logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யின் தலைமையிலான தமிழக அரசு திறந்த மனதுடன் மக்கள் பிரச்சினைகளை அணுகுகிறது : பல்லடம் வனம் இந்தியா ஃபவுண்டேஷன் நிகழ்வில் : அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் பெருமிதம் பல்லடம் வனம் இந்தியா ஃபவுண்டேஷன் சார்பில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பசுமை வாகன இயக்கம் துவக்க விழாவும், கழிவுகளை வளமாக்குதல் திட்ட துவக்க விழாவும் மிகசிறப்பாக நடைபெற்றது இவ்விழாவில் பங்கேற்ற திருப்பூர் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும் தமிழக மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருமான டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் உரையாற்றியபோது : பல்லடம் வனம் இந்தியா ஃபவுண்டேஷன் சார்பில் கடந்த வாரம் நம்மிடம் பேசியபோது பசுமை வாகன இயக்க துவக்க விழாவை மட்டுமே திட்டமிட்டிருந்தனர். நமது ஆலோசனையை ஏற்று ஒரு வாரத்திலேயே கழிவுகளை வளமாக்குதல் திட்டத்தையும் முன்னெடுத்திருக்கிறார்கள். இது மிகவும் பாராட்டத் தக்க, நன்றிக்குரிய முயற்சி. இதுவரை நடந்த எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு நமது முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யின் தலைமையிலான அரசு திறந்த மனதுடன் மக்கள் பிரச்சினைகளை அணுகுகிறது. அதனால்தான் வனம் போன்ற பல அமைப்புகள் அரசோடு கை கோர்த்து செயல்படும் நல்ல சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது என்று பெருமிதத்துடன் கூறினார். இந்த நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் கமலி , சட்டமன்ற உறுப்பினர்களான எஸ். பாலமுருகன், எஸ். சத்தியபாமா, கே. ராம்குமார் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர். மனிஷ் நாரணவரே, திருப்பூர் மாவட்ட எஸ்.பி. சிரிஷ்டி சிங் ஐபிஎஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.மேலும் மக்கள் நலன் சார்ந்த முக்கியமான இந்நிகழ்வை முன்னெடுத்த பல்லடம் வனம் இந்தியா ஃபவுண்டேஷனின் கௌரவ தலைவர் ராம்நாஜ் காட்டன் நாகராஜ், தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் ஸ்கை.வி.சுந்தர்ராஜ், இணைச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மக்கள் தொடர்பு இயக்குனர் திருமேனி உள்ளிட்டோருக்கு எனது அன்பும் பாராட்டும் நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் கூறினார்.

6 hrs ago
user_முனைவர்"நமது பூமி" சந்திரகுமார
முனைவர்"நமது பூமி" சந்திரகுமார
பல்லடம், திருப்பூர், தமிழ்நாடு•
6 hrs ago

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யின் தலைமையிலான தமிழக அரசு திறந்த மனதுடன் மக்கள் பிரச்சினைகளை அணுகுகிறது : பல்லடம் வனம் இந்தியா ஃபவுண்டேஷன் நிகழ்வில் : அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் பெருமிதம் பல்லடம் வனம் இந்தியா ஃபவுண்டேஷன் சார்பில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பசுமை வாகன இயக்கம் துவக்க விழாவும், கழிவுகளை வளமாக்குதல் திட்ட துவக்க விழாவும் மிகசிறப்பாக நடைபெற்றது இவ்விழாவில் பங்கேற்ற திருப்பூர் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும் தமிழக மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருமான டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் உரையாற்றியபோது : பல்லடம் வனம் இந்தியா ஃபவுண்டேஷன் சார்பில் கடந்த வாரம் நம்மிடம் பேசியபோது பசுமை வாகன இயக்க துவக்க விழாவை மட்டுமே திட்டமிட்டிருந்தனர். நமது ஆலோசனையை ஏற்று ஒரு வாரத்திலேயே கழிவுகளை வளமாக்குதல் திட்டத்தையும் முன்னெடுத்திருக்கிறார்கள். இது மிகவும் பாராட்டத் தக்க, நன்றிக்குரிய முயற்சி. இதுவரை நடந்த எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு நமது முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யின் தலைமையிலான அரசு திறந்த மனதுடன் மக்கள் பிரச்சினைகளை அணுகுகிறது. அதனால்தான் வனம் போன்ற பல அமைப்புகள் அரசோடு கை கோர்த்து செயல்படும் நல்ல சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது என்று பெருமிதத்துடன் கூறினார். இந்த நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் கமலி , சட்டமன்ற உறுப்பினர்களான எஸ். பாலமுருகன், எஸ். சத்தியபாமா, கே. ராம்குமார் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர். மனிஷ் நாரணவரே, திருப்பூர் மாவட்ட எஸ்.