Shuru
Apke Nagar Ki App…
வாக்காளர் அட்டையுடன் குமரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள, புதூரில் கோவிலுக்கு சொந்தமான 14 செண்ட் நிலத்தை பொன்சந்திரன், அசோகன் ஆகியோருக்கு பட்டா போட்டுக் கொடுத்த கிராம நிர்வாக அதிகாரி ராகுல் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக வாக்காளர் அட்டையுடன் ஊர் மக்கள் இன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.
Magson jones
வாக்காளர் அட்டையுடன் குமரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள, புதூரில் கோவிலுக்கு சொந்தமான 14 செண்ட் நிலத்தை பொன்சந்திரன், அசோகன் ஆகியோருக்கு பட்டா போட்டுக் கொடுத்த கிராம நிர்வாக அதிகாரி ராகுல் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக வாக்காளர் அட்டையுடன் ஊர் மக்கள் இன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.
More news from தமிழ்நாடு and nearby areas
- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள, புதூரில் கோவிலுக்கு சொந்தமான 14 செண்ட் நிலத்தை பொன்சந்திரன், அசோகன் ஆகியோருக்கு பட்டா போட்டுக் கொடுத்த கிராம நிர்வாக அதிகாரி ராகுல் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக வாக்காளர் அட்டையுடன் ஊர் மக்கள் இன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.1
- தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி பகுதியில் புதிய தார் ரோடு போடும் பணி இன்று நடந்தது1
- Post by தமிழ்நாடுஅரசியல்1
- ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியம், பசுவந்தனை,வடக்கு கைலாசபுரம், தெற்கு கைலாசபுரம்,ஆழிபச்சேரி, வெங்கடாசலபுரம்,பி.துரைச்சாமிபுரம் கீழமுடிமன்,மேலமுடிமன்,கீழமங்கலம், குப்பனாபுரம்,மேலமங்கலம்,கப்பிகுளம், சில்லாங்குளம்,ஓம்சரவணபுரம், ஜம்புலிங்கபுரம்,பரமன்பச்சேரி, குதிரைகுளம்,சிவம்பட்டி,நாகம்பட்டி உள்ளிட்ட ஊர்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நமது வெல்லும் வேட்பாளர்,நமது மண்ணின் மைந்தர் G.V.மார்கண்டேயன் வெற்றி சின்னமாம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த போது.1
- கயத்தாறில் நாண்கு வழிச் சாலையில் நடந்து சென்ற ஜெயினிஷம் பெண்கள் மீது பிக்கப் வேன் மோதியதில் நாண்கு பேர் படுகாயம் அடைந்தனர். இராஜஸ்தான் மாநிலத்தின் இருந்து பாதயாத்திரையாக கன்னியாகுமரிக்கு செல்லுவதற்காக 15பெண்கள் தங்கள் தேவையான பொருட்களை ஒரு வேனில் ஏற்றிக்கொண்டு அதன் பின்னர் நாண்கு இருசக்கர வாகனத்தில் தள்ளிக் கொண்டு நடந்து வந்தனர்.இவர்கள் நேற்று முன்தினம் இரவு கயத்தாறில் ஒரு தனியார் ஆங்கிலப் பள்ளியில் தங்கிவிட்டு அதிகாலை 4.30மணிக்கு மீண்டும் கயத்தாறில் இருந்து புறப்பட்டு சென்றார்.அப்போது நான்கு வழிச்சாலையில் இணையும் இடத்தில் நடந்து சென்ற போது சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு பிக்கப் வேனில் பர்னிச்சேர்களை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்த இராமர் மகன் ராஜேஷ் வயது 21, என்பவர் பிக்கப் வேனை ஒட்டி வந்தார். இவர் தூக்க கிரேக்கத்தில் சாலை ஓரமாக நடந்து சென்றவர்கள் மீதும் அவர்களுக்கு பின்னால் சென்ற வேன் மீது மோதியதில் வேன் சாலை ஒரபள்ளத்தில் கவிழ்ந்தது.இதில் வேனில் இருந்த சொளமியா வயது 62,இரண்டு பேரும், இருசக்கர வாகத்தை தள்ளி நடந்து சென்ற இரண்டு பேரும் படுகாயமடைந்தனர்.இவர்களை கயத்தாறு சுங்கச்சாவடி ஆம்புலன்ஸில் சுங்கச்சாவடி ஊழியர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்அதிகாலை என்பதால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிப்பு பின்னர் கயத்தாறு சப் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்து சரி செய்தனர். மேலும் இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.4
- தூத்துக்குடி அருகே தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் இருந்து தூத்துக்குடி வழியாகப் பசுவந்தனைக்கு இன்று காலை ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தைச் செய்துங்கநல்லூர் அருகே உள்ள வில்லாகுளம் கிராமத்தைச் சேர்ந்த பிச்சையா என்பவரது மகன் மணிமுத்து (55) ஓட்டி வந்தார். நடத்துனராக ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஆவரைகுளம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் பணியாற்றி வந்தார். சுமார் 60-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்து கொண்டிருந்த அந்தப் பேருந்து, இன்று காலை 8:15 மணியளவில் தூத்துக்குடி - திருநெல்வேலி பிரதான சாலையில் உள்ள மறவன்மடம் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாடின்றிச் சென்ற பேருந்து, சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியதோடு, அங்கிருந்த ஒரு பனைமரத்தின் மீதும் மோதியது. அதன்பின்னரும் நிற்காமல் சுமார் 100 அடி தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு, ஒரு கட்டிடத்தின் மீது மோதி நின்றது. இந்தக் கோர விபத்தில், பேருந்து ஓட்டுநர் மணிமுத்து இடிபாடுகளுக்குள் சிக்கி அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பேருந்தில் பயணம் செய்த பயணிகளில் 9 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விபத்திற்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தச் விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- Post by மா.கணேஷ்1
- கடையம் அருகே உள்ள ரவணசமுத்திரத்தில் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது1