logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தென்னாங்கூர் அரசு கலை கல்லூரியில் உலக மகளிர் தின விழா! திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தின விழா கல்லூரி முதல்வர் முனைவர் சித.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. முனைவர் ர. மணிமுருகன் வரவேற்புரையாற்றினார். முதல்வர் தனது உரையில், “பெண்கள் கல்வி, அறிவு, தன்னம்பிக்கை ஆகியவற்றின் மூலம் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைந்து வருகின்றனர். குடும்பம், கல்வி, அறிவியல், அரசியல், விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் பங்களிப்பு செய்து வருகின்றனர்” என குறிப்பிட்டார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வந்தவாசி சார்பு நீதிபதி சரண்யா பேசுகையில்: "பெண்கள் குடும்பத்தின் முதுகெலும்பாக மட்டுமல்லாமல், சமூக முன்னேற்றத்தின் முக்கிய சக்தியாகவும் விளங்குகின்றனர். கல்வி, அறிவியல், நீதித்துறை, அரசியல், விளையாட்டு, கலை மற்றும் பல துறைகளில் பெண்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி உலக அளவில் சாதனை படைத்து வருகின்றனர். பெண்கள் தங்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வுடன் இருந்து, சட்டம் வழங்கும் பாதுகாப்புகளை அறிந்து கொள்ள வேண்டும். பெண்களுக்கு எதிரான அநீதிகளை தடுக்கும் விதமாக பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றை அறிந்து கொண்டு தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும்" என கூறினார். முனைவர் ஏ. ரேவதி,டாக்டர் ரா. ராதிகா டில்லிபாபு, முனைவர் நா. மனோகரன், முனைவர் வ. சந்திரசேகர், முனைவர் ப. மோகனவள்ளி, முனைவர் இரா. பெரியசாமி, முனைவர் ஏ. எழில்வசந்தன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். தா.சுகந்தி தொகுப்புரை வழங்கினார். ரா.சுமதி நன்றியுரை யாற்றினார். கல்லூரி நிதியாளர் கவிதா மற்றும் அனைத்து ஆசிரியர்களும், அலுவலக பணியாளர்களும், மாணவ மாணவிகளும் கலந்து கொண்டார்கள்.

22 hrs ago
user_A.Shahulhameed
A.Shahulhameed
Thiruvannamalai, Tamil Nadu•
22 hrs ago
0a98313c-0b57-4010-a332-0ac8476570b2

தென்னாங்கூர் அரசு கலை கல்லூரியில் உலக மகளிர் தின விழா! திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தின விழா கல்லூரி முதல்வர் முனைவர் சித.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. முனைவர் ர. மணிமுருகன் வரவேற்புரையாற்றினார். முதல்வர் தனது உரையில், “பெண்கள் கல்வி, அறிவு, தன்னம்பிக்கை ஆகியவற்றின் மூலம் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைந்து வருகின்றனர். குடும்பம், கல்வி, அறிவியல், அரசியல், விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் பங்களிப்பு செய்து வருகின்றனர்” என குறிப்பிட்டார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வந்தவாசி சார்பு நீதிபதி சரண்யா பேசுகையில்: "பெண்கள் குடும்பத்தின் முதுகெலும்பாக மட்டுமல்லாமல், சமூக முன்னேற்றத்தின் முக்கிய சக்தியாகவும் விளங்குகின்றனர். கல்வி, அறிவியல், நீதித்துறை, அரசியல், விளையாட்டு, கலை மற்றும் பல துறைகளில் பெண்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி உலக அளவில் சாதனை படைத்து வருகின்றனர். பெண்கள் தங்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வுடன் இருந்து, சட்டம் வழங்கும் பாதுகாப்புகளை அறிந்து கொள்ள வேண்டும். பெண்களுக்கு எதிரான அநீதிகளை தடுக்கும் விதமாக பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றை அறிந்து கொண்டு தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும்" என கூறினார். முனைவர் ஏ. ரேவதி,டாக்டர் ரா. ராதிகா டில்லிபாபு, முனைவர் நா. மனோகரன், முனைவர் வ. சந்திரசேகர், முனைவர் ப. மோகனவள்ளி, முனைவர் இரா. பெரியசாமி, முனைவர் ஏ. எழில்வசந்தன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். தா.சுகந்தி தொகுப்புரை வழங்கினார். ரா.சுமதி நன்றியுரை யாற்றினார். கல்லூரி நிதியாளர் கவிதா மற்றும் அனைத்து ஆசிரியர்களும், அலுவலக பணியாளர்களும், மாணவ மாணவிகளும் கலந்து கொண்டார்கள்.

