logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

சமயபுரம் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு சப்பு ராப்பூசலில் பிரதிபலிப்பான் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள ராப்பூசலில் சமயபுரம் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிவப்பு நிற பிரதிபலிப்பான் (ஸ்டிக்கர்) ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது  நிகழ்ச்சியில் புதுக்கோட்டை  சிட்டி ரோட்டரி சங்க தலைவர்  அப்துல்ரகுமான், அன்னவாசல் அன்னப்பறவை ரோட்டரி சங்க தலைவர் சின்னத்துரை புதுகை வெற்றி ரோட்டரி சங்கத்தலைவர் சோமசுந்தரம் ஆகியோரது தலைமையில் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பிஸ்கட், தண்ணீர், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சிவப்பு நிற பிரதிபலிப்பான் ஸ்டிக்கர் ஒட்டி அனுப்பப்பட்டது  நிகழ்ச்சியில் பொருளாளர்  மோகன்ராஜா மேனாள் செயலாளர் சங்கர் அன்னவாசல் அன்னப்பறவை ரோட்டரி சங்க செயலாளர் சஞ்சய் காந்தி பொருளாளர் குமார், வருங்கால தலைவர் அழகு, சாலைரமேஷ், ஜமீன் பாண்டி மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

14 hrs ago
user_Batcha
Batcha
செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
14 hrs ago
ab1826fe-cc3d-4d47-bc93-12e7759227ba

சமயபுரம் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு சப்பு ராப்பூசலில் பிரதிபலிப்பான் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள ராப்பூசலில் சமயபுரம் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிவப்பு நிற பிரதிபலிப்பான் (ஸ்டிக்கர்) ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது  நிகழ்ச்சியில் புதுக்கோட்டை  சிட்டி ரோட்டரி சங்க தலைவர்  அப்துல்ரகுமான், அன்னவாசல் அன்னப்பறவை ரோட்டரி சங்க தலைவர் சின்னத்துரை புதுகை வெற்றி ரோட்டரி சங்கத்தலைவர் சோமசுந்தரம் ஆகியோரது தலைமையில் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பிஸ்கட், தண்ணீர், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சிவப்பு நிற பிரதிபலிப்பான் ஸ்டிக்கர் ஒட்டி அனுப்பப்பட்டது  நிகழ்ச்சியில் பொருளாளர்  மோகன்ராஜா மேனாள் செயலாளர் சங்கர் அன்னவாசல் அன்னப்பறவை ரோட்டரி சங்க செயலாளர் சஞ்சய் காந்தி பொருளாளர் குமார், வருங்கால தலைவர் அழகு, சாலைரமேஷ், ஜமீன் பாண்டி மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு; வறட்சி நிவாரணம் மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க கோரிக்கை! எல்நினோ தாக்கம் காரணமாக திருச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியை எதிர்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு விவசாய சங்க மாநிலப் பொருளாளர் அயிலை சிவசூரியன் தலைமையில், விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நேரில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் வறண்டு பாலைவனம் போல் காட்சியளிப்பதால், காவிரி கிளை கால்வாய்களிலுள்ள குறுவை சாகுபடிப் பயிர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. வறட்சி பாதிப்புகளை ஆய்வு செய்ய தனி குழுக்கள் அமைத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய அரசு இழப்பீடு வழங்க வேண்டும். சம்பா சாகுபடியை தொடங்க முடியுமா என்ற அச்சத்தில் உள்ள விவசாயிகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும். வாழை, கரும்பு, வெற்றிலை கொடிக்கால், மலர் செடிகள் மற்றும் கோரை உள்ளிட்ட ஆண்டுப் பயிர்களையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை தேவை. திருச்சி மாநகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் குடிநீர் தேவையை உடனடி நிவர்த்தி செய்யும் வகையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். புதிய வேலைவாய்ப்புத் திட்ட