logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

புகையிலை போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் இடங்களிலேயே அரசு தடை செய்ய வேண்டும். சிவகங்கையில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் விக்ரமராஜா பேட்டி சிவகங்கையில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் 13 ஆம் ஆண்டு விழா கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் பேரவை சங்க மாநில தலைவர் விக்கமராஜா கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, புகையிலை போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் இடங்களிலேயே அரசு தடை செய்ய வேண்டும். online வர்த்தகம் மற்றும் கார்ப்பரேட் கம்பெனிகளால், சாதாரண வியாபாரிகள் வணிகத்தை விட்டு வெளியேறி வருகின்றனர். சிறு வியாபாரிகளை பாதுகாப்பிற்கு மத்திய மாநில அரசு பல்வேறு சிறப்பு பாதுகாப்பு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறை உள்ள காலகட்டத்தில் குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாய் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கியுள்ளது. இதனை உயர்த்தி இரண்டு லட்சமாக ரூபாய் கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும். முறையான ரசீது வைத்திருக்கும் வியாபாரிகளின் பொருள்களை பறிமுதல் செய்யக்கூடாது. பணம் கொண்டு செல்லும் அரசியல்வாதிகளை விட்டுவிட்டு, விளம்பரத்திற்காக வணிகர்களை அதிகாரிகள் பிடித்து வருவதாகவும், இதுகுறித்து அடுத்த வாரம் தேர்தல் ஆணையத்தில் முறையிட போவதாகவும் தெரிவித்தார். நடைபெறும் திமுக ஆட்சியில் வணிகர்களின் 70% பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது, எஞ்சிய பொது சதவீத பிரச்சனைகள் நிலுவையில் உள்ளது. தண்டனை பெற்ற கஞ்சா வியாபாரிகள் ஜாமீனில் வந்தவுடன், தகவல் கொடுத்தவர்களை தாக்கும் நிலை உள்ளது. இது தவிர்க்கப்பட வேண்டும். கஞ்சா வியாபாரத்தில் ஈடுபடுவர்கள் மீது அரசு கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டத்தினை அமல்படுத்த வேண்டும். வணிகர் சங்கத்தின் கோரிக்கை மனுவினை ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினருக்கு கொடுத்திருக்கிறோம். யார் எங்களுக்கு நிறைவேற்றுவதாக எழுத்துப்பூர்வமாக அறிவிக்கின்றார்களோ, அவர்களுக்கு எங்களது ஆதரவு இருக்கும். எனது உறவினர்கள் எந்த அரசியல் கட்சியில் இருந்தாலும் வணிகர் சங்கம் தனித்து செயல்படும். வரும் தேர்தலை முன்னிட்டு, வாக்குக்கு பணம் வாங்காதீர்கள், உங்களது வாக்கினை பணம் வாங்காமல் செலுத்துங்கள். இனாம் நம்மை காப்பாற்றாது, உழைப்பு மட்டுமே நம்மை காப்பாற்றும் என தமிழ்நாடு வணிகர் சங்கம், விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளது. ஒரு பொருளுக்கு பல அடுக்குகளாக வரிக்கட்டும் நிலையை மாற்றக்கோரி, மத்திய நிதி அமைச்சரிடம் சுட்டிக்காட்டி உள்ளோம். அதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். நான்கு கட்டங்களாக இருந்த ஜிஎஸ்டியை இரண்டு கட்டங்களாக குறைத்ததற்கு நிதி அமைச்சகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளோம். ஆனால் வியாபாரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள சட்டம் நெருக்கடியை தருகிறது. அதனை எளிமைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என விக்கிரமராஜா தெரிவித்தார்.