More news from Tamil Nadu and nearby areas
  • திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் வசிப்பவர் மோகன்தாஸ் இவரது மனைவி ரஞ்சிதா இவர்களது மகன் ரித்தீஷ் திருப்பத்தூர் நகராட்சிக்கு அருகாமையில் உள்ள அரசு நிதி உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இவர் அதே பள்ளியில் உதவி மாணவத் தலைவராகவும் (ASPL) இருந்து உள்ளார் இந்நிலையில் பள்ளி விடுமுறை நாள் என்பதால் ரித்தீஷ் தன்னுடைய சக மாணவர்களுடன் வெளியே சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டு மீண்டும் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது யாரும் வீட்டில் இல்லாத நிலையில் பள்ளி மாணவன் ரித்தீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்த குடும்பத்தார் கத்தி கூச்சலிட்டு ரித்தீஷின் சடலத்தை மீட்டு உள்ளனர். பின்பு தகவல் அறிந்த திருப்பத்தூர் கிராமிய காவல்துறை ரித்தீஷின் சடலத்தை உடற்கூறு ஆய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சந்தேகப்படும்படியான காரணங்கள் ஏதேனும் உள்ளதா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    1
    திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் வசிப்பவர் மோகன்தாஸ் இவரது மனைவி ரஞ்சிதா இவர்களது மகன் ரித்தீஷ் திருப்பத்தூர் நகராட்சிக்கு அருகாமையில் உள்ள அரசு நிதி உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இவர் அதே பள்ளியில் உதவி மாணவத் தலைவராகவும் (ASPL) இருந்து உள்ளார்
இந்நிலையில் பள்ளி விடுமுறை நாள் என்பதால் ரித்தீஷ் தன்னுடைய சக மாணவர்களுடன் வெளியே சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டு மீண்டும் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது யாரும் வீட்டில் இல்லாத நிலையில் பள்ளி மாணவன் ரித்தீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்த குடும்பத்தார் கத்தி கூச்சலிட்டு ரித்தீஷின் சடலத்தை மீட்டு உள்ளனர். 
பின்பு தகவல் அறிந்த திருப்பத்தூர் கிராமிய காவல்துறை ரித்தீஷின் சடலத்தை உடற்கூறு ஆய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சந்தேகப்படும்படியான காரணங்கள் ஏதேனும் உள்ளதா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    user_Suji
    Suji
    Tirupathur, Tamil Nadu•
    2 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக அளித்தனர். மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் வீட்டு வசதி இல்லாத ஏழை மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கு அரசு வீடு வழங்க வேண்டும், நீண்ட காலமாக வசித்து வரும் இடங்களுக்கு நில பட்டா வழங்க வேண்டும், குடிநீர் வசதி, சாலை வசதி, முதியோர் ஓய்வூதியம், குடும்ப அட்டை தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். இந்த மனுக்களை பெற்றனர் அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் உடனடியாக அனுப்பி வைத்து, மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைகளை ஆய்வு செய்து விரைவாக தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது தகுந்த விசாரணை நடத்தி, சட்டப்பூர்வமாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இந்த மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் பல்வேறு துறைகளின் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    1
    திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக அளித்தனர்.
மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் வீட்டு வசதி இல்லாத ஏழை மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கு அரசு வீடு வழங்க வேண்டும், நீண்ட காலமாக வசித்து வரும் இடங்களுக்கு நில பட்டா வழங்க வேண்டும், குடிநீர் வசதி, சாலை வசதி, முதியோர் ஓய்வூதியம், குடும்ப அட்டை தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.
இந்த மனுக்களை பெற்றனர் அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் உடனடியாக அனுப்பி வைத்து, மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைகளை ஆய்வு செய்து விரைவாக தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது தகுந்த விசாரணை நடத்தி, சட்டப்பூர்வமாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  தெரிவித்தார்.
