logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மொரப்பூர்–தருமபுரி ரயில் திட்டம் 2 முதல் 3 ஆண்டுகளில் நிறைவு பெறும் – சௌமியா அன்புமணி மொரப்பூர்–தருமபுரி ரயில் திட்டம் 2 முதல் 3 ஆண்டுகளில் நிறைவு பெறும் – சௌமியா அன்புமணி தருமபுரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மணி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சரவணன் முன்னிலை வகித்தார். இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சௌமியா அன்புமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பல்வேறு மக்கள் பிரச்சனைகள் குறித்து வலியுறுத்தினர். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சௌமியா அன்புமணி, மாவட்டத்தில் குடிநீர், சாலை மற்றும் சாக்கடை கால்வாய் பிரச்சனைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார். மொரப்பூர்–தருமபுரி ரயில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் சுமார் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், ஜனவரி மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு ரயில்வே நிர்வாகத்திடம் நிலம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறினார். அதன் பின்னர் 2 முதல் 3 ஆண்டுகளில் ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக சௌமியா அன்புமணி தெரிவித்தார். மேலும், தொப்பூர் உயர்மட்ட மேம்பாலம் மற்றும் சாலைப் பணிகள் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

3 hrs ago
user_DPI EXPRESS NEWS
DPI EXPRESS NEWS
Psychologist Dharmapuri, Tamil Nadu•
3 hrs ago

மொரப்பூர்–தருமபுரி ரயில் திட்டம் 2 முதல் 3 ஆண்டுகளில் நிறைவு பெறும் – சௌமியா அன்புமணி மொரப்பூர்–தருமபுரி ரயில் திட்டம் 2 முதல் 3 ஆண்டுகளில் நிறைவு பெறும் – சௌமியா அன்புமணி தருமபுரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மணி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சரவணன் முன்னிலை வகித்தார். இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சௌமியா அன்புமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பல்வேறு மக்கள் பிரச்சனைகள் குறித்து வலியுறுத்தினர். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சௌமியா அன்புமணி, மாவட்டத்தில் குடிநீர், சாலை மற்றும் சாக்கடை கால்வாய் பிரச்சனைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார். மொரப்பூர்–தருமபுரி ரயில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் சுமார் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், ஜனவரி மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு ரயில்வே நிர்வாகத்திடம் நிலம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறினார். அதன் பின்னர் 2 முதல் 3 ஆண்டுகளில் ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக சௌமியா அன்புமணி தெரிவித்தார். மேலும், தொப்பூர் உயர்மட்ட மேம்பாலம் மற்றும் சாலைப் பணிகள் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • பாலக்கோட்டில் பாஜக சார்பாக பிரதமர் மோடியின் 76 வது பிறந்தநாள் விழா பாலக்கோட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். பாலக்கோடு நகர பாஜக சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் நகர பொதுசெயலாளர் ஜெய்கணேஷ், நகர பொருளாளர் முனியப்பன், ஓ.பி.சி.அணி நகர செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். நகர அமைப்பாளர் பெரியசாமி,மாவட்ட பொது செயலாளர் சங்கீதா, மாவட்ட துணைத் தலைவர் முனிராஜ், மகளிர் அணி மாவட்ட செயலாளர் ஸ்ரீவித்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புக்களை வழங்கினார். தொடர்ந்து பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களை வாழ்த்தி கோஷமிட்டு ஆராவாரமாக பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் வேலு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன், நிர்வாகிகள் செல்வம், செந்தில், அண்ணாமலை, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    1
    பாலக்கோட்டில் பாஜக சார்பாக பிரதமர் மோடியின் 76 வது பிறந்தநாள் விழா
பாலக்கோட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 76வது  பிறந்த நாளை முன்னிட்டு பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜகவினர் இனிப்பு வழங்கி  கொண்டாடினர்.
பாலக்கோடு நகர பாஜக சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் நகர பொதுசெயலாளர் ஜெய்கணேஷ், நகர பொருளாளர் முனியப்பன், ஓ.பி.சி.அணி நகர செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
நகர அமைப்பாளர் பெரியசாமி,மாவட்ட பொது செயலாளர் சங்கீதா, மாவட்ட துணைத் தலைவர் முனிராஜ், மகளிர் அணி மாவட்ட செயலாளர் ஸ்ரீவித்யா ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புக்களை வழங்கினார். 
தொடர்ந்து  பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களை வாழ்த்தி கோஷமிட்டு ஆராவாரமாக பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில் பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் வேலு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன், நிர்வாகிகள் செல்வம், செந்தில், அண்ணாமலை, 
மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும்  கட்சி தொண்டர்கள் திரளாக  கலந்து கொண்டனர்.