பி. சிரிஷ்டி சிங் ஐபிஎஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.மேலும் மக்கள் நலன் சார்ந்த முக்கியமான இந்நிகழ்வை முன்னெடுத்த பல்லடம் வனம் இந்தியா ஃபவுண்டேஷனின் கௌரவ தலைவர் ராம்நாஜ் காட்டன் நாகராஜ், தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் ஸ்கை.வி.சுந்தர்ராஜ், இணைச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மக்கள் தொடர்பு இயக்குனர் திருமேனி உள்ளிட்டோருக்கு எனது அன்பும் பாராட்டும் நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் கூறினார்.

  • user_முனைவர்"நமது பூமி" சந்திரகுமார
    முனைவர்"நமது பூமி" சந்திரகுமார
    பல்லடம், திருப்பூர், தமிழ்நாடு
    *பல்லடத்தில் பசுமை வாகனம் மற்றும் கழிவு வளமாக்கல் திட்டம் தொடங்கப்பட்டது*
    fca024d0-798e-4c54-9054-0abbce17e13a
    a125d0b5-1fe9-46fc-8763-23c36beda4fa
    1301a264-bdf5-4ec4-9713-c0c378a4f632
    6 hrs ago
More news from Tamil Nadu and nearby areas
  • கிரிக்கெட் விளையாடும் போது நடந்த சில ரசிக்கும் படியான காட்சிகள்.
    1
    கிரிக்கெட் விளையாடும் போது நடந்த சில ரசிக்கும் படியான காட்சிகள்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    4 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் நிலமோசடி சம்பந்தமாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் அவர்கள் இரண்டாவது நாளாக சிபிசிஐடி காவல்துறையினரிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்
    1
    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் நிலமோசடி சம்பந்தமாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் அவர்கள் இரண்டாவது நாளாக சிபிசிஐடி காவல்துறையினரிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    39 min ago
  • ஒட்டன்சத்திரம் அருகே 32 1/2பவுன் மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்கள் திருடியவர் கைது மாவட்ட எஸ்பி பாராட்டு! ஒட்டன்சத்திரம் அருகே 32 1/2பவுன் மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்கள் திருடியவர் கைது மாவட்ட எஸ்பி பாராட்டு! திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பழைய பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் த/பெ பாண்டி கடந்த 7 ந் தேதி பூட்டை உடைத்து‌ பீரோவிலிருந்த 32 1/2 பவுன் நகை மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர் திருடி சென்றார். இது குறித்து ஒட்டன்சத்திரம் கோட்ட காவல் துணை காணிப்பாளர் கார்த்திகேயன் ஆய்வாளர் லிங்கபாண்டியன் சார்பு ஆய்வாளர் சிவராஜ் தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இப்பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவு ஆகி உள்ள காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் திருட்டு சம்பவத்தில் திண்டுக்கல் அருகே கதிரியன் குளத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் ஈடுபட்டதும் அவர் மற்றொரு வழக்கில் திருட்டு வழக்கில் கைதாகி மதுரை சிறையில் இருப்பதும் தெரியவந்தது இதையடுத்து அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர் .அப்போது அவர் பாலகிருஷ்ணன் வீட்டில் திருடிய இத ஒப்பிக்கொண்டதை அடுத்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 32 1/2 பவுன் நகைகள் 280 கிராம் வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர் குற்றவாளி விரைந்து செயல்பட்டு கைது செய்து நகைகளை முழுவதையும் மீட்ட ஒட்டன்சத்திரம் போலீசாரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.