விதிமுறைகளால் கிராமப்புறங்களில் 10 முதல் 15 தொழிலாளர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுவதால், பெரும்பாலான கூலித் தொழிலாளர் குடும்பங்கள் வருமானமின்றி சிரமப்பட்டு வருகின்றன. எனவே, அட்டை வைத்துள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயக் கூலித் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10,000 அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும். கடும் வறட்சியால் பசுந்தீவனம் கிடைப்பது அரிதாகி, கால்நடைகளுக்குத் தீவனத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, கால்நடைகளைப் பாதுகாக்க அரசு குறைந்த விலையில் தீவனங்களை வழங்க வேண்டும். வரவிருக்கும் வடகிழக்க பருவமழை காலத்தில் கிடைக்கும் மழைநீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தவிர்க்க வேண்டும். இதற்காக, மாவட்டத்திலுள்ள அனைத்து ஏரி, குளங்களைத் தூர்வாரி ஆழப்படுத்துவதுடன், வரத்து மற்றும் வடிகால் கால்வாய்களைச் சீரமைக்கும் பணிகளை முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும். கடுமையான வறட்சியை எதிர்கொள்ளும் வகையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் பங்கேற்கும் சிறப்பு ஆய்வுக் கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
    1
    திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு; வறட்சி நிவாரணம் மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க கோரிக்கை!
எல்நினோ தாக்கம் காரணமாக திருச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியை எதிர்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு விவசாய சங்க மாநிலப் பொருளாளர் அயிலை சிவசூரியன் தலைமையில், விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நேரில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் வறண்டு பாலைவனம் போல் காட்சியளிப்பதால், காவிரி கிளை கால்வாய்களிலுள்ள குறுவை சாகுபடிப் பயிர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. வறட்சி பாதிப்புகளை ஆய்வு செய்ய தனி குழுக்கள் அமைத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய அரசு இழப்பீடு வழங்க வேண்டும். 
சம்பா சாகுபடியை தொடங்க முடியுமா என்ற அச்சத்தில் உள்ள விவசாயிகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும். வாழை, கரும்பு, வெற்றிலை கொடிக்கால், மலர் செடிகள் மற்றும் கோரை உள்ளிட்ட ஆண்டுப் பயிர்களையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை தேவை.
திருச்சி மாநகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  பொதுமக்களின் குடிநீர் தேவையை உடனடி நிவர்த்தி செய்யும் வகையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
புதிய வேலைவாய்ப்புத் திட்ட விதிமுறைகளால் கிராமப்புறங்களில் 10 முதல் 15 தொழிலாளர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுவதால், பெரும்பாலான கூலித் தொழிலாளர் குடும்பங்கள் வருமானமின்றி சிரமப்பட்டு வருகின்றன. எனவே, அட்டை வைத்துள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயக் கூலித் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10,000 அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும்.
கடும் வறட்சியால் பசுந்தீவனம் கிடைப்பது அரிதாகி, கால்நடைகளுக்குத் தீவனத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, கால்நடைகளைப் பாதுகாக்க அரசு குறைந்த விலையில் தீவனங்களை வழங்க வேண்டும்.
வரவிருக்கும் வடகிழக்க பருவமழை காலத்தில் கிடைக்கும் மழைநீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தவிர்க்க வேண்டும். இதற்காக, மாவட்டத்திலுள்ள அனைத்து ஏரி, குளங்களைத் தூர்வாரி ஆழப்படுத்துவதுடன், வரத்து மற்றும் வடிகால் கால்வாய்களைச் சீரமைக்கும் பணிகளை முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும்.