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • கிருஷ்ணகிரி அருகே உள்ள மரிக்கம்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஹரித்திர கணபதி மற்றும்  அருள்மிகு  மாரியம்மன் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் விழா கிருஷ்ணகிரி அருகே உள்ள மரிக்கம்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஹரித்திர கணபதி மற்றும்  அருள்மிகு  மாரியம்மன் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்'
    1
    கிருஷ்ணகிரி அருகே உள்ள மரிக்கம்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஹரித்திர கணபதி மற்றும்  அருள்மிகு  மாரியம்மன் திருக்கோயிலின்
மகா கும்பாபிஷேகம் விழா


கிருஷ்ணகிரி அருகே உள்ள மரிக்கம்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஹரித்திர கணபதி மற்றும்  அருள்மிகு  மாரியம்மன் திருக்கோயிலின்
மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்'
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • சேலம் ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் சாலையில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம்! சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டி அடுத்துள்ள ராக்கிப்பட்டி பகுதியில் ஏராளமான பட்டியல் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள சிலர் பட்டியலின மக்களை உடனடியாக வீடுகளை காலி செய்து வெளியேற வேண்டும் இல்லையென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அப்பகுதியில் உள்ள சிலர் தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதாகவும் இதற்கு மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இன்று அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆட்சியர் அலுவலக நுழைவாயில் சாலையில் அமர்ந்து பெரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய சமாதான பேச்சை தொடர்ந்து சமாதானம் அடைந்த மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்குவதற்கு ஆட்சியரிடம் சென்று முறையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். இந்த சம்பவத்தால் ஆட்சி அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பில் ஏற்பட்டது.
    1
    சேலம் ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் சாலையில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம்!
சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டி அடுத்துள்ள ராக்கிப்பட்டி பகுதியில் ஏராளமான பட்டியல் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள சிலர் பட்டியலின மக்களை உடனடியாக வீடுகளை காலி செய்து வெளியேற வேண்டும் இல்லையென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அப்பகுதியில் உள்ள சிலர் தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதாகவும் இதற்கு மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இன்று அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆட்சியர் அலுவலக நுழைவாயில் சாலையில் அமர்ந்து பெரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய சமாதான பேச்சை தொடர்ந்து சமாதானம் அடைந்த மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்குவதற்கு ஆட்சியரிடம் சென்று முறையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். இந்த சம்பவத்தால் ஆட்சி அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பில் ஏற்பட்டது.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    4 hrs ago
  • திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு!  திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு!  திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தந்தை பெரியார் அவர்களின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, சமூக நீதி நாள் உறுதிமொழியினை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.இரஞ்சித்குமார்  தலைமையில், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திருப்பதி முன்னிலையில் 17.09.2026 அன்று  பல்வேறு அரசு துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பாலசுப்ரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சௌ.தமிழரசி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கஸ்தூரி  மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.
    2
    திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு! 

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு! 
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தந்தை பெரியார் அவர்களின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, சமூக நீதி நாள் உறுதிமொழியினை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.இரஞ்சித்குமார்  தலைமையில், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திருப்பதி முன்னிலையில் 17.09.2026 அன்று  பல்வேறு அரசு துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பாலசுப்ரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சௌ.தமிழரசி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கஸ்தூரி  மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.
    user_Flower
    Flower
    Fruit & Vegetable Wholesaler திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    4 hrs ago
  • தார் சாலை மோசம்: பள்ளிக்குச் செல்ல வேண்டிய மாணவர்கள் கையில் மண்வெட்டி! போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதால் மாணவர்களே சாலையை சீரமைக்கும் அவல நிலை கிருஷ்ணகிரி மாவட்டம், தளி வட்டாரத்தில், பள்ளிக்குச் செல்லும் தார் சாலை மோசமான நிலையில் இருப்பதால், பள்ளி பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சாலையில் ஏற்பட்டுள்ள சேதம் மற்றும் மண், கற்கள் நிறைந்த பகுதிகளால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்ட நிலையில், பள்ளிக்குச் செல்லும் மாணவர்களே சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. பள்ளிப் புத்தகங்களை கையில் ஏந்தி கல்வி கற்க வேண்டிய மாணவர்களின் கைகளில் மண்வெட்டி ஏந்தும் நிலை ஏற்பட்டிருப்பது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் கல்வி மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சாலையின் நிலையை உடனடியாக ஆய்வு செய்து, அவசரகால அடிப்படையில் சாலையை சீரமைத்து, பள்ளி வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்துக்கு தடையில்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு. தினேஷ்குமார், I.A.S. அவர்களின் கவனத்திற்கு: மாணவர்கள் சாலை சீரமைக்கும் நிலை மீண்டும் ஏற்படாத வகையில், சம்பந்தப்பட்ட துறையினர் மூலம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். “பள்ளிப் புத்தகம் கையில் இருக்க வேண்டிய நேரத்தில்… மண்வெட்டி ஏன்?”
