logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மருந்து கடையில் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்துள்ளனர். எனினும், இந்த போலி மருத்துவரை தேவதானப்பட்டி காவல்துறையினர் இதுவரை கைது செய்யாமல் அலட்சியத்துடன் செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் கடும் குற்றம் சாட்டியுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முறையாக மருத்துவம் படிக்காமலும், மெடிக்கல் ஷாப்களில் பொதுமக்கள் மருத்துவம் பார்ப்பதாகவும் மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் அளிக்கப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து, தேனி மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன் உத்தரவின் பேரில், பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர் கார்த்திக் தலைமையில், தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கோமதி அடங்கிய மருத்துவக் குழுவினர் பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டியில் உள்ள மருந்து கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, கெங்குவார்பட்டி பள்ளிவாசல் தெருவில் ஜி. கள்ளிப்பட்டியைச் சேர்ந்த அன்வர் அலி என்பவர் நடத்தி வந்த 'நியூ ஸ்டார் மெடிக்கல்' என்ற மருந்து கடையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு மருத்துவம் பார்ப்பதற்கான உபகரணங்கள் இருந்ததைக் கண்டு, அன்வர் அலியிடம் விசாரித்தபோது, அவர் முறையாக மருத்துவப் படிப்பு படிக்காமலேயே அப்பகுதி மக்களுக்கு காய்ச்சல், சளி, தலைவலி, கை கால் வலி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்து, ஊசி மாத்திரைகளை வழங்கி வந்தது தெரியவந்தது. உடனடியாக அதிகாரிகள் மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மருத்துவர் கார்த்திக் தேவதானப்பட்டி காவல்துறையினரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், போலி மருத்துவர் அன்வர் அலி மீது இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மெடிக்கல் ஷாப்பிற்குள்ளேயே தனியாக ஒரு 'மருத்துவர் அறை' அமைத்து, உண்மையான மருத்துவர் போல பொதுமக்களை ஏமாற்றி சிகிச்சை அளித்ததும் அரசு மருத்துவர்களின் ஆய்வில் வெளிவந்துள்ளது. பொதுமக்களின் உயிரைக் காப்பாற்றும் உன்னதமான துறையைத் தவறாகப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றிய அன்வர் அலியை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவதானப்பட்டி காவல்துறையினர், இதுவரை அவரை கைது செய்யாமல் அலட்சியத்துடனும் மெத்தனப் போக்கிலும் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளனர். காவல்துறையினர் போலி மருத்துவம் செய்த அன்வர் அலியை கைது செய்ய ஏன் தயக்கம் காட்டுகிறார்கள் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், தேனி மாவட்டம் முழுவதும் இதுபோன்ற போலி மருத்துவர்கள் அதிக அளவில் இருப்பதாகவும், அவர்கள் அனைவரையும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவத்துறையினர் விரைவில் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

2 hrs ago
user_Shakthi
Shakthi
பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
2 hrs ago

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மருந்து கடையில் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்துள்ளனர். எனினும், இந்த போலி மருத்துவரை தேவதானப்பட்டி காவல்துறையினர் இதுவரை கைது செய்யாமல் அலட்சியத்துடன் செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் கடும் குற்றம் சாட்டியுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முறையாக மருத்துவம் படிக்காமலும், மெடிக்கல் ஷாப்களில் பொதுமக்கள் மருத்துவம் பார்ப்பதாகவும் மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் அளிக்கப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து, தேனி மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன் உத்தரவின் பேரில், பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர் கார்த்திக் தலைமையில், தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கோமதி அடங்கிய மருத்துவக் குழுவினர் பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டியில் உள்ள மருந்து கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, கெங்குவார்பட்டி பள்ளிவாசல் தெருவில் ஜி. கள்ளிப்பட்டியைச் சேர்ந்த அன்வர் அலி என்பவர் நடத்தி வந்த 'நியூ ஸ்டார் மெடிக்கல்' என்ற மருந்து கடையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு மருத்துவம் பார்ப்பதற்கான உபகரணங்கள் இருந்ததைக் கண்டு, அன்வர் அலியிடம் விசாரித்தபோது, அவர் முறையாக மருத்துவப் படிப்பு படிக்காமலேயே அப்பகுதி மக்களுக்கு காய்ச்சல், சளி, தலைவலி, கை கால் வலி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்து, ஊசி மாத்திரைகளை வழங்கி வந்தது தெரியவந்தது. உடனடியாக அதிகாரிகள் மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மருத்துவர் கார்த்திக் தேவதானப்பட்டி காவல்துறையினரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், போலி மருத்துவர் அன்வர் அலி மீது இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மெடிக்கல் ஷாப்பிற்குள்ளேயே தனியாக ஒரு 'மருத்துவர் அறை' அமைத்து, உண்மையான மருத்துவர் போல பொதுமக்களை ஏமாற்றி சிகிச்சை அளித்ததும் அரசு மருத்துவர்களின் ஆய்வில் வெளிவந்துள்ளது. பொதுமக்களின் உயிரைக் காப்பாற்றும் உன்னதமான துறையைத் தவறாகப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றிய அன்வர் அலியை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவதானப்பட்டி காவல்துறையினர், இதுவரை அவரை கைது செய்யாமல் அலட்சியத்துடனும் மெத்தனப் போக்கிலும் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளனர். காவல்துறையினர் போலி மருத்துவம் செய்த அன்வர் அலியை கைது செய்ய ஏன் தயக்கம் காட்டுகிறார்கள் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், தேனி மாவட்டம் முழுவதும் இதுபோன்ற போலி மருத்துவர்கள் அதிக அளவில் இருப்பதாகவும், அவர்கள் அனைவரையும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவத்துறையினர் விரைவில் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலையில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் 'உரிமை மீட்பு போராட்டம்' நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, தேனியில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து மக்கள் கட்சியின் தொண்டரணி மாநில துணைத் தலைவர் குரு ஐயப்பன் தலைமை தாங்கினார். தீபத் தூணில் தீபம் ஏற்றக் கோரி நீதிபதி சுவாமிநாதன் வழங்கிய நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும், தீபத் தூணில் தீபம் ஏற்றுவதில் இருக்கும் நடைமுறையே தொடரும் எனக் கூறிய அமைச்சர் நிர்மல் குமார், அத்துடன் இந்து மதத்திற்கு எதிராகப் பேசி வரும் அமைச்சர் வன்னியரசு மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோரைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
    1
    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலையில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் 'உரிமை மீட்பு போராட்டம்' நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, தேனியில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து மக்கள் கட்சியின் தொண்டரணி மாநில துணைத் தலைவர் குரு ஐயப்பன் தலைமை தாங்கினார்.

தீபத் தூணில் தீபம் ஏற்றக் கோரி நீதிபதி சுவாமிநாதன் வழங்கிய நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும், தீபத் தூணில் தீபம் ஏற்றுவதில் இருக்கும் நடைமுறையே தொடரும் எனக் கூறிய அமைச்சர் நிர்மல் குமார், அத்துடன் இந்து மதத்திற்கு எதிராகப் பேசி வரும் அமைச்சர் வன்னியரசு மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோரைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    53 min ago
  • திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மன்னவனூர் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான கோபாலகிருஷ்ணன் நேற்று மாலை பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும், அவரது உடல்நிலை மோசமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு, இன்று காலை 6 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது குடும்பத்தார் கோபாலகிருஷ்ணனின் கண்களை தானம் செய்ய முடிவு செய்தனர். கோபாலகிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டதால், வழக்கு விசாரணைக்காக மன்னவனூர் கிராம போலீசார் வர கால தாமதம் ஏற்பட்டது. இதனால் உடற்கூராய்வு செய்யாமல் உடலை வாங்க முடியாத சூழல் உருவானதால், நீண்ட நேரம் காத்திருந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆத்திரமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற நிலையில், போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, உடலைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து, அவர்கள் மருத்துவமனை வளாகத்தில் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து கோபாலகிருஷ்ணனின் உறவினர் ஒருவர் கூறுகையில், கொடைக்கானலில் போதுமான மருத்துவ வசதி இருந்திருந்தால், தாங்கள் ஏன் தேனி மருத்துவமனைக்கு வந்திருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். மேலும், காலை 6 மணியளவில் உயிரிழந்த நிலையில், தற்போது வரை தங்களிடம் உடலை ஒப்படைக்காமல் இருப்பதாகவும், கண் தானம் செய்யப்பட்ட பின்பும் கூட போலீசார் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் அலட்சியத்துடன் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். எனவே, விரைவில் உடற்கூராய்வு செய்து உயிரிழந்த கோபாலகிருஷ்ணனின் உடலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    3
    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மன்னவனூர் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான கோபாலகிருஷ்ணன் நேற்று மாலை பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும், அவரது உடல்நிலை மோசமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு, இன்று காலை 6 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது குடும்பத்தார் கோபாலகிருஷ்ணனின் கண்களை தானம் செய்ய முடிவு செய்தனர். 

கோபாலகிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டதால், வழக்கு விசாரணைக்காக மன்னவனூர் கிராம போலீசார் வர கால தாமதம் ஏற்பட்டது. இதனால் உடற்கூராய்வு செய்யாமல் உடலை வாங்க முடியாத சூழல் உருவானதால், நீண்ட நேரம் காத்திருந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆத்திரமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற நிலையில், போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, உடலைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து, அவர்கள் மருத்துவமனை வளாகத்தில் காத்துக் கொண்டிருக்கின்றனர். 

இதுகுறித்து கோபாலகிருஷ்ணனின் உறவினர் ஒருவர் கூறுகையில், கொடைக்கானலில் போதுமான மருத்துவ வசதி இருந்திருந்தால், தாங்கள் ஏன் தேனி மருத்துவமனைக்கு வந்திருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். மேலும், காலை 6 மணியளவில் உயிரிழந்த நிலையில், தற்போது வரை தங்களிடம் உடலை ஒப்படைக்காமல் இருப்பதாகவும், கண் தானம் செய்யப்பட்ட பின்பும் கூட போலீசார் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் அலட்சியத்துடன் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். எனவே, விரைவில் உடற்கூராய்வு செய்து உயிரிழந்த கோபாலகிருஷ்ணனின் உடலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • தமிழக முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு தேனியில் பள்ளி மாணவர்களுக்கான 5 கிலோமீட்டர் தூர மாரத்தான் போட்டி நடைபெற்றது. தேனி மாவட்ட தடகள சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், 6 வயது முதல் 16 வயது வரையிலான 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். தேனி நேரு சிலையிலிருந்து தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியை, த.வெ.க தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த போட்டி தேனி நேரு சிலையில் இருந்து மாவட்ட விளையாட்டு மைதானம் வரை 5 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது. போட்டியின் முடிவில், மாணவர் மற்றும் மாணவிகள் பிரிவுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
    1
    தமிழக முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு தேனியில் பள்ளி மாணவர்களுக்கான 5 கிலோமீட்டர் தூர மாரத்தான் போட்டி நடைபெற்றது. தேனி மாவட்ட தடகள சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், 6 வயது முதல் 16 வயது வரையிலான 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

தேனி நேரு சிலையிலிருந்து தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியை, த.வெ.க தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த போட்டி தேனி நேரு சிலையில் இருந்து மாவட்ட விளையாட்டு மைதானம் வரை 5 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது.

போட்டியின் முடிவில், மாணவர் மற்றும் மாணவிகள் பிரிவுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
    user_Theni
    Theni
    Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    55 min ago
  • திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், சித்தையன் கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட நரசிங்கபுரத்தில் ரூபாய் 35 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் மற்றும் திமுக முன்னாள் அமைச்சரும் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினருமாகிய ஐ. பெரியசாமி ஆகியோர் இந்த நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி தலைவர் போதும் பொண்ணு முரளி, வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலு மற்றும் அலுவலக பணியாளர்கள், திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள், அரசு ஒப்பந்ததாரர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
    1
    திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், சித்தையன் கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட நரசிங்கபுரத்தில் ரூபாய் 35 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் மற்றும் திமுக முன்னாள் அமைச்சரும் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினருமாகிய ஐ. பெரியசாமி ஆகியோர் இந்த நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி தலைவர் போதும் பொண்ணு முரளி, வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலு மற்றும் அலுவலக பணியாளர்கள், திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள், அரசு ஒப்பந்ததாரர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    16 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரின் முக்கிய பகுதியான பங்களா ஸ்டாப் என்ற இடத்தில், பேருந்து நிறுத்தம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிறுத்தம் ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில், அருகிலுள்ள தேநீர் விடுதிக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது ஐம்பதுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை நிறுத்தி, இடத்தை ஆக்கிரமித்து வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்பால் பேருந்துகள் சரியான இடத்தில் நிற்க முடியாமல், சாலையின் நடுவிலேயே பயணிகளை ஏற்றி இறக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதன் விளைவாக, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து, பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரின் முக்கிய பகுதியான பங்களா ஸ்டாப் என்ற இடத்தில், பேருந்து நிறுத்தம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிறுத்தம் ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில், அருகிலுள்ள தேநீர் விடுதிக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது ஐம்பதுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை நிறுத்தி, இடத்தை ஆக்கிரமித்து வருகின்றனர்.

