Shuru
Apke Nagar Ki App…
தேனி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை செயலாளர் திடீர் ஆய்வு தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ரூ.11.70 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் செல்வதற்கு ஏதுவாக பாதை அமையவுள்ள இடத்தினை பொதுப்பணித்துறை செயலாளர் ஆர்.செல்வராஜ், மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.வைத்திநாதன், தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜகுமார் உள்ளார்.
Theni Godwin
தேனி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை செயலாளர் திடீர் ஆய்வு தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ரூ.11.70 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் செல்வதற்கு ஏதுவாக பாதை அமையவுள்ள இடத்தினை பொதுப்பணித்துறை செயலாளர் ஆர்.செல்வராஜ், மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.வைத்திநாதன், தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜகுமார் உள்ளார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- ஆண்டிபட்டி: வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் ஆண்டிபட்டி நகரில் மேற்கு ஓடை தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் இன்று ஆடி மாத சனிக்கிழமை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு அதிகாலையிலேயே பால் தயிர் இளநீர் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.1
- ஆண்டிபட்டி வருசநாடு அருகே சின்ன சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு குளிக்க தடை தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை ஒட்டிய மேகமலை, ஹைவேவிஸ் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் சாரல்மழையால் சின்ன சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. தேனி மாவட்டம், மேகமலை அடிவாரத்தில் கோம்பைத்தொழு வடக்கு மலைப்பகுதியில் மேகமலை அருவி உள்ளது. மேகமலை ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் சரணாலயத்தில் அமைந்துள்ள இந்த அருவிக்கு திண்டுக்கல் ,மதுரை, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும் அருவியில் நீர்வரத்து இருக்கும். நேற்று விடிய விடிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் சாரல்மழை பெய்து வருவதால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது ஏற்கனவே பெய்த கனமழையால் அருவிக்குச் செல்லும் சாலை பகுதியில் சாலைகள் மிகவும் மண்ணரிப்புகளால் மிகவும் சேதம் அடைந்துள்ளது மேலும் படிக்கட்டுகள் தடுப்புக்கம்பிகள் உடைந்து காணப்படுவதாகவும் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. இந்நிலையில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கிற்கான பயணிகளுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது இதனைத் தொடர்ந்து சின்ன சுருளி அருவிக்கு மீறி செல்வோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்..1
- இடுக்கியில் நிலச்சரிவுக்கு பெண் பலி; கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது:இடுக்கியில் நிலச்சரிவுக்கு பெண் பலி; 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக மந்தமாக இருந்த தென்மேற்கு பருவமழை, கடந்த மூன்று நாட்களாக மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. நேற்று இரவு முழுவதும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. தமிழக-கேரள எல்லைப் பகுதியான இடுக்கி மாவட்டம், தொடுபுழா தாலுகாவிற்கு உட்பட்ட குடயத்தூர் கொலப்ரா அருகிலுள்ள அடூர் மலைப்பகுதியில் இன்று அதிகாலை திடீரெனப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கி சுமதி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு, சுமதியின் சடலத்தைக் கைப்பற்றியுள்ளனர். இதேபோல், கோட்டயம் மாவட்டத்திலும் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.பூஞ்சார் தெக்கேக்கரா பையனித்தோட்டம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு குடியிருப்பு வீடு முழுமையாகச் சேதமடைந்துள்ளது. மழை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில்; இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ (Orange Alert) விடுக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வயநாடு, இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம், மலப்புரம் மற்றும் பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மீட்புப் பணிகளை விரைவுபடுத்தும் பொருட்டு, தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து 34 வீரர்கள் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படையின் சிறப்புப் பிரிவு கேரளா விரைந்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.1
- வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் கீழ் வைகை கூட்டு குடிநீர் தொட்டி... மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வைகை கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கடந்த சுமார் ஒரு வருடமாய்நடந்த பணிகளில் போடிநாயக்கன்பட்டி செல்லும் பாதையில் காவுவாங்க காத்திருக்கும் குழி என்று கடந்தபத்துநாளுகளுக்கு முன்பு நம் ஸ்குரு ஆஃப் நியூஸ் சுட்டிக்காட்டி வெளியிட்டிருந்தோம் அதன் எதிரொலியாக வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் சரிசெய்தது பொதுமக்கள் பலரும் நிர்வாகத்தை பாராட்டினர்1
