Shuru
Apke Nagar Ki App…
மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கிய முன்னாள் எம்எல்ஏ இன்று 11.01.2026 பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட செக்கோடி ஊராட்சி மோட்டுப்பட்டி கிராமத்தில் சந்திரசேகர் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் உணவுப் பொருட்களை முன்னாள் எம்எல்ஏ இன்பசேகரன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கருணாநிதி, செல்வராஜ் மாற்றுத் திறனாளி சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் பச்சையப்பன், முத்துலக்ஷ்மி, கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Raja
மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கிய முன்னாள் எம்எல்ஏ இன்று 11.01.2026 பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட செக்கோடி ஊராட்சி மோட்டுப்பட்டி கிராமத்தில் சந்திரசேகர் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் உணவுப் பொருட்களை முன்னாள் எம்எல்ஏ இன்பசேகரன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கருணாநிதி, செல்வராஜ் மாற்றுத் திறனாளி சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் பச்சையப்பன், முத்துலக்ஷ்மி, கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- ஒகேனக்கல் காவேரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழியும் பருவமழையின் அளவைப் பொறுத்து நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக காணப்படுகிறது. நேற்று 700 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று (ஜன.12) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளதாக, மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.1
- தர்மபுரி அருகே மதிகோன் பாளையம் ஏரியல் மருந்து கடை விற்பனையாளர் சடலமாக மீட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.1
- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கிழக்கு மற்றும் மேற்கு நகர திமுக சார்பில் நகர அளவிலான திராவிட பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் நேற்றும் இன்றும்நடைபெற்றது. வாலிபால் மற்றும் கபடி போட்டிகள் நடைபெற்றது. இதில் கபடி போட்டிகளில் பத்துக்கும் மேற்பட்ட அணிகளும் வாலிபால் போட்டியில் 15க்கும் மேற்பட்ட அணிகளும் பங்கேற்று விளையாடினார்கள் இறுதி வாலிபால் போட்டியை திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் சேலம் கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சேலம் ஏ வி எஸ் கல்லூரியின் முதல்வர் சீனிவாசன்திருச்செங்கோடு மேற்கு நகர திமுக பொறுப்பாளர் முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன் கிழக்கு நகர திமுக பொறுப்பாளர் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.இந்தப் போட்டிகளில்நகர அளவிலான விளையாட்டு வீரர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.கபடி பிரிவில் முதலிடம் பிடித்த எஸ்.பி. என் A அணிக்கு 5 ஆயிரம் ரொக்கப் பரிசு கோப்பை, 2ம் இடம் பிடித்த எஸ்.பி. என் B அணிக்கு 4ஆயிரம் மற்றும் கோப்பை 3ம் இடம் பிடித்த அன்னைத் தமிழ் அணிக்கு 3 ஆயிரம் மற்றும் கோப்பை பரிசாக வழங்கப் பட்டது. இதே போல் வாலிபால் பிரிவில் முதல் பரிசு பெற்ற மாணிக் பிரண்ட்ஸ் அணிக்கு5000 ரொக்கப் பரிசு மற்றும் கோப்பை இரண்டாம் பரிசு பெற்ற சந்துரு பிரண்ட்ஸ் அணிக்கு 3000 ரொக்க பரிசு மற்றும் கோப்பை மூன்றாம் இடம் பிடித்த பி.ஆர்.சி அணிக்கு ரூ 3000 ரொக்க பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது1
- திருவண்ணாமலை மாவட்டம்: ஜமுனாமரத்தூர் ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் குளிர் காலமாகும். ஆண்டில் சில மாதங்களில் பகல் அதிகமாகவும் இரவு நேரம் குறைவாகவும் இருக்கும். சில மாதங்களில் பகல் நேரம் குறைவாகவும் இரவு நேரம் அதிகமாகவும் இருக்கும். வழக்கத்திற்கு மாறாக 2025 இந்த ஆண்டு நவம்பர் குளிர்காலம் தொடங்கி கடந்த இரண்டு நாட்களாக கடும் குளிர் வாட்டிவந்த நிலையில் 10/01/2026 ஜனவரி மாதம் சனிக்கிழமை தொடங்கிய மழை, கடந்த மூன்று தினங்களாக இரவும் பகலும் விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருவதால். ஜவ்வாது மலை சுற்றியுள்ள மலை கிராம மக்கள் கடும் குளிரிலும் மழையை பாராமல். பொங்கலுக்கு தேவையான பொருட்கள் வாங்கி சென்றனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- திருப்பூர் அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து1
- திண்டுக்கல் 12/01/26 வானிலை மேகமூட்டத்துடன் லேசான வெப்பத்துடன் 11.50க்கு மலை பெய்யத் தொடங்கியது சுமார் அரை மணி நேரம் அளவான மலை பெய்தது1
- மாவட்டத்தில் இன்று பதிவான மழையின் விவரம் தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை முதல் தற்போது வரை பல இடங்களில் மழை பொழிந்து வருகிறது இந்த நிலையில் இன்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழையின் விவரம். வேப்பம்பட்டி 4.4 மிமீ, சூரியக்கடை 4மிமீ, கேத்துரெட்டிபட்டி 2.8 மிமீ, பெரியப்பட்டி 2.8 மிமீ, மருதிப்பட்டி 2.4 மிமீ, தென்கரைக்கோட்டை 2.4 மிமீ, பையர்நத்தம் 2.4மிமீ, தீர்த்தமலை 2மிமீ என மழை பதிவாகி உள்ளது1