logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

Looking to Buy Requirement : காய்கறிகள் Quantity : பத்து மூட்டைகள் Budget : ₹5,000 City / Locality : பகுதி Farming Sector : Fruits & Vegetables ஹோல் சேல் ரேட்

13 hrs ago
user_ஜெயராமன்
ஜெயராமன்
Anaicut, Vellore•
13 hrs ago

Looking to Buy Requirement : காய்கறிகள் Quantity : பத்து மூட்டைகள் Budget : ₹5,000 City / Locality : பகுதி Farming Sector : Fruits & Vegetables ஹோல் சேல் ரேட்

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருப்பத்தூரில் RDS நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ30 லட்சம் மதிப்பீட்டில் மின்கல வாகனங்கள் வழங்கும் விழா! திருப்பத்தூரில் RDS நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ30 லட்சம் மதிப்பீட்டில் மின்கல வாகனங்கள் வழங்கும் விழா! திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், RDS நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ், திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை நகராட்சிகளுக்கு ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் 15 மின்கல வாகனங்களை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.இரஞ்சித்குமார்  திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.திருப்பதி மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலையில், சம்பந்தப்பட்ட நகராட்சிகளுக்கு வழங்கி, கொடியசைத்து துவக்கி வைத்தார்.  உடன்  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சௌ.தமிழரசி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு, RDS நிறுவன தலைவர் சரவணன், நகராட்சி ஆணையாளர்கள் சாந்தி திருப்பத்தூர் இளையராணி ஜோலார்பேட்டை தமிழக வெற்றிக்கழக திருப்பத்தூர் மாவட்ட மேற்கு ஒன்றிய செயலாளர் முனிசாமி மாவட்ட கொள்கை பரப்பு அமைப்பாளர் TV.ஜெகன் மற்றும் தமிழக கட்சி கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
    4
    திருப்பத்தூரில் RDS நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ30 லட்சம் மதிப்பீட்டில் மின்கல வாகனங்கள் வழங்கும் விழா!
திருப்பத்தூரில் RDS நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ30 லட்சம் மதிப்பீட்டில் மின்கல வாகனங்கள் வழங்கும் விழா!
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், RDS நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ், திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை நகராட்சிகளுக்கு ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் 15 மின்கல வாகனங்களை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.இரஞ்சித்குமார்  திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.திருப்பதி மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலையில், சம்பந்தப்பட்ட நகராட்சிகளுக்கு வழங்கி, கொடியசைத்து துவக்கி வைத்தார். 
உடன்  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சௌ.தமிழரசி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு, RDS நிறுவன தலைவர் சரவணன், நகராட்சி ஆணையாளர்கள் சாந்தி திருப்பத்தூர் இளையராணி ஜோலார்பேட்டை தமிழக வெற்றிக்கழக திருப்பத்தூர் மாவட்ட மேற்கு ஒன்றிய செயலாளர் முனிசாமி மாவட்ட கொள்கை பரப்பு அமைப்பாளர் TV.ஜெகன் மற்றும் தமிழக கட்சி கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
    user_Flower
    Flower
    Fruit & Vegetable Wholesaler திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    3 hrs ago
  • காஞ்சிபுரம் மாநகராட்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள கங்கை கொண்டான் மண்டபம் அருகில் அமைந்துள்ள பெரியாரின் 148வது பிறந்த நாள் விழா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் தலைமையில் பகுத்தறிவு பகலவன் பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கழக கொள்கை பரப்பு செயலாளர் எழிலரசன் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமார் மற்றும் பகுதி செயலாளர்கள் ஒன்றிய நகர மகளிர் அணி நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    1
