logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

அருமனை காவல் உதவி ஆய்வாளருக்கு நற்பணி சான்றிதழ் கன்னியாகுமரி மாவட்டம் அருமனை உதவி ஆய்வாளர் சுஜின் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் திருமதி. ஆர். அழகுமீனா I.A.S. அவர்கள் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS முன்னிலையில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் நற்பணிக்கான பாராட்டு சான்று வழங்கி கௌரவிக்கப்பட்டது

4 hrs ago
user_Arukani Members South
Arukani Members South
Vilavancode, Kanniyakumari•
4 hrs ago
ef218831-c2ef-4f9b-bc4c-44ac4d97cf98

அருமனை காவல் உதவி ஆய்வாளருக்கு நற்பணி சான்றிதழ் கன்னியாகுமரி மாவட்டம் அருமனை உதவி ஆய்வாளர் சுஜின் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் திருமதி. ஆர். அழகுமீனா I.A.S. அவர்கள் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS முன்னிலையில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் நற்பணிக்கான பாராட்டு சான்று வழங்கி கௌரவிக்கப்பட்டது

More news from Tirunelveli and nearby areas
  • நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் இன்று காலை நாட்டின் 77 வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. முது நிலை மருத்துவ அலுவலர் சாந்தி சுசீந்திரன் தேசிய கொடி ஏற்றி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இறுதியில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது
    1
    நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் இன்று காலை நாட்டின் 77 வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. முது நிலை மருத்துவ அலுவலர் சாந்தி சுசீந்திரன் தேசிய கொடி ஏற்றி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இறுதியில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது
    user_S.Maria selvam
    S.Maria selvam
    Ambasamudram, Tirunelveli•
    17 hrs ago
  • இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் 77வது குடியரசு தின விழா இன்று நடந்தது. விழாவிற்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார் முதல்வர் கலா வின்சிலா முன்னிலை வகித்தார் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் தேசிய கொடியேற்றி வாழ்த்தி பேசினார் பேரூராட்சி மன்றத் தலைவர் சின்னத்தாய், ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம், நகர செயலாளர் முத்தையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
    1
    இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் 77வது குடியரசு தின விழா இன்று நடந்தது.
விழாவிற்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார் முதல்வர் கலா வின்சிலா முன்னிலை வகித்தார் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் தேசிய கொடியேற்றி வாழ்த்தி பேசினார் பேரூராட்சி மன்றத் தலைவர் சின்னத்தாய், ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம், நகர செயலாளர் முத்தையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • தூத்துக்குடி மாநகரின் முக்கியப் பகுதியான மாப்பிள்ளையூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, லேசான மழை பெய்தது. கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெயிலின் தாக்கம் இந்த திடீர் மழையினால் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    1
    தூத்துக்குடி மாநகரின் முக்கியப் பகுதியான மாப்பிள்ளையூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, லேசான மழை பெய்தது. கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெயிலின் தாக்கம் இந்த திடீர் மழையினால் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    user_Pushpa
    Pushpa
    Tailor Thoothukkudi, Tuticorin•
    11 hrs ago
