Shuru
Apke Nagar Ki App…
தேசுப்பள்ளி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஓம் ஸ்ரீ சக்தி காளியம்மன் மற்றும் மயான காளியம்மன் திருக்கோயிலில் மண்டல பூஜை கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டனப்பள்ளி அருகே உள்ள தேசுப்பள்ளி கிராமத்தில் எழுந்தருளியுள்ளஓம் ஸ்ரீ சக்தி காளியம்மன் மற்றும் மயான காளியம்மன் திருக்கோவிலின்மண்டல பூஜையின் நிறைவினையொட்டி அம்மன் கரகத்துடன் பால்குடம் ஊர்வலத்துடன் பல்வேறு கட்டபூஜைகள் நடைப்பெற்றது.
FAYAZ
தேசுப்பள்ளி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஓம் ஸ்ரீ சக்தி காளியம்மன் மற்றும் மயான காளியம்மன் திருக்கோயிலில் மண்டல பூஜை கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டனப்பள்ளி அருகே உள்ள தேசுப்பள்ளி கிராமத்தில் எழுந்தருளியுள்ளஓம் ஸ்ரீ சக்தி காளியம்மன் மற்றும் மயான காளியம்மன் திருக்கோவிலின்மண்டல பூஜையின் நிறைவினையொட்டி அம்மன் கரகத்துடன் பால்குடம் ஊர்வலத்துடன் பல்வேறு கட்டபூஜைகள் நடைப்பெற்றது.
More news from தமிழ்நாடு and nearby areas
- தேசுப்பள்ளி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஓம் ஸ்ரீ சக்தி காளியம்மன் மற்றும் மயான காளியம்மன் திருக்கோயிலில் மண்டல பூஜை கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டனப்பள்ளி அருகே உள்ள தேசுப்பள்ளி கிராமத்தில் எழுந்தருளியுள்ளஓம் ஸ்ரீ சக்தி காளியம்மன் மற்றும் மயான காளியம்மன் திருக்கோவிலின்மண்டல பூஜையின் நிறைவினையொட்டி அம்மன் கரகத்துடன் பால்குடம் ஊர்வலத்துடன் பல்வேறு கட்டபூஜைகள் நடைப்பெற்றது.1
- ஊத்தங்கரையில் தடகள விளையாட்டுப் போட்டி. வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஆட்சியர் தினேஷ்குமார் பரிசுகள் வழங்கினார். ஊத்தங்கரையில் தடகள விளையாட்டுப் போட்டி. வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஆட்சியர் தினேஷ்குமார் பரிசுகள் வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை உள்விளையாட்டு மைதானத்தில் போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் அமைந்துள்ள செய்யார் செஸ் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஃபேர்வே எண்டர்பிரைசஸ் யூனிட் 1 & 2 இணைந்து 2026 -27 ஆம் ஆண்டு தடகள விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை ஊத்தங்கரை வட்டாட்சியர் நடராஜன், துணை காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி ஆகியோர் துவக்கி வைத்தனர். இவ்விளையாட்டு போட்டிகளில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், உள்ளிட்ட பல்வேறு தடகள விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மெடல், சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருளை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் வழங்கினார். இதில் ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் தென்னரசன், நிறுவனத்தின் சார்பாக ஜெயராஜ் பாபு (நிர்வாக பொது மேலாளர்), அருள் மகாவிஷ்ணு (பொது மேலாளர்) மற்றும் டேவிட் ராஜன் (வெளியுறவுத்துறை தொடர்புகள் தலைவர்) ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். குரோஸ் அகடாமி விளையாட்டு நிறுவனத்தின் நிறுவனர் கோபிநாத் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இப்போட்டியில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டனர்.1
- காரிமங்கலம் பிடிஓ அலுவலகம் முன்பு சட்டத் தூண்கள் இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் காரிமங்கலம் பிடிஓ அலுவலகம் முன்பு சட்டத் தூண்கள் இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்1
- பாலக்கோட்டில் கனமழையால் நீரில் மூழ்கிய விவசாயப் பயிர்கள் – நீர்வழிக் கால்வாய்களைத் தூர்வாராததே காரணம் என விவசாயிகள் குற்றச்சாட்டு - உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் விவசாய நிலங்களுக்குள் வெள்ளநீர் புகுந்து, பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ள சம்பவம் விவசாயிகளிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. முறையாகப் பராமரிக்கப்படாத நீர்வழிக் கால்வாய்களே இந்தப் பாதிப்புக்கு முக்கியக் காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் நேற்றிரவு 381.