on 7 March
user_Devakottaigani news
Devakottaigani news
சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
on 7 March

புகையிலை போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் இடங்களிலேயே அரசு தடை செய்ய வேண்டும். சிவகங்கையில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் விக்ரமராஜா பேட்டி சிவகங்கையில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் 13 ஆம் ஆண்டு விழா கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் பேரவை சங்க மாநில தலைவர் விக்கமராஜா கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, புகையிலை போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் இடங்களிலேயே அரசு தடை செய்ய வேண்டும். online வர்த்தகம் மற்றும் கார்ப்பரேட் கம்பெனிகளால், சாதாரண வியாபாரிகள் வணிகத்தை விட்டு வெளியேறி வருகின்றனர். சிறு வியாபாரிகளை பாதுகாப்பிற்கு மத்திய மாநில அரசு பல்வேறு சிறப்பு பாதுகாப்பு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறை உள்ள காலகட்டத்தில் குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாய் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கியுள்ளது. இதனை உயர்த்தி இரண்டு லட்சமாக ரூபாய் கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும். முறையான ரசீது வைத்திருக்கும் வியாபாரிகளின் பொருள்களை பறிமுதல் செய்யக்கூடாது. பணம் கொண்டு செல்லும் அரசியல்வாதிகளை விட்டுவிட்டு, விளம்பரத்திற்காக வணிகர்களை அதிகாரிகள் பிடித்து வருவதாகவும், இதுகுறித்து அடுத்த வாரம் தேர்தல் ஆணையத்தில் முறையிட போவதாகவும் தெரிவித்தார். நடைபெறும் திமுக ஆட்சியில் வணிகர்களின் 70% பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது, எஞ்சிய பொது சதவீத பிரச்சனைகள் நிலுவையில் உள்ளது. தண்டனை பெற்ற கஞ்சா வியாபாரிகள் ஜாமீனில் வந்தவுடன், தகவல் கொடுத்தவர்களை தாக்கும் நிலை உள்ளது. இது தவிர்க்கப்பட வேண்டும். கஞ்சா வியாபாரத்தில் ஈடுபடுவர்கள் மீது அரசு கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டத்தினை அமல்படுத்த வேண்டும். வணிகர் சங்கத்தின் கோரிக்கை மனுவினை ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினருக்கு கொடுத்திருக்கிறோம். யார் எங்களுக்கு நிறைவேற்றுவதாக எழுத்துப்பூர்வமாக அறிவிக்கின்றார்களோ, அவர்களுக்கு எங்களது ஆதரவு இருக்கும். எனது உறவினர்கள் எந்த அரசியல் கட்சியில் இருந்தாலும் வணிகர் சங்கம் தனித்து செயல்படும். வரும் தேர்தலை முன்னிட்டு, வாக்குக்கு பணம் வாங்காதீர்கள், உங்களது வாக்கினை பணம் வாங்காமல் செலுத்துங்கள். இனாம் நம்மை காப்பாற்றாது, உழைப்பு மட்டுமே நம்மை காப்பாற்றும் என தமிழ்நாடு வணிகர் சங்கம், விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளது. ஒரு பொருளுக்கு பல அடுக்குகளாக வரிக்கட்டும் நிலையை மாற்றக்கோரி, மத்திய நிதி அமைச்சரிடம் சுட்டிக்காட்டி உள்ளோம். அதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். நான்கு கட்டங்களாக இருந்த ஜிஎஸ்டியை இரண்டு கட்டங்களாக குறைத்ததற்கு நிதி அமைச்சகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளோம். ஆனால் வியாபாரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள சட்டம் நெருக்கடியை தருகிறது. அதனை எளிமைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என விக்கிரமராஜா தெரிவித்தார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியின் திமுக வேட்பாளர் ஆ.தமிழரசி ரவிக்குமார் நகரின் பல வார்டுகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். 18, 19, 20, 26, 27 வார்டுகளில் பெண்கள் ஆரத்தி எடுத்து, மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். நகர் செயலாளர் பொன்னுச்சாமி, மானாமதுரை நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி , முன்னாள் கவுன்சிலர் கணேசன்,18வது வார்டு கவுன்சிலர் ராஜேஸ்வரி ராஜேந்திரன்,வார்டு செயலாளர் சங்கமங்கலம் சங்கர்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ‘உதயசூரியன்’ சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அவர், அடிப்படை வசதிகளை மேம்படுத்த உறுதி அளித்தார். ஏப்.23ல் தேர்தல் நடைபெற உள்ளது.