இந்த மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் பல்வேறு துறைகளின் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    user_Suresh S
    Suresh S
    Local News Reporter திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    22 hrs ago
  • Post by Vinayagam Vinayagam
    1
    Post by Vinayagam Vinayagam
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    9 hrs ago
  • கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்ட அரங்கில் தேன்கனிகோட்டைவட்டம், குந்து மாரணப்பள்ளி கிராமத்தில் பட்டியலிமைக்கள் பல வருடங்களாக சொந்தமாக வீட்டுமனை வீடு இல்லாமல் இருக்கின்றர்க் வீட்டுமனை வழங்க கோரி அரசுக்குமனு அளித்தும் இதுவரை அரசு நேரில் விசாரிக்க கூட வர வில்லை அதனால் இன்று மாவட்ட ஆட்சியரிடம் வீட்டு மனையும்,கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டி தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
    1
    கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்ட அரங்கில் தேன்கனிகோட்டைவட்டம், குந்து மாரணப்பள்ளி கிராமத்தில் பட்டியலிமைக்கள் பல வருடங்களாக சொந்தமாக வீட்டுமனை வீடு இல்லாமல் இருக்கின்றர்க் வீட்டுமனை வழங்க கோரி அரசுக்குமனு அளித்தும் இதுவரை அரசு நேரில் விசாரிக்க கூட வர வில்லை அதனால் இன்று மாவட்ட ஆட்சியரிடம் வீட்டு மனையும்,கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டி தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    18 hrs ago
  • *அரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமையில் இடதுசாரி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்.* ஈரான் மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டு நாடுகளின் ஏகாதிபத்திய தாக்குதலை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் இடதுசாரி அமைப்புகள் இன்று தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அமெரிக்காவின் இந்த அநீதியான தாக்குதல் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும், ஈரானின் மீறிய உரிமைகளை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரி, அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கூடிய 100-க்கும் மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் சிசுபாலன் இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பிற அமைப்புகள் பங்கேற்றனர்.
    1
    *அரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி  தலைமையில் இடதுசாரி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்.*
ஈரான் மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டு நாடுகளின் ஏகாதிபத்திய தாக்குதலை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் இடதுசாரி அமைப்புகள் இன்று தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அமெரிக்காவின் இந்த அநீதியான தாக்குதல் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும், 
ஈரானின் மீறிய உரிமைகளை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரி, அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கூடிய 100-க்கும் மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். 
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர்  சிசுபாலன்
இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பிற அமைப்புகள் பங்கேற்றனர்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    1 hr ago
  • Post by Kuppusamy
    4
    Post by Kuppusamy
    user_Kuppusamy
    Kuppusamy
    Cheyyur, Chengalpattu•
    3 hrs ago
  • தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மொரப்பூர் காப்புகாடு, மலையயூர் காப்புக்  காட்டிலிருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி அவ்வப்போது காட்டுயாணைகள் ஊருக்குள் புகுந்து  விசாயநிலங்களை சேதப்படுத்தி வந்த நிலையில் இன்று விடியற்காலை பாலக்கோடு அருகே உள்ள  கம்மாளப்பட்டி ஊருக்குள் இரண்டு காட்டுயானைகள் புகுந்து வீதி வீதியாக உணவு மற்றும் தண்ணீர் தேடி  செல்லும் சி.சி.டி.வி  காட்சிகள்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யாணை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். தற்போது பாலக்கோடு சுற்றுவட்டார வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் காட்டு யாணைகள் விவசாய நிலத்தில் உள்ள ராகி, கம்பு, சோளம், கரும்பு, நெல் உள்ளிட்டவைகளை உண்ண வனத்தை விட்டு வெளியே வருகிறது. ஒன்றன் பின் ஒன்றாக ஊருக்குள் நுழைந்து வரும்  காட்டு யானைகளால்  மக்கள் வெளியே நடமாட அச்சமடைந்து வருகின்றனர். வன பகுதிகளில் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் அமைத்து பராமரித்தால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருவது தவிர்க்கப்படும் என விலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
    1
    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மொரப்பூர் காப்புகாடு, மலையயூர் காப்புக்  காட்டிலிருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி அவ்வப்போது காட்டுயாணைகள் ஊருக்குள் புகுந்து  விசாயநிலங்களை சேதப்படுத்தி வந்த நிலையில் இன்று விடியற்காலை பாலக்கோடு அருகே உள்ள  கம்மாளப்பட்டி ஊருக்குள் இரண்டு காட்டுயானைகள் புகுந்து வீதி வீதியாக உணவு மற்றும் தண்ணீர் தேடி  செல்லும் சி.சி.டி.வி  காட்சிகள்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யாணை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
தற்போது பாலக்கோடு சுற்றுவட்டார வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் காட்டு யாணைகள் விவசாய நிலத்தில் உள்ள ராகி, கம்பு, சோளம், கரும்பு, நெல் உள்ளிட்டவைகளை உண்ண வனத்தை விட்டு வெளியே வருகிறது. ஒன்றன் பின் ஒன்றாக ஊருக்குள் நுழைந்து வரும்  காட்டு யானைகளால்  மக்கள் வெளியே நடமாட அச்சமடைந்து வருகின்றனர்.