    2
    ஒட்டன்சத்திரம் அருகே 32 1/2பவுன் மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்கள் திருடியவர் கைது மாவட்ட எஸ்பி பாராட்டு!
ஒட்டன்சத்திரம் அருகே 32 1/2பவுன் மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்கள் திருடியவர் கைது மாவட்ட எஸ்பி பாராட்டு! 
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பழைய பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் த/பெ பாண்டி கடந்த 7 ந் தேதி  பூட்டை உடைத்து‌ பீரோவிலிருந்த 32 1/2  பவுன் நகை மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர் திருடி சென்றார். இது குறித்து  ஒட்டன்சத்திரம் கோட்ட காவல் துணை காணிப்பாளர் கார்த்திகேயன்  ஆய்வாளர் லிங்கபாண்டியன் சார்பு ஆய்வாளர் சிவராஜ் தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.   இப்பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவு ஆகி உள்ள காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் திருட்டு சம்பவத்தில் திண்டுக்கல் அருகே கதிரியன் குளத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் ஈடுபட்டதும் அவர் மற்றொரு வழக்கில் திருட்டு வழக்கில் கைதாகி மதுரை சிறையில் இருப்பதும் தெரியவந்தது இதையடுத்து அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர் .அப்போது அவர் பாலகிருஷ்ணன் வீட்டில் திருடிய இத ஒப்பிக்கொண்டதை அடுத்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 32 1/2  பவுன்  நகைகள் 280 கிராம்  வெள்ளி பொருட்களை போலீசார்  பறிமுதல் செய்தனர் குற்றவாளி விரைந்து செயல்பட்டு கைது செய்து நகைகளை முழுவதையும் மீட்ட ஒட்டன்சத்திரம் போலீசாரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.
    user_Elangovan
    Elangovan
    Local News Reporter ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    20 hrs ago
  • மாம்பாறை முனியப்பன் கோவிலில் இன்று பக்தர்கள் அடைசல் பூஜை வழிபாடு செய்தனர்
    1
    மாம்பாறை முனியப்பன் கோவிலில் இன்று பக்தர்கள் அடைசல் பூஜை வழிபாடு செய்தனர்
    user_R. Suresh
    R. Suresh
    Local News Reporter கரூர், கரூர், தமிழ்நாடு•
    15 hrs ago
  • இடுக்கியில் நிலச்சரிவுக்கு பெண் பலி; கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது:இடுக்கியில் நிலச்சரிவுக்கு பெண் பலி; 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! ​ ​கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக மந்தமாக இருந்த தென்மேற்கு பருவமழை, கடந்த மூன்று நாட்களாக மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. நேற்று இரவு முழுவதும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ​ தமிழக-கேரள எல்லைப் பகுதியான இடுக்கி மாவட்டம், தொடுபுழா தாலுகாவிற்கு உட்பட்ட குடயத்தூர் கொலப்ரா அருகிலுள்ள அடூர் மலைப்பகுதியில் இன்று அதிகாலை திடீரெனப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கி சுமதி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு, சுமதியின் சடலத்தைக் கைப்பற்றியுள்ளனர். ​ இதேபோல், கோட்டயம் மாவட்டத்திலும் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.பூஞ்சார் தெக்கேக்கரா பையனித்தோட்டம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு குடியிருப்பு வீடு முழுமையாகச் சேதமடைந்துள்ளது. ​ மழை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில்; இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ (Orange Alert) விடுக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ​ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வயநாடு, இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம், மலப்புரம் மற்றும் பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். ​ மீட்புப் பணிகளை விரைவுபடுத்தும் பொருட்டு, தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து 34 வீரர்கள் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படையின் சிறப்புப் பிரிவு கேரளா விரைந்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
    1
    இடுக்கியில் நிலச்சரிவுக்கு பெண் பலி;

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது:இடுக்கியில் நிலச்சரிவுக்கு பெண் பலி;
6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
​
​கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக மந்தமாக இருந்த தென்மேற்கு பருவமழை, கடந்த மூன்று நாட்களாக மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. நேற்று இரவு முழுவதும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
​
தமிழக-கேரள எல்லைப் பகுதியான இடுக்கி மாவட்டம், தொடுபுழா தாலுகாவிற்கு உட்பட்ட குடயத்தூர் கொலப்ரா அருகிலுள்ள அடூர் மலைப்பகுதியில் இன்று அதிகாலை திடீரெனப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கி சுமதி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு, சுமதியின் சடலத்தைக் கைப்பற்றியுள்ளனர்.