    காஞ்சிபுரம் மாநகராட்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா 
காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள கங்கை கொண்டான் மண்டபம் அருகில் அமைந்துள்ள பெரியாரின் 148வது பிறந்த நாள் விழா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் தலைமையில் பகுத்தறிவு பகலவன் பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கழக கொள்கை பரப்பு செயலாளர் எழிலரசன் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமார் மற்றும் பகுதி செயலாளர்கள் ஒன்றிய நகர மகளிர் அணி நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    user_Kanchi kannabiran
    Kanchi kannabiran
    Distance Learning Center காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    8 hrs ago
  • கிருஷ்ணகிரி அருகே உள்ள மரிக்கம்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஹரித்திர கணபதி மற்றும்  அருள்மிகு  மாரியம்மன் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் விழா கிருஷ்ணகிரி அருகே உள்ள மரிக்கம்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஹரித்திர கணபதி மற்றும்  அருள்மிகு  மாரியம்மன் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்'
    1
    கிருஷ்ணகிரி அருகே உள்ள மரிக்கம்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஹரித்திர கணபதி மற்றும்  அருள்மிகு  மாரியம்மன் திருக்கோயிலின்
மகா கும்பாபிஷேகம் விழா


கிருஷ்ணகிரி அருகே உள்ள மரிக்கம்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஹரித்திர கணபதி மற்றும்  அருள்மிகு  மாரியம்மன் திருக்கோயிலின்
மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்'
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • புதிய சட்டமன்றம் தேவை: தர்மபுரியில் சௌமியா அன்புமணி எம் எல் ஏ பேட்டி!  புதிய சட்டமன்றம் தேவை: தர்மபுரியில் சௌமியா அன்புமணி எம் எல் ஏ பேட்டி!  தருமபுரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மணி தலைமை வகித்தார் ஆட்சியர் சரவணன் முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியில் தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் சௌமியா அன்புமணி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மரகதம் வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சௌமியா அன்புமணி தர்மபுரி மாவட்டத்தில் அதிகப்படியாக குடிநீர் பிரச்சனை சாலை சாக்கடை கால்வாய் தூர் வராப்படாமல் உள்ளது இதனை உடனடியாக சீரமைக்க கோரி பேசினேன். சாக்கடை கால்வாய் களை உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் அதே போல சனத்குமார் நதியில் பாதாள சாக்கடை கழிவுகளை சுத்தம் செய்து கலக்க வேண்டும் என தெரிவித்துள்ளேன். அதற்கும் ஆவன செய்வதாக கலெக்டர் தெரிவித்துள்ளார் தொப்பூர் உயர்மட்ட மேம்பாலம் சாலை பணி இரண்டு வருடத்திற்குள் பணிகள் நிறைவடைந்து விடும். மொரப்பூர் தர்மபுரி ரயில் திட்டத்தில் நிலங்கள் கையகப்படுத்தும் பணி என்பது சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார் ஜனவரி மாதத்திற்குள் பணிகள் நிறைவடைந்து ரயில்வே வசம் ஒப்படைக்கப்படும் இரண்டு மூன்று ஆண்டுகளில் ரயில் பாதை அமைக்கப்பட்டு திட்டம் நிறைவடையும் என்றார். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்து தண்ணீர் வழங்க வேண்டும் ஆழ்துளை கிணறுகள் சீரமைக்கப்பட்டு தண்ணீர் வழங்க கோரிக்கை விடுத்துள்ளேன். அதேபோல பல துறைகளில் காலிப் பணியிடங்கள் உள்ளது காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன். மின் தட்டுப்பாடு நிலவுகிறது காலை ஆறு மணியிலிருந்து பத்து மணி வரை தடையின்றி மின்சாரம் வழங்க எம்பி மணி பேசி உள்ளார். மேலும் தமிழகத்தில் புதிய சட்டசபை அவசிய தேவை. சட்டசபை நிர்வாக அலுவலர்கள் எல்லாம் ஒரே இடத்தில் இருந்தால் பணிகள் விரைந்து செயல்படுத்த வசதியாக இருக்கும் என்றார்.  இந்நிகழ்ச்சியில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    1
    புதிய சட்டமன்றம் தேவை: தர்மபுரியில் சௌமியா அன்புமணி எம் எல் ஏ பேட்டி! 
புதிய சட்டமன்றம் தேவை: தர்மபுரியில் சௌமியா அன்புமணி எம் எல் ஏ பேட்டி! 
தருமபுரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மணி தலைமை வகித்தார் ஆட்சியர் சரவணன் முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியில் தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் சௌமியா அன்புமணி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மரகதம் வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சௌமியா அன்புமணி தர்மபுரி மாவட்டத்தில் அதிகப்படியாக குடிநீர் பிரச்சனை சாலை சாக்கடை கால்வாய் தூர் வராப்படாமல் உள்ளது இதனை உடனடியாக சீரமைக்க கோரி பேசினேன். சாக்கடை கால்வாய் களை உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் அதே போல சனத்குமார் நதியில் பாதாள சாக்கடை கழிவுகளை சுத்தம் செய்து கலக்க வேண்டும் என தெரிவித்துள்ளேன். அதற்கும் ஆவன செய்வதாக கலெக்டர் தெரிவித்துள்ளார் தொப்பூர் உயர்மட்ட மேம்பாலம் சாலை பணி இரண்டு வருடத்திற்குள் பணிகள் நிறைவடைந்து விடும். மொரப்பூர் தர்மபுரி ரயில் திட்டத்தில் நிலங்கள் கையகப்படுத்தும் பணி என்பது சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார் ஜனவரி மாதத்திற்குள் பணிகள் நிறைவடைந்து ரயில்வே வசம் ஒப்படைக்கப்படும் இரண்டு மூன்று ஆண்டுகளில் ரயில் பாதை அமைக்கப்பட்டு திட்டம் நிறைவடையும் என்றார். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்து தண்ணீர் வழங்க வேண்டும் ஆழ்துளை கிணறுகள் சீரமைக்கப்பட்டு தண்ணீர் வழங்க கோரிக்கை விடுத்துள்ளேன். அதேபோல பல துறைகளில் காலிப் பணியிடங்கள் உள்ளது காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன். மின் தட்டுப்பாடு நிலவுகிறது காலை ஆறு மணியிலிருந்து பத்து மணி வரை தடையின்றி மின்சாரம் வழங்க எம்பி மணி பேசி உள்ளார். மேலும் தமிழகத்தில் புதிய சட்டசபை அவசிய தேவை. சட்டசபை நிர்வாக அலுவலர்கள் எல்லாம் ஒரே இடத்தில் இருந்தால் பணிகள் விரைந்து செயல்படுத்த வசதியாக இருக்கும் என்றார். 
இந்நிகழ்ச்சியில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    1 hr ago
  • மொரப்பூர்–தருமபுரி ரயில் திட்டம் 2 முதல் 3 ஆண்டுகளில் நிறைவு பெறும் – சௌமியா அன்புமணி மொரப்பூர்–தருமபுரி ரயில் திட்டம் 2 முதல் 3 ஆண்டுகளில் நிறைவு பெறும் – சௌமியா அன்புமணி தருமபுரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மணி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சரவணன் முன்னிலை வகித்தார். இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சௌமியா அன்புமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பல்வேறு மக்கள் பிரச்சனைகள் குறித்து வலியுறுத்தினர். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சௌமியா அன்புமணி, மாவட்டத்தில் குடிநீர், சாலை மற்றும் சாக்கடை கால்வாய் பிரச்சனைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார். மொரப்பூர்–தருமபுரி ரயில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் சுமார் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், ஜனவரி மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு ரயில்வே நிர்வாகத்திடம் நிலம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறினார். அதன் பின்னர் 2 முதல் 3 ஆண்டுகளில் ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக சௌமியா அன்புமணி தெரிவித்தார். மேலும், தொப்பூர் உயர்மட்ட மேம்பாலம் மற்றும் சாலைப் பணிகள் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
    1
    மொரப்பூர்–தருமபுரி ரயில் திட்டம் 2 முதல் 3 ஆண்டுகளில் நிறைவு பெறும் – சௌமியா அன்புமணி
மொரப்பூர்–தருமபுரி ரயில் திட்டம் 2 முதல் 3 ஆண்டுகளில் நிறைவு பெறும் – சௌமியா அன்புமணி
தருமபுரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மணி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சரவணன் முன்னிலை வகித்தார். இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சௌமியா அன்புமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பல்வேறு மக்கள் பிரச்சனைகள் குறித்து வலியுறுத்தினர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சௌமியா அன்புமணி, மாவட்டத்தில் குடிநீர், சாலை மற்றும் சாக்கடை கால்வாய் பிரச்சனைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார்.
மொரப்பூர்–தருமபுரி ரயில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் சுமார் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், ஜனவரி மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு ரயில்வே நிர்வாகத்திடம் நிலம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறினார். அதன் பின்னர் 2 முதல் 3 ஆண்டுகளில் ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக சௌமியா அன்புமணி தெரிவித்தார்.
மேலும், தொப்பூர் உயர்மட்ட மேம்பாலம் மற்றும் சாலைப் பணிகள் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
    user_DPI EXPRESS NEWS
    DPI EXPRESS NEWS
    Psychologist Dharmapuri, Tamil Nadu•
    2 hrs ago
  • தருமபுரி மாவட்டத்தில் ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளதாக சௌமியா அன்புமணி பேட்டி தருமபுரி மாவட்டத்தில் ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தருமபுரி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு அதிகளவில் நடைபெற்று வருவதால், ஆவின் பால் கொள்முதல் கூட்டுறவு சங்கங்கள் கால்நடை வளர்ப்போருக்கு கூடுதல் கவனம் செலுத்தி, பால் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், கால்நடைகளுக்கு தேவையான தீவனம் கிடைப்பதில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் சிரமங்களை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார்.