- கொடைக்கானல்-பூம்பாறை தூய்மை காவலர் ராமர் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி காத்திருப்பு போராட்டம். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறை அருகில் திண்டுக்கல் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம்.கொடைக்கானல் பூம்பாறை தூய்மை காவலர் ராமர் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் கொலையான ராமரின் பெற்றோர்களை மிரட்டும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறை பகுதியில் விவசாயம் செய்து வரும் ராமர் இவரது தாய்,தந்தை பூம்பாறை ஊராட்சியில் தூய்மை காவலராக பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு கூர்மையான ஆயுதங்களால் கொடூரமாக ராமரை உடலில் பல இடங்களில் வெட்டிக்கொலை செய்துள்ளனர். கொடைக்கானல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- மறைந்த விசிக நிர்வாகி உடலுக்கு அஞ்சலி செலுத்திய திருமாவளவன் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் உடல் நலக்குறைவால் மறைந்த திருமங்கலம் சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பாளர் பழக்கடை சுப்ரமணியன் அவர்களின் திருவுடலுக்கு இன்று (ஆக.1) மதுரை வந்த விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். உடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.1
- வைகை அணை நீர்த்தேக்க பகுதியில் மின் மோட்டார் மூலம் நீர் திருட்டு: 3-வது நாளாக ஜேசிபி இயந்திரம் மூலம் மின் மோட்டார், பைப், புட்வால்வுகள் பறிமுதல் ஆட்சியர் அதிரடி ஆய்வை தொடர்ந்து அதிகாரிகள் தீவிர நடவடிக்கை தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் உட்பகுதியில், அனுமதியின்றி சட்டவிரோதமாக மின் மோட்டார்கள் மூலம் நீர் திருடப்படுவதாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து, தேனி மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன் வைகை அணையின் நீர்த்தேக்கப் பகுதிக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சட்டவிரோதமாக நீர் எடுப்பதை உடனடியாகத் தடுக்கும் வகையில், ஆற்றுக்குள் அமைக்கப்பட்டிருந்த நீர் உறிஞ்சும் பைப்புகள் மற்றும் புட்வால்வ்களை அப்புறப்படுத்தி பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்டார். ஆட்சியரின் உத்தரவை தொடர்ந்து, வைகை அணை நீர்த்தேக்கப் பகுதியில் பல்வேறு இடங்களில் விவசாய பயன்பாட்டிற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் மோட்டார்கள் நீர் உறிஞ்சும் பைப்புகள் மற்றும் புட்வால்வுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நடைபெற்ற இந்த பணியில், வைகை அணை உதவி செயற்பொறியாளர் சேகரன் தலைமையில் உதவி பொறியாளர் நவீன் குமார் மற்றும் பரதன் உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டனர். ஜேசிபி இயந்திரம் மூலம் நீர்த்தேக்கப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின் மோட்டார்கள் அகற்றப்பட்டதோடு, தண்ணீரில் மூழ்கியிருந்த ஃபுட்வால்வுகள் மற்றும் பைப்புகளையும் அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். வைகை அணையின் நீர்த்தேக்க உட்பகுதியில் இதுபோன்று சட்டவிரோதமாகத் தண்ணீர் எடுப்பில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.1
- ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திற்குள் செல்லாத தனியார் பேருந்து பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை இறக்கி விடாமல் சென்ற தனியார் பேருந்து பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஶ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ராஜபாளையம் அருகே நக்கனேரியை சேர்ந்தவர் மாஸ்கோமணி.வழக்குறைஞர். இவர் கடந்த 2025 டிசம்பர் 19-ம் தேதி மதுரையில் இருந்து ஶ்ரீவில்லிபுத்தூருக்கு தனியார் பேருந்தில் பயணம் செய்தார். அவர் மதுரை பாண்டி கோயில் பேருந்து நிறுத்தத்தில் ஏறிய போது, ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாது சர்ச் நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ள வேண்டும் என நடத்துனர் கூறியுள்ளார். பேருந்து நிலையத்திற்குள் ஏன் செல்லாது என மாஸ்கோ மணி கேட்டபோது, ரூல்ஸ் எல்லாம் பேசக்கூடாது எனக் கூறி பயணிகள் முன்னிலையில் நடத்துனர் அவமரியாதையாக பேசியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாமல் சர்ச் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு பேருந்து ராஜபாளையம் சென்றது. இதுகுறித்து மாஸ்கோமணி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பேருந்து நிறுவனம் சார்பில் மதுரை பேருந்து நிலையத்தில் வைத்து பேருந்து ஸ்டீயரிங் பழுதானதால், ஓட்டுநர் சரி செய்து எடுத்து வர 20 நிமிடம் தாமதம் ஆனதால் ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாது என மதுரையிலேயே நடத்துனர் கூறியதை பயணிகள் ஏற்றுக் கொண்டதாகவும், புகார்தாரர் வழக்குறைஞர் என்பதால் வேண்டுமென்றே புகார் அளித்துள்ளார். பேருந்து புறப்படும் போது ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாது என அறிவித்து விட்டதால் இதை சேவை குறைபாடாக கருத முடியாது என வாதிடப்பட்டது. இந்த வழக்கில் பேருந்து முறையான வழித்தடங்களில் செல்லாமல், குறித்த நிறுத்தம் செல்லாமல் பயணியை இறக்கி விட்டது சேவை குறைபாடு என தெரிவித்த குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர் முத்துலட்சுமி ஆகியோர், பயணிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவிட்டனர்.1