    1
    தார் சாலை மோசம்: பள்ளிக்குச் செல்ல வேண்டிய மாணவர்கள் கையில் மண்வெட்டி!
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதால் மாணவர்களே சாலையை சீரமைக்கும் அவல நிலை
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி வட்டாரத்தில், பள்ளிக்குச் செல்லும் தார் சாலை மோசமான நிலையில் இருப்பதால், பள்ளி பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சாலையில் ஏற்பட்டுள்ள சேதம் மற்றும் மண், கற்கள் நிறைந்த பகுதிகளால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்ட நிலையில், பள்ளிக்குச் செல்லும் மாணவர்களே சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
பள்ளிப் புத்தகங்களை கையில் ஏந்தி கல்வி கற்க வேண்டிய மாணவர்களின் கைகளில் மண்வெட்டி ஏந்தும் நிலை ஏற்பட்டிருப்பது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களின் கல்வி மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சாலையின் நிலையை உடனடியாக ஆய்வு செய்து, அவசரகால அடிப்படையில் சாலையை சீரமைத்து, பள்ளி வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்துக்கு தடையில்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு. தினேஷ்குமார், I.A.S. அவர்களின் கவனத்திற்கு:
மாணவர்கள் சாலை சீரமைக்கும் நிலை மீண்டும் ஏற்படாத வகையில், சம்பந்தப்பட்ட துறையினர் மூலம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
“பள்ளிப் புத்தகம் கையில் இருக்க வேண்டிய நேரத்தில்… மண்வெட்டி ஏன்?”
    user_Suresh S
    Suresh S
    Local News Reporter திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    12 hrs ago
  • ராசிபுரம் அருகே வீட்டின் அருகே புகுந்த 8 அடி நீள மலைப்பாம்பு – தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்பு... ராசிபுரம் அருகே வீட்டின் அருகே புகுந்த 8 அடி நீள மலைப்பாம்பு – தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்பு... ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை குள்ளாண்டிக்காடு பகுதியில் வீட்டின் அருகே புகுந்த சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை குள்ளாண்டிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கவின்குமார். கொல்லிமலை அடிவாரப் பகுதியில் வசித்து வரும் இவரது வீட்டின் அருகே மலைப்பாம்பு ஒன்று புகுந்ததாக ராசிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள், வீட்டின் அருகே பதுங்கியிருந்த மலைப்பாம்பை பாம்பு பிடிக்கும் இடுக்கி மூலம் லாவகமாக உயிருடன் மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட மலைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மீட்கப்பட்ட மலைப்பாம்பு சுமார் 8 அடி நீளம் கொண்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
    1
    ராசிபுரம் அருகே வீட்டின் அருகே புகுந்த 8 அடி நீள மலைப்பாம்பு – தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்பு...

ராசிபுரம் அருகே வீட்டின் அருகே புகுந்த 8 அடி நீள மலைப்பாம்பு – தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்பு...
ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை குள்ளாண்டிக்காடு பகுதியில் வீட்டின் அருகே புகுந்த சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை குள்ளாண்டிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கவின்குமார். கொல்லிமலை அடிவாரப் பகுதியில் வசித்து வரும் இவரது வீட்டின் அருகே மலைப்பாம்பு ஒன்று புகுந்ததாக ராசிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள், வீட்டின் அருகே பதுங்கியிருந்த மலைப்பாம்பை பாம்பு பிடிக்கும் இடுக்கி மூலம் லாவகமாக உயிருடன் மீட்டனர்.