    1
    தருமபுரி மாவட்டத்தில் ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளதாக சௌமியா அன்புமணி பேட்டி
தருமபுரி மாவட்டத்தில் ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தருமபுரி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு அதிகளவில் நடைபெற்று வருவதால், ஆவின் பால் கொள்முதல் கூட்டுறவு சங்கங்கள் கால்நடை வளர்ப்போருக்கு கூடுதல் கவனம் செலுத்தி, பால் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும், கால்நடைகளுக்கு தேவையான தீவனம் கிடைப்பதில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் சிரமங்களை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • காஞ்சிபுரம் மாநகராட்சியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் மாநகராட்சியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பகுத்தறிவு பகலவன் பெரியாரின் 148 ஆவது பிறந்தநாள் விழா கங்கை கொண்டான் மண்டபம் அருகில் அமைந்துள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் தென்னரசு கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் நிகழ்ச்சியில் இனிப்புகள் வழங்கினர்.
    2
    காஞ்சிபுரம் மாநகராட்சியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா 
காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் மாநகராட்சியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பகுத்தறிவு பகலவன் பெரியாரின் 148 ஆவது பிறந்தநாள் விழா கங்கை கொண்டான் மண்டபம் அருகில் அமைந்துள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் தென்னரசு கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் நிகழ்ச்சியில் இனிப்புகள் வழங்கினர்.
    user_Kanchi kannabiran
    Kanchi kannabiran
    Distance Learning Center காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    9 hrs ago
  • பர்கூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் அவர்களுக்கு மஞ்சு விரட்டும் நலச்சங்கத்தின் சார்பில் பொன்னாடை  அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பர்கூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் அவர்கள் தமிழக சட்டமன்றத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடையின்றி எருது விடும் விழா நடத்த உரிய அனுமதி அளிக்க   வேண்டும் என பேசியதை பாராட்டி மஞ்சு விரட்டும் நலச்சங்கத்தின் சார்பில் பொன்னாடை  அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
    1
    பர்கூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் அவர்களுக்கு மஞ்சு விரட்டும் நலச்சங்கத்தின் சார்பில் பொன்னாடை  அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பர்கூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் அவர்கள் தமிழக சட்டமன்றத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடையின்றி எருது விடும் விழா நடத்த உரிய அனுமதி அளிக்க   வேண்டும் என பேசியதை பாராட்டி மஞ்சு விரட்டும் நலச்சங்கத்தின் சார்பில் பொன்னாடை  அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • பாலக்கோட்டில் பாஜக சார்பாக பிரதமர் மோடியின் 76 வது பிறந்தநாள் விழா பாலக்கோட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். பாலக்கோடு நகர பாஜக சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் நகர பொதுசெயலாளர் ஜெய்கணேஷ், நகர பொருளாளர் முனியப்பன், ஓ.பி.சி.அணி நகர செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். நகர அமைப்பாளர் பெரியசாமி,மாவட்ட பொது செயலாளர் சங்கீதா, மாவட்ட துணைத் தலைவர் முனிராஜ், மகளிர் அணி மாவட்ட செயலாளர் ஸ்ரீவித்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புக்களை வழங்கினார். தொடர்ந்து பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களை வாழ்த்தி கோஷமிட்டு ஆராவாரமாக பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் வேலு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன், நிர்வாகிகள் செல்வம், செந்தில், அண்ணாமலை, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    1
    பாலக்கோட்டில் பாஜக சார்பாக பிரதமர் மோடியின் 76 வது பிறந்தநாள் விழா
பாலக்கோட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 76வது  பிறந்த நாளை முன்னிட்டு பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜகவினர் இனிப்பு வழங்கி  கொண்டாடினர்.
பாலக்கோடு நகர பாஜக சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் நகர பொதுசெயலாளர் ஜெய்கணேஷ், நகர பொருளாளர் முனியப்பன், ஓ.பி.சி.அணி நகர செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
நகர அமைப்பாளர் பெரியசாமி,மாவட்ட பொது செயலாளர் சங்கீதா, மாவட்ட துணைத் தலைவர் முனிராஜ், மகளிர் அணி மாவட்ட செயலாளர் ஸ்ரீவித்யா ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புக்களை வழங்கினார். 
தொடர்ந்து  பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களை வாழ்த்தி கோஷமிட்டு ஆராவாரமாக பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில் பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் வேலு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன், நிர்வாகிகள் செல்வம், செந்தில், அண்ணாமலை, 
மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும்  கட்சி தொண்டர்கள் திரளாக  கலந்து கொண்டனர்.
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    8 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.