Shuru
Apke Nagar Ki App…
திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரத்தில், மருத்துவமனைக்குச் சென்ற கர்ப்பிணிக்கு 108 ஆம்புலன்ஸிலேயே சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் துணையுடன் தாயும் சேயும் பாதுகாப்பாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவரும் நலமுடன் உள்ளனர்.
Subramani Press Reporter Subramani
திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரத்தில், மருத்துவமனைக்குச் சென்ற கர்ப்பிணிக்கு 108 ஆம்புலன்ஸிலேயே சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் துணையுடன் தாயும் சேயும் பாதுகாப்பாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவரும் நலமுடன் உள்ளனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- மணப்பாறையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்றதைக் கொண்டாடும் வகையில், அக்கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். நகர துணைச் செயலாளர் யோகேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஏராளமான தவெகவினரும் பொதுமக்களும் பங்கேற்றனர்.1
- புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அமைந்துள்ள மெய்கண்ணுடையாள் கோயிலில் சித்திரை திருவிழா விமர்சியாக நடைபெறுகிறது. இதன் முக்கிய நிகழ்வான ஆடலும் பாடலும் நிகழ்ச்சி பக்தர்களை வெகுவாக கவரும்.1
- தேனி மாவட்டம் முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் குறைந்ததால், தண்ணீர் தேடி வந்த யானைக் கூட்டம் தேக்கடி படகு சவாரி பகுதிக்கு வந்தது. இந்த அரிய காட்சியை கண்ட சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்.1
- தேனியில் மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது* *சென்னை, காஞ்சிபுரம், சேலம், திருச்சி, தேனி உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இருந்து கிக் பாக்ஸிங் வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்* *தேனியில் மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது* *சென்னை, காஞ்சிபுரம், சேலம், திருச்சி, தேனி உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இருந்து கிக் பாக்ஸிங் வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்* தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேஷன் மற்றும் தேனி மாவட்ட அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி தேனியில் நடைபெற்று வருகிறது தேனி மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் கடந்த 7ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியானது வருகிற 10-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னை, காஞ்சிபுரம், சேலம், மதுரை, திருச்சி, திண்டுக்கல், அரியலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இருந்து சுமார் 1000 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு அவர்களுக்கு பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்று வருகிறது இந்த போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு வரக்கூடிய மாதங்களில் தொடர்ந்து நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தனர் பேட்டி - சுரேஷ் பாபு (தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேசன் செயலாளர்)2
- இலுப்பூரில் சிலம்ப பஞ்சபூதா உலக சாதனைக நிகழ்ச்சி நடந்தது புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் சிலம்பத்தில் பஞ்சபூதா உலக சாதனைகள் நிகழ்ச்சி நடந்தது நிகழ்ச்சியை இலுப்பூர் டிஸ்பி திவ்யா, தாசில்தார் சக்திவேல் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தார் இதில் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு உலக சாதனை நிகழ்ச்சியாக 5 கிலோமீட்டர் நடந்தே சென்று சிலம்பம் சுற்றுதல் 2 மணி நேரம் தொடர்ந்து நின்ற நிலையில் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்1
- காரியாபட்டியில் தமிழக வெற்றிக்கழகத்தினர் உற்சாக கொண்டாட்டம் தமிழகத்தின் 9-வது முதலமைச்சராக தமிழக வெற்றிக்கழக தலைவர் ஜோசப் விஜய் பதவி ஏற்றதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் கட்சியினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். முக்குரோட்டில் தொடங்கிய பேரணியில் மேளதாளங்களுடன் வந்த தொண்டர்கள், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை மற்றும் மாமன்னர் மருதுபாண்டியர்கள் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பேருந்து நிலையம் முன்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.1
- தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதை அடுத்து, தேனியில் த.வெ.காவினர் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பழைய பேருந்து நிலையம் அருகே பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள வேப்பிலை மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக துர்க்கை அலங்காரத்துடன் வீதியுலா நடைபெற்றது. சிறப்பு வழிபாடுகளைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இந்த வைபவத்தில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.1
- பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட மழைநீர் உறிஞ்சுக் குழி சுவர், ஒரு மாதத்திற்குள் மழையால் இடிந்து சேதமடைந்தது. தரமற்ற கட்டுமானம் குறித்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியும் கேள்வியும் எழுப்பியுள்ளனர்.1