.வி. ஸ்ரீராம் மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் உடன் இருந்தனர் கேஸ் அடுப்பு வாங்கிக்கொண்டு பொதுமக்கள் கவிதா ஸ்ரீராம் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதிக்கு நன்றி தெரிவித்தும் பொங்கல் திருநாளில் ரேஷன் கார்டுக்கு 3000 ரூபாய் வழங்கியதற்கு நன்றி தெரிவித்து வருகிற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆத்தூர் சட்டமன்றத்தில் திமுக 20 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று தெரிவித்தனர்.
- தர்மபுரி அரசு மருத்துவமனையில் காசநோய் மருத்துவப் பயனாளர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் தர்மபுரி எம்எல்ஏ எஸ்பி வெங்கடேஸ்வரன் வழங்கினார்1
- ஒகேனக்கல் காவேரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழியும் பருவமழையின் அளவைப் பொறுத்து நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக காணப்படுகிறது. நேற்று 700 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று (ஜன.12) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளதாக, மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.1
- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கிழக்கு மற்றும் மேற்கு நகர திமுக சார்பில் நகர அளவிலான திராவிட பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் நேற்றும் இன்றும்நடைபெற்றது. வாலிபால் மற்றும் கபடி போட்டிகள் நடைபெற்றது. இதில் கபடி போட்டிகளில் பத்துக்கும் மேற்பட்ட அணிகளும் வாலிபால் போட்டியில் 15க்கும் மேற்பட்ட அணிகளும் பங்கேற்று விளையாடினார்கள் இறுதி வாலிபால் போட்டியை திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் சேலம் கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சேலம் ஏ வி எஸ் கல்லூரியின் முதல்வர் சீனிவாசன்திருச்செங்கோடு மேற்கு நகர திமுக பொறுப்பாளர் முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன் கிழக்கு நகர திமுக பொறுப்பாளர் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.இந்தப் போட்டிகளில்நகர அளவிலான விளையாட்டு வீரர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.கபடி பிரிவில் முதலிடம் பிடித்த எஸ்.பி. என் A அணிக்கு 5 ஆயிரம் ரொக்கப் பரிசு கோப்பை, 2ம் இடம் பிடித்த எஸ்.பி. என் B அணிக்கு 4ஆயிரம் மற்றும் கோப்பை 3ம் இடம் பிடித்த அன்னைத் தமிழ் அணிக்கு 3 ஆயிரம் மற்றும் கோப்பை பரிசாக வழங்கப் பட்டது. இதே போல் வாலிபால் பிரிவில் முதல் பரிசு பெற்ற மாணிக் பிரண்ட்ஸ் அணிக்கு5000 ரொக்கப் பரிசு மற்றும் கோப்பை இரண்டாம் பரிசு பெற்ற சந்துரு பிரண்ட்ஸ் அணிக்கு 3000 ரொக்க பரிசு மற்றும் கோப்பை மூன்றாம் இடம் பிடித்த பி.ஆர்.சி அணிக்கு ரூ 3000 ரொக்க பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது1
- *மணப்பாறை அருகே பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய ஶ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர்.* *அரசுக்கு நன்றி தெரிவித்த மாணவர்கள்.* திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கண்ணுடையான்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அருகில் உள்ள கள்ளிப்பட்டி, மாதம் பட்டி, பூசாரிபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இப்பள்ளியில் மேல்நிலைக்கல்வி பயிலும் 427 மாணவ, மாணவிகளுக்கு ஶ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். தங்கள் ஊர்களில் இருந்து பள்ளிக்கு நடந்து வந்து சென்றதாகவும், தற்போது தமிழக அரசு மிதிவண்டி கொடுத்துள்ளதால் இனி பள்ளிக்கு வருவதில் உள்ள சிரமங்கள் குறையும் எனவும் மிதிவண்டி கொடுத்த தமிழக அரசுக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர். விழாவில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி, தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் லக்ஷ்மணன், தகவல் தொழில் நுட்ப அணி ஶ்ரீரங்கம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கார்த்திக்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொடியரசு, கைக்குடி சாமி, மலம்பட்டி சந்திரன், தகவல் தொழில் நுட்ப அணி ஶ்ரீரங்கம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கார்த்திக்குமார், கிளைச்செயலாளர் இளையராஜா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.1
- திருவண்ணாமலை மாவட்டம்: ஜமுனாமரத்தூர் ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் குளிர் காலமாகும். ஆண்டில் சில மாதங்களில் பகல் அதிகமாகவும் இரவு நேரம் குறைவாகவும் இருக்கும். சில மாதங்களில் பகல் நேரம் குறைவாகவும் இரவு நேரம் அதிகமாகவும் இருக்கும். வழக்கத்திற்கு மாறாக 2025 இந்த ஆண்டு நவம்பர் குளிர்காலம் தொடங்கி கடந்த இரண்டு நாட்களாக கடும் குளிர் வாட்டிவந்த நிலையில் 10/01/2026 ஜனவரி மாதம் சனிக்கிழமை தொடங்கிய மழை, கடந்த மூன்று தினங்களாக இரவும் பகலும் விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருவதால். ஜவ்வாது மலை சுற்றியுள்ள மலை கிராம மக்கள் கடும் குளிரிலும் மழையை பாராமல். பொங்கலுக்கு தேவையான பொருட்கள் வாங்கி சென்றனர்.1
- திண்டுக்கல் 12/01/26 வானிலை மேகமூட்டத்துடன் லேசான வெப்பத்துடன் 11.50க்கு மலை பெய்யத் தொடங்கியது சுமார் அரை மணி நேரம் அளவான மலை பெய்தது1
- *சென்னையில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியே வந்த பா.ஜ.க மாநில இளைஞரணி தலைவர் சூர்யா தாக்குதல் செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு பா.ஜ.க இளைஞரணி சார்பில் திமுகவினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது* சென்னையில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியே வந்த, பா.ஜ.க, மாநில இளைஞரணி தலைவர் சூர்யா உள்ளிட்ட, பா.ஜ.க,வினர் மீது தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. தாக்குதலில் காயமடைந்த சூர்யா மற்றும் பா.ஜ.க வினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.இச்சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு பா.ஜ.க இளைஞரணி சார்பில் தமிழக பாஜக மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் டி.ஆர்.தவமணி தலைமையில் தி.மு.க.,வினரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய இளைஞரணி தலைவர் ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.1
- தர்மபுரி அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் காத்திருப்பு கூடம் தர்மபுரி எம்எல்ஏ எஸ் பி வெங்கடேஸ்வரன் திறந்து வைத்தார்.1