மில்லி மீட்டர் பெய்த கனமழையின் காரணமாக, பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக, பாலக்கோடு ஒன்றியம், செல்லியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அல்லியூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் வெள்ளநீர் புகுந்ததால், சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கி பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. அல்லியூரைச் சேர்ந்த விவசாயி மாதையன் கூறுகையில் இரண்டு ஏக்கர் நிலத்தில் சாம்பல் பூசணி, மிளகாய் மற்றும் சம்பங்கி பூச்செடிகளைச் சாகுபடி செய்திருந்த நிலையில், கனமழையால் அவரது விவசாய நிலம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. இதனால், பயிர்கள் அழுகி வீணாகின. அல்லியூர் பகுதியில் உள்ள ஏரிக்கு மழை நீர் செல்லும் கால்வாயில் மின் கம்பங்கள் நடப்பட்டும், ஊராட்சி நிர்வாகம் கால்வாயை பராமரிக்கததால் கால்வாய் அடைபட்டு ஏரிக்கு செல்ல வேண்டிய மழைநீர் விவசாய நிலங்களில் புகுந்ததாகவும், ஊராட்சி நிர்வாகத்திடம் கால்வாயை அகலப்படுத்தி தூர்வாரி, சீர் செய்ய பொதுமக்கள் பல முறை புகார் அளித்தும் பஞ்சாயத்து நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை எனவும் இதன் காரணமாக, கனமழையின்போது பெருக்கெடுத்து வரும் தண்ணீர் ஏரிக்குச் செல்லாமல், விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதாகவும், மேலும், தேசிய நெடுஞ்சாலையிலிருந்து வெளியேறும் மழைநீரும் முறையான வடிகால் வசதி இல்லாததால், கால்வாய் வழியாக வெளியேற முடியாமல் வயல்வெளிகளுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். நேற்று இரவு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அல்லியூர் கிராமத்தில் உள்ள விளை நிலங்களில் புகுந்த மழை நீர் சாம்பல் பூசணி, சம்பங்கி பூ, மிளகாய் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சேதப்படுத்தி உள்ளன. அறுவடையை எதிர்பார்த்துக் காத்திருந்த நேரத்தில் பயிர்கள் நீரில் மூழ்கியதால், சாகுபடிக்காக செலவிட்ட தொகையைக்கூடத் திரும்பப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஒரு ஏக்கருக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மழைநீர் தேங்கினால் பயிர்கள் முழுமையாக அழுகி, விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் , ஏற்கெனவே விவசாயச் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், கனமழையால் ஏற்பட்டுள்ள இந்தப் பாதிப்பு விவசாயிகளுக்கு கூடுதல் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கும் அவர்கள், பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும், அல்லியூர் பகுதியில் உள்ள நீர்வழிக் கால்வாய்களை உடனடியாகத் தூர்வாரி, தடைகளை அகற்றி, மழைநீர் தடையின்றி ஏரிக்குச் செல்லும் வகையில் சீரமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.1
- வாசன் கண் மருத்துவமனை கிளையின் 16-வது ஆண்டு துவக்க நிகழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள வாசன் கண் மருத்துவமனை கிளை, புத்தம் புதிய பொலிவுடன் தனது 16-வது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது. இதனை முன்னிட்டு, மருத்துவமனையில் அதிநவீன கூடுதல் வசதிகளுடன் கூடிய கண் சிகிச்சைப் பிரிவுகளின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் வருகை புரிந்து விழாவைச் சிறப்பித்தனர். ஓசூர் இஎஸ்ஐ மருத்துவமனை, மருத்துவ கண்காணிப்பாளர், டாக்டர் V. கீதா, இந்திய மருத்துவக் கழகத்தின் ஓசூர் கிளையின் தலைவர், டாக்டர் ராமானுஜர், உதவிசார் கருவூல அலுவலர் ஜி சங்கர் மற்றும் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஓசூர் ஒருங்கிணைப்பாளர் ஜான்சன், அதியமான் பொறியியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ராதாகிருஷ்ணன், ஓய்வூதிய சங்க நிர்வாகி துரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். மேலும், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக ஓசூர் கிளையின் தலைமை மேலாளர் வைரமுத்து, தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி நிறுவனத்தின் முதுநிலை மண்டல மேலாளர் கைசர் ராஜா, ஓசூர் மருந்தாளுநர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் A. சிவகுமார், ஸ்ரீ ராம் பிரசாத், B. சாதிக் பாஷா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். வாசன் கண் மருத்துவமனை இயக்குனர் சுந்தர முருகேசன், மண்டல வணிக மேம்பாட்டு மேலாளர் நாகேந்திரா மற்றும் மருத்துவர்கள் ஆகியோருடன் சிறப்பு விருந்தினர்கள் இணைந்து முறைப்படி விழாவை குத்து விளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தனர். ஓசூர், வைஷ்ணவி நகர், 80 அடி ரோடு, பெங்களூர் பைபாஸ் சாலை பகுதியில் அமைந்துள்ள வாசன் கண் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் 16வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் மருத்துவமனைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உரையாற்றினார்கள். இந்த