  • *இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்பிலான பீடி இலை மூட்டைகள் பறிமுதல்: டிரைவர் கைது* தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் கொண்டு வரப்பட்ட சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் இன்று அதிகாலை பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் போலீஸ் உட்கோட்டம், ஆறுமுகநேரி போலீஸ் நிலைய எல்கைக்கு உட்பட்ட காயல்பட்டினம் வாவு காலேஜ் எதிரே உள்ள கடற்கரைக்குச் செல்லும் சாலையில் கடத்தல் நடைபெறுவதாகத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில், எஸ்ஐக்கள் ராமசந்திரன், பிரம்ம நாயகம், சிறப்பு எஸ்ஐ ராமர் மற்றும் தலைமைக் காவலர்கள் இருதயராஜகுமார், இசக்கிமுத்து, காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சி ராஜா, கேப்ரியல் ஆகியோர் அடங்கிய குழுவினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இன்று (26.01.26) அதிகாலை சுமார் 03.15 மணியளவில் அந்த வழியாக வந்த ஐச்சர் லோடு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காக 60 மூட்டைகளில் பீடி இலைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 30 கிலோ எடை கொண்ட 60 மூட்டைகளில் மொத்தம் 1800 கிலோ பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த சாத்தான்குளம் சௌந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் மகன் கற்பக ராஜேஸ்வரன் (40) என்பவரை போலீசார் பிடித்தனர். போலீசார் வருவதை அறிந்த மற்ற நபர்கள் பைபர் படகுடன் தப்பியோடிவிட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. பிடிபட்ட கற்பக ராஜேஸ்வரன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் பீடி இலை மூட்டைகள் ஆகியவை தூத்துக்குடி சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
    1
    *இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்பிலான பீடி இலை மூட்டைகள் பறிமுதல்: டிரைவர் கைது*
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் கொண்டு வரப்பட்ட சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் இன்று அதிகாலை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் போலீஸ் உட்கோட்டம், ஆறுமுகநேரி போலீஸ் நிலைய எல்கைக்கு உட்பட்ட காயல்பட்டினம் வாவு காலேஜ் எதிரே உள்ள கடற்கரைக்குச் செல்லும் சாலையில் கடத்தல் நடைபெறுவதாகத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில், எஸ்ஐக்கள் ராமசந்திரன், பிரம்ம நாயகம், சிறப்பு எஸ்ஐ ராமர் மற்றும் தலைமைக் காவலர்கள் இருதயராஜகுமார், இசக்கிமுத்து, காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சி ராஜா, கேப்ரியல் ஆகியோர் அடங்கிய குழுவினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இன்று (26.01.26) அதிகாலை சுமார் 03.15 மணியளவில் அந்த வழியாக வந்த ஐச்சர் லோடு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காக 60 மூட்டைகளில் பீடி இலைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 30 கிலோ எடை கொண்ட 60 மூட்டைகளில் மொத்தம் 1800 கிலோ பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த சாத்தான்குளம் சௌந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் மகன் கற்பக ராஜேஸ்வரன் (40) என்பவரை போலீசார் பிடித்தனர். போலீசார் வருவதை அறிந்த மற்ற நபர்கள் பைபர் படகுடன் தப்பியோடிவிட்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. பிடிபட்ட கற்பக ராஜேஸ்வரன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் பீடி இலை மூட்டைகள் ஆகியவை தூத்துக்குடி சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukkudi, Tuticorin•
    15 hrs ago
  • உணவை வீணாக்காதீர் #tamil #நெல் #விவசாயம்காப்போம் #உணவு #இயற்கைவேளாண்மை இயற்கைஉணவு
    1
    உணவை வீணாக்காதீர் #tamil #நெல் #விவசாயம்காப்போம் #உணவு #இயற்கைவேளாண்மை இயற்கைஉணவு
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • தேனி மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே அரசு சார்பில் நவீன விளையாட்டு கிரிக்கெட் மைதானம் அரங்கம் திறக்கப்பட்டது தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் பங்கேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்வில் மாவட்ட எஸ்பி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்
    2
    தேனி மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே அரசு சார்பில் நவீன விளையாட்டு கிரிக்கெட் மைதானம் அரங்கம் திறக்கப்பட்டது தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் பங்கேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்வில் மாவட்ட எஸ்பி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்
