பழனியில் ஆதார் திருத்தம் செய்யவேண்டுமானால் ஆர் டி கணக்கு துவக்க கட்டாயம்-பொதுமக்களை அச்சுறுத்தும் தபால் நிலைய அதிகாரிகள்- அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஆதார் திருத்தம் செய்ய தலைமை தபால் நிலையம், பழனி நகராட்சி மற்றும் பழனி தாலுகா அலுவலகம் ஆகிய மூன்று இடங்களில் ஆதார் சேவை மையம் செயல்படுகிறது. ஆதார் திருத்தம் செய்ய இந்த மையங்களில் பொதுமக்கள் அதிகளவில் வருகின்றனர். இந்நிலையில் பழனி தலைமை தபால் நிலையத்தில் ஆதார் திருத்தம் செய்ய டோக்கன் பொறுவதற்காக அதிகாலை முதலே நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருப்பது வழக்கமாகும்.இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆதார் திருத்தம் செய்ய வழங்கப்படும் டோக்கன் எண்ணிக்கையை குறைத்துள்ள தபால் நிலைய அதிகாரிகள் வினோதமான விதிமுறையை துவக்கியுள்ளனர். இதன்படி ஆதார் திருத்தம் செய்ய வரும் பொதுமக்கள் பழனி தபால் நிலையத்தில் 100ரூபாய் கட்டணம் செலுத்தி ஆர் டி கணக்கு துவக்கினால் மட்டுமே ஆதார் திருத்தம் செய்யப்படும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். பழனி தபால் நிலையத்தில் தலைமை அதிகாரியின் புதுவித வியூகத்தால் ஆர்டி கணக்கு அதிகரித்து வருகிறது.எனினும் ஏற்கனவே ஆர் டி கணக்கு வைத்துள்ளவர்கள் ஆதார் திருத்தம் செய்ய வேண்டுமென்றால் மேலும் ஒரு ஆர்டி கணக்கு துவக்க கட்டாயப்படுத்துகின்றனர். ஏற்கனவே உள்ள ஆர்டி கணக்கிற்கே பணம் செலுத்த முடியாத நிலையில் மீண்டும் மீண்டும் ஆர்டி கணக்கு துவக்கப் சொல்வது நியாயமா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அப்பாவி பொதுமக்களின் தேவையை பயன்படுத்தி தபால் நிலைய அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகவும், எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- Post by RAJA news1
- பெரியகுளம் அருள்மிகு பகவதி அம்மன் கோவில் திருவிழா 8 வது நாளான இன்று யாதவர் சமுதாயம் மண்டகப்படி முன்னிட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பெரியகுளம் முக்கிய வீதிகள் ஆன அரண்மனை தெரு தேரடி வீதி மேலரத வீதி சுப்பிரமணியர் சாவடி தெரு உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் இளைஞர்களின் ஆட்டம் மற்றும் மேளதாளத்துடன் சுவாமி வீதி உலா நடைபெற்றது இதில் தெருக்களில் இருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்1
- வேடசந்தூர் பூதிபுரம் ஊராட்சியில் தைலா கவுண்டனூர் சீதப்பட்டி பூதிபுரம் குரும்பபட்டி மகாலட்சுமிபுரம் இந்தப் பகுதிகளில் நிறைய தெரு விளக்குகள் பழுதடைந்து இரவு நேரங்களில் பெண்கள் குழந்தைகள் நடமாட அச்சமடைந்து வந்தனர் இதை மாற்றிக் கொடுக்க ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர் அதன் அடிப்படையில் இன்று அனைத்து தெருவிளக்குகளையும் மாற்றி கொடுத்தனர் இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்1
- தேனியில் உள்ள தேனி அல்லிநகரம் நகராட்சியில் மாதந்திர கூட்டம் நடைபெற்றது,நகராட்சி சேர்மன் ரேணுப்பிரியா பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த நிகழ்வில் துணை சேர்மன், வார்டு கவுன்சிலர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்1
- திண்டுக்கல் மாவட்டம் நாகல்புதூரில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியின் (குட்டவாத்தியார் பள்ளி) 100வது ஆண்டுவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள். மேலும் தற்போது பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.1
- தேனி மாவட்டம் குன்னூர் அருகே அம்மாச்சியாபுரம் வைகை ஆற்றின் நீர் தேக்கத்தின் அடிப்படையில் பல ஏக்கர் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெய்த மழையினால் இந்த பகுதியில் உள்ள நெற்கதிர்கள் அனைத்தும் சாய்ந்து விட்டது இதனால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றன1
- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குமாரம் பகுதியில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் முன்னாள் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கலந்து கொண்டு பேசினார்1
- Post by RAJA news1