நிகழ்ச்சியில் ஓசூர் வாசன் கண் மருத்துவமனையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் மருத்துவ நிபுணர்கள் , டாக்டர். கரண் மக்தும்,ஆலோசகர் – கண் பார்வைத் திருத்தம் மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைப் பிரிவு தலைவர், டாக்டர். தீபக் டி. சுவாமி, ஆலோசகர் – கண்புரை, பார்வைத் திருத்தம் மற்றும் விழித்திரை மருத்துவ நிபுணர், டாக்டர். சமிதா காலே, ஆலோசகர் – கண்ணின் விட்ரியஸ், விழித்திரை, யூவியா மற்றும் ROP நிபுணர், டாக்டர் என். பைரவ ராவ், மூத்த கண் மருத்துவர் மற்றும் டாக்டர். ரக்ஷா வி, கண்புரை அறுவை சிகிச்சை நிபுணர், விழித்திரை மற்றும் யூவியா மருத்துவ நிபுணர், ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். மேலும், பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு மேம்பட்ட மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கண் மருத்துவ சேவைகளை வழங்கும் வகையில் இந்த கூடுதல் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. விழாவில் பங்கேற்ற மருத்துவ வல்லுநர்கள் மற்றும் விருந்தினர்கள் மருத்துவமனையின் புதிய வசதிகளைப் பார்வையிட்டதுடன், பொதுமக்களின் கண் நலன் காப்பதில் வாசன் கண் மருத்துவமனையின் பங்களிப்பைப் பாராட்டிப் பேசினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஓசூர் மருத்துவமனையின் வணிக மேம்பாட்டு மேலாளர் சதீஷ்குமார் குழுவினருடன் மருத்துவமனை ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.1
- மீனாட்சி அம்மன் கோவிலில் வந்து திருநீர், குங்குமம் வைத்து கொண்டார் முதல்வர் அது ஒன்றே போதும் - மதுரை ஆதீனம் பேட்டி. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் மருதுபாண்டியர்களின் 225-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் மருதுபாண்டியர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை ஆதீனம், மருதுபாண்டியர்கள் ஆன்மிகத்திற்காகவும், மக்களின் நலனுக்காகவும் சிறப்பாகச் செயல்பட்டவர்கள் எனத் தெரிவித்தார். தொடர்ந்து தமிழக அரசியல் மற்றும் ஆட்சி குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். குறிப்பாக, த.வெ.க. ஆட்சி சிறப்பான ஆட்சி என்றும், அனைத்து மதங்களையும் மதிக்கும் ஆட்சி என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் அண்மையில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்த முதல்வர் திருநீர், குங்குமம் வைத்துக்கொண்டது ஒன்றே போதும் என தெரிவித்தார்.1
- கணவன் - மனைவி தகராறு: மாமனாரை சுத்தியால் அடித்து, கத்தியால் குத்திய மருமகன் - போலீஸ் வலைவீச்சு! கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் காவல் எல்லைக்குட்பட்ட கண்ணடஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (49). இவருடைய மகள் கீர்த்தனா (28). இவருக்கும் பர்கூர் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் (32) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 6 மாதங்களாக கீர்த்தனா தனது கணவரை பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கீர்த்தனாவின் வீட்டிற்கு வந்த சந்திரசேகரன், தனது குழந்தையைத் தன்னிடம் அனுப்பி வைக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட மோதலில், ஆத்திரமடைந்த சந்திரசேகரன் வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து மாமனார் ஆனந்தனின் முதுகில் பயங்கரமாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் வைத்திருந்த சூரிக்கத்தியால் ஆனந்தனின் வலது கண் புருவத்தின் மேல் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆனந்தனுக்கு, கண் புருவத்தில் பலத்த காயம் ஏற்பட்டு 6 தையல்கள் போடப்பட்டன. மத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஆனந்தன் கொடுத்த புகாரின் பேரில் மத்தூர் போலீஸார், வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள மருமகன் சந்திரசேகரனை தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும் இந்த இடத்தில் இருந்த கேமராவில் இந்த தாக்குதல் சம்பவம் பதிவாகி உள்ள நிலையில் அந்த வீடியோ காட்சி தற்பொழுது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.1
- கிருஷ்ணகிரி மாவட்டம் கண்ணண்ட ஹள்ளியில் குடும்பத் தகராறில் மாமனார் மீது சுத்தி, கத்தியால் தாக்குதல்! வீட்டில் பதிவான சிசிடிவி காட்சிகள் நெஞ்சைப் பதற வைக்கும் அதிர்ச்சி காட்சிகள் கிருஷ்ணகிரி மாவட்டம், கண்ணண்ட அள்ளி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக மாமனாரை சுத்தி மற்றும் கத்தியால் தாக்கிய மருமகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, பார்ப்பவர்களை நெஞ்சைப் பதற வைக்கும் வகையில் உள்ளது.1