இந்த ஆக்கிரமிப்பால் பேருந்துகள் சரியான இடத்தில் நிற்க முடியாமல், சாலையின் நடுவிலேயே பயணிகளை ஏற்றி இறக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதன் விளைவாக, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து, பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
    user_திருப்புகழ் ரமேஷ்
    திருப்புகழ் ரமேஷ்
    பழனி, திண்டுக்கல், தமிழ்நாடு•
    22 hrs ago
  • வாழ்க்கையில என்னன்னு அவங்க காட்டுவாங்க 👍💞🧑‍🤝‍🧑💘💚
    1
    வாழ்க்கையில என்னன்னு அவங்க காட்டுவாங்க 👍💞🧑‍🤝‍🧑💘💚
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் சாலையின் ஓரத்தில், பாதயாத்திரை செல்லும் பயணிகளுக்காக அமைக்கப்பட்ட நடைபாதையில், ஒரு தனியார் உணவகம் புரோட்டா ஸ்டால், டீக்கடை ஸ்டால், மற்றும் அமர்ந்து உணவு உண்ணும் இருக்கைகள் போன்றவற்றை அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இந்த ஆக்கிரமிப்பால், குறிப்பாக பங்குனி உத்திரம் மற்றும் தைப்பூசத்திற்கு பாதயாத்திரை செல்லும் பயணிகள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ள ஒட்டன்சத்திரம் நகர மக்கள், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற கோரி ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு வலியுறுத்தியுள்ளனர். மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் ஒட்டன்சத்திரம் நகராட்சி தூங்குகிறதா என பொதுமக்கள் நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
    1
    ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் சாலையின் ஓரத்தில், பாதயாத்திரை செல்லும் பயணிகளுக்காக அமைக்கப்பட்ட நடைபாதையில், ஒரு தனியார் உணவகம் புரோட்டா ஸ்டால், டீக்கடை ஸ்டால், மற்றும் அமர்ந்து உணவு உண்ணும் இருக்கைகள் போன்றவற்றை அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இந்த ஆக்கிரமிப்பால், குறிப்பாக பங்குனி உத்திரம் மற்றும் தைப்பூசத்திற்கு பாதயாத்திரை செல்லும் பயணிகள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ள ஒட்டன்சத்திரம் நகர மக்கள், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற கோரி ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு வலியுறுத்தியுள்ளனர். மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் ஒட்டன்சத்திரம் நகராட்சி தூங்குகிறதா என பொதுமக்கள் நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    23 hrs ago
  • தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் தனது 52-வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது என்றும், யாரும் பேனர்கள் வைக்கக் கூடாது என்றும் கடுமையான உத்தரவைப் பிறப்பித்திருந்தார். ஆனால், தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், இந்த உத்தரவை முற்றிலுமாக மீறி, தவெக நிர்வாகிகள் அராஜகமாக பேனர்களை குவித்து, மைக் செட் அமைத்து பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரியகுளம் பகுதி தவெக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள், தங்கள் தலைவரின் உத்தரவை காலில் போட்டு மிதிப்பது போல், போட்டிப்போட்டுக் கொண்டு பேனர்களை நட்டு வைத்துள்ளனர். குறிப்பாக, பெரியகுளம் அருகே உள்ள புதுப்பட்டி புறவழிச்சாலையின் இருபுறங்களிலும் விதிகளை மீறி 50-க்கும் மேற்பட்ட ராட்சத பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால், குறுகலான சாலைப் பகுதிகளில் வாகன ஓட்டிகளின் பார்வை மறைக்கப்பட்டு விபத்து அபாயம் உருவாகியுள்ளது. அதேபோல், பெரியகுளம் நகராட்சி, ஒன்றிய மற்றும் பேரூராட்சிப் பகுதிகளிலும் நடைபாதைகளையும், சாலை ஓரங்களையும் ஆக்கிரமித்து பேனர்கள் வைக்கப்பட்டு பாதசாரிகள் நடக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளன. மேலும், நலத்திட்ட