    user_Theni
    Theni
    Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் கடந்த 9 மாதங்களில் ரூபாய் 1026 கோடி மொத்த வருமானம் ஈட்டியுள்ளது 77வது குடியரசு தின விழாவில் கோட்ட மேலாளர் தகவல். மதுரை: தெற்கு ரயில்வே, மதுரை கோட்டம் சார்பாக 77வது குடியரசு தினவிழா திங்கட்கிழமை (ஜனவரி 26) அன்று மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா தேசியக் கொடியை ஏற்றி வைத்து ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். விழாவில் கோட்ட ரயில்வே மேலாளர் பேசும்போது, இந்த நிதியாண்டில் கடந்த 9 மாதங்களில் மதுரை கோட்டம் ரூபாய் 1026 கோடி மொத்த வருமானம் ஈட்டியுள்ளது என்றார். இது கடந்த ஆண்டு வருமானமான ரூபாய் 915 கோடியை காட்டிலும்‌ 12 சதவீதம் அதிகமாகும். மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களில் 3.68 கோடி பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூபாய் 658 கோடி வருமானம் ஈட்ட பட்டுள்ளது. இது சென்ற ஆண்டு வருமானமான ரூபாய் 587 கோடியை காட்டிலும் 12 சதவீதம் அதிகமாகும். மேலும் சரக்கு போக்குவரத்து வாயிலாக ரூபாய் 296 கோடியும், இதர வகை வருமானமாக ரூபாய் 27 கோடியும் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் முறையே 12 மற்றும் 35 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டில் புதிய பொருள்களான மஞ்சள் பீன்ஸ், நிலக்கரி, சிமெண்ட், ஜிப்சம், சரக்கு பெட்டகம் போன்றவை சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் சரக்கு போக்குவரத்தில் அதிகபட்ச மாத வருமானமாக ரூபாய் 42 கோடி ஈட்டப்பட்டுள்ளது. 51 ஒப்பந்ததாரர்களோடு இருந்த வாகன காப்பகம், விளம்பரங்கள், 'ஒரு நிலையம் ஒரு பொருள்' விற்பனைக் கடைகள், பிரதமர் மருந்து விற்பனை நிலையம், மலிவு விலை விடுதிகள், சுற்றுலா பயணிகள் மாளிகை ஆகியவை 105 ஒப்பந்தங்களாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் பயணக் கட்டணம் இல்லாத வருமானம் அதிகரித்துள்ளது என்றார். மதுரை கோட்டத்தில் இயக்கப்பட்ட 22,648 விரைவு ரயில்களும் 97.05 சதவீதம் காலந் தவறாமல் இயக்கப்பட்டுள்ளது. மேலும் 15,619 முன்பதிவில்லாத ரயில்களும் 98.49 சதவீதம் காலம் தவறாமல் இயக்கப்பட்டு அகில இந்திய அளவில் காலந்தவறாமையில் மதுரை கோட்டம் இரண்டாம் நிலையில் உள்ளது. ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க 895 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன என்றார். பயணிகளின் வசதிக்காக தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே ஒரு புதிய ரயில் சேவையும், திருவனந்தபுரம் - தாம்பரம் இடையே அமிர்த பாரத ரயில் சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் தேவைக்கேற்ப விரைவு ரயில்களுக்கு 30 கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிக வளைவுகள் கொண்ட மலைப்பாதையான தென்காசி - கொல்லம் ரயில் பிரிவைத் தவிர மற்ற பகுதிகளில் ரயில்கள் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. பயணிகளின் பாதுகாப்பிற்காக கோவில்பட்டி, மணப்பாறை, காரைக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் நடை மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் 11 ரயில் நிலையங்களில் நடை மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. கடந்த 9 மாதங்களில் ரயில் நிலையங்களில் 24 மின் தூக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது கோவில்பட்டியில் மின் தூக்கி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பயணிகள் ரயில்களில் எளிதாக ஏறி இறங்க 24 ரயில் நிலையங்களில் நடைமேடைகளின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சரக்கு ரயில்களை மணிக்கு 39.58 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கி அகில இந்திய அளவில் சரக்கு ரயில்களை வேகமாக இயக்குவதில் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது மதுரை கோட்டம். சரக்கு போக்குவரத்தில் 2.61 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இது கடந்தாண்டை காட்டிலும் 21.48 சதவீதம் அதிகமாகும். மதுரை ரயில் நிலையத்தில் ரூபாய் 413 கோடி மதிப்பிலும், ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரூபாய் 112 கோடி மதிப்பிலும், திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ரூபாய் 100 கோடி மதிப்பிலும் மறு சிரமைப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. 