logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் துவக்கி வைத்த திமுக மாவட்ட பொறுப்பாளர் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமினை நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை ஒன்றியம் ஜேடர்பாளையத்தில் நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் K.S.மூர்த்தி Ex.MLA அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.உடன் ஒன்றிய பொறுப்பாளர்கள் தளபதி சுப்பிரமணியம், T.M.சரவணக்குமார்,கழக நிர்வாகிகள்,அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்

2 days ago
user_DHINESH KUMAR
DHINESH KUMAR
Journalist ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
2 days ago
6eca2933-ad25-43c8-8fa5-4411efc721f3

நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் துவக்கி வைத்த திமுக மாவட்ட பொறுப்பாளர் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமினை நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை ஒன்றியம் ஜேடர்பாளையத்தில் நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் K.S.மூர்த்தி Ex.MLA அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.உடன் ஒன்றிய பொறுப்பாளர்கள் தளபதி சுப்பிரமணியம், T.M.சரவணக்குமார்,கழக நிர்வாகிகள்,அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்

More news from Tamil Nadu and nearby areas
  • தருமபுரி மாவட்டம் அரூர் பாஜக சார்பில் மோடி பொங்கல் மொரப்பூரில் நடைபெற்றது. இந்த பொங்கல் விழாவில் பாஜகவின் கலை கலாச்சார பிரிவு மாநில செயலாளர் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டார்.  இந்த பொங்கல் விழாவிற்கு வந்த நடிகை கஸ்தூரியை பாஜகவினர் மாட்டு வண்டியில் அழைத்து வந்தனர். மேலும் பொங்கல் விழாவில் நடைபெற்ற வள்ளி கும்மி ஆட்டத்தில் நடிகை கஸ்தூரி குழுவினரோடு இணைந்து கும்மி ஆடினார்.
    1
    தருமபுரி மாவட்டம் அரூர் பாஜக சார்பில் மோடி பொங்கல் மொரப்பூரில் நடைபெற்றது. இந்த பொங்கல் விழாவில் பாஜகவின் கலை கலாச்சார பிரிவு மாநில செயலாளர் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டார்.  இந்த பொங்கல் விழாவிற்கு வந்த நடிகை கஸ்தூரியை பாஜகவினர் மாட்டு வண்டியில் அழைத்து வந்தனர். மேலும் பொங்கல் விழாவில் நடைபெற்ற வள்ளி கும்மி ஆட்டத்தில் நடிகை கஸ்தூரி குழுவினரோடு இணைந்து கும்மி ஆடினார்.
    user_Periyasamy
    Periyasamy
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    6 hrs ago
  • அதியமான்கோட்டை ஸ்ரீ தட்சணகாசி காலபைரவருக்கு தேய்பிறை அஸ்டமி அதிகாலை பைரவருக்கு16 திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு சுவாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம்: ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று காள பைரவர் அருள்பெற்றனர் தருமபுரியை அடுத்த அதியமான்கோட்டையில் மன்னர் அதியமானால் கட்டப்பட்ட தட்சணகாசி காலபைரவர் ஆலயம் காசிக்கு அடுத்ததாக பைரவருக்கென தனி ஆலயம் என்ற பெருமை பெற்ற காலபைரவர் ஆலயத்தில் இன்று தேய்பிறை அஸ்டமி விழா சிறப்பாக நடைபெற்றது இங்கு மாதம்தோறும் தேஸ் பிரை அஸ்டமி அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், கர்நாடக மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வரிகை புரிந்து பூசணி தீபமேற்றி வழிபாடு செய்கின்றனர் இன்று பைரவருக்கு அதிகாலை முதலே 16 திரவியங்களால், பால், தயிர், சந்தனம், விபூதி மஞ்சள், நெய், இளநீர் ஆகியவற்றை கலந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டுசந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாவித்தார் காலபைரவர்தேய்பிறை அஸ்டமி விழாவில் சுவாமியை தரிசிக்க தருமபுரி மாவட்டம் முழுவதிலிருந்தும் அண்டை மாநிலம் கர்நாடகம், கேரளம், ஆந்திரா பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து நீண்டவரிசையில் காத்திருந்து காலபைரவரை வழிபட்டனர் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் சிறப்பாக செய்தனர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது
    1
    அதியமான்கோட்டை ஸ்ரீ தட்சணகாசி காலபைரவருக்கு தேய்பிறை அஸ்டமி 
அதிகாலை  பைரவருக்கு16 திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு சுவாமிக்கு சந்தனகாப்பு   அலங்காரம்: 
ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று காள பைரவர் அருள்பெற்றனர்
தருமபுரியை அடுத்த அதியமான்கோட்டையில் மன்னர் அதியமானால் கட்டப்பட்ட தட்சணகாசி காலபைரவர் ஆலயம் காசிக்கு அடுத்ததாக பைரவருக்கென தனி ஆலயம் என்ற பெருமை பெற்ற காலபைரவர் ஆலயத்தில் இன்று தேய்பிறை அஸ்டமி விழா சிறப்பாக நடைபெற்றது
இங்கு மாதம்தோறும் தேஸ் பிரை அஸ்டமி அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், கர்நாடக மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வரிகை புரிந்து பூசணி தீபமேற்றி வழிபாடு செய்கின்றனர்
இன்று பைரவருக்கு அதிகாலை முதலே 16 திரவியங்களால், பால், தயிர், சந்தனம், விபூதி மஞ்சள், நெய், இளநீர் ஆகியவற்றை கலந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டுசந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாவித்தார்
காலபைரவர்தேய்பிறை அஸ்டமி  விழாவில் சுவாமியை தரிசிக்க தருமபுரி மாவட்டம் முழுவதிலிருந்தும் அண்டை மாநிலம் கர்நாடகம், கேரளம், ஆந்திரா பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து நீண்டவரிசையில் காத்திருந்து காலபைரவரை வழிபட்டனர்
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் சிறப்பாக செய்தனர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது
    user_G Krishnan
    G Krishnan
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    12 hrs ago
  • கொட்டும் மலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி அரூர் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் அரூர் வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் போக்குவரத்து காவல்துறை, சட்டம் ஒழுங்கு காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை, பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இன்று சனிக்கிழமை காலை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர் இந்த பேரணி அரூர் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தொடங்கி அரூர் பைபாஸ் ரோடு வழியாக சென்று மீண்டும் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முடிவடைந்தது கொட்டும் மழை சாரலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தலைக்கவசம் அணிந்து இந்த பேரணியில் ஈடுபட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
    1
    கொட்டும் மலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
அரூர் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் அரூர் வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் போக்குவரத்து காவல்துறை, சட்டம் ஒழுங்கு காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை, பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இன்று சனிக்கிழமை காலை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர் இந்த பேரணி அரூர் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தொடங்கி அரூர் பைபாஸ் ரோடு வழியாக சென்று மீண்டும் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முடிவடைந்தது கொட்டும் மழை சாரலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தலைக்கவசம் அணிந்து இந்த பேரணியில் ஈடுபட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
    user_Raja
    Raja
    செய்தியாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    16 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் பேராவூரணியில் இருந்து தேங்காய் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி நள்ளிரவில் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த நொச்சிமேடு என்ற இடத்தில் வந்தபோது, லாரியை அதன் டிரைவர் திருப்ப முயன்றார். அப்போது, பின்னால் மன்னார் குடியில் இருந்து கம்பம் நோக்கி சென்ற அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி சேதமடைத்துடன் இடிபாடுகளுக்குள் பஸ் டிரைவர் சிக்கி கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் லாரி சாலையில் கவிழ்ந்து அதிலிருந்த தேங்காயும் சாலையில் சிதறிக் கிடந்தது. இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் பேராவூரணியில் இருந்து 
தேங்காய் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி நள்ளிரவில் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த நொச்சிமேடு என்ற இடத்தில் வந்தபோது, லாரியை அதன் டிரைவர் திருப்ப முயன்றார். அப்போது, பின்னால் மன்னார் குடியில் இருந்து கம்பம் நோக்கி சென்ற அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி சேதமடைத்துடன் இடிபாடுகளுக்குள் பஸ் டிரைவர் சிக்கி கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் லாரி சாலையில் கவிழ்ந்து அதிலிருந்த தேங்காயும் சாலையில் சிதறிக் கிடந்தது. இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    user_Usha arun News
    Usha arun News
    மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் ஊராட்சிக்கு உட்பட்ட சூரியநல்லூர் அருகே திமுக விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பாக குண்டடம் ஒன்றியம் திருப்பூர் கிழக்கு மாவட்டம் சார்பாக மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது அதன் பின்னர் பெண்களுக்கு கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது இதில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் மற்றும் பெண்கள் பலர் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்
    1
    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் ஊராட்சிக்கு உட்பட்ட சூரியநல்லூர் அருகே திமுக விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பாக குண்டடம் ஒன்றியம் திருப்பூர் கிழக்கு மாவட்டம் சார்பாக மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது அதன் பின்னர் பெண்களுக்கு கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது இதில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் மற்றும் பெண்கள் பலர் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்
    user_Sai Kirubakaran
    Sai Kirubakaran
    தாராபுரம், திருப்பூர், தமிழ்நாடு•
    7 hrs ago
  • தமிழ்நாட்டில் சில இடங்களில் 10/01/26 மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மைய அறிவிப்பு வெளியிடபட்டது போல திருச்செங்கோடு பகுதியில் லேசான மழை தூறல்கள் பெய்து வருகிறது
    1
    தமிழ்நாட்டில் சில இடங்களில் 10/01/26 மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மைய அறிவிப்பு வெளியிடபட்டது போல திருச்செங்கோடு பகுதியில் லேசான மழை தூறல்கள் பெய்து வருகிறது
    user_Gowthaman T
    Gowthaman T
    Farmer வேடசந்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    9 hrs ago
  • கொங்கணபுரம், திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் வாரந்தோறும் தேங்காய் பருப்பு ஏலம் நடக்கும். இந்நிலையில் இன்று பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய் பருப்பு வாங்க வந்தனர். இதில் மொத்தம் 28 மூட்டை தேங்காய் பருப்பு ரூ.1.31 லட்சத்திற்கு விற்பனையானது. முதல் ரகம் ரூ.120.10 முதல் ரூ.186 வரை, இரண்டாம் ரகம் ரூ.100.10 முதல் ரூ.115.10 வரை விற்பனை செய்யப்பட்டது.