கடுமையான வறட்சியை எதிர்கொள்ளும் வகையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் பங்கேற்கும் சிறப்பு ஆய்வுக் கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
    user_Msd
    Msd
    திருச்சிராப்பள்ளி கிழக்கு, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • திருமயம் மலைக்கோட்டை முன்பு அடைந்திருக்கும் ஸ்ரீ பிடாரி அம்மன் கோவிலில் 22 ஆம் ஆண்டு ஆடி திருவிழா புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மலைக்கோட்டை முன்பு அடைந்திருக்கும் ஸ்ரீ பிடாரி அம்மன் கோவிலில் 22 ஆம் ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு,பிடாரி அம்மனுக்கு யாகசாலை பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் தீபாதாரணையும் நடைபெற்றது.இதில் திருமயம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிடாரியம்மனை வழிபாடு செய்தனர்.தொடர்ந்து கோவில் வளாகத்தின் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது
    1
    திருமயம் மலைக்கோட்டை முன்பு அடைந்திருக்கும் ஸ்ரீ பிடாரி அம்மன் கோவிலில் 22 ஆம் ஆண்டு ஆடி திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மலைக்கோட்டை முன்பு அடைந்திருக்கும் ஸ்ரீ பிடாரி அம்மன் கோவிலில் 22 ஆம் ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு,பிடாரி அம்மனுக்கு யாகசாலை பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் தீபாதாரணையும் நடைபெற்றது.இதில் திருமயம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிடாரியம்மனை வழிபாடு செய்தனர்.தொடர்ந்து கோவில் வளாகத்தின் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது
    user_Mayilvaganan
    Mayilvaganan
    திருமயம், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    17 hrs ago
  • குவாரிக்கு இதுவரை அனுமதி இல்லை என கனிமவளத்துறை அமைச்சர் உறுதி சிங்கம்புணரி அருகே ஜெயங்கொண்டநிலை கிராமத்திற்கு கனிமவளத்துறை அமைச்சர் பிரபு வருகை தந்தார். அப்போது 36 ஏக்கர் குவாரிக்கு இதுவரை அனுமதி இல்லை என கனிமவளத்துறை அமைச்சர் டி.கே. பிரபு கிராம மக்களை நேரில் சந்தித்து உறுதி செய்தார். ஐந்து ஊர் மக்கள் போராட்டம் நடத்தி, குவாரி தடை, வழக்கு ரத்து, வேலைவாய்ப்பு கோரினர். அமைச்சர் செல்போன்கள் மீட்க உத்தரவிட்டார். மக்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
    1
    குவாரிக்கு இதுவரை அனுமதி இல்லை என கனிமவளத்துறை அமைச்சர் உறுதி
சிங்கம்புணரி அருகே ஜெயங்கொண்டநிலை கிராமத்திற்கு கனிமவளத்துறை அமைச்சர் பிரபு வருகை தந்தார். அப்போது 36 ஏக்கர் குவாரிக்கு இதுவரை அனுமதி இல்லை என கனிமவளத்துறை அமைச்சர் டி.கே. பிரபு கிராம மக்களை நேரில் சந்தித்து உறுதி செய்தார். ஐந்து ஊர் மக்கள் போராட்டம் நடத்தி, குவாரி தடை, வழக்கு ரத்து, வேலைவாய்ப்பு கோரினர். அமைச்சர் செல்போன்கள் மீட்க உத்தரவிட்டார். மக்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
    user_ABDUL SALAM
    ABDUL SALAM
    Photographer சிங்கம்புணரி, சிவகங்கை, தமிழ்நாடு•
    14 hrs ago
  • மாம்பாறை முனியப்பன் கோவிலில் இன்று பக்தர்கள் அடைசல் பூஜை வழிபாடு செய்தனர்
    1
    மாம்பாறை முனியப்பன் கோவிலில் இன்று பக்தர்கள் அடைசல் பூஜை வழிபாடு செய்தனர்
    user_R. Suresh
    R. Suresh
    Local News Reporter கரூர், கரூர், தமிழ்நாடு•
    11 hrs ago