உதவிகள் மற்றும் ரத்ததான முகாம் என்ற பெயரில், விதிகளை மீறி சாலைகளில் அதிக ஒலியெழுப்பும் மைக் செட்டுகள் அமைக்கப்பட்டு, உச்சகட்ட சத்தத்தில் பாடல்கள் ஒலிக்கவிடப்படுவதால், அப்பகுதியில் உள்ள முதியவர்கள் மற்றும் நோயாளிகள் நிம்மதியிழந்து தவித்து வருவதாகவும், பொதுமக்களின் அமைதியைக் கெடுக்கும் வகையில் இந்த அராஜகம் அரங்கேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி ஆரம்பித்து முழுமையாகத் தேர்தலைச் சந்திக்காத நிலையிலேயே, அக்கட்சியின் எம் எல் ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தலைவரின் பேச்சை மதிக்காமல் இப்படித் தன்னிச்சையாகச் செயல்படுவது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தவெக நிர்வாகிகளின் இந்த 'சொல்வது ஒன்று, செய்வது ஒன்று' என்ற இரட்டை வேடப் போக்கைக் கண்டு பெரியகுளம் பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்ந்துள்ளனர். பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இந்த பேனர்களை காவல்துறையும், நகராட்சி நிர்வாகமும் உடனடியாக அகற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் மனக்குமுறலாக உள்ளது.
    1
    தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் தனது 52-வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது என்றும், யாரும் பேனர்கள் வைக்கக் கூடாது என்றும் கடுமையான உத்தரவைப் பிறப்பித்திருந்தார். ஆனால், தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், இந்த உத்தரவை முற்றிலுமாக மீறி, தவெக நிர்வாகிகள் அராஜகமாக பேனர்களை குவித்து, மைக் செட் அமைத்து பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரியகுளம் பகுதி தவெக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள், தங்கள் தலைவரின் உத்தரவை காலில் போட்டு மிதிப்பது போல், போட்டிப்போட்டுக் கொண்டு பேனர்களை நட்டு வைத்துள்ளனர். குறிப்பாக, பெரியகுளம் அருகே உள்ள புதுப்பட்டி புறவழிச்சாலையின் இருபுறங்களிலும் விதிகளை மீறி 50-க்கும் மேற்பட்ட ராட்சத பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால், குறுகலான சாலைப் பகுதிகளில் வாகன ஓட்டிகளின் பார்வை மறைக்கப்பட்டு விபத்து அபாயம் உருவாகியுள்ளது. அதேபோல், பெரியகுளம் நகராட்சி, ஒன்றிய மற்றும் பேரூராட்சிப் பகுதிகளிலும் நடைபாதைகளையும், சாலை ஓரங்களையும் ஆக்கிரமித்து பேனர்கள் வைக்கப்பட்டு பாதசாரிகள் நடக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளன. மேலும், நலத்திட்ட உதவிகள் மற்றும் ரத்ததான முகாம் என்ற பெயரில், விதிகளை மீறி சாலைகளில் அதிக ஒலியெழுப்பும் மைக் செட்டுகள் அமைக்கப்பட்டு, உச்சகட்ட சத்தத்தில் பாடல்கள் ஒலிக்கவிடப்படுவதால், அப்பகுதியில் உள்ள முதியவர்கள் மற்றும் நோயாளிகள் நிம்மதியிழந்து தவித்து வருவதாகவும், பொதுமக்களின் அமைதியைக் கெடுக்கும் வகையில் இந்த அராஜகம் அரங்கேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி ஆரம்பித்து முழுமையாகத் தேர்தலைச் சந்திக்காத நிலையிலேயே, அக்கட்சியின் எம் எல் ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தலைவரின் பேச்சை மதிக்காமல் இப்படித் தன்னிச்சையாகச் செயல்படுவது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தவெக நிர்வாகிகளின் இந்த 'சொல்வது ஒன்று, செய்வது ஒன்று' என்ற இரட்டை வேடப் போக்கைக் கண்டு பெரியகுளம் பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்ந்துள்ளனர். பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இந்த பேனர்களை காவல்துறையும், நகராட்சி நிர்வாகமும் உடனடியாக அகற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் மனக்குமுறலாக உள்ளது.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.