வன பகுதிகளில் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் அமைத்து பராமரித்தால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருவது தவிர்க்கப்படும் என விலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
    user_Periyasamy
    Periyasamy
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • பஞ்சாயத்தில் முறைகேடு உள்ளதாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தால் என்னை கேட்காதீர்கள் பஞ்சாயத்தில் கேளுங்கள் என அலட்சியமாக அதிகாரி பொதுமக்களிடம் பதில் அளித்ததால் வாக்குவாதம். திரும்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் காக்கங்கரை கிராம பஞ்சாயத்தின் முறைகேடு குறித்து பதில் அறிக்கையில் பழைய பொருட்களின் இருப்பு அறையில் பாதுகாப்பாக உள்ளது என்று பதிவேடு சரியாக பராமரிக்கப்படுகிறது என்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடு இல்லை என்றும் கழிவு நீர் கால்வாய் சரியான அளவிற்கு போடப்படுகிறது என்றும் சுந்தரம் பள்ளி தூய்மை பாரத் இந்தியா திட்டத்தின் கீழ் விற்பனை செய்ததில் முறைகேடு இல்லை என்றும் பதில் அளிக்கப்பட்டுள்ளது. மிகுந்த வேதனையும் வருத்தத்தையும் அளிக்கின்றது மாவட்ட ஆட்சியர் தனிக்கவனம் செலுத்தி நேரடியாக கள ஆய்வு செய்ய வேண்டும் என சுரேஷ்குமார் அளித்த மானுவில் தெரிவித்து இருந்தார்.
    1
    பஞ்சாயத்தில் முறைகேடு உள்ளதாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தால் என்னை  கேட்காதீர்கள் பஞ்சாயத்தில் கேளுங்கள் என அலட்சியமாக  அதிகாரி பொதுமக்களிடம் பதில் அளித்ததால் வாக்குவாதம். 
திரும்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் காக்கங்கரை கிராம பஞ்சாயத்தின் முறைகேடு குறித்து பதில் அறிக்கையில் பழைய பொருட்களின் இருப்பு அறையில் பாதுகாப்பாக உள்ளது என்று பதிவேடு சரியாக பராமரிக்கப்படுகிறது என்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடு இல்லை என்றும் கழிவு நீர் கால்வாய் சரியான அளவிற்கு போடப்படுகிறது என்றும் சுந்தரம் பள்ளி தூய்மை பாரத் இந்தியா திட்டத்தின் கீழ் விற்பனை செய்ததில் முறைகேடு இல்லை என்றும் பதில் அளிக்கப்பட்டுள்ளது. மிகுந்த வேதனையும் வருத்தத்தையும் அளிக்கின்றது மாவட்ட ஆட்சியர் தனிக்கவனம் செலுத்தி நேரடியாக கள ஆய்வு செய்ய வேண்டும் என சுரேஷ்குமார் அளித்த மானுவில் தெரிவித்து இருந்தார்.
    user_Suji
    Suji
    Tirupathur, Tamil Nadu•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.