17 ரயில் நிலையங்களை அம்ரித் பாரத் ரயில் நிலையங்களாக தரம் உயர்த்தும் பணிகள் காரைக்குடி, சோழவந்தான், ஸ்ரீவில்லிபுத்தூர், மணப்பாறை ஆகிய ரயில் நிலையங்களில் நிறைவு பெற்றுள்ளன. இந்த பணிகள் மற்ற ரயில் நிலையங்களில் வரும் மே மாதத்திற்குள் நிறைவு பெறும். கடந்த 9 மாதங்களில் 63 கிலோமீட்டர் ரயில் பாதைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 118 கிலோமீட்டர் ரயில் பாதை மற்றும் 82 ரயில் பாதை இணையும் இடங்களில் உள்ள சரளை கற் தூசிகள் அகற்றப்பட்டு பாதை பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் பாதைகளுக்கு இடையே ரயில் பாதை மாறுவதற்கு அமைக்கப்பட்டுள்ள 42 ரயில் பாதை இணைப்புகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பான பயணத்திற்கு விருதுநகர் - வாஞ்சி மணியாச்சி பிரிவில் 3 கடவுப் பாதைகள் சுரங்கப் பாதைகளாக மாற்றப்பட்டுள்ளன. சாலை வாகனங்களின் பாதுகாப்பிற்காக சைகை விளக்கு கம்ப கட்டுப்பாட்டிலாத 7 கடவுப் பாதைகள் சைகை விளக்கு கம்ப கட்டுப்பாடுள்ள கடவு பாதைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும் சைகை கம்ப கட்டுப்பாடு இல்லாத 47 கடவுப் பாதைகள் கண்காணிப்பு காமிரா மூலம் ரயில் நிலைய அதிகாரி நேரடி மேற்பார்வைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மனித தவறுகளை தவிர்க்க 12 கடவுப் பாதைகளில் நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மின்சார ரயில் இன்ஜின்களை தொய்வில்லாமல் இயக்க தேனி மற்றும் புனலூரில் புதிய மின் உபநிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் நிறைவடைந்த இராமநாதபுரம் - ராமேஸ்வரம் ரயில் பாதை மின்மயமாக்கல் பணிகள் வாயிலாக மதுரை கோட்டம் 100 சதவீத மின்மயக்கோட்டமாக உருவாகி இருக்கிறது. ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள், ரயில் நிலையங்களில் பெற்றோருக்கு தெரியாமல் வந்த 122 சிறுவர்களை மீட்டுள்ளனர். மேலும் பயணிகள் மறந்து விட்டு சென்ற ரூபாய் 1.42 கோடி மதிப்பிலான பொருள்களை கைப்பற்றி உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். பணியில் உயிரிழந்த மற்றும் உடல் நலம் குன்றியே 40 ரயில்வே ஊழியர்களின் வாரிசுகளுக்கு உரிய வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 658 ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 94 ரயில்வே ஓய்வூதியர்களின் குறைகள் களையப்பட்டு சுமார் ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான பண பலன்கள் வழங்கப்பட்டுள்ளன. ஊழியர்களின் நலனுக்காக பல்வேறு ரயில் நிலையங்களில் 104 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. மதுரை ரயில்வே மருத்துவமனையில் பல் நோய்க்கு கதிரியக்க படங்கள் எடுக்க கருவி உட்பட நவீன மருத்துவ உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் மதுரை மருத்துவமனைக்கு பல்வேறு நவீன வசதிகளுடன் புதிய இரண்டு மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. சுகாதார முகாம்கள் வாயிலாக ரயில் நிலையங்களில் 6.47 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன. மண்டல அளவில் சுத்தம் சுகாதாரமாக பேணப்பட்ட ரயில் நிலையத்திற்கான இரண்டாவது சுழற் கேடயத்தை மதுரை ரயில் நிலையம் பெற்றுள்ளது என்றார். இறுதியில் ரயில்வே பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை மோப்ப நாய் சாகச விளையாட்டும் நடைபெற்றது. விழாவில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் எல்.என்.ராவ், முதுநிலை கோட்ட ஊழியர் நல அதிகாரி வி.சுவாமிநாதன், ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் எம்.செஞ்சையாஉட்பட ரயில்வே அதிகாரிகளும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
    4
    தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் கடந்த 9 மாதங்களில்   ரூபாய் 1026 கோடி மொத்த வருமானம் ஈட்டியுள்ளது 
77வது குடியரசு தின விழாவில் கோட்ட மேலாளர் தகவல்.
