logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

காஞ்சிபுரம்: தெலுங்கானா முதல்வரின் மகள் மற்றும் குடும்பத்தினர் வழிபாடு பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மற்றும் காமாட்சி அம்மன் கோவில்களில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் மகள் நைமிஷா மற்றும் அவரது குடும்பத்தினர் வழிபாடு செய்தனர். முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தி வரவேற்பு அளிக்கப்பட்டது. வழிபாட்டிற்கு பிறகு பிரசாதம் வழங்கி கௌரவித்தனர்.

18 hrs ago
user_Naga Rajan
Naga Rajan
Journalist காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
18 hrs ago
de34051a-0ec2-4f02-a60b-77c97b87be6d

காஞ்சிபுரம்: தெலுங்கானா முதல்வரின் மகள் மற்றும் குடும்பத்தினர் வழிபாடு பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மற்றும் காமாட்சி அம்மன் கோவில்களில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் மகள் நைமிஷா மற்றும் அவரது குடும்பத்தினர் வழிபாடு செய்தனர். முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தி வரவேற்பு அளிக்கப்பட்டது. வழிபாட்டிற்கு பிறகு பிரசாதம் வழங்கி கௌரவித்தனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • ஸ்ரீபெரும்புதூர். வெங்காடு ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வெங்காடு ஊராட்சியில் அடங்கிய வெங்காடு மற்றும் இரும்பேடு நியாய விலை கடைகளில் தமிழ்நாடு அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.3000 ரொக்கம் ஆகியவைகளை வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஸ்ரீபெரும்புதூர் கூட்டுறவு வங்கி தலைவரும், முன்னாள் வெங்காடு ஊராட்சி மன்ற தலைவரும்,ஏரி நீர் பாசன சங்கத் தலைவருமான வெங்காடு பி.உலகநாதன் கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்திரன்,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அஸ்வினி வினோத் எத்திராஜன் முருகன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கௌரி ராதாகிருஷ்ணன்,கிராம நாட்டான்மைதாரர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
    1
    ஸ்ரீபெரும்புதூர்.
வெங்காடு ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வெங்காடு ஊராட்சியில் அடங்கிய வெங்காடு மற்றும் இரும்பேடு நியாய விலை கடைகளில் தமிழ்நாடு அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.3000 ரொக்கம் ஆகியவைகளை வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஸ்ரீபெரும்புதூர் கூட்டுறவு வங்கி தலைவரும், முன்னாள் வெங்காடு ஊராட்சி மன்ற தலைவரும்,ஏரி நீர் பாசன சங்கத் தலைவருமான வெங்காடு பி.உலகநாதன் கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்திரன்,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அஸ்வினி வினோத் எத்திராஜன் முருகன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கௌரி ராதாகிருஷ்ணன்,கிராம நாட்டான்மைதாரர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
    user_KANCHI NEWS PLUS
    KANCHI NEWS PLUS
    காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    18 hrs ago
  • காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள கோவிலில் உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் சசிகுமார் ஏற்பாட்டில் உத்திரமேரூர் பேரூர் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் கோலப்போட்டி நடைபெற்றது . இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பலவிதமான கோலங்கள் வரைந்து காட்டினர் . கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் பரிசுகளை வழங்கினார்.
    1
    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள கோவிலில் உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் சசிகுமார் ஏற்பாட்டில் உத்திரமேரூர் பேரூர் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் கோலப்போட்டி நடைபெற்றது . இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பலவிதமான கோலங்கள் வரைந்து காட்டினர் . கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் பரிசுகளை வழங்கினார்.
    user_Naga Rajan
    Naga Rajan
    Journalist காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    18 hrs ago
  • 05/01/26 பதினெட்டாம் படியில் பக்தர் கோடி பரவசம் #news
    1
    05/01/26 
பதினெட்டாம் படியில் பக்தர் கோடி பரவசம் 
#news
    user_Naveen Kumar s
    Naveen Kumar s
    Journalist Avadi, Thiruvallur•
    21 hrs ago
  • திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி சிலையை தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். திமுக சாா்பில், வந்தவாசியை அடுத்த எரமலூா் கிராமத்தில் பளிங்கு கல்லால் ஆன முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 3 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் மருத்துவரணி மாநில துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.அம்பேத்குமாா், ஒ.ஜோதி, மு.பெ.கிரி, வந்தவாசி நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், நகரச் செயலா் எ.தயாளன், ஒன்றியச் செயலா்கள் டி.டி.ராதா, ப.இளங்கோவன், சி.ஆா்.பெருமாள், கே.ஆா்.பழனி, எ.சுந்தரேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா் #TamilNadu #chiefminister #DMK #minister #e.v.Velu #vandavasi #Tiruvannamalai #public #arumalur
    1
    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி சிலையை தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
திமுக சாா்பில், வந்தவாசியை அடுத்த எரமலூா் கிராமத்தில் பளிங்கு கல்லால் ஆன முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 3 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையை தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் மருத்துவரணி மாநில துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.அம்பேத்குமாா், ஒ.ஜோதி, மு.பெ.கிரி, வந்தவாசி நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், நகரச் செயலா் எ.தயாளன், ஒன்றியச் செயலா்கள் டி.டி.ராதா, ப.இளங்கோவன், சி.ஆா்.பெருமாள், கே.ஆா்.பழனி, எ.சுந்தரேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்
#TamilNadu #chiefminister #DMK #minister #e.v.Velu #vandavasi #Tiruvannamalai #public #arumalur