    1
    கொங்கணபுரம், திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் வாரந்தோறும் தேங்காய் பருப்பு ஏலம் நடக்கும். இந்நிலையில் இன்று  பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய் பருப்பு வாங்க வந்தனர். இதில் மொத்தம் 28 மூட்டை தேங்காய் பருப்பு ரூ.1.31 லட்சத்திற்கு விற்பனையானது. முதல் ரகம் ரூ.120.10 முதல் ரூ.186 வரை, இரண்டாம் ரகம் ரூ.100.10 முதல் ரூ.115.10 வரை விற்பனை செய்யப்பட்டது.
    user_Srianand
    Srianand
    Journalist எடப்பாடி, சேலம், தமிழ்நாடு•
    18 hrs ago
  • பாலக்கோடு சார் பதிவாளரை மிரட்டும் தேமுதிக நிர்வாகியின் வீடியோ வைரல் தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில்  சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது,  சக்திவேல் என்பவர் சார்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். தேமுதிகவை சேர்ந்த தருமபுரி மேற்கு மாவட்ட துணை செயலாளர் ராஜதுரை, பத்திர எழுத்தராக  உள்ளார்.  இவர்  கடந்த வாரம் பத்திர பதிவு செய்ய பாலக்கோடு சார் பதிவாளர் அலுவலகத்திற்க்கு சென்றுள்ளார். இவரது ஆவணங்களை சரிபார்த்த சார்பதிவாளர்,  ராஜதுரை  சமர்ப்பித்த ஆவணத்தில் வாரிசு சான்றிழதல் குறித்து சந்தேகம் ஏற்பட்டதால்,  வருவாய்த்துறை இணையதளத்தில் சரி பார்த்ததில் ராஜதுரை சமர்பித்த  வாரிசு சான்றிதழ்  போலியானது என்பது தெரியவந்தது, இதனால்  இவரது பத்திர பதிவை நிராகரித்தார், ஆனால் ராஜதுரை சார்பதிவாளரை ஆவணத்தை  பதிவு செய்யுமாறு மிரட்டி உள்ளார். பத்திரம் பதிவு செய்ய மறுத்ததால்,  கோபமடைந்த ராஜதுரை பத்திரப்பதிவாளர் சக்திவேல்,  ஆவணம்  பதிவு செய்ய தன்னிடம் பணம் கேட்பதாக சமூக வலைதளங்களில் பொய்யாக தன் மீது அவதூறு பரப்பி, தவறாக விமர்சனம் செய்து வருவதாகவும், தனது பெயருக்கும், பணிக்கும் குந்தகம் ஏற்படுத்தி வரும் ராஜதுரை மீது நடவடிக்கை எடுக்க கோரி  ராஜதுரை மிரட்டும்  வீடியோ ஆதாரத்துடன்  பாலக்கோடு காவல் நிலையத்தில் சார்பதிவாளர் சக்திவேல்  புகார் அளித்தார். இது குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சார்பதிவாளரை மிரட்டும் தேமுதிக நிர்வாகியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போலிபத்திர பதிவுகளை தடுக்க சட்டம் கடுமையாக்கப்பட  வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
    1
    பாலக்கோடு சார் பதிவாளரை மிரட்டும் தேமுதிக நிர்வாகியின் வீடியோ வைரல்
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில்  சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது,  சக்திவேல் என்பவர் சார்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார்.
தேமுதிகவை சேர்ந்த தருமபுரி மேற்கு மாவட்ட துணை செயலாளர் ராஜதுரை, பத்திர எழுத்தராக  உள்ளார். 