    1
    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியின் திமுக வேட்பாளர் ஆ.தமிழரசி ரவிக்குமார் நகரின் பல வார்டுகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
18, 19, 20, 26, 27 வார்டுகளில் பெண்கள் ஆரத்தி எடுத்து, மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். நகர் செயலாளர் பொன்னுச்சாமி, மானாமதுரை நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி , முன்னாள் கவுன்சிலர் கணேசன்,18வது வார்டு கவுன்சிலர் ராஜேஸ்வரி ராஜேந்திரன்,வார்டு செயலாளர் சங்கமங்கலம் சங்கர்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
‘உதயசூரியன்’ சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அவர், அடிப்படை வசதிகளை மேம்படுத்த உறுதி அளித்தார். ஏப்.23ல் தேர்தல் நடைபெற உள்ளது.
    user_Santhosh Kumar V
    Santhosh Kumar V
    பத்திரிகையாளர் மானாமதுரை, சிவகங்கை, தமிழ்நாடு•
    6 min ago
  • *திருச்சுழி அருகே சவ்வாஸ்புரம் கிராமத்தில் கோவில் திருவிழாவில் கையில் வாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த இளைஞர்களை தட்டிக் கேட்ட பஞ்சாலை தொழிலாளி வெட்டி படுகொலை; கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி 3 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டம்* விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சவ்வாஸ்புரம் கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ மாரியம்மன் பங்குனி பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. இந்த திருவிழாவின்போது சவ்வாஸ்புரம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி மற்றும் மாங்குளத்தை சேர்ந்த மாரிக்கண்ணன் என்ற இரு இளைஞர்கள் கஞ்சா போதையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் பெரிய வாளுடன் சுற்றி திரிந்துள்ளனர். இதனைக் கண்ட அதே ஊரைச் சேர்ந்த பஞ்சாலை தொழிலாளியான வேல்முருகன்(33) என்பவர் கோவில் விழா கமிட்டி உறுப்பினராக இருந்ததால் கையில் வாளுடன் சுற்றித்திரிந்த கருப்பசாமி மற்றும் மாரி கண்ணன் இருவரையும் தட்டி கேட்டு சத்தம் போட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் நடந்த இருவரும் உன்னை வெட்டிக் கொள்ளாமல் விடமாட்டோம் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து விழா முடிந்து இன்று அதிகாலை நேரத்தில் ராமலிங்காமில் அருகே உள்ள டீக்கடையில் வேல்முருகன் நண்பர்களுடன் வந்து டீ குடித்துவிட்டு மீண்டும் சவ்வாஸ்புரம் திரும்பி உள்ளார். அப்போது சவ்வாஸ்புரம் தொடக்கக் வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே நடந்து சென்று கொண்டிருக்கும்போது அங்கு இருளில் மறைந்திருந்த கருப்பசாமி மற்றும் மாரிக்கண்ணன் இருவரும் தாங்கள் வைத்திருந்த வாளால் வேல்முருகனை சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வேல்முருகன் நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடி திருச்சுழி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து வேல்முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் வேல்முருகனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் அருப்புக்கோட்டை - சாயல்குடி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சு வார்த்தையை ஏற்காமல் தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்த அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் மாரிமுத்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். திருச்சுழி காவல் நிலைய போலீசார் தலைமறைவாக உள்ள கருப்பசாமி மற்றும் மாரிக்கண்ணனை தீவிரமாக தேடி வருகின்றனர்.‌ மேலும் இந்த பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை உள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    4
    *திருச்சுழி அருகே சவ்வாஸ்புரம் கிராமத்தில் கோவில் திருவிழாவில் கையில் வாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த இளைஞர்களை தட்டிக் கேட்ட பஞ்சாலை தொழிலாளி வெட்டி படுகொலை; கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி 3 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டம்*
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சவ்வாஸ்புரம் கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ மாரியம்மன் பங்குனி பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. இந்த திருவிழாவின்போது சவ்வாஸ்புரம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி மற்றும் மாங்குளத்தை சேர்ந்த மாரிக்கண்ணன் என்ற இரு இளைஞர்கள் கஞ்சா போதையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் பெரிய வாளுடன் சுற்றி திரிந்துள்ளனர். 
