கடந்த முறை அளித்த தேர்தல் வாக்குறுதியை மட்டுமல்ல, சொல்லாத பல்வேறு திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். ஆதலால் இந்த தேர்தலில் ஸ்டாலின் அவர் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளுக்கு நன்மதிப்பு உண்டு. அதிமுக சார்பில் பழனிச்சாமி அறிவித்துள்ள வாக்குறுதிகள் செல்லாத காசு. திருப்பத்தூரில் அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் பேட்டி சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன், தேர்தல் பரப்புரை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தபோது, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என தளபதி கடுமையான கட்டளை இட்டு உள்ளார். ஆதலால், கடந்த முறை வெற்றி வாய்ப்பை இழந்த சிவகங்கை தொகுதியும் சேர்த்து நான்கு தொகுதிகளிலும் உறுதியாக வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து, கடந்த முறை அளித்த தேர்தல் வாக்குறுதியை மட்டுமல்ல, சொல்லாத பல்வேறு திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். ஆதலால் இந்த தேர்தலில் ஸ்டாலின் அவர் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளுக்கு நன்மதிப்பு உண்டு. அதிமுக சார்பில் பழனிச்சாமி அறிவித்துள்ள வாக்குறுதிகள் செல்லாத காசு என்று அமைச்சர் பெரியகருப்பன் விமர்சனம் செய்தார்.
கடந்த முறை அளித்த தேர்தல் வாக்குறுதியை மட்டுமல்ல, சொல்லாத பல்வேறு திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். ஆதலால் இந்த தேர்தலில் ஸ்டாலின் அவர் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளுக்கு நன்மதிப்பு உண்டு. அதிமுக சார்பில் பழனிச்சாமி அறிவித்துள்ள வாக்குறுதிகள் செல்லாத காசு. திருப்பத்தூரில் அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் பேட்டி சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன், தேர்தல் பரப்புரை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தபோது, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என தளபதி கடுமையான கட்டளை இட்டு உள்ளார். ஆதலால், கடந்த முறை வெற்றி வாய்ப்பை இழந்த சிவகங்கை தொகுதியும் சேர்த்து நான்கு தொகுதிகளிலும் உறுதியாக வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து, கடந்த முறை அளித்த தேர்தல் வாக்குறுதியை மட்டுமல்ல, சொல்லாத பல்வேறு திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். ஆதலால் இந்த தேர்தலில் ஸ்டாலின் அவர் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளுக்கு நன்மதிப்பு உண்டு. அதிமுக சார்பில் பழனிச்சாமி அறிவித்துள்ள வாக்குறுதிகள் செல்லாத காசு என்று அமைச்சர் பெரியகருப்பன் விமர்சனம் செய்தார்.
- சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் திமுக கூட்டணி சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகரும், சிவகங்கை தொகுதி திமுக வேட்பாளருமான கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தபோது, சிவகங்கை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தது திமுக தலைமை தான். அவர்கள் எந்த முடிவு எடுத்திருந்தாலும் இந்த தேர்தலை சந்தித்து இருப்பேன். இரட்டை இலை சின்னத்தில் அம்மாவிற்கு வாக்களித்து தான் மக்கள் வெற்றியடைய செய்தனர். அது எடப்பாடி பழனிச்சாமிக்கான வாக்கு அல்ல என்றவர், எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு எனது சமூகத்தை புறக்கணித்தார். ops, TTV , சின்னம்மாவை அடையாளம் அற்றவர்களாக மாற்றும் முயற்சியில் ஈபிஎஸ் ஈடுபட்டார். ஆதலால் எடப்பாடியின் மக்கள் விரோத போக்கை கண்டித்து அதிமுகவிலிருந்து வெளியேறினோம். எடப்பாடியிடம் இருக்கும் இரட்டை இலைகள் ஒரு இலை செத்துவிட்டது. அதுவும் பிஜிபி யிடம் போய்விட்டது. எனது மகன் கென் கருணாசுக்கும் அரசியலுக்கும் சம்மந்தம் கிடையாது. எனக்காக அவர் பிரச்சாரம் செய்து நான் வெற்றி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை . நான் 5 ஆண்டு காலம் முதல்வர் ஸ்டாலின் செய்த சாதனைகளை, திட்டங்களையும், தற்போது அறிவித்துள்ள வாக்குறுதிகளையும் கூறி பிரச்சாரம் செய்வேன். முதல்வரின் இல்லத்தரசி என்ற ஒரு திட்டம் போதும் நான் வெற்றி பெறுவதற்கு என்றார். அரசியல் சூழ்ச்சி காரணமாக, எடப்பாடி என் மீது பொய்யாக வழக்குகள் போட்டு என்னை ரவுடிகள் போல சித்தரித்து விட்டார். உண்மையில் அவர் தான் ரவுடி என கருணாஸ் தொவித்தார்.1
- 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை இணைந்துள்ளதாக அதன் தலைவர் கருணாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருப்பதாக தெரிவித்தார். தங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும் தெரிவித்தார். மேலும், திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் கூட்டணிக்கு பெரிய வெற்றியைத் தரும்1
- விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள அச்சம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ முத்தாலம்மன் மற்றும் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி கோவிலில் பங்குனி பொங்கல் உற்சவம் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காரியாபட்டி தெற்காற்றுப் பகுதிகளில் இருந்து வந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் பால்குடம் எடுத்தும், பக்தர்கள் பறவை காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். இந்த ஊர்வலம் ஐயப்பன் கோவில், பஜார், பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்களுடன் நடைபெற்றது. பின்னர், முத்தாலம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணியசாமிக்கு பாலாபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். முக்கிய நிகழ்வாக, நாளை இரவு பாரம்பரிய முறையில் புஷ்ப பல்லாக்கில் முத்தாலம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் வழங்க உள்ளார்.1
- மதுரை கிழக்கு தொகுதியின் தவெக கட்சியின் வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்ட கார்த்திகேயன் என்பவர் இன்று ( மார்ச் .30) விமான மூலம் சென்னையில் இருந்து மதுரை வந்தடைந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர் பேசும் போது 30 ஆண்டுகளாக திமுகவில் கொடுத்த அத்தனை பணிகளை சிறப்புடன் செய்து வந்தேன். எங்களை எல்லாம் வளர்த்து ஆளாக்கிய அண்ணன் அஞ்சாநெஞ்சன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.1
- குடுமியான்மலை அகிலாண்டேஸ்வாரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலையில் 7-ம் நூற்றாண்டை சேர்ந்த பிரசித்தி பெற்ற குடவரைக்கோவிலான அகிலாண்டேஸ்வாரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவிலில் இந்த ஆண்டுக்காண பங்குனி உத்திரம் திருவிழா கடந்த 23-.ந்தேதி தொடங்கியது. அதனைதொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு நாளும் மண்டகபடி தாரர்கள் சார்பில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சிகாகிரீஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்பாளை, தேரில் எழுந்தருள செய்தனர். இதையடுத்து குதிரை ஆட்டம், மேளதாளம் முழங்க திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக அசைந்தாடி வந்தது ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் கூடி நின்று தேங்காய், பூ, பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் தேர் நிலையை வந்தடைந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் குடுமியான்மலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு நீர்மோர், பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்எல்ஏ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை இலுப்பூர் துணை கண்காணிப்பாளர் திவ்யா தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.1
- ஆத்தூர் தொகுதியில் 1 லட்சத்து 30 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று நத்தம் விஸ்வநாதன் காலடியில் சமர்ப்பிப்போம் என அதிமுக வேட்பாளர் விஸ்வநாதன் சூளுரை1
- திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழக முதலமைச்சருமான அவர்கள் இன்று நடைப்பயிற்சியின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். முக்கிய நிகழ்வுகள்: திருச்சி கிழக்குத் தொகுதி வேட்பாளர் முனைவர் இனிகோ இருதயராஜ் மற்றும் திருச்சியில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் அவர்கள் காந்திமார்கட் பகுதியில் தீவிரமாக வாக்குச் சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகளைப் பாதுகாக்கக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு மக்கள் பெருவாரியான வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வின் போது முதலமைச்சருடன்: திருச்சி மேற்குத் தொகுதி வேட்பாளர் அமைச்சர் கே.என்.நேரு * திருவெறும்பூர் சட்டமன்ற வேட்பாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் உள்ளிட்ட கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும், கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகளும் உடன் இருந்தனர். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு காந்தி மார்க்கெட் பகுதியில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் கூடினர்.1
- சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் திமுக கூட்டணி கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் மருது அழகுராஜ் செய்தியாளர்களை சந்தித்த போது, தற்போது அண்ணா திமுக என்பது கிடையாது. அண்ணா தொடங்கிய திமுக மட்டும் தான் உள்ளது. அதற்கு நானும் சாட்சி என்றார். எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை அழித்து, அமிர்ஷா என்ற சேட்டுக்கடையில் அடகு வைத்து விட்டார். அவரை முதலமைச்சர் பட்டியலில் சேர்க்க கூடாது என்றவர், அவர் தேர்ந்து எடுக்கப்பட்ட தலைவர் அல்ல தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்ட வரும் அல்ல கூவத்தூரில் டெண்டரால் தலைவர் ஆனார் என்றார். அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களுக்கு அன்பு சரணாலயமாக திமுக அறிவாலயம் விளங்குகிறது என்ற மருது அழகுராஜ், அண்ணா திமுக, அமிர்ஷா திமுகவாக மாறிவிட்டதால் இன்னும் பலர் அதிமுகவில் இருந்து வெளியேறுவார்கள் என்றார். மேலும், தற்போது நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தல், ஆரியர்களுக்கும், திராவிடருக்கும் நடக்கும் யுத்தம். IPL மேட்ச் போல டெல்லி டேர்டெவில் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் நடைபெறும் போட்டி. இதில் தமிழர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் வாக்களிப்பார்கள் என மருது அழகுராஜ் தெரிவித்தார்.1