​
இதேபோல், கோட்டயம் மாவட்டத்திலும் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.பூஞ்சார் தெக்கேக்கரா பையனித்தோட்டம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு குடியிருப்பு வீடு முழுமையாகச் சேதமடைந்துள்ளது.
​
மழை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில்; இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ (Orange Alert) விடுக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
​
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வயநாடு, இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம், மலப்புரம் மற்றும் பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
​
மீட்புப் பணிகளை விரைவுபடுத்தும் பொருட்டு, தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து 34 வீரர்கள் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படையின் சிறப்புப் பிரிவு கேரளா விரைந்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • கொடைக்கானல்-பூம்பாறை தூய்மை காவலர் ராமர் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி காத்திருப்பு போராட்டம். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறை அருகில் திண்டுக்கல் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம்.கொடைக்கானல் பூம்பாறை தூய்மை காவலர் ராமர் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் கொலையான ராமரின் பெற்றோர்களை மிரட்டும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறை பகுதியில் விவசாயம் செய்து வரும் ராமர் இவரது தாய்,தந்தை பூம்பாறை ஊராட்சியில் தூய்மை காவலராக பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு கூர்மையான ஆயுதங்களால் கொடூரமாக ராமரை உடலில் பல இடங்களில் வெட்டிக்கொலை செய்துள்ளனர். கொடைக்கானல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    1
    கொடைக்கானல்-பூம்பாறை தூய்மை காவலர் ராமர் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி காத்திருப்பு போராட்டம்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை  பிணவறை  அருகில் திண்டுக்கல் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம்.கொடைக்கானல் பூம்பாறை தூய்மை காவலர் ராமர் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் கொலையான  ராமரின் பெற்றோர்களை மிரட்டும்  சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறை பகுதியில் விவசாயம் செய்து வரும் ராமர் இவரது தாய்,தந்தை பூம்பாறை ஊராட்சியில் தூய்மை காவலராக பணி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு
கூர்மையான ஆயுதங்களால் கொடூரமாக ராமரை உடலில் பல இடங்களில் வெட்டிக்கொலை செய்துள்ளனர்.