இதனைக் கண்ட அதே ஊரைச் சேர்ந்த பஞ்சாலை தொழிலாளியான வேல்முருகன்(33) என்பவர் கோவில் விழா கமிட்டி உறுப்பினராக இருந்ததால் கையில் வாளுடன் சுற்றித்திரிந்த கருப்பசாமி மற்றும் மாரி கண்ணன் இருவரையும் தட்டி கேட்டு சத்தம் போட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் நடந்த இருவரும் உன்னை வெட்டிக் கொள்ளாமல் விடமாட்டோம் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். 
அதனைத் தொடர்ந்து விழா முடிந்து இன்று அதிகாலை நேரத்தில் ராமலிங்காமில் அருகே உள்ள டீக்கடையில் வேல்முருகன் நண்பர்களுடன் வந்து டீ குடித்துவிட்டு மீண்டும் சவ்வாஸ்புரம் திரும்பி உள்ளார். அப்போது சவ்வாஸ்புரம் தொடக்கக் வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே நடந்து சென்று கொண்டிருக்கும்போது அங்கு இருளில் மறைந்திருந்த கருப்பசாமி மற்றும் மாரிக்கண்ணன் இருவரும் தாங்கள் வைத்திருந்த வாளால் வேல்முருகனை சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வேல்முருகன் நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடி திருச்சுழி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து வேல்முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இந்த நிலையில் வேல்முருகனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் அருப்புக்கோட்டை - சாயல்குடி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சு வார்த்தையை ஏற்காமல் தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது 
அதனைத் தொடர்ந்து போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்த அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் மாரிமுத்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 
சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். திருச்சுழி காவல் நிலைய போலீசார் தலைமறைவாக உள்ள கருப்பசாமி மற்றும் மாரிக்கண்ணனை தீவிரமாக தேடி வருகின்றனர்.‌
மேலும் இந்த பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை உள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    user_Paramasivam A
    Paramasivam A
    Photography studio திருச்சுழி, விருதுநகர், தமிழ்நாடு•
    2 hrs ago
  • மணப்பாறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர். விஜயகுமார் நேற்று மாலை வையம்பட்டி ஒன்றிய பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது வேட்பாளரிடம் அப்பகுதியை சேர்ந்த நிர்வாகியின் ஒரு ஆண் குழந்தைக்கு பெயர் வைக்க அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா மற்றும் வேட்பாளர் பெயரிலிருந்து ஜெயக்குமார் எனபெயர் வைக்கப்பட்டது.
    1
    மணப்பாறை  தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர். விஜயகுமார் நேற்று மாலை வையம்பட்டி ஒன்றிய பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது வேட்பாளரிடம் அப்பகுதியை சேர்ந்த நிர்வாகியின் ஒரு ஆண் குழந்தைக்கு பெயர் வைக்க அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா மற்றும் வேட்பாளர் பெயரிலிருந்து ஜெயக்குமார் எனபெயர் வைக்கப்பட்டது.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • திண்டுக்கல் நாடார் உறவின்முறை சங்கத்தின் சார்பாக நடைபெற்ற வாக்கு சேகரிப்பு நிகழ்வில், அதிமுக திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திண்டுக்கல் சி. சீனிவாசனுக்கு சங்கத்தினர் தங்கள் முழு ஆதரவை அளித்தனர். இந்த முக்கிய நிகழ்வில் முன்னாள் மேயர் மருதராஜ் மற்றும் நாடார் உறவின்முறை சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர். இது திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவின் தேர்தல் பணிகளுக்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    1
    திண்டுக்கல் நாடார் உறவின்முறை சங்கத்தின் சார்பாக நடைபெற்ற வாக்கு சேகரிப்பு நிகழ்வில், அதிமுக திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திண்டுக்கல் சி. சீனிவாசனுக்கு சங்கத்தினர் தங்கள் முழு ஆதரவை அளித்தனர். இந்த முக்கிய நிகழ்வில் முன்னாள் மேயர் மருதராஜ் மற்றும் நாடார் உறவின்முறை சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர். இது திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவின் தேர்தல் பணிகளுக்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    8 hrs ago