இவர்  கடந்த வாரம் பத்திர பதிவு செய்ய பாலக்கோடு சார் பதிவாளர் அலுவலகத்திற்க்கு சென்றுள்ளார்.
இவரது ஆவணங்களை சரிபார்த்த சார்பதிவாளர்,  ராஜதுரை  சமர்ப்பித்த ஆவணத்தில் வாரிசு சான்றிழதல் குறித்து சந்தேகம் ஏற்பட்டதால்,  வருவாய்த்துறை இணையதளத்தில் சரி பார்த்ததில் ராஜதுரை சமர்பித்த  வாரிசு சான்றிதழ்  போலியானது என்பது தெரியவந்தது, இதனால்  இவரது பத்திர பதிவை நிராகரித்தார், ஆனால் ராஜதுரை சார்பதிவாளரை ஆவணத்தை  பதிவு செய்யுமாறு மிரட்டி உள்ளார். பத்திரம் பதிவு செய்ய மறுத்ததால்,  கோபமடைந்த ராஜதுரை பத்திரப்பதிவாளர் சக்திவேல், 
ஆவணம்  பதிவு செய்ய தன்னிடம் பணம் கேட்பதாக சமூக வலைதளங்களில் பொய்யாக தன் மீது அவதூறு பரப்பி, தவறாக விமர்சனம் செய்து வருவதாகவும், தனது பெயருக்கும், பணிக்கும் குந்தகம் ஏற்படுத்தி வரும் ராஜதுரை மீது நடவடிக்கை எடுக்க கோரி  ராஜதுரை மிரட்டும்  வீடியோ ஆதாரத்துடன்  பாலக்கோடு காவல் நிலையத்தில் சார்பதிவாளர் சக்திவேல்  புகார் அளித்தார். இது குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சார்பதிவாளரை மிரட்டும் தேமுதிக நிர்வாகியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
போலிபத்திர பதிவுகளை தடுக்க சட்டம் கடுமையாக்கப்பட  வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
    user_Periyasamy
    Periyasamy
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    8 hrs ago
  • சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ரஸ்க் கம்பெனி தீ விபத்து ஏராளமான பொருட்கள் எரிந்து சேதம் காரைக்குடி செஞ்சை சண்முகா நகர் பகுதியில் வணிக பயன்பாட்டிற்கு என்று பதிவு செய்யாமல் வீட்டில் ரஸ்க் கம்பெனி செயல்படுவதாக, மாநகராட்சி அதிகாரிகள் கடந்த நவம்பர் மாதம் ரஸ்க் கம்பெனியை பூட்டி சீல் வைத்தனர்.ஆனால் மாநகராட்சி சீல் வைத்தும் சட்ட விரோதமாக அதே தளத்தில், ரஸ்க் கம்பெனியில் பணிக்கு இருந்த வடமாநில இளைஞர்கள் சிலர் தங்கி உணவு சமைத்து சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் மாலை ரஸ்க் கம்பெனியில் இருந்து, அதிக (புகை வந்த நிலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது, இதில் ரஸ்க் தயாரிக்கும் பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் எரிந்தது.இதனை அடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் உடனடியாக வந்து தீயை அணைத்தனர். மேலும் ரஸ்க் கம்பெனி பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்த நிலையில் எதற்காக வட மாநில இளைஞர்கள் தங்கி இருந்தார்கள் என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
    1
    சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ரஸ்க் கம்பெனி தீ விபத்து ஏராளமான பொருட்கள் எரிந்து சேதம்
காரைக்குடி செஞ்சை சண்முகா நகர் பகுதியில் வணிக பயன்பாட்டிற்கு என்று பதிவு செய்யாமல் வீட்டில் ரஸ்க் கம்பெனி செயல்படுவதாக, மாநகராட்சி அதிகாரிகள் கடந்த நவம்பர் மாதம் ரஸ்க் கம்பெனியை பூட்டி சீல் வைத்தனர்.ஆனால் மாநகராட்சி சீல் வைத்தும் சட்ட விரோதமாக அதே தளத்தில்,  ரஸ்க் கம்பெனியில் பணிக்கு  இருந்த வடமாநில இளைஞர்கள் சிலர் தங்கி உணவு சமைத்து சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் மாலை ரஸ்க் கம்பெனியில் இருந்து, அதிக (புகை வந்த நிலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது, இதில் ரஸ்க் தயாரிக்கும் பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் எரிந்தது.இதனை அடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் உடனடியாக வந்து தீயை அணைத்தனர். மேலும் ரஸ்க் கம்பெனி பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்த நிலையில் எதற்காக வட மாநில இளைஞர்கள் தங்கி இருந்தார்கள் என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
    user_G Krishnan
    G Krishnan
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    18 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.