மதுரை:
தெற்கு ரயில்வே, மதுரை கோட்டம் சார்பாக 77வது குடியரசு தினவிழா திங்கட்கிழமை (ஜனவரி 26) அன்று மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா தேசியக் கொடியை ஏற்றி வைத்து ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
விழாவில் கோட்ட ரயில்வே மேலாளர் பேசும்போது, இந்த நிதியாண்டில் கடந்த 9 மாதங்களில் மதுரை கோட்டம்  ரூபாய் 1026 கோடி மொத்த வருமானம் ஈட்டியுள்ளது என்றார். இது கடந்த ஆண்டு வருமானமான ரூபாய் 915 கோடியை காட்டிலும்‌ 12 சதவீதம் அதிகமாகும். மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களில் 3.68 கோடி  பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூபாய் 658 கோடி வருமானம் ஈட்ட பட்டுள்ளது.  இது சென்ற ஆண்டு வருமானமான ரூபாய் 587 கோடியை காட்டிலும் 12 சதவீதம் அதிகமாகும். மேலும் சரக்கு போக்குவரத்து வாயிலாக ரூபாய் 296 கோடியும், இதர வகை வருமானமாக ரூபாய் 27 கோடியும் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் முறையே 12 மற்றும் 35 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டில் புதிய பொருள்களான மஞ்சள் பீன்ஸ், நிலக்கரி, சிமெண்ட், ஜிப்சம், சரக்கு பெட்டகம் போன்றவை சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் சரக்கு போக்குவரத்தில் அதிகபட்ச மாத வருமானமாக ரூபாய் 42 கோடி ஈட்டப்பட்டுள்ளது. 51 ஒப்பந்ததாரர்களோடு இருந்த வாகன காப்பகம், விளம்பரங்கள், 'ஒரு நிலையம் ஒரு பொருள்' விற்பனைக் கடைகள், பிரதமர் மருந்து விற்பனை நிலையம், மலிவு விலை விடுதிகள், சுற்றுலா பயணிகள் மாளிகை ஆகியவை 105 ஒப்பந்தங்களாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் பயணக் கட்டணம் இல்லாத வருமானம் அதிகரித்துள்ளது என்றார். மதுரை கோட்டத்தில் இயக்கப்பட்ட 22,648 
விரைவு ரயில்களும் 97.05 சதவீதம் காலந் தவறாமல் இயக்கப்பட்டுள்ளது. மேலும் 15,619 முன்பதிவில்லாத ரயில்களும் 98.49 சதவீதம் காலம் தவறாமல் இயக்கப்பட்டு அகில இந்திய அளவில் காலந்தவறாமையில்
மதுரை கோட்டம்  இரண்டாம் நிலையில் உள்ளது. 
ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க 895 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன என்றார். பயணிகளின் வசதிக்காக தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே ஒரு புதிய ரயில் சேவையும், திருவனந்தபுரம் - தாம்பரம் இடையே அமிர்த பாரத ரயில் சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் தேவைக்கேற்ப விரைவு ரயில்களுக்கு 30 கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிக வளைவுகள் கொண்ட மலைப்பாதையான தென்காசி - கொல்லம் ரயில் பிரிவைத் தவிர மற்ற பகுதிகளில் ரயில்கள் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. பயணிகளின் பாதுகாப்பிற்காக கோவில்பட்டி, மணப்பாறை, காரைக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் நடை மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் 11 ரயில் நிலையங்களில் நடை மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. கடந்த 9 மாதங்களில் ரயில் நிலையங்களில் 24 மின் தூக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது கோவில்பட்டியில் மின் தூக்கி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பயணிகள் ரயில்களில் எளிதாக ஏறி இறங்க 24 ரயில் நிலையங்களில் நடைமேடைகளின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சரக்கு ரயில்களை மணிக்கு 39.58 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கி அகில இந்திய அளவில் சரக்கு ரயில்களை வேகமாக இயக்குவதில் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது மதுரை கோட்டம். சரக்கு போக்குவரத்தில் 2.61 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இது கடந்தாண்டை காட்டிலும் 21.48 சதவீதம் அதிகமாகும். மதுரை ரயில் நிலையத்தில் ரூபாய் 413 கோடி மதிப்பிலும், ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரூபாய் 112 கோடி மதிப்பிலும், திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ரூபாய் 100 கோடி மதிப்பிலும் மறு சிரமைப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. 