  • பெண்களுடன் வயலில் இறங்கி நாற்று நட்டு அதிமுக வேட்பாளர் நூதன பிரச்சாரம். வீரப்பூரில் பொன்னர்- சங்கருக்கு மணிமண்டபம் மணப்பாறை அதிமுக வேட்பாளர் வாக்குறுதி. ஒரேநாளில் 80 க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு. திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக சார்பில் டாக்டர். விஜயகுமார், இன்று மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வையம்பட்டி ஒன்றிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஆனையூரில் தொடங்கி கூடத்திப்பட்டி, அமயபுரம், நல்லாம்பிள்ளை, உடையாபட்டி, வீரப்பூர், பூசாரி பட்டி, அரசுநிலைப்பாளையம், அணியாப்பூர் உள்ளிட்ட 80 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்து வருகின்றனர். வீரப்பூர் பூசாரிபட்டியில் பொதுமக்களிடையே பேசுகையில் அண்ணன்மார் சுவாமிகளான பொன்னர் - சங்கருக்கு வீரப்பூரில் மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். வருங்கால சந்ததியினருக்கு கல்விதான் முக்கியம் எனவே குழந்தைகள் படிக்க வையுங்கள் என்றும் அறிவுரை கூறினார். அமயபுரம் அருகே சென்றபோது அங்கு வயலில் நாற்று நட்டபெண்களை பார்த்தவுடன் வண்டியில் இருந்து இறங்கிச் சென்று வயலில் நாற்று நட ஆரம்பித்தார். வேட்பாளர் பெண்களுக்கு இணையாக நாற்று படுவதைப் பார்த்த பெண்கள் ஆச்சர்யமடைந்தனர். பின்னர் அவர்களிடம் வாக்கு சேகரித்த வேட்பாளர் நானும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன்தான் நாற்று நடுவது எனக்கு பிடிக்கும் என்று கூறினார். வேட்பாளருடன் அதிமுக, பாஜக, அமமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    1
    பெண்களுடன் வயலில் இறங்கி  நாற்று நட்டு அதிமுக வேட்பாளர் நூதன பிரச்சாரம்.
வீரப்பூரில் பொன்னர்- சங்கருக்கு மணிமண்டபம் மணப்பாறை அதிமுக வேட்பாளர் வாக்குறுதி.
ஒரேநாளில் 80 க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு.
திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக சார்பில் டாக்டர். விஜயகுமார், இன்று மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வையம்பட்டி ஒன்றிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஆனையூரில் தொடங்கி கூடத்திப்பட்டி, அமயபுரம், நல்லாம்பிள்ளை, உடையாபட்டி, வீரப்பூர், பூசாரி பட்டி, அரசுநிலைப்பாளையம், அணியாப்பூர் உள்ளிட்ட 80 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்து வருகின்றனர். வீரப்பூர் பூசாரிபட்டியில் பொதுமக்களிடையே பேசுகையில் அண்ணன்மார் சுவாமிகளான பொன்னர் - சங்கருக்கு வீரப்பூரில் மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். வருங்கால சந்ததியினருக்கு கல்விதான் முக்கியம் எனவே குழந்தைகள் படிக்க வையுங்கள் என்றும் அறிவுரை கூறினார். அமயபுரம் அருகே சென்றபோது அங்கு வயலில் நாற்று நட்டபெண்களை பார்த்தவுடன் வண்டியில் இருந்து இறங்கிச் சென்று வயலில் நாற்று நட ஆரம்பித்தார். வேட்பாளர் பெண்களுக்கு இணையாக நாற்று படுவதைப் பார்த்த பெண்கள் ஆச்சர்யமடைந்தனர். பின்னர் அவர்களிடம் வாக்கு சேகரித்த வேட்பாளர் நானும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன்தான் நாற்று நடுவது எனக்கு பிடிக்கும் என்று கூறினார். வேட்பாளருடன் அதிமுக, பாஜக, அமமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    18 hrs ago
  • 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன் திமுக வேட்பாளர் ஐ பி செந்தில்குமார் பிரச்சாரம் செய்யும் பொழுது பதிலடி கொடுத்துள்ளார். திண்டுக்கல் தொகுதிக்கு நான் என்ன செய்தேன் என திமுக வேட்பாளர் செந்தில்குமார் நேற்று பேசியிருக்கிறார். திண்டுக்கல்லிற்கு மருத்துவ கல்லூரியை கொண்டு வந்துள்ளேன் நான் என்ன பணிகள் செய்தேன் என மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளது கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் வெட்கம், மானம், சூடு, சொரணை, இல்லாத ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. திண்டுக்கல் கோட்டை என சொல்லி வருபவர்கள் வாங்கள் பார்த்து கொள்ளலாம் யார் கோட்டை என்று அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன் பூச்சிநாயக்கன்பட்டி பகுதியில் காரசார பேச்சு.