    user_Agarva manickam
    Agarva manickam
    தண்டராம்பேட்டை, திருவண்ணாமலை, தமிழ்நாடு•
    1 hr ago
  • Post by சந்திரசேகர். D
    1
    Post by சந்திரசேகர். D
    user_சந்திரசேகர். D
    சந்திரசேகர். D
    Tharasu reporter வேப்பூர், கடலூர், தமிழ்நாடு•
    23 hrs ago
  • கிருஷ்ணகிரி,  எழும்பி பிரகாசி மிஷனரி பேராயம் மற்றும் நியு ஆங்கிலிக்கன் சினாட் அமைப்பின் தந்தை பேராயர் ஜெயசிங் செய்தியாளர்களிடம் சந்திப்பு.
    1
    கிருஷ்ணகிரி, 
எழும்பி பிரகாசி மிஷனரி பேராயம் மற்றும் நியு ஆங்கிலிக்கன் சினாட் அமைப்பின் தந்தை பேராயர் ஜெயசிங் செய்தியாளர்களிடம் சந்திப்பு.
    user_FAYAZ
    FAYAZ
    Krishnagiri, Tamil Nadu•
    2 hrs ago
  • ஊத்தங்கரை அருகே வீட்டுமனை பட்டா கிராம கணக்கில் பதிவேற்றம் செய்யாததை கண்டித்து காத்திருப்பு போராட்டம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாலமரத்துப்பட்டி தரப்பு ஓலைப்பட்டி கூட்ரோட்டில் சுமார் 65க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கடந்த 2012மே ஆண்டு வீட்டு மனை பட்டா வழங்கியும் அதனை கிராம அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்யாததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களுக்கு பட்டா வழங்கியும் இதுவரையிலும் தமிழக அரசு அதனை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கூறி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், ஊத்தங்கரை வருவாய் வட்டாட்சியர், மற்றும் வருவாய் ஜமாபதி முகம், உங்களுடன் ஸ்டாலின், உங்களுடன் முதல்வர் உள்ளிட்ட திட்டங்களில் நேரடியாக பொதுமக்கள் பல்வேறு மனுக்களை கொடுத்தும் இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் ஆளும் திமுக அரசு எடுக்கவில்லை. பட்டா வைத்துள்ள வீடுகளையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி இடித்து அகற்றும் வேலையிலும் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனை கண்டித்து இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுமக்கள் ஒன்று திரண்டு உடனடியாக தமிழக அரசால் வழங்கப்பட்ட அனைத்து பட்டாக்களையும் கிராம கணக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கூறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வருவாய்த்துறையினர் வீடுகளை இடித்து அகற்றப்பட்ட இடத்தில் வேலி அமைத்துள்ளனர், அந்த வேலியை அத்துமீறி உடைத்து அந்த பகுதி மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்றும் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர் எனவே தமிழக அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பட்டாவினை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    ஊத்தங்கரை அருகே வீட்டுமனை பட்டா கிராம கணக்கில் பதிவேற்றம் செய்யாததை கண்டித்து காத்திருப்பு போராட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாலமரத்துப்பட்டி தரப்பு ஓலைப்பட்டி கூட்ரோட்டில் சுமார் 65க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கடந்த 2012மே ஆண்டு வீட்டு மனை பட்டா வழங்கியும் அதனை கிராம அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்யாததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்
ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களுக்கு பட்டா வழங்கியும் இதுவரையிலும் தமிழக அரசு அதனை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கூறி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், ஊத்தங்கரை வருவாய் வட்டாட்சியர், மற்றும் வருவாய் ஜமாபதி முகம், உங்களுடன் ஸ்டாலின், உங்களுடன் முதல்வர் உள்ளிட்ட திட்டங்களில் நேரடியாக பொதுமக்கள் பல்வேறு மனுக்களை கொடுத்தும் இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் ஆளும் திமுக அரசு எடுக்கவில்லை.
பட்டா வைத்துள்ள வீடுகளையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி இடித்து அகற்றும் வேலையிலும் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனை கண்டித்து இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுமக்கள் ஒன்று திரண்டு உடனடியாக தமிழக அரசால் வழங்கப்பட்ட அனைத்து பட்டாக்களையும் கிராம கணக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கூறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வருவாய்த்துறையினர் வீடுகளை இடித்து அகற்றப்பட்ட இடத்தில் வேலி அமைத்துள்ளனர், அந்த வேலியை அத்துமீறி உடைத்து அந்த பகுதி மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்றும்
தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்
எனவே தமிழக அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பட்டாவினை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Arunkumar k
    Arunkumar k
    Journalist கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா 09.01.2026 மதியம் 3 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் 235 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் விஜயன் தலைமை வகித்தார். பர்கூர் எம்எல்ஏ மதியழகன் 235 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொருளாளர் கதிரவன். மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ். மாவட்ட துணைச் செயலாளர் சந்திரன். மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் காந்தி,ஒன்றிய செயலாளர்கள் எக்கூர் செல்வம் குமரேசன் ரஜினி செல்வம்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    1
    ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா 
09.01.2026 மதியம் 3 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் 235 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி  வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் விஜயன் தலைமை வகித்தார்.
பர்கூர் எம்எல்ஏ மதியழகன் 235 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொருளாளர் கதிரவன். மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ். மாவட்ட துணைச் செயலாளர் சந்திரன். மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் காந்தி,ஒன்றிய செயலாளர்கள் எக்கூர் செல்வம் குமரேசன் ரஜினி செல்வம்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    user_Arunkumar k
    Arunkumar k
    Journalist கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.