17 ரயில் நிலையங்களை அம்ரித் பாரத் ரயில் நிலையங்களாக தரம் உயர்த்தும் பணிகள் காரைக்குடி, சோழவந்தான், ஸ்ரீவில்லிபுத்தூர், மணப்பாறை ஆகிய ரயில் நிலையங்களில் நிறைவு பெற்றுள்ளன. இந்த பணிகள் மற்ற ரயில் நிலையங்களில் வரும் மே மாதத்திற்குள் நிறைவு பெறும். கடந்த 9 மாதங்களில் 63 கிலோமீட்டர் ரயில் பாதைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 118 கிலோமீட்டர் ரயில் பாதை மற்றும் 82 ரயில் பாதை இணையும் இடங்களில் உள்ள சரளை கற் தூசிகள் அகற்றப்பட்டு பாதை பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் பாதைகளுக்கு இடையே ரயில் பாதை மாறுவதற்கு அமைக்கப்பட்டுள்ள 42 ரயில் பாதை இணைப்புகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பான பயணத்திற்கு விருதுநகர் - வாஞ்சி மணியாச்சி பிரிவில் 3 கடவுப் பாதைகள் சுரங்கப் பாதைகளாக மாற்றப்பட்டுள்ளன. சாலை வாகனங்களின் பாதுகாப்பிற்காக சைகை விளக்கு கம்ப கட்டுப்பாட்டிலாத 7  கடவுப் பாதைகள் சைகை விளக்கு கம்ப கட்டுப்பாடுள்ள கடவு பாதைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும் சைகை கம்ப கட்டுப்பாடு இல்லாத 47 கடவுப் பாதைகள் கண்காணிப்பு காமிரா மூலம் ரயில் நிலைய அதிகாரி நேரடி மேற்பார்வைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மனித தவறுகளை தவிர்க்க 12 கடவுப் பாதைகளில் நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.  மின்சார ரயில் இன்ஜின்களை தொய்வில்லாமல் இயக்க தேனி மற்றும் புனலூரில் புதிய மின் உபநிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் நிறைவடைந்த இராமநாதபுரம் - ராமேஸ்வரம் ரயில் பாதை மின்மயமாக்கல் பணிகள் வாயிலாக மதுரை கோட்டம் 100 சதவீத மின்மயக்கோட்டமாக உருவாகி இருக்கிறது. ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள், ரயில் நிலையங்களில் பெற்றோருக்கு தெரியாமல் வந்த 122 சிறுவர்களை மீட்டுள்ளனர். மேலும் பயணிகள் மறந்து விட்டு சென்ற ரூபாய் 1.42 கோடி மதிப்பிலான பொருள்களை கைப்பற்றி உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். பணியில் உயிரிழந்த மற்றும் உடல் நலம் குன்றியே 40 ரயில்வே ஊழியர்களின் வாரிசுகளுக்கு உரிய வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 658 ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 94 ரயில்வே ஓய்வூதியர்களின் குறைகள் களையப்பட்டு சுமார் ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான பண பலன்கள் வழங்கப்பட்டுள்ளன. ஊழியர்களின் நலனுக்காக பல்வேறு ரயில் நிலையங்களில் 104 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. மதுரை ரயில்வே மருத்துவமனையில் பல் நோய்க்கு கதிரியக்க படங்கள் எடுக்க கருவி உட்பட நவீன மருத்துவ உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் மதுரை மருத்துவமனைக்கு பல்வேறு நவீன வசதிகளுடன் புதிய இரண்டு மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. சுகாதார முகாம்கள் வாயிலாக ரயில் நிலையங்களில் 6.47 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன. மண்டல அளவில் சுத்தம் சுகாதாரமாக பேணப்பட்ட ரயில் நிலையத்திற்கான இரண்டாவது சுழற் கேடயத்தை மதுரை ரயில் நிலையம் பெற்றுள்ளது என்றார். இறுதியில் ரயில்வே பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை மோப்ப நாய் சாகச விளையாட்டும் நடைபெற்றது. விழாவில் கூடுதல் கோட்ட  ரயில்வே மேலாளர் எல்.என்.ராவ், முதுநிலை கோட்ட ஊழியர் நல அதிகாரி வி.சுவாமிநாதன், ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் எம்.செஞ்சையாஉட்பட ரயில்வே அதிகாரிகளும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
    user_Theni Godwin
    Theni Godwin
    Journalist தேனி, தேனி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • Post by Pushpa
    4
    Post by Pushpa
    user_Pushpa
    Pushpa
    Tailor Thoothukkudi, Tuticorin•
    14 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.