    1
    2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன் திமுக வேட்பாளர் ஐ பி செந்தில்குமார் பிரச்சாரம் செய்யும் பொழுது பதிலடி கொடுத்துள்ளார். திண்டுக்கல் தொகுதிக்கு நான் என்ன செய்தேன் என திமுக வேட்பாளர் செந்தில்குமார் நேற்று பேசியிருக்கிறார். திண்டுக்கல்லிற்கு மருத்துவ கல்லூரியை கொண்டு வந்துள்ளேன் நான் என்ன பணிகள் செய்தேன் என மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளது கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் வெட்கம், மானம், சூடு, சொரணை, இல்லாத ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. திண்டுக்கல் கோட்டை என சொல்லி வருபவர்கள் வாங்கள் பார்த்து கொள்ளலாம் யார் கோட்டை என்று அதிமுக வேட்பாளர் திண்டுக்கல்  சீனிவாசன் பூச்சிநாயக்கன்பட்டி பகுதியில் காரசார பேச்சு.
    user_Farmers joint Liability Group
    Farmers joint Liability Group
    Farmer குஜிலியம்பாறை, திண்டுக்கல், தமிழ்நாடு•
    2 hrs ago
  • தூத்துக்குடியில் பைபாஸ் சாலையில் மறவன் மடம் அருகே பல ஏக்கர் பரப்பளவில் படர்ந்திருந்த முள்செடிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயைச் தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி அணைத்தனர். தூத்துக்குடி மறவன் மடம் அருகே உள்ள காலி நிலங்களில் வளர்ந்திருந்த முள்செடிகள் நேற்று திடீரெனத் தீப்பிடித்து எரியத் தொடங்கின. இது குறித்துச் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாகச் சிப்காட் நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில், ஏட்டு இசக்கி ராஜன், ஓட்டுநர் மணிகண்டன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் முத்து ஜெயக்குமார், சாமுவேல் ஆகியோர் தீயணைப்பு ஊர்தியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வெயிலின் தாக்கம் மற்றும் பலத்த காற்று காரணமாகத் தீ மளமளவெனப் பரவி, பல ஏக்கர் நிலங்களைச் சூழ்ந்தது. தீ எரிந்த பகுதிக்கு அருகிலேயே பெட்ரோல் விற்பனை நிலையம் மற்றும் மர யார்டுகள் இருந்ததால் பெரும் ஆபத்து ஏற்படும் சூழல் உருவானது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த தீயணைப்புத் துறையினர், உடனடியாகத் தனியார் ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்தனர். ஜேசிபி மூலம் எரியாத முள்செடிகளை அப்புறப்படுத்தித் தீ மேலும் பரவாமல் தடுத்தனர். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு காட்டுத்தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களின் இந்தச் சமயோசியமான நடவடிக்கையைப் பொதுமக்களும், வணிக நிறுவன உரிமையாளர்களும் வெகுவாகப் பாராட்டினர். இது குறித்துச் சிப்காட் நிலைய அலுவலர் த. கார்த்திகேயன் பொதுமக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் கூறியிருப்பதாவது: "கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் மற்றும் தனியார் நில உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து தங்கள் பகுதியில் உள்ள காய்ந்த முள்செடிகளை ஜேசிபி மூலம் அகற்ற வேண்டும். இதன் மூலம் தீ விபத்துகளையும், பெரும் பொருள் சேதங்களையும் தவிர்க்கலாம். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், தீயணைப்புத் துறையினரின் மீட்புப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் வேண்டும் எனத் தெரிவித்தார்.