கொடைக்கானல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    13 hrs ago
  • திண்டுக்கல் மாநகராட்சி ஆணையரின் வேண்டுகோள் ஆத்தூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து உள்ளதால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்
    1
    திண்டுக்கல் மாநகராட்சி ஆணையரின் வேண்டுகோள் ஆத்தூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து உள்ளதால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    47 min ago
  • ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் ஸ்ரீராமபுரத்தில் மீண்டும் மோர் மிளகாய் கழிவுகள் கொட்டப்பட்டதால் பரபரப்பு-* *அதிகாரிகள் நேரில் ஆய்வு, காவல்துறையினர் விசாரணை திண்டுக்கல், ஜூலை 31: திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டத்திற்குட்பட்ட ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் ஸ்ரீராமபுரம் பகுதியில் இயங்கி வரும் மோர் மிளகாய் நிறுவனங்களை நிரந்தரமாக மூடக்கோரி, கடந்த 28/07/2026 மூன்று நாட்களுக்கு முன்பு அகில இந்திய விவசாய சங்கம் தலைமையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில், விவசாய நிலங்களிலும் வனத்துறைக்குச் சொந்தமான பகுதிகளிலும் மோர் மிளகாய் கழிவுகள் கொட்டப்படுவதால் நிலத்தடி நீர் மாசுபடுவதுடன், சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத்திற்கும் கடுமையான பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், போராட்டம் நடைபெற்ற மூன்று நாட்களிலேயே மீண்டும் அதே பகுதிகளில் தனியார் விவசாய நிலங்களிலும், வனத்துறைக்குச் சொந்தமான நிலங்களிலும் மோர் மிளகாய் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கழிவுகள் கொட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், உடனடியாக அகில இந்திய விவசாய சங்க நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, விவசாய சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஸ்ரீராமபுரம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு உடனடியாக புகார் அளித்தனர். புகாரின் பேரில், ஸ்ரீராமபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கல்பனா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடங்களை பார்வையிட்டு, சம்பவம் தொடர்பாக தகவல்களை சேகரித்தார். இதனைத் தொடர்ந்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, மோர் மிளகாய் கழிவுகளை சட்டவிரோதமாக கொட்டியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் கழிவுகளை கொட்டுவதை நிரந்தரமாக தடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். ஸ்ரீராமபுரம் பகுதியில் மீண்டும் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் எடுக்கவுள்ள நடவடிக்கை மீது அப்பகுதி மக்களின் கவனம் திரும்பியுள்ளது..
    1
    ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் ஸ்ரீராமபுரத்தில் மீண்டும் மோர் மிளகாய் கழிவுகள் கொட்டப்பட்டதால் பரபரப்பு-* *அதிகாரிகள் நேரில் ஆய்வு, காவல்துறையினர் விசாரணை
திண்டுக்கல், ஜூலை 31:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டத்திற்குட்பட்ட  ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் ஸ்ரீராமபுரம் பகுதியில் இயங்கி வரும் மோர் மிளகாய் நிறுவனங்களை நிரந்தரமாக மூடக்கோரி, கடந்த 28/07/2026 மூன்று நாட்களுக்கு முன்பு அகில இந்திய விவசாய சங்கம் தலைமையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில், விவசாய நிலங்களிலும் வனத்துறைக்குச் சொந்தமான பகுதிகளிலும் மோர் மிளகாய் கழிவுகள் கொட்டப்படுவதால் நிலத்தடி நீர் மாசுபடுவதுடன், சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத்திற்கும் கடுமையான பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், போராட்டம் நடைபெற்ற மூன்று நாட்களிலேயே மீண்டும் அதே பகுதிகளில் தனியார் விவசாய நிலங்களிலும், வனத்துறைக்குச் சொந்தமான நிலங்களிலும் மோர் மிளகாய் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கழிவுகள் கொட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், உடனடியாக அகில இந்திய விவசாய சங்க நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, விவசாய சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஸ்ரீராமபுரம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு உடனடியாக புகார் அளித்தனர்.
புகாரின் பேரில், ஸ்ரீராமபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கல்பனா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடங்களை பார்வையிட்டு, சம்பவம் தொடர்பாக தகவல்களை சேகரித்தார்.
இதனைத் தொடர்ந்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து, மோர் மிளகாய் கழிவுகளை சட்டவிரோதமாக கொட்டியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் கழிவுகளை கொட்டுவதை நிரந்தரமாக தடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஸ்ரீராமபுரம் பகுதியில் மீண்டும் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் எடுக்கவுள்ள நடவடிக்கை மீது அப்பகுதி மக்களின் கவனம் திரும்பியுள்ளது..
    user_ALL INDIA REPORTER KPA
    ALL INDIA REPORTER KPA
    ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    20 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.