Shuru
Apke Nagar Ki App…
வாழ்க்கையில என்னன்னு அவங்க காட்டுவாங்க 👍💞🧑🤝🧑💘💚
Maatram World news Theni
வாழ்க்கையில என்னன்னு அவங்க காட்டுவாங்க 👍💞🧑🤝🧑💘💚
More news from தமிழ்நாடு and nearby areas
- தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே சண்முகசுந்தரபுரம் கிராமத்தில், தேனி - மதுரை நெடுஞ்சாலை ஓரம் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் தூய்மைப் பணியை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) மேற்கொண்டது. நிலத்தடி நீரையும், இயற்கையையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் நடைபெற்ற இந்த பணியில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தார். அவர் நவீன இயந்திரத்தைக் கொண்டும், ஜேசிபி வாகனத்தையும் நேர்த்தியாக இயக்கி புதர் மண்டிப் போயிருந்த கருவேல மரங்களை வேரோடு அகற்றினார். வைகோவின் இந்த சுறுசுறுப்பான செயல்பாட்டைக் கண்டு அங்கிருந்த கட்சியினரும், பொதுமக்களும் உற்சாகமடைந்தனர். மதிமுக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் எனப் பலர் இந்தப் பணியில் திரளாகக் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, தமிழக சட்டசபையில் எந்தத் தீர்மானம் போட்டாலும், அதற்கு முட்டுக்கட்டை போட்டு தமிழகத்துக்குக் கேடு விளைவிப்பதே மத்திய அரசுதான் என்று குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கு காவிரி மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வரக்கூடாது என்பதுடன், மேகதாது அணையை கட்ட முயலும் கர்நாடக அரசைக் கண்டித்து கடந்த 2012ஆம் ஆண்டிலேயே முதன்முதலில் போராட்டம் நடத்தியது மதிமுகதான் என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது மேகதாது அணைக்கு எதிராக சட்டசபையில் ஒரு நல்ல தீர்மானத்தை அனைத்து கட்சிகளும் ஒருசேர இணைந்து, நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் கொண்டு வந்திருப்பதாக வைகோ தெரிவித்தார். ஆனால், கர்நாடக அரசு மட்டும் தனித்து இதைச் செய்யவில்லை என்றும், இதற்கு முழுக்க முழுக்கப் பின்புலமாக இருந்து இயக்குவது நரேந்திர மோடி தலைமையிலான மத்திய சர்க்கார்தான் என்றும் அவர் எச்சரித்தார். மேலும், கடந்த 2014 டிசம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடந்த ஒரு ரகசியக் கூட்டத்தில், கர்நாடக மாநில அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டதாகவும், அப்போது 'நீங்கள் மேகதாது அணையை கட்டுங்கள், நாங்கள் தடுக்க மாட்டோம், நீங்கள் கட்டிக்கொண்டே இருங்கள்' என்று மத்திய சர்க்கார் பச்சைக்கொடி காட்டியதாகவும் வைகோ கூறினார். இந்தச் சதித்திட்டத்தை 'தி இந்து' ஆங்கில நாளிதழ்தான் வெளி உலகத்திற்கு அம்பலப்படுத்தியது என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.2
- தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் தனது 52-வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது என்றும், யாரும் பேனர்கள் வைக்கக் கூடாது என்றும் கடுமையான உத்தரவைப் பிறப்பித்திருந்தார். ஆனால், தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், இந்த உத்தரவை முற்றிலுமாக மீறி, தவெக நிர்வாகிகள் அராஜகமாக பேனர்களை குவித்து, மைக் செட் அமைத்து பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரியகுளம் பகுதி தவெக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள், தங்கள் தலைவரின் உத்தரவை காலில் போட்டு மிதிப்பது போல், போட்டிப்போட்டுக் கொண்டு பேனர்களை நட்டு வைத்துள்ளனர். குறிப்பாக, பெரியகுளம் அருகே உள்ள புதுப்பட்டி புறவழிச்சாலையின் இருபுறங்களிலும் விதிகளை மீறி 50-க்கும் மேற்பட்ட ராட்சத பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால், குறுகலான சாலைப் பகுதிகளில் வாகன ஓட்டிகளின் பார்வை மறைக்கப்பட்டு விபத்து அபாயம் உருவாகியுள்ளது. அதேபோல், பெரியகுளம் நகராட்சி, ஒன்றிய மற்றும் பேரூராட்சிப் பகுதிகளிலும் நடைபாதைகளையும், சாலை ஓரங்களையும் ஆக்கிரமித்து பேனர்கள் வைக்கப்பட்டு பாதசாரிகள் நடக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளன. மேலும், நலத்திட்ட உதவிகள் மற்றும் ரத்ததான முகாம் என்ற பெயரில், விதிகளை மீறி சாலைகளில் அதிக ஒலியெழுப்பும் மைக் செட்டுகள் அமைக்கப்பட்டு, உச்சகட்ட சத்தத்தில் பாடல்கள் ஒலிக்கவிடப்படுவதால், அப்பகுதியில் உள்ள முதியவர்கள் மற்றும் நோயாளிகள் நிம்மதியிழந்து தவித்து வருவதாகவும், பொதுமக்களின் அமைதியைக் கெடுக்கும் வகையில் இந்த அராஜகம் அரங்கேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி ஆரம்பித்து முழுமையாகத் தேர்தலைச் சந்திக்காத நிலையிலேயே, அக்கட்சியின் எம் எல் ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தலைவரின் பேச்சை மதிக்காமல் இப்படித் தன்னிச்சையாகச் செயல்படுவது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தவெக நிர்வாகிகளின் இந்த 'சொல்வது ஒன்று, செய்வது ஒன்று' என்ற இரட்டை வேடப் போக்கைக் கண்டு பெரியகுளம் பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்ந்துள்ளனர். பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இந்த பேனர்களை காவல்துறையும், நகராட்சி நிர்வாகமும் உடனடியாக அகற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் மனக்குமுறலாக உள்ளது.1
- விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பெரியார் நகர் சிறுவர் பூங்காவில், ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு தினத்தையொட்டியும், சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டும், மரம் நடு விழா மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் சாத்தூர் நகர் தலைவர் குருசாமி, நகராட்சி ஆணையாளர் ஜெகதீஸ்வரி, தொண்டு நிறுவன அமைப்பினர், சிலம்பம் கலைக்கூட ஆசான் மற்றும் மாணவ மாணவிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய தொண்டு நிறுவன அமைப்பினர், பொதுமக்கள் ஆர்வத்துடன் விலங்குகளை வளர்ப்போம் என்ற எண்ணத்தில் மாடுகளை சாலைகளில் துரத்திவிடுவது பெரும் ஆபத்தை விளைவிப்பதாகக் குறிப்பிட்டனர். இதேபோன்று, நாய்களை விருப்பப்பட்டு வளர்த்து, பின்பு பராமரிக்க முடியாமல் தெருக்களில் விட்டுவிடுவதால் பல்வேறு இடர்பாடுகளும் பொதுமக்களுக்கு ஆபத்தும் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டினர். இதனால் பொதுமக்கள் முறைப்படி நாய்களை வளர்க்க லைசன்ஸ் பெற்று வளர்க்க வேண்டும் என்றும், ஆர்வத்துடன் நாய்களை வளர்த்து தெருவில் விட்டுவிடுவதால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, நாகர்கோவில் சேர்மன், ஆணையாளர், தொண்டு நிறுவன அமைப்பினர் மற்றும் மாணவர்கள் அனைவரும் அப்பகுதியில் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், பிளாஸ்டிக்கால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துரைத்து, பிளாஸ்டிக் ஒழிப்பது தொடர்பான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினர். இறுதியாக, சிலம்பக் கலைக்கூட மாணவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வகையான சிலம்பக் கலைகளைச் சுழற்றி வெளிப்படுத்தினர்.1
- ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் சாலையின் ஓரத்தில், பாதயாத்திரை செல்லும் பயணிகளுக்காக அமைக்கப்பட்ட நடைபாதையில், ஒரு தனியார் உணவகம் புரோட்டா ஸ்டால், டீக்கடை ஸ்டால், மற்றும் அமர்ந்து உணவு உண்ணும் இருக்கைகள் போன்றவற்றை அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இந்த ஆக்கிரமிப்பால், குறிப்பாக பங்குனி உத்திரம் மற்றும் தைப்பூசத்திற்கு பாதயாத்திரை செல்லும் பயணிகள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ள ஒட்டன்சத்திரம் நகர மக்கள், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற கோரி ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு வலியுறுத்தியுள்ளனர். மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் ஒட்டன்சத்திரம் நகராட்சி தூங்குகிறதா என பொதுமக்கள் நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.1
- தென்காசி மாவட்டம் செங்கோட்டை வழியாக தினமும் பல நூற்றுக்கணக்கான லாரிகள் கேரளாவுக்குச் சென்று வருவதால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த தொடர்ச்சியான நெருக்கடியால், அவசர சிகிச்சைக்காக வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட எளிதில் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது, இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.1
- தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைக்கப்பட்டு வரும் விமானப் பயிற்சி மையத்தின் (Flying Training Organization - FTO) கட்டுமானப் பணிகளைக் கண்காணிப்பதற்கான முக்கிய நடவடிக்கையை தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் (TIDCO) மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசின் நிறுவனமான TIDCO, இந்தப் பணிகளை மேற்பார்வையிட ஒரு சுயாதீன பொறியாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான மின்னணு டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, கட்டுமானப் பணிகளின் தரம், தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் திட்ட முன்னேற்றத்தைத் தொடர்ந்து கண்காணித்து ஆலோசனை வழங்கும் தகுதியான நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள நிறுவனங்கள் டெண்டர் ஆவணங்களை TIDCO மற்றும் தமிழ்நாடு அரசின் மின்னணு டெண்டர் இணையதளங்களிலிருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஒப்பந்தப் புள்ளிகள் மற்றும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற ஜூலை 15ஆம் தேதி மதியம் 3 மணி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விமானப் பயிற்சி மையம் கோவில்பட்டி வட்டம் கயத்தாறு பகுதியில் அமைய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் உயர்தரத்துடன் பணிகள் நிறைவேறுவதை உறுதி செய்வதே இந்த டெண்டரின் முக்கிய நோக்கம் என்று TIDCO தெரிவித்துள்ளது. கோவில்பட்டியில் உருவாகி வரும் இந்த விமானப் பயிற்சி மையம் செயல்பாட்டுக்கு வந்தால், தமிழகத்தில் விமானப் பயிற்சி மற்றும் விமானத் துறை சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் வலுப்பெறும் எனக் கருதப்படுகிறது. மேலும், தென் தமிழக இளைஞர்களுக்கு விமானப் பயிற்சி பெறும் புதிய வாய்ப்புகள் உருவாகும் என்பதுடன், அப்பகுதியின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் இது ஊக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.1
- தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மருந்து கடையில் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்துள்ளனர். எனினும், இந்த போலி மருத்துவரை தேவதானப்பட்டி காவல்துறையினர் இதுவரை கைது செய்யாமல் அலட்சியத்துடன் செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் கடும் குற்றம் சாட்டியுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முறையாக மருத்துவம் படிக்காமலும், மெடிக்கல் ஷாப்களில் பொதுமக்கள் மருத்துவம் பார்ப்பதாகவும் மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் அளிக்கப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து, தேனி மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன் உத்தரவின் பேரில், பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர் கார்த்திக் தலைமையில், தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கோமதி அடங்கிய மருத்துவக் குழுவினர் பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டியில் உள்ள மருந்து கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, கெங்குவார்பட்டி பள்ளிவாசல் தெருவில் ஜி. கள்ளிப்பட்டியைச் சேர்ந்த அன்வர் அலி என்பவர் நடத்தி வந்த 'நியூ ஸ்டார் மெடிக்கல்' என்ற மருந்து கடையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு மருத்துவம் பார்ப்பதற்கான உபகரணங்கள் இருந்ததைக் கண்டு, அன்வர் அலியிடம் விசாரித்தபோது, அவர் முறையாக மருத்துவப் படிப்பு படிக்காமலேயே அப்பகுதி மக்களுக்கு காய்ச்சல், சளி, தலைவலி, கை கால் வலி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்து, ஊசி மாத்திரைகளை வழங்கி வந்தது தெரியவந்தது. உடனடியாக அதிகாரிகள் மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மருத்துவர் கார்த்திக் தேவதானப்பட்டி காவல்துறையினரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், போலி மருத்துவர் அன்வர் அலி மீது இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மெடிக்கல் ஷாப்பிற்குள்ளேயே தனியாக ஒரு 'மருத்துவர் அறை' அமைத்து, உண்மையான மருத்துவர் போல பொதுமக்களை ஏமாற்றி சிகிச்சை அளித்ததும் அரசு மருத்துவர்களின் ஆய்வில் வெளிவந்துள்ளது. பொதுமக்களின் உயிரைக் காப்பாற்றும் உன்னதமான துறையைத் தவறாகப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றிய அன்வர் அலியை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவதானப்பட்டி காவல்துறையினர், இதுவரை அவரை கைது செய்யாமல் அலட்சியத்துடனும் மெத்தனப் போக்கிலும் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளனர். காவல்துறையினர் போலி மருத்துவம் செய்த அன்வர் அலியை கைது செய்ய ஏன் தயக்கம் காட்டுகிறார்கள் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், தேனி மாவட்டம் முழுவதும் இதுபோன்ற போலி மருத்துவர்கள் அதிக அளவில் இருப்பதாகவும், அவர்கள் அனைவரையும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவத்துறையினர் விரைவில் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.1
- தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகேயுள்ள ராசா பட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த பாலாஜி பட்டாசு ஆலையில் இன்று மாலை வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுமார் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படுகாயம் அடைந்தவர்கள் பட்டாசு ஆலைக்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மூலம் விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டனர். சாத்தூர் அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட சுமார் 15க்கும் மேற்பட்டோருக்கு முதலுதவி மற்றும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் நத்தத்துப்பட்டி, மாசார்பட்டி, எம். நாகலாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்; இவர்களில் அதிகமான பெண்கள் அடங்குவர். இந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.1
- இன்று ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் கார்த்திக் மற்றும் போலீஸார், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பரூம்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த மூன்று நபர்களைப் பிடித்து விசாரித்ததில், அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களில் ஓட்டப்பிடாரம் நாகம்பட்டி பகுதியைச் சேர்ந்த சங்கரபாண்டி மகன் மகேஷ் குமார் (19), வ.உ.சி காலனி பகுதியைச் சேர்ந்தவர்களான ராசுக்குட்டி மகன் அறிவுமதி (எ) அழகு (23) மற்றும் பாஸ் (எ) பாலமுருகன் (22) ஆகியோர் அடங்குவர். அவர்களிடம் இருந்து 600 கிராம் கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து, இந்த மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது போலீஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.1