    1
    தூத்துக்குடியில் பைபாஸ் சாலையில் மறவன் மடம் அருகே பல ஏக்கர் பரப்பளவில் படர்ந்திருந்த முள்செடிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயைச் தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி அணைத்தனர்.
தூத்துக்குடி மறவன் மடம் அருகே உள்ள காலி நிலங்களில் வளர்ந்திருந்த முள்செடிகள் நேற்று திடீரெனத் தீப்பிடித்து எரியத் தொடங்கின. இது குறித்துச் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாகச் சிப்காட் நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில், ஏட்டு இசக்கி ராஜன், ஓட்டுநர் மணிகண்டன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் முத்து ஜெயக்குமார், சாமுவேல் ஆகியோர் தீயணைப்பு ஊர்தியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
வெயிலின் தாக்கம் மற்றும் பலத்த காற்று காரணமாகத் தீ மளமளவெனப் பரவி, பல ஏக்கர் நிலங்களைச் சூழ்ந்தது. தீ எரிந்த பகுதிக்கு அருகிலேயே பெட்ரோல் விற்பனை நிலையம் மற்றும் மர யார்டுகள் இருந்ததால் பெரும் ஆபத்து ஏற்படும் சூழல் உருவானது.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த தீயணைப்புத் துறையினர், உடனடியாகத் தனியார் ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்தனர். ஜேசிபி மூலம் எரியாத முள்செடிகளை அப்புறப்படுத்தித் தீ மேலும் பரவாமல் தடுத்தனர். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு காட்டுத்தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களின் இந்தச் சமயோசியமான நடவடிக்கையைப் பொதுமக்களும், வணிக நிறுவன உரிமையாளர்களும் வெகுவாகப் பாராட்டினர்.
இது குறித்துச் சிப்காட் நிலைய அலுவலர் த. கார்த்திகேயன் பொதுமக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் கூறியிருப்பதாவது: "கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் மற்றும் தனியார் நில உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து தங்கள் பகுதியில் உள்ள காய்ந்த முள்செடிகளை ஜேசிபி மூலம் அகற்ற வேண்டும். இதன் மூலம் தீ விபத்துகளையும், பெரும் பொருள் சேதங்களையும் தவிர்க்கலாம். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், தீயணைப்புத் துறையினரின் மீட்புப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் வேண்டும் எனத் தெரிவித்தார்.
    user_AMS MEDIA
    AMS MEDIA
    Local News Reporter ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    41 min ago
  • சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர் தமிழரசி ரவிக்குமார், மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 21 மற்றும் 22வது வார்டு பகுதிகளில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிக்க வந்த அவரை, 21வது வார்டு கவுன்சிலர் செல்வகுமார் தலைமையில் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர். குறிப்பாக பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றது சிறப்பாக அமைந்தது. வீதி வீதியாகச் சென்று வாக்காளர்களைச் சந்தித்த தமிழரசி ரவிக்குமார், கை சின்னத்திற்கு ஆதரவு கோரினார். இந்த நிகழ்வில் நகர் செயலாளர் பொன்னுச்சாமி, நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத் தலைவர் பாலசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த அவர், வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற உறுதியளித்தார்.
    1
    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர் தமிழரசி ரவிக்குமார், மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 21 மற்றும் 22வது வார்டு பகுதிகளில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்கு சேகரிக்க வந்த அவரை, 21வது வார்டு கவுன்சிலர் செல்வகுமார் தலைமையில் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர். குறிப்பாக பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றது சிறப்பாக அமைந்தது.
வீதி வீதியாகச் சென்று வாக்காளர்களைச் சந்தித்த தமிழரசி ரவிக்குமார், கை சின்னத்திற்கு ஆதரவு கோரினார்.
இந்த நிகழ்வில் நகர் செயலாளர் பொன்னுச்சாமி, நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத் தலைவர் பாலசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த அவர், வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற உறுதியளித்தார்.
    user_Santhosh Kumar V
    Santhosh Kumar V
    பத்திரிகையாளர் மானாமதுரை, சிவகங்கை, தமிழ்நாடு•
    7 min ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.