மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த 2018-ம் ஆண்டு மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த பாலமுருகன் (45/26) என்பவர் தனது மனைவி சாந்தியை கொலை செய்த வழக்கில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி முருகன் இன்று (27.02.2026) பாலமுருகனை குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் மற்றும் இவ்வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ், தற்போதைய காவல் ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் ஆகியோரையும், நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் எல்லம்மாள், வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் கணேசன் ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் பாராட்டினார்.
மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த 2018-ம் ஆண்டு மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த பாலமுருகன் (45/26) என்பவர் தனது மனைவி சாந்தியை கொலை செய்த வழக்கில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி முருகன் இன்று (27.02.2026) பாலமுருகனை குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் மற்றும் இவ்வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ், தற்போதைய காவல் ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் ஆகியோரையும், நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் எல்லம்மாள், வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் கணேசன் ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் பாராட்டினார்.
- தூத்துக்குடியில் பைபாஸ் சாலையில் மறவன் மடம் அருகே பல ஏக்கர் பரப்பளவில் படர்ந்திருந்த முள்செடிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயைச் தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி அணைத்தனர். தூத்துக்குடி மறவன் மடம் அருகே உள்ள காலி நிலங்களில் வளர்ந்திருந்த முள்செடிகள் நேற்று திடீரெனத் தீப்பிடித்து எரியத் தொடங்கின. இது குறித்துச் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாகச் சிப்காட் நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில், ஏட்டு இசக்கி ராஜன், ஓட்டுநர் மணிகண்டன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் முத்து ஜெயக்குமார், சாமுவேல் ஆகியோர் தீயணைப்பு ஊர்தியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வெயிலின் தாக்கம் மற்றும் பலத்த காற்று காரணமாகத் தீ மளமளவெனப் பரவி, பல ஏக்கர் நிலங்களைச் சூழ்ந்தது. தீ எரிந்த பகுதிக்கு அருகிலேயே பெட்ரோல் விற்பனை நிலையம் மற்றும் மர யார்டுகள் இருந்ததால் பெரும் ஆபத்து ஏற்படும் சூழல் உருவானது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த தீயணைப்புத் துறையினர், உடனடியாகத் தனியார் ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்தனர். ஜேசிபி மூலம் எரியாத முள்செடிகளை அப்புறப்படுத்தித் தீ மேலும் பரவாமல் தடுத்தனர். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு காட்டுத்தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களின் இந்தச் சமயோசியமான நடவடிக்கையைப் பொதுமக்களும், வணிக நிறுவன உரிமையாளர்களும் வெகுவாகப் பாராட்டினர். இது குறித்துச் சிப்காட் நிலைய அலுவலர் த. கார்த்திகேயன் பொதுமக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் கூறியிருப்பதாவது: "கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் மற்றும் தனியார் நில உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து தங்கள் பகுதியில் உள்ள காய்ந்த முள்செடிகளை ஜேசிபி மூலம் அகற்ற வேண்டும். இதன் மூலம் தீ விபத்துகளையும், பெரும் பொருள் சேதங்களையும் தவிர்க்கலாம். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், தீயணைப்புத் துறையினரின் மீட்புப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் வேண்டும் எனத் தெரிவித்தார்.1
- *திருச்சுழி அருகே சவ்வாஸ்புரம் கிராமத்தில் கோவில் திருவிழாவில் கையில் வாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த இளைஞர்களை தட்டிக் கேட்ட பஞ்சாலை தொழிலாளி வெட்டி படுகொலை; கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி 3 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டம்* விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சவ்வாஸ்புரம் கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ மாரியம்மன் பங்குனி பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. இந்த திருவிழாவின்போது சவ்வாஸ்புரம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி மற்றும் மாங்குளத்தை சேர்ந்த மாரிக்கண்ணன் என்ற இரு இளைஞர்கள் கஞ்சா போதையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் பெரிய வாளுடன் சுற்றி திரிந்துள்ளனர். இதனைக் கண்ட அதே ஊரைச் சேர்ந்த பஞ்சாலை தொழிலாளியான வேல்முருகன்(33) என்பவர் கோவில் விழா கமிட்டி உறுப்பினராக இருந்ததால் கையில் வாளுடன் சுற்றித்திரிந்த