  • கணிதம் கடினம் என்ற மாணவன்... உலக சாதனை படைத்து மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு!” சிவகங்கை அருகே 9 வயது மாணவன் ஒருவர் கணிதப் பாடத்தில் இருந்த சவாலை வென்று உலக சாதனை படைத்து மாவட்ட ஆட்சியரின் பாராட்டைப் பெற்றுள்ளார். சிவகங்கை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் திருப்பதி – வனிதா தம்பதியினரின் மகன் ஸ்ரீ வர்ஷன், சிவகங்கையில் உள்ள டி.எஸ். கார்த்திகேய ராஜா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்த ஏபிசிடி, எண்கள் மற்றும் கணித வாய்ப்பாடுகளை ஆர்வத்துடன் கற்ற மாணவன், கணிதம் தனக்கு கடினமாக இருப்பதாக தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து தாயின் ஊக்கத்தால் கணித வாய்ப்பாடுகளை பிழையின்றி கற்று, பின்னர் அவற்றை தலைகீழாக கூறும் பயிற்சியிலும் ஈடுபட்டார். மாணவனின் திறமையை கண்டறிந்த பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் தொடர்ந்து பயிற்சி அளித்தனர். அதன் விளைவாக ஒன்று முதல் பத்து வரை உள்ள வாய்ப்பாடுகளை தலைகீழாக மனப்பாடம் செய்து அசத்தினார். இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நடத்திய போட்டியில் பங்கேற்ற ஸ்ரீ வர்ஷன், ஒன்று முதல் பத்து வரை உள்ள வாய்ப்பாடுகளை வெறும் 1 நிமிடம் 46 வினாடிகளில் தலைகீழாக கூறி உலக சாதனை படைத்துள்ளார். அவரது சாதனையை அங்கீகரித்து இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சான்றிதழ் வழங்கியுள்ளது. தமிழகத்திற்கும், சிவகங்கை மாவட்டத்திற்கும், தனது பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவன் ஸ்ரீ வர்ஷனை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், மாவட்ட ஆட்சியர் ஆகாஷை நேரில் சந்தித்து வாழ்த்துகளையும் பெற்றார். உலக சாதனைக்கு தனது தாயின் ஊக்கமே காரணம் என தெரிவித்த மாணவன் ஸ்ரீ வர்ஷன், தனக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
    1
    கணிதம் கடினம் என்ற மாணவன்... உலக சாதனை படைத்து மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு!”

சிவகங்கை அருகே 9 வயது மாணவன் ஒருவர் கணிதப் பாடத்தில் இருந்த சவாலை வென்று உலக சாதனை படைத்து மாவட்ட ஆட்சியரின் பாராட்டைப் பெற்றுள்ளார்.
சிவகங்கை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் திருப்பதி – வனிதா தம்பதியினரின் மகன் ஸ்ரீ வர்ஷன், சிவகங்கையில் உள்ள டி.எஸ். கார்த்திகேய ராஜா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
பள்ளியில் ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்த ஏபிசிடி, எண்கள் மற்றும் கணித வாய்ப்பாடுகளை ஆர்வத்துடன் கற்ற மாணவன், கணிதம் தனக்கு கடினமாக இருப்பதாக தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து தாயின் ஊக்கத்தால் கணித வாய்ப்பாடுகளை பிழையின்றி கற்று, பின்னர் அவற்றை தலைகீழாக கூறும் பயிற்சியிலும் ஈடுபட்டார்.
மாணவனின் திறமையை கண்டறிந்த பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் தொடர்ந்து பயிற்சி அளித்தனர். அதன் விளைவாக ஒன்று முதல் பத்து வரை உள்ள வாய்ப்பாடுகளை தலைகீழாக மனப்பாடம் செய்து அசத்தினார்.
இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நடத்திய போட்டியில் பங்கேற்ற ஸ்ரீ வர்ஷன், ஒன்று முதல் பத்து வரை உள்ள வாய்ப்பாடுகளை வெறும் 1 நிமிடம் 46 வினாடிகளில் தலைகீழாக கூறி உலக சாதனை படைத்துள்ளார். அவரது சாதனையை அங்கீகரித்து இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சான்றிதழ் வழங்கியுள்ளது.