பின்னர் மீட்கப்பட்ட மலைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மீட்கப்பட்ட மலைப்பாம்பு சுமார் 8 அடி நீளம் கொண்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
    user_ILAYARAJA
    ILAYARAJA
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    4 hrs ago
  • தல அஜித்தையும் தளபதி விஜயையும் ஒன்றாக இணைந்து பார்த்தது கனவா என்று மெய்சிலிர்த்து போனதாக கே.பி.ஒய். பாலா தெரிவித்தார் தல அஜித்தையும் தளபதி விஜயையும் ஒன்றாக இணைந்து பார்த்தது கனவா என்று மெய்சிலிர்த்து போனதாக கே.பி.ஒய். பாலா தெரிவித்தார்* தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வரும் இ ஸ்பா மையம், தனது 6-வது கிளையை புதுச்சேரி எல்லைப் பிள்ளை சாவடி இந்திரா காந்தி சிலை அருகே தொடங்கியது. இதன் துவக்க விழாவில் கே.பி.ஒய் பாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஸ்பா மையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்.. தான் இந்த இடத்தில் நிற்பது மக்கள் போட்ட பிச்சை என்றும் தான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு தொகையை தனது கடைசி உயிர் மூச்சு இருக்கும் வரை ஏழை மக்களுக்கு உதவி செய்து கொண்டே இருப்பேன் என்றும் ஏழை மக்களுக்கு உதவுவது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்த அவர்.. தல அஜித்தையும் தளபதி விஜய்யும் ஒன்றாக இணைந்து பார்த்ததை கனவா என்று மெய்சிலிர்த்து போனதாகவும் குறிப்பிட்டார், நீங்கள் யாருடைய ரசிகர் என்ற கேள்விக்கு நான் அனைவருடைய ரசிகர் தான் என்று தெரிவித்தவரிடம் தவெக அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்று கேள்வி கேட்கப்பட்டது,அதற்கு பதில் அளித்த பாலா, அரசியல் பேசும் அளவிற்கு தனக்கு அறிவில்லை என்றும் தெரிவித்தார். *பேட்டி: கே.பி.ஒய்.பாலா*
    1
    தல அஜித்தையும் தளபதி விஜயையும் ஒன்றாக இணைந்து பார்த்தது கனவா என்று மெய்சிலிர்த்து போனதாக கே.பி.ஒய். பாலா தெரிவித்தார்
தல அஜித்தையும் தளபதி விஜயையும் ஒன்றாக இணைந்து பார்த்தது கனவா என்று மெய்சிலிர்த்து போனதாக கே.பி.ஒய். பாலா தெரிவித்தார்*
தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வரும் 
இ ஸ்பா மையம், தனது 6-வது கிளையை புதுச்சேரி எல்லைப் பிள்ளை சாவடி இந்திரா காந்தி சிலை அருகே தொடங்கியது.
இதன் துவக்க விழாவில்  
கே.பி.ஒய்  பாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஸ்பா மையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்.. தான் இந்த இடத்தில் நிற்பது மக்கள் போட்ட பிச்சை என்றும் தான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு தொகையை தனது கடைசி உயிர் மூச்சு இருக்கும் வரை ஏழை மக்களுக்கு உதவி செய்து கொண்டே இருப்பேன் என்றும் ஏழை மக்களுக்கு உதவுவது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்த அவர்..
தல அஜித்தையும் தளபதி விஜய்யும் ஒன்றாக இணைந்து பார்த்ததை கனவா என்று மெய்சிலிர்த்து போனதாகவும் குறிப்பிட்டார், நீங்கள் யாருடைய ரசிகர் என்ற கேள்விக்கு நான் அனைவருடைய ரசிகர் தான் என்று தெரிவித்தவரிடம் தவெக அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்று கேள்வி கேட்கப்பட்டது,அதற்கு பதில் அளித்த பாலா, அரசியல் பேசும் அளவிற்கு தனக்கு அறிவில்லை என்றும் தெரிவித்தார்.
*பேட்டி: கே.பி.ஒய்.பாலா*
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • பர்கூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் அவர்களுக்கு மஞ்சு விரட்டும் நலச்சங்கத்தின் சார்பில் பொன்னாடை  அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பர்கூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் அவர்கள் தமிழக சட்டமன்றத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடையின்றி எருது விடும் விழா நடத்த உரிய அனுமதி அளிக்க   வேண்டும் என பேசியதை பாராட்டி மஞ்சு விரட்டும் நலச்சங்கத்தின் சார்பில் பொன்னாடை  அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
    1
    பர்கூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் அவர்களுக்கு மஞ்சு விரட்டும் நலச்சங்கத்தின் சார்பில் பொன்னாடை  அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பர்கூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் அவர்கள் தமிழக சட்டமன்றத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடையின்றி எருது விடும் விழா நடத்த உரிய அனுமதி அளிக்க   வேண்டும் என பேசியதை பாராட்டி மஞ்சு விரட்டும் நலச்சங்கத்தின் சார்பில் பொன்னாடை  அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • சேலம் மாநகர அதிமுக சார்பில் பெரியார் பிறந்தநாள் அனுசரிப்பு! சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், தந்தை பெரியாரின் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு, சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அவரது திருஉருவ சிலைக்கு, மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பாலு தலைமையில், இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் இந்நாள் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    1
    சேலம் மாநகர அதிமுக சார்பில் பெரியார் பிறந்தநாள் அனுசரிப்பு!
சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், தந்தை பெரியாரின் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு, சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அவரது திருஉருவ சிலைக்கு, மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பாலு தலைமையில், இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் இந்நாள் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    9 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.