கருப்பசாமி மற்றும் மாரி கண்ணன் இருவரையும் தட்டி கேட்டு சத்தம் போட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் நடந்த இருவரும் உன்னை வெட்டிக் கொள்ளாமல் விடமாட்டோம் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து விழா முடிந்து இன்று அதிகாலை நேரத்தில் ராமலிங்காமில் அருகே உள்ள டீக்கடையில் வேல்முருகன் நண்பர்களுடன் வந்து டீ குடித்துவிட்டு மீண்டும் சவ்வாஸ்புரம் திரும்பி உள்ளார். அப்போது சவ்வாஸ்புரம் தொடக்கக் வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே நடந்து சென்று கொண்டிருக்கும்போது அங்கு இருளில் மறைந்திருந்த கருப்பசாமி மற்றும் மாரிக்கண்ணன் இருவரும் தாங்கள் வைத்திருந்த வாளால் வேல்முருகனை சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வேல்முருகன் நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடி திருச்சுழி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து வேல்முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் வேல்முருகனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் அருப்புக்கோட்டை - சாயல்குடி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சு வார்த்தையை ஏற்காமல் தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்த அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் மாரிமுத்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். திருச்சுழி காவல் நிலைய போலீசார் தலைமறைவாக உள்ள கருப்பசாமி மற்றும் மாரிக்கண்ணனை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை உள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.4
- கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கலங்காத கண்டி பகுதியில் மதிமுக வேட்பாளர் திமு ராஜேந்திரன் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்1
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியின் திமுக வேட்பாளர் ஆ.தமிழரசி ரவிக்குமார் நகரின் பல வார்டுகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். 18, 19, 20, 26, 27 வார்டுகளில் பெண்கள் ஆரத்தி எடுத்து, மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். நகர் செயலாளர் பொன்னுச்சாமி, மானாமதுரை நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி , முன்னாள் கவுன்சிலர் கணேசன்,18வது வார்டு கவுன்சிலர் ராஜேஸ்வரி ராஜேந்திரன்,வார்டு செயலாளர் சங்கமங்கலம் சங்கர்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ‘உதயசூரியன்’ சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அவர், அடிப்படை வசதிகளை மேம்படுத்த உறுதி அளித்தார். ஏப்.23ல் தேர்தல் நடைபெற உள்ளது.1
- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள, புதூரில் கோவிலுக்கு சொந்தமான 14 செண்ட் நிலத்தை பொன்சந்திரன், அசோகன் ஆகியோருக்கு பட்டா போட்டுக் கொடுத்த கிராம நிர்வாக அதிகாரி ராகுல் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக வாக்காளர் அட்டையுடன் ஊர் மக்கள் இன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.1
- திண்டுக்கல் நாடார் உறவின்முறை சங்கத்தின் சார்பாக நடைபெற்ற வாக்கு சேகரிப்பு நிகழ்வில், அதிமுக திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திண்டுக்கல் சி. சீனிவாசனுக்கு சங்கத்தினர் தங்கள் முழு ஆதரவை அளித்தனர். இந்த முக்கிய நிகழ்வில் முன்னாள் மேயர் மருதராஜ் மற்றும் நாடார் உறவின்முறை சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர். இது திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவின் தேர்தல் பணிகளுக்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.1
- 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன் திமுக வேட்பாளர் ஐ பி செந்தில்குமார் பிரச்சாரம் செய்யும் பொழுது பதிலடி கொடுத்துள்ளார். திண்டுக்கல் தொகுதிக்கு நான் என்ன செய்தேன் என திமுக வேட்பாளர் செந்தில்குமார் நேற்று பேசியிருக்கிறார். திண்டுக்கல்லிற்கு மருத்துவ கல்லூரியை கொண்டு வந்துள்ளேன் நான் என்ன பணிகள் செய்தேன் என மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளது கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் வெட்கம், மானம், சூடு, சொரணை, இல்லாத ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. திண்டுக்கல் கோட்டை என சொல்லி வருபவர்கள் வாங்கள் பார்த்து கொள்ளலாம் யார் கோட்டை என்று அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன் பூச்சிநாயக்கன்பட்டி பகுதியில் காரசார பேச்சு.1
- மருதம்புத்தூர் கிராமத்தில் காவல்துறையால் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மணிகண்டன் அவர்களுக்கு நீதி கேட்டு ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் பால்ராச் தலைமையில் ஆலங்குளம் காமராஜர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது ... துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறை அதிகாரி மீது வழக்கு பதியும் வரை ஆர்ப்பாட்டம் தொடரும். என தெரிவித்துள்ளனர்1