தமிழகத்திற்கும், சிவகங்கை மாவட்டத்திற்கும், தனது பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவன் ஸ்ரீ வர்ஷனை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், மாவட்ட ஆட்சியர் ஆகாஷை நேரில் சந்தித்து வாழ்த்துகளையும் பெற்றார்.
உலக சாதனைக்கு தனது தாயின் ஊக்கமே காரணம் என தெரிவித்த மாணவன் ஸ்ரீ வர்ஷன், தனக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    14 hrs ago
  • மானாமதுரை அருகே இரவில் தொடரும் ஆற்று மணல் திருட்டு – நடவடிக்கை எடுக்குமா கனிமவளத்துறை? சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயே வைகை ஆற்றில் இரவு நேரங்களில் நடைபெற்று வரும் ஆற்று மணல் திருட்டை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய நீர்வழித்தடமாக விளங்கும் வைகை ஆறு, மானாமதுரை வழியாக செல்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்று மணல் விற்பனைக்கு அரசு அனுமதி வழங்கப்படாத நிலையில், வைகை ஆற்றுப் படுகையில் அவ்வப்போது மணல் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசின் கனிமவளத்துறை, கனிம வள கொள்ளைகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதற்கு பொதுமக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மானாமதுரை அருகே நான்கு வழிச்சாலை பகுதியில் உள்ள முத்தனேந்தல் அருகாமையிலான வைகை ஆற்றின் இணைப்புக் கால்வாய் பகுதியில், இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகளின் கண்காணிப்பை மீறி மணல் திருட்டு நடைபெற்று வருவதால், இயற்கை வளங்கள் பாதிக்கப்படுவதுடன் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு நேரடியாக தலையிட்டு, மணல் திருட்டில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வைகை ஆற்றுப் பகுதிகளில் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    1
    மானாமதுரை அருகே இரவில் தொடரும் ஆற்று மணல் திருட்டு  – நடவடிக்கை எடுக்குமா கனிமவளத்துறை?
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயே வைகை ஆற்றில் இரவு நேரங்களில் நடைபெற்று வரும் ஆற்று மணல் திருட்டை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய நீர்வழித்தடமாக விளங்கும் வைகை ஆறு, மானாமதுரை வழியாக செல்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்று மணல் விற்பனைக்கு அரசு அனுமதி வழங்கப்படாத நிலையில், வைகை ஆற்றுப் படுகையில் அவ்வப்போது மணல் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசின் கனிமவளத்துறை, கனிம வள கொள்ளைகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதற்கு பொதுமக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மானாமதுரை அருகே நான்கு வழிச்சாலை பகுதியில் உள்ள முத்தனேந்தல் அருகாமையிலான வைகை ஆற்றின் இணைப்புக் கால்வாய் பகுதியில், இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகளின் கண்காணிப்பை மீறி மணல் திருட்டு நடைபெற்று வருவதால், இயற்கை வளங்கள் பாதிக்கப்படுவதுடன் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு நேரடியாக தலையிட்டு, மணல் திருட்டில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வைகை ஆற்றுப் பகுதிகளில் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    14 hrs ago
  • எங்க பேர்ல கேஸ் போட இந்த உலகத்திலேயே எந்த போலீசும் இல்லை. சும்மா தில்லா களவாடின எலி நகை கடையில் தங்கம் "திருடிய" எலி - புடிங்க சார் அவன..புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் கர்நாடகா - தும்கூரில் உள்ள ஒரு நகைக்கடையில் வியாழன் கிழமை காலை ஊழியர்கள் பொருட்களை சரிபார்த்தபோது 10 தங்க மோதிரங்கள் மற்றும் 2 தங்க செயின்கள் காணவில்லை என தெரியவந்தது. முதலில் திருட்டு நடந்ததா என CCTV-யை பார்த்தார்கள். அதில் சந்தேகம் எதுவும் இல்லை. பிறகு இன்னொரு ட்ரே-யில் நகை டேக் மட்டும் காணவில்லை என்பதை பார்த்து சந்தேகம் வந்தது. அதனால் இரவு முழுவதும் உள்ள CCTV-யை மீண்டும் பார்தார்கள். அப்போது அதிகாலை 4 மணிக்கு ஒரு எலி தங்க மோதிரத்தை இழுத்துக்கொண்டு போவது பதிவாகி இருந்தது. அந்த எலி ஒவ்வொரு நகையாக கடைக்குள் இருந்த பெரிய துளைக்குள் தூக்கி சென்றிருப்பது தெரிந்தது உடனே ஊழியர்கள் அந்த துளையை தோண்டி பார்ததில், தொலைந்த 10 மோதிரங்கள் மற்றும் 2 செயின்கள் அனைத்தும் அதற்குள் இருந்து மீட்கப்பட்டன. தங்கம் விக்கிற விலையில் எலிக்கு கூட தங்கத்து மேல ஆசை வந்துடுச்சு போல
    1
    எங்க பேர்ல கேஸ் போட இந்த உலகத்திலேயே எந்த போலீசும் இல்லை. சும்மா தில்லா களவாடின எலி
நகை கடையில் தங்கம் "திருடிய" எலி - புடிங்க சார் அவன..புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்
கர்நாடகா - தும்கூரில் உள்ள ஒரு நகைக்கடையில் வியாழன் கிழமை காலை ஊழியர்கள் பொருட்களை சரிபார்த்தபோது 10 தங்க மோதிரங்கள் மற்றும் 2 தங்க செயின்கள் காணவில்லை என தெரியவந்தது.
முதலில் திருட்டு நடந்ததா என CCTV-யை பார்த்தார்கள். அதில் சந்தேகம் எதுவும் இல்லை.
பிறகு இன்னொரு ட்ரே-யில் நகை டேக் மட்டும் காணவில்லை என்பதை பார்த்து சந்தேகம் வந்தது. அதனால் இரவு முழுவதும் உள்ள CCTV-யை மீண்டும் பார்தார்கள்.
அப்போது அதிகாலை 4 மணிக்கு ஒரு எலி தங்க மோதிரத்தை இழுத்துக்கொண்டு போவது பதிவாகி இருந்தது.
அந்த எலி ஒவ்வொரு நகையாக கடைக்குள் இருந்த பெரிய துளைக்குள் தூக்கி சென்றிருப்பது தெரிந்தது
உடனே ஊழியர்கள் அந்த துளையை தோண்டி பார்ததில், தொலைந்த 10 மோதிரங்கள் மற்றும் 2 செயின்கள் அனைத்தும் அதற்குள் இருந்து மீட்கப்பட்டன.
தங்கம் விக்கிற விலையில் எலிக்கு கூட தங்கத்து மேல ஆசை வந்துடுச்சு போல
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    20 hrs ago
  • பழனி சார் பதிவாளர் ஜஸ்டிஸ் மணிகண்டன் பதிவு செய்த அத்துணை பதிவுகளையும் ஆய்வு செய்ய உத்தரவு.. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் சொத்தை முறைகேடாக பதிவு செய்த பத்திரப்பதிவாளர் ஜஸ்டிஸ் மணிகண்டன் பதிவு செய்த அத்துனை பதிவுகளையும் ஆய்வு செய்ய தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து முறைகேடாக பத்திரப்பதிவுகள் நடைபெற்றுள்ளதா? என்பதை அறிவதற்கு இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன..
    2
    பழனி சார் பதிவாளர் ஜஸ்டிஸ் மணிகண்டன் பதிவு செய்த அத்துணை பதிவுகளையும் ஆய்வு செய்ய உத்தரவு..
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் சொத்தை முறைகேடாக பதிவு செய்த பத்திரப்பதிவாளர் ஜஸ்டிஸ் மணிகண்டன் பதிவு செய்த அத்துனை பதிவுகளையும் ஆய்வு செய்ய தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து முறைகேடாக பத்திரப்பதிவுகள் நடைபெற்றுள்ளதா? என்பதை அறிவதற்கு இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன..
    user_Suresh
    Suresh
    Dindigul, Tamil Nadu•
    18 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.